flipkart discount sale search here.

Tuesday, 1 August 2017

மோட்டர் வாகனச் சட்டம்...

மோட்டர் வாகனச் சட்டம் மற்றும் அபராதம்
1. உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது / பிரிவு 180. ரூ.50 அபராதம்
2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் பிரிவு 181. ரூ.500 அபராதம்
3. உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழந்தவர்கள் வண்டி ஓட்டுதல் பிரிவு 182(1). ரூ.500 அபராதம்
4. அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் பிரிவு 183(1) ரூ.400 அபராதம்
5. மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல். முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) பிரிவு 183(2).ரூ.300 அபராதம்
6. அபாயகரமாக ஓட்டுதல் பிரிவு 184. ரூ.1000 அபராதம் மற்றும் சென்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) பிரிவு 177.ரூ.100 அபராதம்
7. போக்குவரத்திற்க்கு இடையூர் செய்தல் பிரிவு 201 .ரூ.50 அபராதம்
8. மன நிலை, உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் .பிரிவு 186. ரூ.200 அபராதம்
9. போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் பிரிவு 189. ரூ 500 அபராதம்
10. அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது பிரிவு 190(2) .ரூ.50 அபராதம்
11. அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் பிரிவு 190(2).ரூ.50 அபராதம் .
12. காற்று ஓலிப்பான் .பல்லிசை ஓலிப்பான் பிரிவு 190 (2) .ரூ.50 அபராதம்
13. பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் பிரிவு 192. ரூ.500 அபராதம்
14. அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடைய்யுடன் ஓட்டுதல் பிரிவு 194.ரூ.100 அபராதம்
15. காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) பிரிவு 196 .ரூ.1000 அபராதம்
16. வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் பிரிவு 198 .ரூ.100 அபராதம்

No comments:

Post a Comment