flipkart discount sale search here.

Monday, 22 February 2021

அடிக்கடி_கை_கால்_மரத்துபோவது……# *ஏன்_தெரியுமா* ..

# *அடிக்கடி_கை_கால்_மரத்துபோவது* ……

# *ஏன்_தெரியுமா* ..❓❓❓

👉உடலில் உள்ள உறுப்புகள் மரத்து போவது என்பது நோய் அல்ல இருப்பினும் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று சொல்லலாம்.

நாம் பஸ் அல்லது காரில் அதிக நேரம் செல்லும்போது நமக்கு கை, கால் மரத்துப்போவது என்பது ஒரு சாதாரணமான விஷயம். இதற்கு என்ன காரணம் என்றால் ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்திருப்பது தான் காரணம்.

அதாவது நாம் ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்திருந்தால் இரத்த ஓட்டங்கள் தடைபடுவதன் காரணமாக இந்த #Numbness_Symptoms மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது.

குறிப்பாக மரத்து போகும் பிரச்சனை என்பது ஒரே இடத்தில அமர்ந்திருந்தால் மட்டும் ஏற்படுவது இல்லை, இன்னும் பல காரணங்களும் இருக்கிறது.

⭕ அடிக்கடி கை, கால் மரத்து போவதன் காரணங்கள்..❓

💢 குறிப்பாக நம் உடலில் எங்கயாவது மரத்து போனால் அது நம் #மூளை, #முதுகுத்தண்டு_வடத்தில் ஏதேனும் பிரச்சனை என்ற அறிகுறியாகும்.

👉அதுவே நம் உடலில் இரண்டு கால்களும் மரத்து போனால் அது சர்க்கரை நோய்களுக்கான அறிகுறியாகும்.
அதாவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது என்ற அறிகுறியாகும்.

👉அதுவே ஒருவருக்கு பல ஆண்டுகளாக இந்த மரத்துப்போதல் பிரச்சனை இருந்தால் அது மரபு அணுக்களின் கோளாறாக கூட இருக்கலாம்.

👉அதேபோல் ஏதேனும் ஆன்டிபயாடிக் மாத்திரை மற்றும் புற்று நோயை குணப்படுத்தும் மாத்திரை என்று தொடர்ந்து நீங்கள் மாத்திரை எடுத்து கொண்டிருந்தாலும் கை, கால்கள் அடிக்கடி மரத்து போகும் பிரச்சனை ஏற்படும்.

👉மேலும் தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிகள் குறைந்தாலும் இந்த கை, கால்கள் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும்.

👉உடல் எடை அதிகரித்து உடலில் அதிகளவு கொழுப்புகள் சேர்ந்தாலும் இந்த மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது.

👉வைட்டமின் B12 குறைபாடுகள் இருந்தாலும் இந்த கை கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும், எனவே உடலுக்கு தேவையான அளவிற்கு வைட்டமின் B12 நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ளவும்.

👉அதேபோல் தொழுநோயால் பாதிக்கப்பட்டரர்களுக்கும் இந்த கை, கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும்.

👉தொழு நோய் உள்ளவர்கள் மீது சூடான தண்ணீரை ஊற்றினால் கூட அவர்களுக்கு உணர்ச்சிகள் இருக்காது.
எனவே தொழு நோய் உள்ளவர்கள் தங்களது தோலை பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சை முறைகளை கடைபிடிக்கவும்.

👉சர்க்கரை நோயாளிகள் அவர்களது கை, கால்கள் மரத்து போகாமல் இருக்க வேண்டும் என்றால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக இவர்களுக்கு கால்களில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அவர்களது நரம்புகளுக்கு அதிகளவு பாதிக்கப்படும்.

👉குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு கை கால்கள் அடிக்கடி மரத்து போனால் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்ற அறிகுறியாகும்.

👉சிலருக்கு தலை ஒரு பக்கம் மட்டும் மரத்து போய்விடும் அது பக்கவாதத்திற்கான அறிகுறிகள் ஆகும். எனவே அவர்கள் நரம்பியல் மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சை பெற வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

⭕ யாருக்கெல்லாம் இந்த பிரச்சனை ஏற்படுகிறது❓

👉குறிப்பாக இந்த பிரச்சனை அதிகமாக குடி பழக்கம் உள்ளவர்களுக்கு,

👉அதிக நேரம் கணினியில் அமர்ந்து வேலைபார்ப்பவர்களுக்கு,

👉அதிகமாக பாத்திரம்
விளக்குபவர்களுக்கு,

👉மணிக்கட்டுகளுக்கு அதிக வேலை தருபவர்களுக்கு,

👉உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு

இந்த கை, கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது.

⭕ ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யுறீங்களா ❓
அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..❗

👉இந்த கை, கால் மரத்து போகும் பிரச்சனை உள்ளவர்கள்,  ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும். அதேபோல் வைட்டமின் B12 குறைபாடுகள் உள்ளவர்கள் இறைச்சி உணவுகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும்.

👉மேலும் டிவி பார்ப்பவர்கள் சாய்வாக அமர்ந்து டிவி பார்ப்பதை தவிர்த்து கொண்டு, நேராக நிமிர்ந்து அமர்ந்து டிவி பார்க்க வேண்டும். நாம் அமர்ந்திருக்கும் நிலைகளினால் கூட இந்த மரத்து போகும்  பிரச்சனை ஏற்படுகிறது.

👉அடிக்கடி மரத்து போகுதல் பிரச்சனை உள்ளவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதை தவிர்த்து கொண்டு, கொஞ்சமாவது உடலுக்கு அசைவுகள் தரவேண்டும்.

🔴 இந்த மரத்து போகும் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிசைகளை முறையாக அளித்தாலே இந்த மரத்து போகும் பிரச்சனையை சரி செய்துவிட முடியும்.

Sunday, 14 February 2021

Symptoms for diseases

உடல் அறிகுறி(#Symptoms) - அதன் சந்தேகமும் பாதிப்புகளும்

1 . முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் -

      கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.

2. வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் ---

     கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.

3. கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் ---

    ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.

4. காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால்

    காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.

5. கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை      விழுந்தால் ---

கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.

உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் ---

அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.

6. கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்-- -

   உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.

7. முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு 
     வலியெடுத்தால் ---

   உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனைக் குறைக்கவேண்டும்     என அர்த்தம்.

8 .தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால்

அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.

9. உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால்

உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்ப்பசையும் குறைந்துவிட்டது என அர்த்தம்.

10. தோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் இவற்றில் இறுக்கமோ வலியோ வந்தால்

உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.

11. கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு
விழுமானால் ---

இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.

Tuesday, 2 February 2021

படித்ததில் பிடித்தது #1

குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.


பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.


புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.


பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.


முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.


பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.


பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.


அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.


மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.


அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.


நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.


விவசாயத்திற்கு முன்னுரிமை

கொடுங்கள் . நாடு நாசமாகாது .


- படித்ததில் பிடித்தது..

Tuesday, 10 November 2020

அழியப்போகும் உறவுமுறை?

 தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !...


அண்ணன்,

தம்பி, 

அக்கா,தங்கை,

சின்ன அண்ணன்,

பெரிய அண்ணன், 

சின்ன அக்கா,

பெரிய அக்கா,

சித்தப்பா, பெரியப்பா, 

அத்தை, மாமா, 

மச்சான்,மச்சினி, 

அண்ணி, கொழுந்தனார், 

நாத்தனார், தாய்மாமன், 

சித்தப்பா பையன், 

சித்தப்பா பொண்ணு,

பெரியப்பா பையன்,

பெரியப்பா பொண்ணு,

அத்தை பையன்,

அத்தை பொண்ணு,

மாமன் பொண்ணு,

மாமன் பையன்...


இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 ஆண்டுகளுக்கு மேல் யாருடைய காதிலும் பாசத்தோடு விழாது.


யாரும் கூப்பிடவும் மாட்டார்கள் !


அகராதியில் இருந்தே கூட 

கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும். 


காரணம் என்ன !


 #ஒண்ணேஒண்ணு, #கண்ணேகண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான் ! 


அப்படி இருக்கும் போது 

இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்? 


பெண்கள் வயதுக்கு வந்ததும் 

சீர் வரிசை செய்யவோ, 

பந்தல் போடவோ, 

முதல் புடவை எடுத்துத் தரவோ 

எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை ! 


திருமணத்தின் போது 

அரசாணைக்கால் நட

எந்த அண்ணனும் இருக்கப்போவது இல்லை !


மாப்பிள்ளைக்கு மோதிரம் போட 

எந்த தம்பியும் இருக்கப் போவது இல்லை, 


குழந்தைக்கு மொட்டை போட 

யார் மடியில் உட்கார வைப்பார்கள் ? 


கட்டிக் கொடுத்த பெண்ணுக்கு 

எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும், தம்பியும் பறந்து செல்வார்கள்.


இனி யார் போவார் ?


ஒவ்வொரு பெண்ணும், 

சொந்தபந்தம் ஏதுமின்றி 

ஆறுதலுக்கு ஆள் இன்றி 

தவிக்க போகிறார்கள்.


ஒவ்வொரு ஆணும்

தன் கஷ்டநஷ்டங்களில் 

பங்கு கொள்ள அண்ணன், தம்பி 

யாரும் இன்றி அவதிப் பட போகிறார்கள்.


அப்பா, அம்மாவை தவிர 

எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை, 


அந்த ஒரு குழந்தையும் 

வெளியூருக்கோ, 

இல்லை 

தனிக்குடித்தனமோ சென்று விட்டால் ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் 


எல்லாம் வயதான காலத்தில், 

ஏன் என்று கேட்க நாதி அற்று 

முதியோர் இல்லத்திலோ, 

இல்லை அந்த ஒரு குழந்தைக்காக 

கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள் ! 


உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு 

ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு 

எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும் 

இதே நிலைதான் !


உடல்நிலை சரியில்லாமல் 

ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால் 

ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?! 


சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் 

எனக்கு, உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள்தானே 


வயதான காலத்தில் 

அப்பா, அம்மாவுக்கு 

எதாவது ஒன்று என்றால் 

நான் நீ என்று ஓடி வருவார்கள்! 


கணவன் குடும்பம், குழந்தை என்று உயிரை விட்ட பெண்கள் கூட பெற்றோருக்குஒன்று என்றால் அத்தனையும் மறந்து விட்டு 

முதலில் வந்து நிற்பார்கள்! 


ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்து பாருங்கள்! 


பணமில்லாத ஒருவனை 

அனாதை என்று யாரும் சொல்வதில்லை! 


ஆனால், 

உறவுகள் இல்லாத ஒருவன் 

எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை 

மறந்துவிடக் கூடாது!


கார், பங்களா வசதி வாய்ப்புகளுடன் 

ஒண்ணே ஒண்ணு , கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற 

ஒரு அனாதையை வளர்ப்பதற்கும், 


வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு 

ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள் ? ? ?


ரத்தம் ஏற்றுக் கொள்ளும் உறவு முறையில் திருமணம் செய்யுங்கள்.


ஓட்டு அரசியலுக்காக 

அரசாங்கம் சம்மந்தம் இல்லாத உறவை இணைத்து கலப்பின சமுதாயத்தை தந்திரமாக உருவாக்கி வருகிறது.


மக்கள் மாறினால் 

இனி நீங்கள் உலர்ந்து போன உபயோகமற்ற 

இத்துப் போன தனி மரம்தான்.

ஜாக்கிரதை !!!


தனி மனித மாற்றமே ...

நம் சமுதாயத்தின் மாற்றம்.


தவறாமல் பகிர்வோம். 

 🙏

Tuesday, 27 October 2020

Think before after proceed...

 இதப்படிங்க முதல்ல..


😂😂😂

ஊர் முழுவதும் ஓர் அறிவிப்பு!


400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.

🤔

இதைக் கண்டுப் பலர் வியந்தனர். 

இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது.

😄

ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது.

வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் தின்பதென்றால் சும்மாவா.😊

இடத்தை அடைந்த ஒருவன் சக நபரிடம் 400 ரூபாயா? அல்லது 4000, 40,000 ... அப்படி ஏதாவதா? என்று...🤭

400 ரூபாய் மட்டுமே என்றான்.😜


வரிசையில் உள்ள ஒவ்வொருவரும் உள்ளே சென்றனர்.🙂

.

.

.சார் நீங்க, 


நானும் காலம் புரா உக்கார்ந்து சாப்பிட போரேன். 

.

.நானும் வரேன். 

.

.

.சார் நானும் 

.

.

.ஐயா வாங்க 

.

.

.அம்மா வாங்க 

.

.

.

.அக்கா நீயுமா 

.

'

'வா வா, உக்கார்ந்து. 

..400, ரூவா, 

.

.

.வாவா 

.

.

.

.

அங்கே ஒருவன் நாற்காலி விற்றுக் கொண்டு இருந்தான்.🤣

"வாங்க சார்... வாங்க சார்...

ஸ்டராங்கான நாற்காலி சார்...

இது சீக்கிரத்துல உடையாது சார்...

😂😂

400 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போய் காலம் முழுவதும் இதில் உட்கார்ந்து சாப்பிடலாம் சார்"🤪 என்று கூவினான்.

😩😩😩😩


நீதி :

வாக்குறுதிகளை உடனே நம்பிவிடக் கூடாது. 


நல்லா யோசிக்கணும்.


சாத்தியமான்னு பார்க்கணும்.


ரொம்ப அநியாயத்துக்கு ஆசைப்படக் கூடாது.

😊😊😊😊😊😊😊😊😊

இனி வருவது தேர்தல் காலம்  கட்சிகளின்  தேர்தல் அறிக்கைகள் இவ்வாறுதான் இருக்கும்


 சிந்தித்து செயல்படுங்கள்  மக்களே..!!

Monday, 26 October 2020

Wife is gift of the nature...

 மனைவிக்கு உள்ள சிறப்புகள்


💚மனைவி என்றால்

அன்பின்இன்னொரு சொல் என்றும் கொள்ளலாம்💚


💚பணிக்கு செல்லும்

மனைவிகள் எல்லாம்

குடும்பம் சுமக்கும்

அன்பு தேவதைகள்💚


💚ஆணுக்கு ஒரு பக்க

மத்தளம் என்றால்

பணிக்கு செல்லும் மனைவிகளுக்கு இரண்டு பக்க 

மத்தளம்💚


💚பெண் என்கிற 

கிரீடம் அழகு தான் 

என்றாலும் அவளை வெளியில்

உள்ள சமூகம் கிள்ளி கொண்டேதான் இருக்கும்💚


💚கணவர்கள் கொஞ்சம் 

கை கொடுங்கள்.

உங்களுக்காக வாழ்ந்துகொண்டு

இருக்கும் அந்த அன்பு பறவையை

அரவணைத்து வைத்து 

கொள்ளுங்கள்💚


💚அன்பாகப் பேசுங்கள்

சமையல் பணியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் 

பகிர்ந்து கொள்ளுங்கள்💚


💚மனைவிக்கு கை வலியோ, உடல் வலியோ, மனசு வலியோ புரிந்து  கொள்ளுங்கள்💚


💚உங்கள் மகளை

கவனிப்பது போல் உங்கள் மனைவியையும்  

கவனித்து கொள்ளுங்கள்💚


💚உடல் மனசு இரண்டையும் 

மென்மை படுத்துங்கள்💚


💚சமையலை பாராட்டுங்கள்

அவள் சமையல் அறையில்

பட்டிருக்கும் வெப்பம் தொட்ட தழும்பைப் பாருங்கள். அவை உங்களுக்காக

அவள் பட்ட அன்பின் சின்னம்.💚


💚அவள் செய்வது சமையல்

அல்ல. அன்பின் அழகு.

தினசரி நன்றி சொல்லுங்கள்.

குறுந்தகவல்களை மனைவிக்கும்

அனுப்பலாமே💚


💚அவள் குடும்பத்திற்காக

எரியும் இன்னொரு 

மெழுகுவர்த்தி.

வாழ்க்கை முழுதும் கூட வரும்

அன்பு தேவதை💚


💚கடவுள் நம்முடன் 

இருக்கமுடியாது என்பதற்காக

கடவுள் கொடுத்த வரம்

அன்னையும் மனைவியும்💚


💚அவள் கண்களில் கண்ணீர் 

வராமல் பார்த்து கொள்ளுங்கள்.

மூன்றாவது கையாக நீங்கள் இருங்கள். பெண் கண்ணீர் விட்டால் அங்கே செல்வம் தங்காது.

புரிந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கையை நீங்களும் அழகாய் வாழலாம்

🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶