flipkart discount sale search here.

Wednesday 9 January 2019

பொங்கல் பரிசு தொகை உண்டு.... Pongal parisu theavaiyaa ithai paarunga...

👉 👉 உங்கள் ரேஷன்கார்டில் இந்த குறியீடு இருக்கிறதா? அப்போ பொங்கல் பரிசு தொகை உண்டு....


சென்னை: வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் பொங்கல் பரிசு திட்டத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு, எதற்காக பொங்கல் பரிசு பணம் வழங்குகிறீர்கள்? வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கும் எதற்காக பொங்கல் பரிசு பணம் என்று ஹைகோர்ட் கேள்வி எழுப்பியது.

அதேநேரம் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகளுக்கு, பொங்கல் பரிசு தொகை வழங்கலாம் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டது. அதேபோல அந்தியோஜனா திட்டம் கொண்ட ரேஷன்கார்டுதாரர்களுக்கும் பரிசுத் தொகை வழங்க அனுமதி அளித்துள்ளது ஹைகோர்ட்.

ரேஷன்கார்டுகளில், PHH/PHH-AAY/NPHH/NPHH-S என்ற குறியீடுகளில் ஏதாவது உங்கள் ரேஷன் கார்டில் இடம் பெற்றிருந்தால், நீங்களும் பொங்கல் பரிசு வாங்க தகுதியுடையவர்களாகும். அல்லது, பொங்கல் பரிசு தொகை கிடைக்காது.

Pongal parisu theavaiyaa ithai paarunga...

👉 👉 உங்கள் ரேஷன்கார்டில் இந்த குறியீடு இருக்கிறதா? அப்போ பொங்கல் பரிசு தொகை உண்டு....


சென்னை: வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் பொங்கல் பரிசு திட்டத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு, எதற்காக பொங்கல் பரிசு பணம் வழங்குகிறீர்கள்? வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கும் எதற்காக பொங்கல் பரிசு பணம் என்று ஹைகோர்ட் கேள்வி எழுப்பியது.

அதேநேரம் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகளுக்கு, பொங்கல் பரிசு தொகை வழங்கலாம் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டது. அதேபோல அந்தியோஜனா திட்டம் கொண்ட ரேஷன்கார்டுதாரர்களுக்கும் பரிசுத் தொகை வழங்க அனுமதி அளித்துள்ளது ஹைகோர்ட்.

ரேஷன்கார்டுகளில், PHH/PHH-AAY/NPHH/NPHH-S என்ற குறியீடுகளில் ஏதாவது உங்கள் ரேஷன் கார்டில் இடம் பெற்றிருந்தால், நீங்களும் பொங்கல் பரிசு வாங்க தகுதியுடையவர்களாகும். அல்லது, பொங்கல் பரிசு தொகை கிடைக்காது.

Sunday 6 January 2019

ரேஷன் கடைகளில் முறைகேடு புகார் தகவல் தெரிவிக்க கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்...

ரேஷன் கடைகளில் முறைகேடு புகார் தகவல் தெரிவிக்க கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்
...........................................................
☄ *காஞ்சிபுரம்-  9445045604.

☄ *திருவள்ளூர்- 9445045605.

☄ *சென்னை-   9445045601.

☄ *சென்னை (வ)-    9445045602.

☄ *சென்னை (தெ)- 9445045603.

☄ *திருச்சி- 9445045618.

☄ *வேலூர்- 9445045606.

☄ *தஞ்சை- 9445045619.

☄ *தி.மலை- 9445045607.

☄ *திருவாரூர்- 9445045620.

☄ *விழுப்புரம்- 9445045608.

☄ *நாகை- 9445045621.

☄ கடலூர்- 9445045609.

☄ புதுகை- 9445045622.

☄ தர்மபுரி-9445045610.

☄ திண்டுக்கல்- 9445045623.

☄ சேலம்- 9445045611.

☄ தேனி- 9445045624.

☄ நாமக்கல்- 9445045612.

☄ மதுரை- 9445045625.

☄ ஈரோடு- 9445045613.

☄ சிவகங்கை- 9445045626.

☄ கோவை- 9445045614.

☄ விருதுநகர்- 9445045627.

☄ நீலகிரி- 9445045615.

☄ ராமநாதபுரம்- 9445045628.

☄ கரூர்- 9445045616.

☄ தூத்துக்குடி- 9445045629.

☄ பெரம்பலூர்- 9445045617.

☄ நெல்லை- 9445045630.

☄ கன்னியாகுமரி- 9445045631.

☄ கிருஷ்ணகிரி-    9445045632.

☄ அல்லது- 044-28592828

பிறரும் தெரிந்துகொள்ள பகிருங்கள்😉🌹

Thursday 3 January 2019

Life story #36



_ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தார்.._

_அவர் மிகப்பெரிய பணக்காரர்.. ஆனால் யாருக்கும் உதவ மாட்டார்.._

_ஆனால், ஒரு ஆசை மட்டும் வெகுநாட்களாக இருந்தது.._

*_தான் உயிருடன் இருக்கும்போதே.. சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை தான் அது.._*

_ஒருநாள், அவரது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார்.._

_*அவரின் ஆசையை நிறைவேற்றுவதாக கூறினார்..*_
_அவரை அழைத்துக் கொண்டு சென்றார்.._

_*முதலில் அவரை நரகத்திற்கு கூட்டி சென்றார்..*_

_அங்கு உணவு நேரத்தில் பெரிய, பெரிய அண்டாக்களில் சாதம்.. குழம்பு.. மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன.._
_அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது.._

_எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது.._

_ஆனால், அந்தோ பரிதாபம்.._

_அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி வாய்க்கு உணவை கொண்டு செல்ல முடியவில்லை.._

_எனவே, அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை.._ _*அவர்களுக்கு பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது..*_ _அனைத்தையும் கீழே தள்ளிவிட்டு.. அவற்றில் உள்ள உணவை கொட்டித் தள்ளினர்.. பின்னர் தாங்க முடியாத பசியினால் அழுது கொண்டே இருந்தனர்.. அது ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது.._

_*அதன் பின்னர், அந்த பெரியவர் கருமியை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார்..*_ _அங்கும், அதே போல.. நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டுருந்ததது.. அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது.. ஆனால் தங்கள் வாய்க்கு அருகில் கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை.._

_ஆனால், அவர்களில் ஒருவர் தனது கையினால் இனிப்பு வகைகளை எடுத்து மற்றொருவர் வாய் அருகே நீட்டினார்.._

*_கையை மடக்கத்தானே முடியாது.. கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டலாமல்லவா.._*

_இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர்.. அனைவரின் வயிறும் நிரம்பியது.._

_கனவில் இருந்து மீண்ட கருமி.. ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை புரிந்து கொண்டார்.. தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை உணர்ந்தார்.. அன்றிலிருந்து அவர் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தார்.._


👇
*அடுத்தவருக்கு செய்யும் உதவியே.. ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு..*

*பிறரை மகிழ்வித்து மகிழ்..*

*அதுவே சொர்க்கம்..*


Life story #34



_அவ்வூரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை.._ _அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது.._ _மக்கள் பசியால் வாடினர்.._

_நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.._
*ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம்.. சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் ஒரு வேளை உணவுக்காவது நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்* என்று வேண்டினர்..

_இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,_ *இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம்.. தினமும் ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன்.. என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!* என்றார்..

_மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரரை அழைத்தார்.._ *இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள்.. ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும்.. கூடவும் கூடாது, குறையவும் கூடாது.. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இருங்கள்..* என்றார்..

_மறுநாள், வேலைக்காரர் மோதகக் கூடையுடன் வெளியே வந்தார்.._ _அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.._ _கூடையை அவர்கள் முன் வைத்தார் அவர்.._

_பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர்.._ _ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள்.. எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.._

_இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது.. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர்.. ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது.. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி.. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள்.. அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய்.. அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.._

_அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி.._ *ஐயா! இது உங்கள் தங்கக் காசு.. மோதகதுக்குள் இருந்தது.. பெற்றுக் கொள்ளுங்கள்!* _என்றாள் அவள்.._

*குழந்தாய்! உன் உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு.. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்..*  _என்றார் செல்வந்தர்.._

_துள்ளிக் குதித்தபடி வீட்டிற்கு ஓடினாள் அச்சிறுமி.._


👇
_*எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் இறைவனின் ஆசியை பெறலாம்..*_


Life story #35



_ஒரு ஞானி ஓர் ஊரில் தங்கியிருந்தார்.._ _அந்த ஊரைச் சேர்ந்த விவசாயி அவரது வீட்டுக்கு பின்னால் சுமார் இரண்டடி நீளமுள்ள ஒரு பாம்பை அடித்துக் கொன்றார்.._
_பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று தன் மனைவியிடம்_ *நான், மூன்றடி நீளமுள்ள பாம்பை கொன்றேன்..* _என்று சொன்னார்.._

_அதைக் கேட்டு அதிசயித்த மனைவி தன் பக்கத்துவீட்டுப் பெண்ணிடம்_ *என் கணவர் சுமார் ஐந்தடி நீளமுள்ள பாம்பை தனி ஒருவராக அடித்துக்கொன்றார்.. தெரியுமா?* _என்று பெருமையாகச் சொன்னார்.._

_அந்த பெண்மணியோ, தன் பக்கத்து தெருவில் உள்ள தோழியிடம்.._ *எங்கள் தெருவில் ஒருவர், சுமார் பத்தடி நீளமுள்ள பாம்பை தனி ஒருவராக அடித்துக் கொன்றார்* _என்று கூறினார்.._

_அதனைக் கேட்ட அத்தோழி_ *எங்கள் ஊரில் ஒருவர் முப்பதடி பாம்பை சாகடித்திருக்கிறார்..* _என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார்.._

_இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஞானி.._ *மிகைபடுத்துவதால், கற்பனைத்திறன் வேண்டுமானால் வளருமே தவிர..* *உண்மை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்..* _என்று ஊர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.._

_அதைக்கேட்ட விவசாயி_ *தான் இரண்டை  மூன்றாக்கியது.. இப்போது முப்பதாகிவிட்டதை அறிந்தான்..* _ஆனாலும், முப்பதடி பாம்பைக்கொன்ற பெறுமையையும் விட்டுக்கொடுக்க அவனுக்கு மனமில்லை.._
*தன் வீரம் பற்றி, புதிதாக வந்திருக்கும் ஞானிக்கு என்ன தெரியும்?*  _என்று அலட்சியமாக கேட்டான்.._

_உடனே, ஞானி விவசாயின் ஐந்து வயது மகனை அழைத்தார்.._ *உன் அப்பா.. முப்பதடி பாம்பை கொன்றாரா?* _என்று கேட்டார்.._

_ஆனால், அவனோ அவரை அதிசயமாக பார்த்து விட்டு.._ *செத்த பாம்பு, வளருமா?* என்று கேட்டான்..

_அதை கேட்டு ஞானி பெரிதாக சிரித்தார்_

*தனது தந்தையார், பாம்பை கொன்றதாக சொன்னபோது ஓடிப்போய் பார்த்திருக்கிறான்.. அது வெறும் இரண்டடி பாம்புதான் என்பதும் அவனுக்குத் தெரிந்திருக்கிறது..*
*அந்தப் பையனைப் போல, எல்லோரும் உண்மையை ஆராய்ந்ருந்தால்.. வதந்தியை பரப்ப நேர்ந்திருக்காது இல்லையா..?* _என்று அவர் ஊர் மக்களை பார்த்து கேட்டார்.._

_மக்கள் அனைவரும் தலைகுனிந்து கொண்டனர்.._


👇
 *இன்று ஊரும் செய்திகளும் அப்படித்தான் உலா வருகிறது..*

*ஈரை பேனாக்கி..*
*பேனை பெருச்சாளியாக்கும் உலகமிது..*

ஆகையால்.. எதையும் ஆராயாமல் பரப்ப வேண்டாம்..

*நல்லவையே படிப்போம்..*
*நல்லவையே பரப்புவோம்..*


Life story #33

(தொடர்கிறது..)

*நான் எனது கடையை மூடிவிட்டு எனது மகனை மருத்துவமனை கூட்டிச்சென்றேன்.. அவர்கள் எழுதிக்கொடுத்த மருந்தை வாங்க என்னிடம் பணம் இல்லை..*
*தீவிரவாதிகளுக்கு பயந்து யாரும் எனக்கு கடன் கொடுக்கவும் வரவில்லை..*
*என் நம்பிக்கை ஈற்று போய்விட்டது..*
*கடவுளிடம் கதறி அழுதேன்..*

*ஐயா கனவான்களே.. கடவுள் அன்று என்னுடைய கடைக்குள் வந்திருக்கிறார்..*

*நான் அழுது ஆற்றிக்கொண்டு என் கடையை வந்தடைந்த பொழுது.. என் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது..*

*நான் முழுதும் போய் விட்டது என்று நினைத்து கலங்கி, பயந்து உடைக்கப்பட்ட பூட்டை விலக்கி உள்ளே சென்று பார்த்தேன்..*

*அங்கே சர்க்கரை டப்பாவின் கீழே ஆயிரம் ரூபாய் இருந்தது..*
*உங்களுக்கு என்னால் அந்த ஆயிரம் ரூபாயின் மதிப்பை வார்த்தைகளால் சொல்ல இயலாது..*

*கடவுள் இருக்கிறார்.. என்றும் இருக்கிறார்.. இதை விட நான் என்ன சொல்ல..*
_என்று முடித்தார் அவர்.._

_அவர் கண்களில் அதற்கான நம்பிக்கை மிளிர்ந்தது.._

_அந்த பதினைந்து ஜோடிக்கண்களும் அந்த மேஜரின் ஒரு ஜோடிக்கண்களை இப்பொழுது துடிப்புடன் பார்த்தன.._

_அந்த ஒரு ஜோடிக்கண்,_ *எதையும் சொல்லாதீர்கள்* _என்பதை ஒரு அதிகார ஆணையாக பிறப்பித்ததை, அவர்கள் உணர்ந்தார்கள்.._

_அந்த மேஜர் எழுந்து, எல்லாவற்றிற்கும் பணம் கொடுத்தார்.._
_அந்த முதியவரை தழுவிக்கொண்டு_ *ஆம் தாத்தா, எனக்கும் தெரியும்.. கடவுள் இருக்கிறார்.. தாத்தா.. உங்கள் தேனீர் மிக அபாரம்..*
_இதை அவர் சொல்லும் பொழுது, அவர் கண்களின் ஓரம் படிந்த ஈரத்தை மீதி பதினைந்து ஜோடிக்கண்களும் பார்க்க தவறவில்லை.._


👇
*யாரும் யாருக்கும் கடவுளாகலாம்..*

_(இது ஒரு இராணுவ வீரரால் சொல்லப்பட்ட உண்மை கதை..                                        மார்க்கம் @ கூப்வாரா செக்டார் காஷ்மீர் பகுதி)_

*அழுவதை விட, அதிகமாக சிரியுங்கள்..*

*பெறுவதைவிட, அதிகமாக கொடுங்கள்..*

*வெறுப்பதைவிட, அதிகமாக நேசியுங்கள்..*


Life story #32



_பதினைந்து இராணுவ வீரர்கள் மற்றும் அக்குழுவின் மேஜரும் இமாலயாவில் 3 மாத காலம் பணி புரிய சென்று கொண்டிருந்தார்கள்.._

_மிகவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையும் , இடை இடையே பனி மழையும் அவர்கள் மலை ஏறுவதை மிகவும் கடினப்படுத்தியது.._

_இந்நேரத்தில், யாராவது ஒரு கப் தேநீர் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.._
_அந்த மேஜர் மனமும் உடலும் ஆசைப்பட்டது.._

_ஆனால் அது ஒரு வெற்று ஆசை என அறிந்ததும்.._
_அதை பொருட்படுத்தாமல், ஒரு மணி நேரம் நடக்க, வழியில் ஒரு ஒரு மிகச்சிறிய கடை ஒன்றை கண்டார்கள்.._

_அது ஒரு தேநீர் கடைப்போலவே இருந்தது.. ஆனால் பூட்டால் பூட்டப்பட்டிருந்தது.._

*அதிர்ஷ்டம் இல்லை, தேனீர் இல்லை.. ஆனாலும் நாம் சில நிமிடம் ஒய்வெடுக்கலாம்..  நாமும் மூன்று மணி நேரம் நடந்து வந்திருக்கிறோம்..* என்றார் மேஜர்..

_அதில் ஒரு இராணுவ வீரர் சொன்னார்.._ *சார், இது ஒரு தேனீர் கடை தான், உள்ளே தேனீர் தயாரிக்க எல்லாம் இருக்கக்கூடும்..  நாம் பூட்டை உடைக்கலாமே..* என்றார்..

_இது ஒரு தர்மசங்கடமான நிலை மேஜருக்கு.._
_*தன்னுடைய தளர்ந்த வீரர்களுக்கு தேனீர் கொடுக்க பூட்டை உடைப்பதா அல்லது இப்படிப்பட்ட ஒரு தகாத காரியத்தை செய்யாமல் இருப்பதா*_ _என்று குழம்பினார்.._

_சிறிது நேரம் கழித்து, அவர் மனதை விட அவரின் அறிவு ஜெயித்தது.._

_*வீரர்களிடம் பூட்டை உடைக்கச்சொன்னார்..*_

_அவர்களின் அதிர்ஷ்டம், உள்ளே தேனீர் தயாரிக்க அனைத்து பொருட்களும் இருக்க, பிஸ்கெட் பாக்கெட்டுகளும் இருந்தது.._

_அனைவரும் தேநீர் மற்றும் பிஸ்கட்டுகளை நன்றாக உண்டு புறப்பட தயாராகினார்கள்.._

_*நாம் இந்த கடையின் பூட்டை உடைத்து தேனீர் மற்றும் பிஸ்கெட் உண்டோம்.. நாம் ஒரு மோசமான திருடர்கள் அல்ல.. இது ஒரு சூழல்.. நாம் இந்த தேசத்தை காக்கும் தேசத்தாயின் பிள்ளைகள்..*_
_இப்படிப்பட்ட நினைவு அவரை வந்து இடிக்க.._

_*அவர், ஆயிரம் ரூபாயை தன் பர்ஸில் இருந்து எடுத்து.. அங்கு இருந்த சர்க்கரை டப்பாவின் கீழே வைத்து விட்டு.. கதவை மூடி விட்டு.. தன் குற்ற உணர்ச்சி துறந்து.. புறப்பட்டார்..*_

_அடுத்த மூன்று மாத காலத்தில்.. அவரின் தலைமையில் வீரர்கள் தீவிர கிளர்ச்சிக்கு உள்ளாகக்கூடிய அவ்விடத்தில் பணியாற்றிட, அடுத்த குழு வந்து அவர்களை விடுவித்தது.._

_அதே வழியில் அவர்கள் திரும்ப, அதே தேனீர் கடை.. ஆனால் இப்பொழுது அது திறந்திருந்தது.. அதன் முதலாளியும் இருந்தார்.._

_ஒரு வயதான அந்த கடை முதலாளி, தீடீரென்று தனக்கு கிடைத்த அந்த பதினாறு விருந்தாளிகளையும் வரவேற்று அமரச்சொன்னார்.._

_எல்லோரும் தேனீரும் பிஸ்கெட்டும் உண்டு களித்தனர்.._

_அந்த வயதானவரிடம், இப்படி ஒரு அத்வான இடத்தில் தேனீர் விற்பது பற்றியும் அவரின் வாழ்க்கை சூழல் பற்றியும் பேசினர்.._

_அவரிடம் பல அனுபவ கதைகள் இருந்தது.._
_மிகவும் நிறைந்த நெஞ்சுடன், கடவுள் பக்தியும் இருந்தது.._

_ஒரு வீரர் கேட்டார்.._ *தாத்தா.. கடவுள் இருக்கிறார் என்பது உண்மை எனில், அவர் எதுக்கு உங்களை இப்படி, இங்கே, இவ்வளவு வறுமையுடன் வைத்திருக்க வேண்டும்..* என்று..

*அப்படி சொல்லாதீர்கள் தம்பி.. கடவுள் நிச்சயம் இருக்கிறார்.. அதற்கு என்னிடம் சான்றே இருக்கிறது..*

*மூன்று மாதம் முன்பு.. சில தீவிரவாதிகளால், எனது மகன் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டான்..*

(தொடரும்...

Life story #31



_இந்த அருமையான கதையை நமக்கு அனுப்பிய_ *கோவில்பட்டி-யை சேர்ந்த இன்கார்ப் இரவி* _அவர்களுக்கு_
*_நமது நன்றியினையும்.. அவரது குடும்பம் வாழ்வாங்கு வாழ இறைவனையும் அனைவரும் வேண்டுவோமாக.._*

இனி கதை..

_ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது.._

_அக்கடையில் முதலாளியே தொழிலாளி.._

_ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம்_ *முதலாளி மூளையிருக்கா..?* என்று கேட்பான்..

_அதற்கு முதலாளியோ_ *மூளை இல்லை* _என்றவுடன்,_
*என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா?* _என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான்.._

_இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்கவேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை.._

_நாட்கள் நகர்ந்தன.._

_ஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பர் ஒருவர் அக்கடைக்கு வந்தார்.._
_அவரிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற,_

*அட இவ்வளவு தானே.. நான் பார்த்துக்கொள்கிறேன்..* _என்று நண்பரும் கூறினார்.._

_கடையை மூடப்போகும் சமயம்,_ _அத் திமிர்பிடித்தவன் வந்து.. முதலாளியிடம்,_ *முதலாளி மூளையிருக்கா..?* _என்று வழக்கம் போலக் கேட்டான்.._

_அதற்கு முதலாளியின் நண்பர் அவனைப் பார்த்து,_
*இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது.. ஆனால், துரதிஷ்டவசமாக உங்களுக்குத்தான் இல்லை..* என்றார்..

_திமிர்பிடித்தவனின் பேயறைந்த முகத்தைப் பார்த்த.. கடை முதலாளியின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி.._


👇
*எத்தனுக்கு எத்தன்.. இந்த உலகத்தில்.. ஏதோ ஒரு மூலையில்.. யாரோ ஒருவர் இருந்து கொண்டுதான் இருப்பார்..*

*இந்த உலகில் நாம் தான் புத்திசாலி என்று இருப்பது தவறில்லை.. ஆனால் அதை வைத்து அடுத்தவரை முட்டாள் என கருதி காயப்படுத்தக் கூடாது..*


Life story #30



_இந்த அருமையான கதையை நமக்கு அனுப்பிய_ *தஞ்சாவூரை சேர்ந்த நிர்மல் ராஜ் சகோதரர்* _அவர்களுக்கு_
*_நமது நன்றியினையும்.. அவரது குடும்பம் வாழ்வாங்கு வாழ இறைவனையும் அனைவரும் வேண்டுவோமாக.._*

இனி கதை..

_ஒரு செல்வந்தர் வீட்டில் நடந்த திருமணத்தை நடத்தி வைக்க அந்தணர் வந்தார்.._

_அந்த வீட்டில் நிறைய கன்றுகுட்டிகள் இருந்தன.._

_*அதில் ஒரு கன்றை எனக்குத் தாருங்கள்.. அதை வளர்த்து, பால் கறக்கும் பருவத்தில், கடவுளின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தி கொள்கிறேன்..*_ _என்று செல்வந்தரிடம் கேட்டார்.._

_அவரும் கொடுத்து விட்டார்.._

_மிகச்சிறிய அந்தக் கன்று, தன் ஊர் வரை நடந்து வர சிரமப்படும் என்று இரக்கப்பட்ட அந்தணர், அதை தோளில் சுமந்தபடி நடந்தார்.._

_வழியில் மூன்று திருடர்கள் வந்தனர்.._

_கன்றைப் பறிக்க எண்ணிய அவர்கள் ஒரு ஓரமாகப் பதுங்கினர்.._

_முதலில் ஒருவன் வெளியே வந்து.._ _*சாமி! யாராவது பன்றிக்குட்டியைச் சுமப்பார்களா..? நீங்கள் சுமக்கிறீர்களே..?*_ _என்று கேட்டான்.._

_*மடையா..! மடையா..! இந்த கன்றுகுட்டியாடா..! பக்கத்து ஊர் செல்வந்தர் எனக்கு பரிசாகக் கொடுத்தார்..*_ _என்றதும் அவன் போய்விட்டான்.._

_அடுத்தவன் வந்தான்.._
_*யாராவது பன்றிக்குட்டியை சுமப்பார்களா..? நீர் சுமக்கிறீரே..?*_ _என்றதும், அவனுக்கும் தகுந்த பதிலை சொன்னார் அந்தணர்.._

_மூன்றாமவன் வந்தான்.._
_*சாமி..! நீர் தான் இறைச்சி சாப்பிடமாட்டீரே..! பிறகேன், பன்றிக்குட்டியை சுமந்து செல்கிறீர்..?*_ என்றான்..

_அந்தணருக்கு பயம் வந்து விட்டது.._ _அந்த செல்வந்தர் கருமி போலும்..! என்னை ஏமாற்ற ஏதோ ஒரு பன்றியை மந்திரம்வைத்து கன்றுபோல மாற்றி தந்து விட்டார் என நினைக்கிறேன்.. உண்மையிலேயே இது பன்றிக்குட்டியாகத்தான் இருக்கும்.. என் கண்ணில் மட்டும் கன்றுக்குட்டி போல தெரிகிறது.. யாருமே இதைக் கன்று எனச் சொல்லவில்லையே என நடுங்கியவர், கன்றைகீழே இறக்கி விட்டுச் சென்றார்.._

_அதன்பிறகு.. திருடர்கள் எளிதாகத் கன்றுக்குட்டியை தூக்கிச் சென்று விட்டனர்.._


👇
*மற்றவர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக.. நாம், நமது நல்ல முடிவுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அவசியமே  இல்லை..*

*நம் முடிவில், நாம் உறுதியாக இருக்க வேண்டும்..*

*சுயபுத்தி தான் மனிதனுக்கு மிக முக்கியம்..*

Life story #29



_ஒரு வேடன் தன் மனைவி மற்றும் ஏழு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தான்.._
_அவன் தினமும் வேட்டைக்கு செல்வான்.._
_9 கொக்குகள் வரை வேட்டையில் தினமும் கிடைத்து வந்தது.._
_கொண்டு வந்து மனைவியிடம் கொடுப்பான்.._ _அவள் அவைகளை சமைத்து எல்லோருக்கும் பரிமாறுவாள்.._ _வேடனுக்கு ஒரே ஒரு கொக்கின் கறி தான் கிடைத்தது.._ _அவன் திருப்தி அடையவில்லை.._ _மேற்கொண்டு கிடைக்குமா என்று முயன்று பார்த்தான்.._ _கிடைப்பதாக இல்லை.._

மனைவியிடம் *நான் வேட்டையில் கொண்டு வரும் கொக்குகள் அனைத்தையும் சமைத்து, நீ சிறிது எடுத்து கொண்டு.. மீதம் எல்லாம் எனக்கே வைத்து விட வேண்டும் என்றான்..*
_இதைக் கேட்டு அவள் மிகவும் மனம் வருந்தி_ *பிள்ளைகளுக்கு என்ன கொடுக்க?* என்று கேட்டாள்..

_அதற்கு அவன்_ *பிள்ளைகளை எங்கேனும் காட்டுக்குள் அனுப்பி விடு, மிருகங்களுக்கு இறையாகட்டும்* என்றான்..

_அவள் பதறிபபோனாள்.._

_இருந்தாலும் மனதை கட்டுபடுத்தி கொண்டாள்.._
_ஏனென்றாள் இருக்கும் வெறியில் அவன் ‌ பிள்ளைகளை கொன்றாலும் கொன்று விடுவான் என பயந்தாள்.._

வேடன் கிளம்பினான்..

_*நான்வரும் சமயம் பிள்ளைகள் இருக்க கூடாது*_ என சொல்லி சென்றான்..

_காட்டில் எவ்வளவு முயன்றும் ஒன்று, இரண்டு கொக்குகளை பிடிப்பதே கஷ்டமாக இருந்தது.._

_வீட்டிற்கு வந்தான்.. பிள்ளைகளை காணவில்லை.._

மனைவியிடம் *எங்கே பிள்ளைகள்* என்றான்..

*நீங்கள் சொல்லியபடியே செய்து விட்டேன்* என்றாள்..

_உணவு என்றைக்கும் கிடைக்கும் அளவே அன்றும் அவனுக்கு சாப்பிட கிடைத்தது.._

மனதில் சிறிது கீறல் விழ ஆரம்பித்தது..

_மேலும் ஓரிரு நாட்கள் அப்படியே சென்றன.._

_மிகவும் புலம்ப ஆரம்பித்து விட்டான்.._

மனைவியிடம் *நான் தவறான முடிவு எடுத்து விட்டேன்.. நீயாவது என்னை மாற்றி இருக்க கூடாதா?* என்றான்..

அதற்கு அவள்  சிரித்து கொண்டே *இது நான் எதிர்பார்த்தது தான்* என்றாள்..

மறு நாள் வேட்டைக்கு கிளம்பும் முன் மனைவியிடம் *இன்று நல்ல நாளாக அமைய வேண்டும்* என்று புலம்பினான்..

அதற்கு அவளும் *நீங்கள் வேட்டைக்கு சென்று வாருங்கள்.. நல்ல வேட்டை கிடைக்கும்..* என்று ஆறுதல் சொல்லி அனுப்பினாள்..

*என்ன ஆச்சரியம்.. முன்பு போல் ஏழு எட்டு கொக்குகள் கிடைத்தன..* சந்தோஷமாக வீட்டிற்கு வந்தான்..

வீட்டில் அவனது குழந்தைகள்  விளையாடி கொண்டு இருந்தனர்..

*இப்பொழுது குழந்தைகள் இருக்கிறார்களே என அவன் வருத்தப்படவில்லை..*

அவர்களுக்கும் சேர்த்து தான் இன்று ஆண்டவன் அதிக அளவு கிடைக்க செய்து இருக்கிறார் என்பதை புரிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தான்..

மனைவியிடம் *எப்படி குழந்தைகள் கிடைத்தன?* என்று வினவினான்..

*தங்கள் குணம் அறிந்து, நான் அவர்களை எனது தாயிடம் பத்திரமாக விட்டு வைத்து இருந்தேன்* என்றாள்..
_மனைவி மக்களோடு சந்தோசமாக வாழ ஆரம்பித்தான்.._


👇
*நாம் காக்க வேண்டிய அனைவருக்கும் சேர்த்து தான், ஆண்டவன் நமக்கு படி அளப்பார் என்பதை புரிந்துகொள்வோமாக..*



Life story #28


ஓர் அரசன் மூன்று அதிகாரிகளை தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த நியமித்து அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தார்..

ஒரு அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும், அந்தஸ்தையும் வழங்கினார்..

மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன.. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தார் மன்னன்..

*ஐயோ.. நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்* என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள்..

செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள்..

இந்த மூவருமே ஊழல்வாதிகளா அல்லது குற்றமற்றவர்களா என்பதை அறிய வேண்டும்.. என்று நினைத்தார் மன்னன்..

அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தார்..

இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள்..

*மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்கு களப்பயிற்சி தரப் போகிறேன்..*

*உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும்.. அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள்..*

*உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும்..*

*அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு, ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்..*

*நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம்..*

*அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்து விடுவோம்..*

*அவன் அதை உண்டு, உங்களை வாழ்த்த வேண்டும்..*

*இந்தப் பயிற்சி திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் நலப் பணியாளர்களை இந்தப் பணியில் அமர்த்தி மக்களின் பசி போக்கலாம்..* என்றார்

_மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.._

_காடுகளில் காய், கனி, கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான்.._

_ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது.._

_மேலும் அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு.._

_மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள்.._

_அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.._

*_முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார்.._*

 *_நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் பசியாறுவார்களே என்ற நினைப்பே அவருக்கு உந்து சக்தியாக இருந்தது.._*

_சாக்குப்பையை நிரப்ப அவருக்கு மூன்று, நான்கு நாட்கள் தேவைப்பட்டது.._

_ஆனால், உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.._

_இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார்.._

*_பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார்.._*

*_சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள்.._*

_மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம்.. கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? என்று எண்ணி அப்படியே செய்த அவர், ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்.._

_மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை.._

*_பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள்.. என்ற நினைப்பில் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் போட்டு பையை நிரப்பி அரண்மணையில் சேர்த்துவிட்டார்.._*

_ஒரு நாழிகைப் பொழுதில் வேலையை முடித்துவிட்டுத் தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கிவிட்டார்.._

_மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தார்.._

_அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டார்.._

*இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள்..*

*அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள்..*

*சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும்..*

*அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம்..* என்றும்


*அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு..* என்று உத்தரவிட்டார்..

மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை.. ஐந்தே நாட்களில் அவர் பசி தாங்காமல் மாண்டுவிட்டார்..

இரண்டாமவரோ அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு, எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார்..

ஆனால், அவர் உடல்நலம் கெட்டுவிட்டது..

மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டார்..

முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார்..

தான் சேகரித்த தரமான காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார்..

மன்னன் அவருக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவரை முதன்மை அமைச்சர் ஆக்கிக் கொண்டார்..


👇
*நாம் அனைவரும் நன்மை செய்கிறோமா, தீமை செய்கிறோமா என்று இறைவன் கண்காணிப்புக் கேமரா வைத்துக் கொண்டு பார்ப்பதில்லை..*

*என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.. என்று நமக்குப் பூரண சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டார்..*
*ஆகையால் எப்பொழுதுமே*
*_நல்லதையே நினைப்போம்.._* *_நல்லதையே செய்வோம்.._*


Life story #27



_ஒரு அரசருக்கு ஓரே ஒரு மகள்.._
_அதாவது ராஜகுமாரி.._
_இந்த சிறுமி விளையாடும் போது கண் ஒன்றில் மண் புகுந்தது.._
_கண் சிவந்ததோடு, வீங்கவும் தொடங்கியது.._
_போதாத குறைக்கு, சிறுமியோ தன் கண்ணை கசக்கியவாறு அழுதுவந்தாள்.._ _அரண்மனை மருத்துவர் வந்து பரிசோதித்தார்.._

_மருந்து தயாரித்து சிறுமியின் கண்ணில் இட முயற்சிக்கும் போது, சிறுமி ஒத்துழைக்கவில்லை.. கண்ணை கசக்கியும், அழுதும் தொடர்ந்ததால் காயம் பெரியதானது.._

_அரசருக்கு தன் மகளின் காயம் பெரிய வருத்தம் தந்தாலும், மகளின் விருப்பத்தை மீறி கட்டாயப்படுத்துவதை மன்னர் விரும்பவில்லை.._

_அரண்மனை மருத்துவர் தனது இயலாமையை தெரிவித்து விழகிக் கொண்டார்.. சிறுமி அழுவதும் கண்களை கசக்குவதும் தொடர்ந்ததால் காயமும் எளிதாக ஆறுவதாக இல்லை.._

_இந்த செய்தியை அறிந்த பெரியவர் ஒருவர், இந்த நோயை மருந்து இல்லாமலேயே குணப்படுத்த முன்வந்தார்.._

_அரசரும் ஒப்புக்கொண்டார்.._

_இதை தொடர்ந்து பெரியவர் சிறுமியை பரிசோதித்தார்.._ _உதட்டை பிதுக்கினார்.._
_பின், அரசரைக்கண்டு *தனியாக பேச வேண்டுமே* என்றார்.._

_சிறுமி உள்பட அனைவருக்கும் ஒரு சஸ்பென்ஸ்.._ _மன்னர் வந்தார்.._ _மன்னரிடம் ஏதேதோ பெரியவர் விளக்கினார்.._

_பின் சிறுமியும் கேட்கும்படியாக, அரசரிடம் விளக்கம் தந்தார்.._ *இந்த கண்ணில் உண்டான காயம் மிக விரைவில் குணமாகிவிடும் இது பெரிய விஷயமில்லை..*

_*ஆனால், நான் கவலைப்படுவது அதற்காக இல்லை.. இந்த பெண்ணுக்கு வால் ஒன்று முளைக்க இருக்கிறது.. அது வளர்ந்தால், சுமார் முப்பது அடிவரை வளரும்.. அதன் பின் என்னாகுமோ என்று எனக்கு தெரியவில்லை.. ஆனால் அதனால் எதுவும் பெரிய ஆபத்தில்லை..*_

_*சில நாட்களுக்கு கவனமாக இருக்க வேண்டும்.. சிறிது வால் தோன்றியதும் எனக்கு உடனடியாக அறிவித்து விடவேண்டும்.. அதற்கு மிக சிறந்த மருந்து ஒன்று உண்டு..*_

*அதைக்கொண்டு வால் வளராமல் செய்துவிடலாம், எவ்வளவு விரைவில் எனக்கு தகவல் கிடைக்கிறதோ, அவ்வளவு வேகம் வால் பெரிதாகாமல் தடுக்கலாம்* என்றார்..

_வாலுள்ள பெண்ணா?_
_சிறுமி, ராஜகுமாரிக்கு பயம் தோன்றியதில் வியப்பில்லை.. படுக்கை அறையிலிருந்த சிறுமி வெளியே வரவேயில்லை.._ வால் முளைத்ததா என்று அறிவதிலேயே கவனமாக இருந்தாள்..

*கண் வெகுவிரைவிலேயே குணமானது..*

பெரியவர் சிறுமியை பரிசோதித்து, *வால் முளைப்பதற்கான அறிகுறிகள் மறைந்து விட்டதாக* கூறினார்..

_எல்லாமே நல்லபடியாக முடிந்தது.. அரசரும் பொன்னும் பொருளும் அள்ளித்தந்து பெரியவரை பாராட்டினார்.._


👇
*சிறிய பிரச்சனைகளை, ஒரு பெரிய பிரச்சனை இடம் தெரியாமல் அழித்துவிடும்..*

_ஆகவே நாம் நம் சுய நலத்தை விட்டுவிட்டு பொதுநல சேவை, சமூக சேவை என்று இறங்கிவிட்டால்,_
_நமது கவலைகளும் பிரச்சனைகளும் இடம் தெரியாமல் ஓடிவிடும்.._

*அதனால், நமக்கு மட்டுமில்லை நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும்  நன்மைதான்..*


Life story #26



_ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள்.._

_வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும்,_
_அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவித்தார்.._

_போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள்.._ _சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய்.. சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன்.. இப்படியாக.._

_அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறார்.._

*இந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து, எதிர் முனைக்கு முதலில் யாரால் நீந்தி கடக்க முடிகிறதோ, அவருக்கு என் மகளை திருமணம் செய்து தருவேன்!*
 
_அவர் சொல்லி முடித்த வினாடியே, கடகடவென அனைவரும் நீச்சலுக்கு தயாராக, வேகமாக உடைகளை கழற்ற ஆரம்பித்த பொழுது.._

*அது மட்டுமில்லை.. கூடவே ஒரு 10 கோடி ரூபாய் பணமும், ஒரு தனி பங்களாவும் கூட தருவேன்.. அப்பொழுதுதானே, என் அருமை மகள் தன் மணவாழ்வை சுகமாக ஆரம்பிக்க முடியும்!*

*சரி.. உங்கள் எல்லோருக்கும் நல்வாழ்த்துகள்! என் மருமகனை, நான் நீச்சல் குளத்தின் மறு கரையில் சந்திக்கிறேன்* என்றவாறு, அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார்..

_சொல்லி முடித்தவுடன்.. மொத்த இளைஞர்களும், இன்னமும் வேகமாக தண்ணீரில் இறங்க முற்பட்ட பொழுது.._ *அந்தப் பணக்காரரின் ஹெலிகாப்டர், அந்த நீச்சல் குளத்துக்கு நேர் மேலே பறந்து வந்து,*
_*டஜன் கணக்கில் முதலைகளை, அந்தக் குளத்தில் இறக்கிவிட்டுச் சென்றது*_

_அவ்வளவுதான்! அத்தனை பேரும், மரண பயத்தில் உடனே பின்வாங்கி ஏமாற்றத்துடன் மீண்டும் தங்கள் உடைகளை மாட்டிக்கொள்ள ஆரம்பித்தனர்.._

*இதென்ன பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது? யாரால் இது முடியும்? பார்க்கலாம்! எவன் இதில்  ஜெயிக்கிறான் னு?*
 *நிச்சயமா எவனாலும், முடியாது* என்று சத்தமாய் பேச ஆரம்பித்தனர்..

அப்பொழுது..

_*திடீரென்று, ஒருவன் குளத்தில் குதிக்கும் சத்தம்*_

_அத்தனைபேரும் மூச்சுக்கூட விட மறந்து.._
_உச்சபட்ச அதிசயத்தில், அவனையே, கண்ணிமைக்காமல் கவனிக்க ஆரம்பித்தனர்_

_அந்த இளைஞன்.. மிகவும் லாவகமாக, அத்தனை முதலைகளிலுமிருந்து விலகி.. விலகி.. மிக வேகமாய் நீந்தி, அடுத்த கரையில் விருட்டென ஏறி,_

வெடவெடவென நின்றான்..

*பணக்காரரால், தன் கண்களை நம்பமுடியவில்லை..*

*பிரமாதம்.. நான் தருவதாக சொன்ன விஷயங்களுக்கும் மேல.. உனக்கு என்ன வேணுமோ கேளு.. நான் தருகிறேன் எதுவாக இருந்தாலும்..*

_அந்த இளைஞனோ, இன்னமும் நடுக்கத்திலிருந்து மீளவில்லை_
_வாய் தந்தியடித்தது, மிரட்சியில்_
_கண்கள் அரண்டு போய் இருந்தது_

பின், ஒருவித வெறியுடன்..
*அதெல்லாம் இருக்கட்டும்..  என்னை, இந்த குளத்தில் தள்ளிவிட்டவனை மட்டும், யாருன்னு எனக்கு காட்டுங்கள்..* என்றான்


👇-1 :
முதலைகள் இருக்கும் நீரில் தள்ளிவிடப்படும் வரை.. உன் திறமை என்னவென்று,
உனக்கே தெரியாது! (அந்த ரப்பர் முதலைகள் போன்றே, பிரச்சினைகளும் போலிதான்.. என்பதும் புரியவரும்!)

👇-2 :
உன்னை, முதலைகளுக்கு காவு குடுக்க நினைத்தவர்கள்..
உண்மையில், உன் உள்ளிருந்த திறமையை வெளிக்கொண்டுவந்து, உன் கனவு எதிர்காலத்தை அடைய உதவியவர்களே! (நன்றி காட்டாவிட்டாலும், வன்மம் வேண்டாமே!)

👇-3 :
சிலநேரம், மிகவும் மோசமான தருணங்களை கடக்கும்பொழுதுதான்,
நம் உள்ளிருக்கும் நிஜத் திறமை வெளிப்படும்!

👇-4 :
சிலருக்கு.. இம்மாதிரி, அசாத்திய பிரச்சினைகளில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும்பொழுது மட்டுமே,  அவர்களால் வாழ்வின் உயர் இலக்கை அடைய முடிகிறது! (சில தொலைநோக்குப் பெற்றோருக்கு, இந்த சூட்சுமம் தெரியும்! பெற்றோரை நம்புங்கள்!)

Life story #24



ஒரு சீடன் தன் குருவிடம் கேட்டான்..
*குருவே! நல்லதைப் படைத்த இறைவன்தானே கெட்டதையும் படைத்துள்ளான்.. அதனால் நல்லதை மட்டும் ஏற்பதுபோல கெட்டதையும் ஏற்றால் என்ன..?*

_குரு அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.._

_தன் கேள்விக்கு குருவாலேயே பதில் அளிக்க முடியவில்லை என்று நினைத்துக்கொண்டான் சீடன்.._

_பகல் உணவுவேளை வந்தது.._

_அப்போது தனக்கு அளிக்கப்பட்ட உணவைப் பார்த்து அதிர்ந்துவிட்டான் சீடன்.._

_ஒரு கிண்ணத்தில் பசுமாட்டு சாணம் மட்டும் வைக்கப்பட்டிருந்தது.._

_சீடன் விழித்தான்.._

குரு, புன்முறுவலுடன் சொன்னார் *பால், சாணம் இரண்டுமே பசுமாட்டிடம் இருந்துதான் கிடைக்கிறது.. பாலை ஏற்றுக்கொள்ளும்போது சாணத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாதா..? என்றார்*

_சிஷ்யன் மௌனமானான்.._

குரு கூறினார் *இந்த உலகத்தில் நல்லது, கெட்டது இரண்டும் உள்ளது.. ஒருவருக்கு நல்லதாக இருப்பது, இன்னொருவருக்கு கெட்டதாக இருக்கும்.. உதாரணமாக உன் தட்டில் உள்ள சாணம் உனக்கு உணவல்ல.. ஆனால் அது சில உயிர்களுக்கு உணவாகிறது..*

*எது மனிதர்களுக்கு நல்லதோ அது பிற உயிர்களுக்கு கெட்டதாக இருக்கலாம்.. எது மனிதர்களுக்கு கெட்டதோ அது பிற உயிர்களுக்கு நல்லதாக இருக்கலாம்..*

*இயற்கையில் எல்லாம் உள்ளது.. நமக்கு எது நல்லதோ அதை மட்டும் ஏற்றுக்கொண்டு வாழவேண்டும்.. கடவுளின் செயல்களை முழுமையாக யாராலும் அறியமுடியாது* என்று கூறினார்..



Life story #25

கதை..

துறவி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார்..

பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர்..

இளைஞன் ஒருவன் வந்தான் *_சாமி எனக்கு ஒரு சந்தேகம்.._* *உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர்..*
*_ஆனால் இன்றும் மனிதன் தீயவழியில் தான் செல்கிறான்.. உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்..??_* என்று கேட்டான்..

துறவி  அவனிடம் சொன்னார்..
*தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன், அதற்கு முன் ஒரு வேலை செய்..*

_*ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை..*_
*_நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கேயே கட்டி இருக்கட்டும்.._*

*தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு* _என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார்.._

_மறுநாள் காலை துறவி அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார்.._

_அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும், அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான்.._

_இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன.._

_அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞரிடம் வந்தார் துறவி.._
*தினமும் நீ சுத்தப் படுத்தினாலும்.. இந்த இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே.. பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய்..??* என்று கேட்டார்..

_அதற்கு அவன்,_
*என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி கேட்க ரீங்க..?*

_*திரும்ப திரும்ப அசுத்தம் ஆவுதுனு சுத்தப்படுத்தாம இருக்க முடியுமா..?*_

_இதை கேட்ட துறவி  அப்போது சொன்னார்_ *தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு, இதுதான் பதில்..*

*நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன், அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல், மனிதர்களை நல்வழி படுத்தும்  செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்..*

இளைஞன் கேட்டான்.. *சாமி இதற்கு நிறந்தர தீர்வு என்ன..?*

_அவர் உடனே அங்கு கட்டி இருந்த குதிரையை அவிழ்த்து விட்டு விரட்டினார்,_

_பின்பு அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டார்.._
*இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா..?*

*ஆகாது சாமி..* என்றான்..

துறவி  கூறினார்.. *உன் கேள்விக்கு இதான் பதில்..*

*நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்..*

*இப்பொழுது, நான் செய்த வேலையைப் போல்..* _*என்று மனிதன் தன்னிடம்  இருக்கும் தீய எண்ணம் என்ற குதிரையை வாழ்வில் இருந்து விரட்டி விடுகிறானோ,*_  *அப்பொழுதே எங்களின் சுத்தப் படுத்தும் கடமை முடிந்து விடும்,* *_அன்று வரை மனிதனை நன்னெறி படுத்துவது ஆன்மிகத்தின் கடமை என்றார்..!_*


ஒரு ஆணின் கண்ணீர்.மிகவும் மென்மையானது...

🌼பெண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள்,  இறுதியாக ஆணை படைக்க ஆரம்பித்தார்.

🌼ஒரு நாள், இரு நாள் அல்ல.

🌼தொடர்ந்து 6 நாட்களாக ஆணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்.

🌼இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது.

🌼அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை வரங்களாக கொடுக்க வேண்டும்.

🌼இந்த ஆண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும்.

🌼அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும்.

🌼சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவன் மருந்தாக இருக்க வேண்டும்.

🌼அவனுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவனே அவனை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 24மணி நேரம் உழைக்க வேண்டும்.

🌼இது அத்தனையும் செய்ய அவனுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்.

🌼“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும?” என்று ஆச்சரியப்பட்டதுதேவதை.

🌼ஆர்வத்துடன் லேசாக ஆணை தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவனை ரொம்ப கடினமாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை.

🌼அதற்கு கடவுள், “இவன் உடலளவில் கடினமானவன்

🌼ஆனால் மனதளவில் ரொம்ப ரொம்ப மென்மையானவன்

🌼அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவான்

🌼அது மட்டுமல்ல, அவனால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும்.

🌼கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவனுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும்.

🌼சிரிப்பு வந்தாலும் அதை  கோபம் மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு.

🌼தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வான்

🌼மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவான் ,” என்றார்.

🌼“ஓ………இந்தளவுக்கு ஆணால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது.

🌼“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல.

🌼அவற்றுக்கு தீர்வையும் அவனால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்.

🌼அந்த தேவதை ஆணின் கண்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவன் கண் ஏன் வரச்சியாக இருக்கு இவன் கண்களில் கண்ணீர் வராதா? என்றது

🌼“ஒரு ஆணின்  கண்ணீர்.மிகவும் மென்மையானது அது எப்பவும்மே வராது அது வந்தால் அவனை மட்டும் அல்ல அவனை சுற்றி உள்ள அனைவரையும் பாதிக்கும் என்பதால், அவனுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே சிரித்தே கடந்து செல்வான் ,” என்று பதிலளித்தார் கடவுள்.

🌼ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான்.

🌼இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை.

🌼“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவனுக்கு எப்போதுமே தெரியாது,”…… கடவுள் சிம்பிளாக பதிலளித்தார்.

அனைத்து ஆண்களுக்கும் சமர்ப்பணம்..!