flipkart discount sale search here.

Tuesday, 1 August 2017

இனி இவர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாது...!

இனி இவர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாது...!

👉 தமிழகத்தில் பல லட்சம் மக்கள் ரேஷன் கார்டை பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். உயர்ந்தவர், தாழ்ந்தவர் இன்றி ஏழை, பணக்காரன் என பாகுபாடு இன்றி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சில குடும்பங்களில் ரேஷன் கார்டு மூலம் கொடுக்கப்படும் பொருட்களால் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரம் செல்கின்றது.

👉 மக்களின் மத்தியில் ரேஷன் கார்டின் மதிப்பு இன்றியமையாததாக இருக்கின்றது. ரேஷன் கார்டை பெற மக்கள் வரிசையில் நின்று காத்துக் கொண்டு இருக்கின்றனர். ரேஷன் கார்டின் அத்தியாவசியம் இவ்வாறு இருக்க, தமிழக அரசு ஒரு புதிய விதிமுறையை வகுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

👉 தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் தமிழகம் இணைந்துவிட்டது என்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ரேஷன் பொருட்களும், ரேஷன் கார்டுகளும் யார் யாருக்கெல்லாம் கிடையாது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாது :

👉 ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

👉 மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும் ரேஷன் பொருட்கள் கிடையாது என்று தெரிவித்துள்ளது.

👉 ஓய்வு பெற்ற அரசு ஊழியர் குடும்பத்துக்கும் ரேஷன் பொருள் கிடையாது என்று அறிவித்துள்ளது.

👉 வருமான வரி செலுத்தும் நபரை குறைந்தது ஒரு உறுப்பினராக கொண்ட குடும்பங்களுக்கு ரேஷன் பொருள் கிடையாது.

👉 தொழில் வரி செலுத்துபவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்களுக்கு ரேஷன் பொருள் கிடையாது.

👉 பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்களுக்கும்,

👉 நான்கு சக்கர வாகனத்தை வைத்துள்ள குடும்பங்களுக்கும் (ஒரு நான்கு சக்கர வாகனத்தை வணிக பயன்பாட்டிற்காக தினசரி வாழ்வாதாரத்துக்கு வைத்துள்ள குடும்பத்தினர் நீங்கலாக)

👉 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருந்தாலும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என அறிவித்துள்ளது.

இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கும் :

👉 அந்தியோஜனா அன்னயோஜனா திட்டம், அன்னபு ர்ணா ஆகிய திட்டங்களின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

👉 வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கும், மாற்றுத் திறனாளியை குடும்பத் தலைவராக கொண்டவர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

👉 குடிசைவாசிகள், குப்பை சேகரிப்பாளர்கள், வீடில்லாதவர்கள் ஆகியோருக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

👉 விவசாய தொழிலாளர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். இந்த விதிகள் உடனடியாக தமிழகத்துக்கு பொருந்தாது என அமைச்சர் காமராஜ் அறிவித்திருக்கிறார். விரைவிலேயே இதை தமிழக அரசு அமல்படுத்தும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment