flipkart discount sale search here.

Monday, 17 July 2017

சளியினால் ஏற்படும் தொந்தரவு தீர...

சளியினால் ஏற்படும் தொந்தரவு தீர...

1) குழந்தைகளுக்கு கற்பூரவல்லி இலையை 5 அல்லது 6 என்ற அளவில் எடுத்து கழுவி ஒரு தவாவில் வைத்து வதக்கி பிறகு சாறு பிழிந்து கொடுத்து வந்தால் சளித்தொல்லை தீரும்.

2) குழந்தைகளுக்கு நன்கு காய்ச்சிய பாலில் தேவையான அளவு சர்க்கரை, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கொடுத்து வர சளி குறையும்.

3) மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அதிகப்படியான சளியினால் மூச்சு விட கஷ்டப்படுவார்கள். அவர்களுக்கு குப்பைமேனி இலைகளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் உப்பு அரை தேக்கரண்டி அளவு வைத்து நன்கு கசக்கி சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஊற்றாமல் பால் அல்லது ஏதாவது சாப்பிட கொடுத்து விட்டு பிறகு கொடுக்கவேண்டும். சிறிது நேரத்தில் வாந்தி வரும், இதனுடன் சளியும் சேர்ந்து வெளியே வந்துவிடும். இதனால் சளி குறைவதோடு மூச்சு விட சுலபமாக இருக்கும்.

4) பெரியவர்களுக்கு தூதுவளை கீரையை துவையல் செய்து மதிய நேரத்தில் சாப்பிட்டால் சளியினால் ஏற்படும் தொந்தரவு தீரும்.

5) சளியினால் ஏற்படும் இருமலை போக்க அடுப்பில் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் மிளகு தூள், தேவையான அளவு வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும், அரை டம்ளர் ஆனவுடன் இறக்கி வடிகட்டி சூடாக பருகவும். இவ்வாறு குடிப்பதால் இருமல் நிற்பதோடு சளி தொல்லையும் தீரும்.

No comments:

Post a Comment