flipkart discount sale search here.

Wednesday, 2 August 2017

அடி முட்டாள் கபாலி தான்...

ஒரு குக்கிராமத்தில் அடிமுட்டாள் சிறுவனும், அவன் அம்மாவும் வசித்து வந்தனர்
அவன் பெயர் கபாலி.

அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்தான்.
மிக மிக மோசமான முட்டாள் பையனாக இருந்தான் கபாலி.

படிப்பில் எல்லோரை விடவும் பின்தங்கி இருந்தாலும், அவனோட அடிமுட்டாள் தனத்திற்கு ஒரு அளவே இல்லாம இருந்தது.

இதை சகிக்க முடியாத பள்ளி தலைமை ஆசிரியர் மாற்றுச் சான்றிதழை கொடுத்து அவனை பள்ளிகூடத்திற்கு வரவிடாமல் செய்துவிட்டார்...

இதனால் அவனோட அம்மா அந்த கிராமத்தை விட்டு காலி செய்து  தஞ்சையில் குடியேறி அங்கே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அவனை சேர்த்து படிக்க வைத்தாள்.

⏩⏩⏩
20 வருடத்திற்கு அப்புறம்........

பழைய தலைமை ஆசிரியருக்கு இதய சிகிச்சைக்காக தஞ்சைக்கு வருகிறார்.

எல்லா மருத்துவர்களும் பரிசோதித்து விட்டு கூறினார்கள். நீங்கள் தற்போது சிக்கலான சிகிச்சை தரவேண்டிய தருணத்தில் உள்ளீர்கள்.
இதை வெற்றிகரமாகச் செய்ய ஒரே ஒரு கைதேர்ந்த மருத்துவர் தான் இருக்கிறார்.
அவரால் மட்டுமே இதை செய்ய முடியும் என்றார்கள்...

அதன்படி சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

தலைமை ஆசிரியர் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தார்... எதிரே இளவயது மருத்துவர் தன்முன்னில் நின்றார்..

தன் உயிரை காப்பாற்றிய மருத்துவருக்கு நன்றி கூற முயற்சி செய்கிறார்.

மருத்துவர் சிறு புண் சிரிப்போடு தலைமை ஆசிரியரின் நெற்றியில் வருடும்போது முகம் மாறியது.

என்னவோ சொல்வதற்காக முயற்சி செய்து கையை தூக்கினாலும் உயர்ந்த கை கீழே விழுந்தது...
கண்கள் நிரந்தரமாய் மூடியது...

திடீரென்று என்ன நடந்தது என்று தெரியாமல் அதிர்ச்சியடைந்த மருத்துவர் திரும்பி பார்த்தபோது...

ventilator ஒயரை பிடுங்கி vacaum cleaner ஒயரை சொருகி அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தான் நம்முடைய அடிமுட்டாள் கபாலி.

அவன் இப்போ அங்கே வேலை பார்க்கிறான்.

என்ன மக்களே....
அந்த இளவயது மருத்துவர் தான் கபாலியாக இருக்கும் என்று நீங்க நினைத்தால் அதற்கு நான் பொருப்பு அல்ல...

அதுக்கு காரணம்
நீங்க சினிமாவும், சீரியலும் பார்த்து வளர்ந்ததுனால் தான்.

முட்டாள் கபாலி என்னைக்கும், எப்பவும் அதே அடி முட்டாள் கபாலி தான்...

கபாலி டா
முட்டாள் டா
அடி முட்டாள் டா...

No comments:

Post a Comment