*பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா*
என்ற படைப்பு மிகவும் புகழ் பெற்றது.
அதில் இடம் பெற்றுள்ள கேள்வி, பதில்களிருந்து சில... :
*1. எது இதமானது ?*
தர்மம்.
*2. நஞ்சு எது ?*
பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.
*3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?*
பற்றுதல்.
*4. கள்வர்கள் யார் ?*
புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.
*5. எதிரி யார் ?*
சோம்பல்.
*6. எல்லோரும் பயப்படுவது எதற்கு ?*
இறப்புக்கு.
*7. குருடனை விட குருடன் யார் ?*
ஆசைகள் அதிகம் உள்ளவன்.
*8. சூரன் யார் ?*
கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.
*9.மதிப்புக்கு மூலம் எது ?*
எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.
*10. எது துக்கம் ?*
மன நிறைவு இல்லாமல் இருப்பது.
*11. உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?*
குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.
*12. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?*
இளமை, செல்வம், ஆயுள்.... ஆகியவை.
*13. சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ?*
நல்லவர்கள்.
*14. எது சுகமானது ?*
அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.
*15. எது இன்பம் தரும் ?*
நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.
*16. எது மரணத்துக்கு இணையானது ?*
அசட்டுத்தனம்.
*17. விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ?*
காலமறிந்து செய்யும் உதவி.
*18. இறக்கும் வரை உறுத்துவது எது ?*
ரகசியமாகச் செய்த பாவம்.
*19. எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?*
துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்... ஆகியோர் !
*20. சாது என்பவர் யார் ?*
ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.
*21. உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?*
சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.
*22. யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?*
எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.
*23. செவிடன் யார் ?*
நல்லதைக்
கேட்காதவன்.
*24. ஊமை யார் ?*
சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான
சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.
*25. நண்பன் யார் ?*
பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.
*26. யாரை விபத்துகள் அணுகாது ?*
மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்
அன்புடன்" பகிரவும் "அனைவரும் உயர.
No comments:
Post a Comment