flipkart discount sale search here.

Tuesday, 2 March 2021

செம்புகாப்பு அணிவது நல்லதா…?

#செம்புகாப்பு அணிவது நல்லதா…? 
அறிவியல் கூறும் உண்மை என்ன????

புதிய புதிய பொருட்களின் உற்பத்தி காரணமாக முன்பிருந்த பழக்க வழக்கங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றும் சிலர் சில பழக்கங்களை பின்பற்றி வருகின்றனர். அதில் கையில் செம்பு காப்பு அணிவது. 

அது ஸ்டைல் என நினைத்து சிலர் அணிந்து வருகின்றனர். செம்பு காப்பு அணிவது உடல் ஆரோக்கியத்திற்கு பல அற்புத பலன்களை அளிக்கும். உடல் வெப்பத்தை குறைக்க உதவும். உங்கள் தேய்மானத்தை சரி செய்ய செம்பு காப்பு உதவுகிறது. மூட்டுவலி, வீக்கம் வலியை குறைக்கவும் உதவுகிறது

மனிதர்களுக்கு ஒரு மருந்து போல செயல்பட்டு நம்மை பாதுகாக்கின்றது. முன்னொரு காலத்தில் காயங்களை குணப்படுத்த செம்பு பயன்படுத்தப்பட்டது. செம்பில் ஆன்ட்டி பாக்டீரியா அதிக அளவில் உள்ளதால் 99% பாக்டீரியாக்களை இரண்டு மணி நேரத்தில் அழிக்கும் சக்தி செம்புக்கு உள்ளது. பாக்டீரியாக்களை அழிப்பதற்கு இதனுடன் நேரடி தொடர்பு தேவைப்படுகிறது.

ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு தாமிரம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தாமிர குறைபாடு இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை பாதிக்கும். நம் உடலில் நோய் தொற்றுக்கு எதிராக போராட முடியாத நிலை ஏற்படும். இதனால் பெரும்பாலும் குழந்தைகளிடையே காணப்படும் குறைபாடு காரணம் இதுதான். இதனால் செம்பு காப்புகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டாயம் பயன்படுத்தலாம்

No comments:

Post a Comment