flipkart discount sale search here.
Friday, 10 September 2021
Saturday, 4 September 2021
எங்கும் கிடைக்காத தகவல்கள்...
கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தகவல்கள்*
வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்*
இன்றே நீங்கள் உங்கள் வீட்டில் ஆரம்பியுங்கள்*.
*1) உங்கள் துணியை நீங்களே முதலில் துவைக்க பழகுங்கள்.*
*அதுவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லாமல் சொல்லும் முதல் பாடம்.*
*2) காலையில் எழுந்தவுடன் குளித்து இறைவனைத் வணங்குங்கள்.*
*உங்கள் மனைவிக்கு சொல்லாமல் சொல்லும் இரண்டாவது பாடம்.*
*3) முடிந்தால், சமயலறையில் முடிந்த உதவிகளை செய்யுங்கள். நம் வீடு. நாம் செய்வோம். இது கூட்டு குடும்பத்தின், கூட்டு முயற்சியில் நாம் சொல்லாமல் சொல்லும் மூன்றாவது பாடம்*.
*4) காபி குடித்தவுடன் , அதை முடிந்தால் அலம்பி வைக்கவும். இல்லையென்றால்அலம்பும் இடத்தில் வைக்கவும். இது நமக்குள்ளே ஒரு கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ள உதவும். இது நமக்கான நான்காவது பாடம்.*
*5) எங்கெல்லாம் உதவி செய்ய முடியுமோ, வீட்டில் உதவுங்கள். அது முக்கியமான ஐந்தாவது பாடம்- மற்றவர்களுக்கு உதவும் பழக்கம் வர வேண்டும்.*
*6) காலை காபி குடிக்கும் போதோ, இல்லை எது சாப்பிட்டாலும் , குறை கூறாதீர்கள். வேண்டுமென்றால் நல்ல முறையிலே கூறுங்கள். கோபமும், அதட்டலும், நமக்கு ரத்த அழுத்தம் தரும். இது ஆறாவது பாடம்.*
*7) உண்ணும் முன், பெரியவர்கள் இருந்தால், அவர்களை கேளுங்கள் -சாப்பிட்டு விட்டார்களா? என்று. குழந்தைகளை கூப்பிட்டு கேளுங்கள். இது ஏழாவது பாடம் .*
*8) முடிந்த வரை நடந்து செல்லுங்கள். பண மிச்சம், கஞ்சத்தனம் என்று இல்லை. நமது கால் நடக்கக் கற்றுக் கொண்டால், நாம் நமது காலில் இறக்கும் வரை , நின்றும், நடந்தும் வாழலாம். இது வாழ்க்கையின் எட்டாவது பாடம்.*
*9) அடுத்தது நம்மை அழிக்கும் தொலைக்காட்சி. அது கத்திக் கொண்டு இருந்தாலும், நீங்கள் ஒரு நல்ல புத்தகத்தை எடுத்துக் கொண்டு படியுங்கள். மின்சார கட்டணம் கண்டிப்பாக* *குறையும். குழந்தைகள் படிக்க ஆரம்பிப்பார்கள். இது நமக்கு நாமே சொல்லும் ஒன்பதாவது பாடம்.*******************Who Will Cry When You Die?"ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்.*
*அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...*
*“நீ பிறந்த போது, அழுதாய்...*
*உலகம் சிரித்தது..*.
*நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...*
*1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்..*.
*2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங் களுக்காக அதிக நேரம் செலவழிக் காதீர்கள்.*
*3. அடிக்கடி கவலைப் படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலைகள் குறித்து சிந்தியுங்கள்.*
*4. அதிகாலையில் எழப்பழகுங்கள்*.
*வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.*
*5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.*
*அது நல்ல ஆரோக்கியத் தையும், நண்பர்களையும் பெற்று தரும்.*
*6. நிறைய நல்ல புத்தகங்களை படியுங்கள்.*
*எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.*
*7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும் போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வும் இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.*
*8. உங்கள் குழந்தைகளை, உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தரக் கூடிய சிறந்த பரிசு, அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.*
*9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்*.
*10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.*
*11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.*
*12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த பல சிந்தனைகளும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.*
*13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களை கொண்டவனே பணக்காரன்*.
*14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.*
*15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்*.
*16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காகத்தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.*
*17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.*
*18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.*
*19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும், எளிமையான (humble) மனிதராயிருங்கள்.* *வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையான வர்களே!*
*"ஆணவம் ஆயுளைக் குறைக்கும்...*"
*மேற்கண்ட *கருத்துக்களை பின் பற்றி,*
*ஆனந்தமாக வாழுங்கள்* *நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியதை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.....!!!!வாழ்க வளமுடன்*!
*இதை அறுபது வயதிற்கு பின் ஆரம்பித்த என்னால் முடியும் போது, கண்டிப்பாக உங்களால் முடியும். வசதிகள் இருந்தும், வசதி தேவை இல்லை என்று நினைத்து, வசதியை உபயோகப் படுத்தாமல் வாழ்வதே ஒரு பெரிய யோகம்*.
*படித்துவிட்டு பகிருங்கள் அனைவருக்கும் அவர்களும் படித்து பயன் பெறட்டும்.
Monday, 30 August 2021
Friday, 13 August 2021
Monday, 9 August 2021
Friday, 30 July 2021
Monday, 12 July 2021
Sunday, 4 July 2021
உலகின் மிகப் பெரிய பொய்கள்
Friday, 2 July 2021
Thursday, 1 July 2021
Sunday, 27 June 2021
GK, if you're real genius 1st 5 answer said don't go down
Friday, 25 June 2021
Tuesday, 2 March 2021
செம்புகாப்பு அணிவது நல்லதா…?
Monday, 22 February 2021
அடிக்கடி_கை_கால்_மரத்துபோவது……# *ஏன்_தெரியுமா* ..
# *அடிக்கடி_கை_கால்_மரத்துபோவது* ……
# *ஏன்_தெரியுமா* ..❓❓❓
👉உடலில் உள்ள உறுப்புகள் மரத்து போவது என்பது நோய் அல்ல இருப்பினும் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று சொல்லலாம்.
நாம் பஸ் அல்லது காரில் அதிக நேரம் செல்லும்போது நமக்கு கை, கால் மரத்துப்போவது என்பது ஒரு சாதாரணமான விஷயம். இதற்கு என்ன காரணம் என்றால் ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்திருப்பது தான் காரணம்.
அதாவது நாம் ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்திருந்தால் இரத்த ஓட்டங்கள் தடைபடுவதன் காரணமாக இந்த #Numbness_Symptoms மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது.
குறிப்பாக மரத்து போகும் பிரச்சனை என்பது ஒரே இடத்தில அமர்ந்திருந்தால் மட்டும் ஏற்படுவது இல்லை, இன்னும் பல காரணங்களும் இருக்கிறது.
⭕ அடிக்கடி கை, கால் மரத்து போவதன் காரணங்கள்..❓
💢 குறிப்பாக நம் உடலில் எங்கயாவது மரத்து போனால் அது நம் #மூளை, #முதுகுத்தண்டு_வடத்தில் ஏதேனும் பிரச்சனை என்ற அறிகுறியாகும்.
👉அதுவே நம் உடலில் இரண்டு கால்களும் மரத்து போனால் அது சர்க்கரை நோய்களுக்கான அறிகுறியாகும்.
அதாவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது என்ற அறிகுறியாகும்.
👉அதுவே ஒருவருக்கு பல ஆண்டுகளாக இந்த மரத்துப்போதல் பிரச்சனை இருந்தால் அது மரபு அணுக்களின் கோளாறாக கூட இருக்கலாம்.
👉அதேபோல் ஏதேனும் ஆன்டிபயாடிக் மாத்திரை மற்றும் புற்று நோயை குணப்படுத்தும் மாத்திரை என்று தொடர்ந்து நீங்கள் மாத்திரை எடுத்து கொண்டிருந்தாலும் கை, கால்கள் அடிக்கடி மரத்து போகும் பிரச்சனை ஏற்படும்.
👉மேலும் தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிகள் குறைந்தாலும் இந்த கை, கால்கள் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும்.
👉உடல் எடை அதிகரித்து உடலில் அதிகளவு கொழுப்புகள் சேர்ந்தாலும் இந்த மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது.
👉வைட்டமின் B12 குறைபாடுகள் இருந்தாலும் இந்த கை கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும், எனவே உடலுக்கு தேவையான அளவிற்கு வைட்டமின் B12 நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ளவும்.
👉அதேபோல் தொழுநோயால் பாதிக்கப்பட்டரர்களுக்கும் இந்த கை, கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும்.
👉தொழு நோய் உள்ளவர்கள் மீது சூடான தண்ணீரை ஊற்றினால் கூட அவர்களுக்கு உணர்ச்சிகள் இருக்காது.
எனவே தொழு நோய் உள்ளவர்கள் தங்களது தோலை பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சை முறைகளை கடைபிடிக்கவும்.
👉சர்க்கரை நோயாளிகள் அவர்களது கை, கால்கள் மரத்து போகாமல் இருக்க வேண்டும் என்றால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக இவர்களுக்கு கால்களில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அவர்களது நரம்புகளுக்கு அதிகளவு பாதிக்கப்படும்.
👉குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு கை கால்கள் அடிக்கடி மரத்து போனால் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்ற அறிகுறியாகும்.
👉சிலருக்கு தலை ஒரு பக்கம் மட்டும் மரத்து போய்விடும் அது பக்கவாதத்திற்கான அறிகுறிகள் ஆகும். எனவே அவர்கள் நரம்பியல் மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சை பெற வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
⭕ யாருக்கெல்லாம் இந்த பிரச்சனை ஏற்படுகிறது❓
👉குறிப்பாக இந்த பிரச்சனை அதிகமாக குடி பழக்கம் உள்ளவர்களுக்கு,
👉அதிக நேரம் கணினியில் அமர்ந்து வேலைபார்ப்பவர்களுக்கு,
👉அதிகமாக பாத்திரம்
விளக்குபவர்களுக்கு,
👉மணிக்கட்டுகளுக்கு அதிக வேலை தருபவர்களுக்கு,
👉உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு
இந்த கை, கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது.
⭕ ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யுறீங்களா ❓
அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..❗
👉இந்த கை, கால் மரத்து போகும் பிரச்சனை உள்ளவர்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும். அதேபோல் வைட்டமின் B12 குறைபாடுகள் உள்ளவர்கள் இறைச்சி உணவுகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும்.
👉மேலும் டிவி பார்ப்பவர்கள் சாய்வாக அமர்ந்து டிவி பார்ப்பதை தவிர்த்து கொண்டு, நேராக நிமிர்ந்து அமர்ந்து டிவி பார்க்க வேண்டும். நாம் அமர்ந்திருக்கும் நிலைகளினால் கூட இந்த மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது.
👉அடிக்கடி மரத்து போகுதல் பிரச்சனை உள்ளவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதை தவிர்த்து கொண்டு, கொஞ்சமாவது உடலுக்கு அசைவுகள் தரவேண்டும்.
🔴 இந்த மரத்து போகும் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிசைகளை முறையாக அளித்தாலே இந்த மரத்து போகும் பிரச்சனையை சரி செய்துவிட முடியும்.
Sunday, 14 February 2021
Symptoms for diseases
Tuesday, 2 February 2021
படித்ததில் பிடித்தது #1
குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.
பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.
புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.
பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.
முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.
பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.
பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.
அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.
மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.
அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.
நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.
விவசாயத்திற்கு முன்னுரிமை
கொடுங்கள் . நாடு நாசமாகாது .
- படித்ததில் பிடித்தது..