flipkart discount sale search here.

Sunday, 10 September 2017

இன்னும் ஐம்பது வருடங்கள் ஆனாலும் அவர் பாடல்கள்...

ஆட்டோவில் பயணித்தால் ஆட்டோ ஓட்டுநர் "சீர் கொண்டு வா வெண் மேகமே" போடுகிறார்...

இரவு நேரத்தில் பால் கொண்டு வருபவர் அவரது TVS XL ல் "காலையில் கேட்டது கோவில் மணி" ன்னு ஒலிக்கறது

சென்னை ஸ்வீட்ஸ்ல் "ஒரு கோலக்கிளி ஜோடி தன்ன தேடுது தேடுது" ன்னு பாவ்பாஜி சாப்பிட்டு கொண்டு ரசிக்க முடிகிறது.

பொதிகை ஜவுளி கடையில் "இளமை எனும் பூங்காற்று" instruments ஓடிக்கொண்டிருக்கிறது.

எங்களது காரை இன்னொரு கார் வழிமறித்து நீங்க திருவனந்தபுரம் போனா பீமா பள்ளி போனா அங்க எதிர்த்த கடையில இளையராஜா MP3 4 CD வாங்கிட்டு வாடேன்னு டிரைவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

கிழக்க இரயில்வே ஸ்டேஷனுக்கு எதிர்த்த வீட்டில் கல்யாணமாம் பெரிய ஸ்பீக்கரில் "சக்கரகட்டி சக்கரகட்டி சந்தன பெட்டி"

ஐந்தருவியில் குளித்துவிட்டு அங்குள்ள டீ கடையில் "அன்னாத்த ஆடுறார் ஒத்திக்கோ " வுடன் ஒரு மிளகாய் பஜ்ஜி...

இன்னும் ஐம்பது வருடங்கள் ஆனாலும் அவர் பாடல்கள் ஒலிக்காத ஒரு நாள்கூட இருக்கபோவதில்லை!!!!

No comments:

Post a Comment