flipkart discount sale search here.

Sunday, 30 July 2017

குற்றவியல் நீதிமன்றங்கள்...

குற்றவியல் நீதிமன்றங்கள்

1. குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (JM Court Judicial Magistrate Court)
மாநகர (அ) பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
Metropolitan Judicial Magistrate Court
சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம்

2. தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (CJM Court Chief Judicial Magistrate Court)
மாநகர (அ) பெருநகர தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
Chief Metropolitan Judicial Magistrate Court

3. அமர்வு நீதிமன்றம் Sessions Court

குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்

குற்ற வழக்குகளை மட்டும் விசாரனை செய்யும் அதிகாரம் கொண்டது சாதாரனமாக அதிக பட்சம் 3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கும் அதிகாரம் உள்ளது என்று பொருள் கொள்ளலாம். இதன் நீதிபதியை "குற்றவியல் நீதித்துறை நடுவர்" என்று அழைப்பார்கள் இந்த நீதிமன்ற எல்லை காவல் நிலையம் அடிப்படையில் இருக்கும் நான்கு ஐந்து காவல் நிலையங்கள் ஒரு நீதிமன்ற ஆள்வரைக்குள் வரும், சாதாரனமாக வருவாய் வட்டத்திற்கு (தாலுக்கா) ஒரு நீதிமன்றம் இருக்க வாய்ப்பு உள்ளது.

மாநகர (அ) பெருநகர நீதித்துறை நடுவர்

நீதிமன்றம் சென்னை மாநகர பகுதியில் குற்ற வழக்குகளை மட்டும் விசாரனை செய்யும் அதிகாரம் கொண்டது.

தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (CJM Court Chief Judicial Magistrate Court) என்பது மாவட்ட அளவில் குற்றவியல் நீதித்துறை நடுவர்களை நிர்வாகம் செய்யும் நீதிமன்றம் ஆகும்.
கொலை முயற்சி போன்ற வழக்குகளை விசாரனை செய்யும் அதிகாரம் கொண்டது. 7 ஆண்டுகளுக்கு மிகாமல் தண்டனை வழங்கும் அதிகாரம் கொண்டது

சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என்பது குறிபிட்ட வகையான வழக்குகளை விசாரனை செய்ய அமைக்கப்பட்டது ஆகும்
(எ.கா) காசோலை வழக்குகள்

அமர்வு நீதிமன்றம் Sessions Court என்பது மாவட்ட அளவிலான நீதிமன்றம் கொலை வழக்கு உள்ளிட்ட மிகபெரிய குற்ற வழக்குகளை விசாரனை செய்யும் அதிகாரம் கொண்டது மரன தண்டனை கொடுக்கும் அதிகாரம் கொண்டது.

கூடுதல் அமர்வு நீதிமன்றம் என்பது அமர்வு நீதிமன்றம் கொண்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் கொண்டது.மாவட்டத்தில் தேவைக்கு ஏற்ப பல இருக்கும்

உதவி அமர்வு நீதிமன்றம் என்பது 10 ஆண்டுகளுக்கு மிகாமல் தண்டனை வழங்கும் அதிகாரம் கொண்டது வழக்கமாக சார்பு நீதிமன்றம் (Sub Court) உதவி அமர்வு நீதிமன்றமாகவும் குற்ற வழக்குகளில் செயல்படும்

உங்கள் ஊரில் உள்ள  நீதிமன்றம் விபரம் அறிய http://services.ecourts.gov.in/ecourtindia/

குற்றவியல் வழக்குகளில் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகபட்ச தண்டனை வழங்கும் அதிகாரம்:

1. குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (JM Court Judicial Magistrate Court)
மாநகர (அ) பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
Metropolitan Judicial Magistrate Court

3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.

2. தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (CJM Court Chief Judicial Magistrate Court)
மாநகர (அ) பெருநகர தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
Chief Metropolitan Judicial Magistrate Court
7 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.

* உதவி அமர்வு நீதிமன்றம் Assistant SESSIONS COURT : 10 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.

* கூடுதல் அமர்வு நீதிமன்றம் ADDITIONAL SESSIONS COURT : அமர்வு நீதிமன்றத்திற்கு இனையான சமமான அதிகாரம்

* முதன்மை அமர்வு நீதிமன்றம் Principal SESSIONS COURT : ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது 10 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
மரன தண்டனை விதிக்கலாம் ஆனால் உயர் நீதிமன்றம் உறுதி படுத்த வேண்டும்

* MAHILA COURT : அமர்வு நீதிமன்ற அதிகாரம்
நீதிதுறை நடுவர் அளவிலும் சில MAHILA COURT உள்ளது

* SPECIAL COURT : சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்ட உத்திரவில் சொல்லப்பட்டுள்ள அதிகாரம்
(அமர்வு நீதிமன்ற அதிகாரம் மிகாமல் )

* HIGH COURT : மரண தண்டனை அல்லது ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.

* SUPREME COURT : மரண தண்டனை அல்லது ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.

No comments:

Post a Comment