flipkart discount sale search here.

Saturday, 28 April 2018

கோடை காலம் மது அருந்தும் பொழுது கடைபிடிக்க வேண்டியவை.....😄

கோடை காலம் மது அருந்தும் பொழுது கடைபிடிக்க வேண்டியவை.....😄

மதுவை டம்ளரில் ஊற்றும் போது maximum -small அளவு ஊற்றி கொள்ளுங்கள்...

மது எந்த அளவு ஊற்றி கொள்கிறீர்களோ அதற்கு நான்கு மடங்கு சுத்தமான தண்ணீர் சேர்த்து கொள்ளவும்..

எக்காரணத்தை கொண்டும் தண்ணீருக்கு பதிலாக பெப்சி,கோக்,மெரிண்டா போன்ற குளிர்பானங்கள் சேர்க்க கூடாது.....

கோடை காலம் என்பதால் இளநீர் சேர்த்துக்கொள்வது நல்லது....

முதல் ரவுண்ட் குடித்த பின்பு மறு ரவுண்ட் குடிப்பதற்கு குறைந்தது 15 நிமிடங்களாவது இடைவெளி எடுத்து கொள்ளுங்கள்....

மது அருந்துவதற்கு சைடிஸ் ற்கு கேரட்,வெள்ளரி,பப்பாளி,பீன்ஸ், கோஸ், அன்னாச்சு,வெள்ளை திராட்சை போன்றவைகளை பயன்படுத்துங்கள்....

அசைவ விரும்பிகள் நன்கு வேக வைத்த ஆட்டுக்கறி,சுட்டமீன்,குழம்பு மீன்,போன்றவைகளை உண்ணலாம்....

சிக்கன்,வருத்த சிக்கன்,மீன்,சிக்கன் சார்ந்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.....

ஊறுகாய், சிப்ஸ்,காரவகை, எண்ணையில் பொறித்த தின்பண்டங்களை அறவே ஒதுக்கவும்.....

அவசர குடி அவசர வார்டுக்கு கொண்டு செல்லும் கவனம்.....

மது நாட்டுக்கு வீட்டுக்கு உசுருக்கு கேடு....

அளவா அடிங்க ஆரோக்கியமா வாழுங்ஙே முக்கிய குறிப்பு நான் குடிப்பதில்லை

நன்றி வணக்கம்

#256 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1270 பெறின்என்னாம் பெற்றக்க | Daily...

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்...

Windows Tamil version (developed in Chennai)

சிரித்து வயிறு வலி வந்தால், நான் பொறுப்பல்ல 😀😀😀
பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றே அழைத்திருப்பார்கள்...

அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்

Save = வெச்சிக்கோ

Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ

Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ

Help = ஒதவு

Find = பாரு

Find Again = இன்னொரு தபா பாரு

Move = அப்பால போ

Mail = போஸ்ட்டு

Mailer = போஸ்ட்டு மேன்

Zoom = பெருசா காட்டு

Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு

Open = தொற நயினா

Close = பொத்திக்கோ

New = புச்சு

Old = பழ்சு

Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு

Run = ஓடு நய்னா

Execute = கொல்லு

Print = போஸ்டர் போடு

Print Preview = பாத்து போஸ்டர் போடு

Cut = வெட்டு - குத்து

Copy = ஈயடிச்சான் காப்பி

Paste = ஒட்டு

Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு

Delete = கீசிடு

anti virus = மாமியா கொடுமை

View = லுக்கு உடு

Tools = ஸ்பானரு

Toolbar = ஸ்பானரு செட்டு

Spreadsheet = பெரிசிட்டு

Database = டப்பா

Exit = ஓடுறா டேய்

Compress = அமுக்கி போடு

Mouse = எலி

Click = போட்டு சாத்து

Double click = ரெண்டு தபா போட்டு சாத்து

Scrollbar = இங்க அங்க அலத்தடி

Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு

Next = அப்பால

Previous = முன்னாங்கட்டி

Trash bin = கூவம் ஆறு

Solitaire = மங்காத்தா

Drag & hold = நல்லா இஸ்து புடி

Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?

Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?

Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?

Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு

Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?

General protection fault = காலி

Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!

Unrecoverable error = படா பேஜார்பா

Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்

Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

Thursday, 26 April 2018

கெ ஙெ செ Ke nge se in tamil | உயிர்மெய் எழுத்துக்கள் | Uyirmei eluthukka...

#254 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 34 மனத்துக்கண் மாசிலன் | Daily one ...

எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்...

மகிழ்ச்சிகரமாக வாழ 40 வழிகள்!!!

1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.

2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.

3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.

4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.

6.  அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான  புத்தகங்களை படியுங்கள்.

7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள்  வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.

9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!

10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே  நிறைய உண்ணுங்கள்.

11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,

14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.

15. பாசிட்டிவான  எண்ணங்களை உங்களின் மனதில் தினமும்  ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.

16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.

17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.

18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.

19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,

20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.

21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.

22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.

24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம்,   கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள். 

25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.

26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப்  பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.

27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும்  உங்களை என்றென்றும் காப்பாற்றுவார்  என்பதை மனதார உணருங்கள்.

28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.

29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள்.  அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள். 

30. உங்களுக்கு  மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக  இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி  விடுங்கள்.

31. உங்கள் தேவைக்கு  அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு  முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.

33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.

34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.

35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.

36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.

37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.

38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து  இறங்குங்கள்.

39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!

40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

வாழ்க வலிமையுடன்!!!

Wednesday, 25 April 2018

#253 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 591 உடையர் எனப்படுவது | Daily one t...

குக்கர்_என்கின்ற_விஷம்!.பிரிட்டிஷ்காரனின்_சதி

*குக்கர்_என்கின்ற_விஷம்!.*
*பிரிட்டிஷ்காரனின்_சதியும்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

🔴 *சாப்பாட்டை எந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம் வாக்பட்டாசாரியாரின் முதல் சூத்திரம்.*

🔴 *எந்த ஆகாரத்தை சமைத்தாலும் காற்று, வெளிச்சம் இருக்க வேண்டும்.*
*சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமம்"*

🔴 *இந்த விஷம் இரண்டு வகையாக இருக்கும். ஒன்று உடனடியாக வேலை செய்யும். அதைத்தான் ‘ஃபுட் பாய்சன்’ என்று சொல்லுகிறோம்.*

🔴 *இரண்டாவது சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு அதன் தன்மையை உணர்த்தும்.*

🔴 *உதாரணம் – ப்ரஷர் குக்கர்*
*இதில் ஆகாரம் சமைக்கும் பொழுது*
*எந்த விதமான காற்றும், சூரிய ஒளியும்* *படுவதற்கான வாய்ப்பில்லை. இது முழுவதுமாக விஷமானது.*

🔴 *இதில் இன்னொரு ஆபத்தான விஷயம் என்னவென்றால் இது தயாரிக்கப்படுவது அலுமினியத்தில். இது மிகவும் ஆபத்தானது.*

🔴 *இதன் உபயோகம் பிரிட்டிஷ்காரர்களால் சிறைச்சாலையில் உள்ள பாரதீய போராளிகளை சக்தியற்றவர்களாக ஆக்குவதற்கு நம் தேசத்திற்கு கொண்டு வரப்பட்டது என்றால் எவ்வளவு ஆபத்தான விஷ பாத்திரத்தில் நாம் உணவருந்துகிறோம் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.*

🔴  *ப்ரஷர் என்றால் நிர்பந்தம். அப்படி என்றால் நாம் ப்ரஷர் குக்கரில் சமைக்கும் பதார்த்தம் நிர்பந்தத்திற்கு உள்ளாகி விரைவில் மிருதுவாகும்*. *ஆனால் வேகாது.*
*பதார்த்தம் வேகுவது வேறு, மிருதுவாவது வேறு.*

🔴 *உதாரணம் – துவரம்பருப்பு விளைவதற்கு 7 முதல் 8 மாதங்கள் ஆகும். ஏனென்றால் எல்லா சத்துக்களும் செடியின் வேர்களில் சேர்ந்து படிப்படியாக பலன் தரும்.*

🔴  *அதனால்தான் அவ்வளவு காலமாகும். அதனால் பருப்பில் எல்லா விதமான* *சத்துக்களும் நம் சரீரத்தில் சேர வேண்டுமென்றால் பதார்த்தம்* *சமைக்கப்பட வேண்டும்.*
*மிருதுவானால் போதாது.*

🔴  *சமைப்பதற்கு யோக்கியமான பாத்திரங்கள்.* *அவற்றில் சமைத்தால் சத்துக்களின் மதிப்பு.*
*மண்பாண்டம் – 100%*
*வெண்கலம் – 97%*
*பித்தளை – 95%*
*சில்வர் - 90%*

🔴 *இதுவே அலுமினியம் ப்ரஷர் குக்கரில் சமைத்தால் 7% - 13% தான் இருக்கும்.*

🔴  *இதில் சமைத்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம்*
*சர்க்கரை வியாதி,*
*முழங்கால் வலி,*
*விரைவில் முதுமை,*
*மற்றும் இதர வியாதிகளுக்கு ஆளாக்கப்படுவார்கள்*

🔴 *எதுவாக இருந்தாலும் சாப்பிடும் ஆகாரம் தான் பிரதானம்.*

🔴 *இதைப் போன்றே ரெஃப்ரெஜிரேட்டர், மைக்ரோ வேவ் ஓவன் போன்ற காற்று, ஒளிபடாத வஸ்துக்கள் எப்பொழுதும் அபாயமே.*

🔴 *Central Drug Research Institute (CRDI) அவர்களின் ஆராய்ச்சி மூலமும் இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.*

*பழமைக்கு_மாறுவோம்!*
*ஆரோக்கியமாக_வாழ்வோம்!*!
*நோய்கள்_இல்லாத..*
*அடுத்த_தலைமுறைக்கு..*
*வித்திடுவோம்!!*. 👍

படித்தேன்!
பகிர்ந்தேன்!!

இது மனிதன் செய்த தவறு என்பதில் சந்தேகமே இல்லை...

*"...எதார்த்தமான..."*
*"..உண்மைகள்.."*:
😜😜👇👇
*1.* கல்லுக்கு உருவம் கொடுக்கும் வரை நான் சிற்பி, நீ கல்.,
*உருவம் கொடுத்த பின்பு நீ கடவுள், நான் தீண்டத்தகாதவன்..!*

*(நம்ம ஊரு டிசைன் அப்படி)*
😜
*2.* கும்பிடும் வரை கடவுள்;
*திருட்டுப் போனால் சிலை...!*

*(ஒன்னும் சொல்றதுக்கு இல்லை)*
😜
*3.* எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே *அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!*

*(மிகச் சிரியவையாக இருந்தாலும் ஞானம் அதிகமா இருக்கிறது இந்த எறும்புக்கு தான்)*

*4.* தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும்
*அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை நாடு சுத்தம் ஆகாது...!*

*(ஆகவே ஆகாது... கண்பார்ம்டு)*
😜
*5.* ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது
*ஒரு தீ குச்சியின் மரணம்..!*

*(மரணம் ஒரு முடிவு அல்ல... !)*
😜
*6.* வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட
*வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை...!*

*(நிதர்சனமான உண்மை)*
😜
*7.* அவசரத்துக்கு ஒரு கொத்தனாரைக் கூட  தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல, *தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க ..! ஏன் இந்த கொடுமை..!*

*(ஊருக்கு ரெண்டு இன்ஜினீயரிங் காலேஜ் தான் காரணம்)*
😜
*8.* இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம். *ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல...!*

*(எல்லாத்துக்கும் காரணம் இந்த எண்ணங்கள் தான்)*
😜
*9.* இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். *வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்.!*
*(எல்லாம் பீஸ் தான் காரணம்)*
😜
*10.* இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு,
*இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு...!*

*(ஒரு முழம் கூடப்போறதும் இல்லை குறையப் போறதும் இல்லை)*
😜
*11.* 250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும்
*இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!*

*(லஞ்சம் தான் காரணம்)*
😜
*11.* மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள்.
*இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!*

*(யூஸ் பண்ணத் தெரியல..அவ்ளோதான்)*
😜
*12.* தூக்கம் வராமல் முதலாளி...
*தூங்கி வழியும் வாட்ச்மேன். என்ன ஒரு முரண்பாடு..!*

*(கரன்சி பண்ற வேலை)*
😜
*13.* கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..!
*கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் உங்களுக்கு தெரிவதில் இல்லை...!*

*இது மனிதன் செய்த தவறு என்பதில் சந்தேகமே இல்லை*
👍👍👍👍👍👍👍
📚படித்ததிலிருந்து பிடித்த *மனதை நெ௫டிய* ஒரு பதிவுகள் *&* பகிர்வுகள்...

Tuesday, 24 April 2018

#252 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 458 மனநலம் நன்குடைய | Daily one thi...

அலறி ஓடுகிறேன்..எங்கே போவேன்? சமத்துவம் வந்ததென சத்தமாய் கூறுகின்றனர்....!

பெண்ணே!!
கழிப்பறையில்
கவனம்...!

குளியறையில்
கவனம்...!

படுக்கையறையில்
கவனம்...!

பள்ளியறையில்
கவனம்...!

அலுவலகறையில்
கவனம்...!

கோவில் கருவறையில்
கவனம்...!

பேருந்து பயணத்தில்
கவனம்...!

இரயில் பயணத்தில்
கவனம்...!

பாலூட்டும் அறையில்
கவனம்...!

மருத்துவறையிலும்
கவனம்...!

ஆடை மாற்றும் அறையிலும்
கவனம்...!

நீ
பெண் என்று தெரிந்து கொண்டால்
தாயின் கருவறையிலும்
கவனமாக இரு,

பெண்ணே நீ
கடந்து போகும்
பாதையை
கவனிப்பாயா...?

சில
காம வெறிநாய்களின்
கண்களை
கண்காணித்து கொண்டு
இருப்பாயா...?

பெண்ணின் கவனத்திற்க்கான பதிவு இல்லை...!
ஆணின் அவமானத்திற்க்கான பதிவு...!

அப்பான்னு நினைச்சேன்
அசிங்கமாய் தொட்டான்....!

சகோதரன்னு பழகினேன்
சங்கட படுத்தினான்......

மாமான்னு பேசினேன்
மட்டமாய் நடந்தான்......!

உறவுகள் அனைத்தும்
உறவாடவே அழைக்கின்றன.....!

பாதுகாப்பை தேடி
பள்ளிக்கு சென்றேன்.....!

ஆசிரியனும் அரவணைத்து
மறுக்காதே மதிப்பெண் குறையும் என்றான்.....!

நட்பு கரமொன்று நண்பனாய்
தலைகோதி தூங்கென்றான்.....!
மரத்த மனம் மருண்டு சுருண்டு
தூங்கையில் கைபேசியில் படமெடுத்தான்
அவனும் ஆண்தானே .....!

கதறி அழுது கடவுளிடம் சென்றேன்
ஆறுதலாய் தொட்டு தடவி
ஆண்டவன் துணையென்றான் பூசாரியான்..!

அலறி ஓடுகிறேன்..எங்கே போவேன்?

சமத்துவம் வந்ததென சத்தமாய் கூறுகின்றனர்....!
பெண்னை பெண்ணாக பார்க்காமல்
மனிதராய் பார்ப்பது எக்காலம்?

பாவிகளின் பாலியல் வன்முறை என்று ஓயுமோ??

#பாலியல் வன்முறைக்கு எதிராக எல்லாரும் இதை ஷேர் பண்ணுங்கள் நட்புகளே.....!

நீங்க சம்மர் டூர் எங்க போறீங்க. ?

#கோடை_விடுமுறை :

என்ன சார்.?. பத்து நாள் லீவ் போல.. ஏதாவது சம்மர் டூரா.?. கேட்டபடியே வந்தார் அவர்.

இல்லைங்க. பசங்களுக்கு லீவு விட்டாச்சு. கொண்டுபோய் ஒரு மாசம் எங்க அப்பா, அம்மாகிட்டே விட்டுட்டு வரலாம்னு இருக்கேன். அப்படியே நானும் பத்துநாள் தங்கிட்டு வரலாம்னு. ஊருக்குப் போய் நாளாச்சே.?.. பதிலளித்தார் இவர்.

அட என்ன சார் நீங்க.? உங்க ஊரே ஒரு கிராமம். வசதிகள் குறைவு. சிட்டி லைப்லேயே வாழ்ந்த பசங்க உங்களுக்கு. அவங்களுக்கு அங்க செட்டாகுமா.? போரடிக்காதா.? அப்பா, அம்மாவை இங்க வரவச்சிட்டு, ஜாலியா இருக்கறதை விட்டுட்டு.. என்றார் அவர்.

வசதியெல்லாம் மனசைப் பொறுத்ததுதாங்க. மனசு சந்தோஸமா இருந்தா போதுங்க. அதுவுமில்லாம, ஊர்ல சொந்தக்காரங்க எல்லோருக்கும் நம்ம பசங்களையும், நம்ம பசங்களுக்கு அவங்களையும் முழுசா தெரிய வேணாமா.? எல்லாரையுமா இங்க வரவழைக்க முடியும்.?.. கேட்டார் இவர்.

சார்.. பையன் பத்தாவது எழுதியிருக்கான். அடுத்து கோச்சிங் கிளாஸ், கான்ஸன்ட்ரேஷன் கிளாஸ், யோகா கிளாஸ்னு ஏகப்பட்ட விஷயமிருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு, ஊருக்குப் போய் பசங்களோட எதிர்காலத்தை வீணாக்குறீங்க சார்.. என்றார் அவர்.

நீங்க சொன்ன அத்தனை கிளாசும் கூட்டுக் குடும்பத்துலேயே இருந்ததுங்க. அதை விட்டுட்டு பொழைக்க தனியா வந்ததிலதான், இப்போ எல்லாத்துக்கும் கோச்சிங் கிளாஸ் தேட வேண்டியிருக்கு.. என்றார் இவர்.

காம்பெடிஷன் அதிகம் சார். இப்போலேர்ந்தே எல்லாத்துக்கும் பசங்களை தயார் பண்ணணும். அதுக்குத்தான் சொல்றேன்.. என்றார் அவர்.

தன்னம்பிக்கையும், தைரியமும் தரதே நம்ம உறவுகள்தான் சார். அதை இழந்துட்டு, எதைக் கத்துக்கிட்டும் பிரயோஜனமே இல்லை சார்.. என்றார் இவர்.

புரியலை சார்.. என்றார் அவர்.

பிரச்சனையே அதான். இங்கே நிறைய பேர் தன் பசங்க எல்லாத்தையும் கத்துக்கணும்னு நெனக்கறாங்களே தவிர, வாழக் கத்துக் குடுக்கறதே இல்லை.

சொந்தக்காரங்க ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி சார். அத்தனை பேரையும் பசங்களுக்கு எப்படி சமாளிக்கறது, எப்படி பழகறதுன்னு தெரிஞ்சாதான், நாளைக்கு வெளி உலகத்துல எப்படி எல்லோர்கிட்டேயும் பழகறதுன்னு தெரியும். அதுவுமில்லாம, நமக்காக இத்தனை பேர் இருக்காங்க அப்படின்ற தைரியமும் வரும். நாம தப்பு செஞ்சா இத்தனை பேர் கேட்பாங்கன்ற பயமும் இருக்கும்.

இதையெல்லாம் தாண்டி, வருஷத்துல இந்த ஒரு மாசத்தை எதிர்பார்த்து வருஷம் பூரா காத்திட்டிருக்கற வயசானவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. பணம் சம்பாரிக்க, படிக்க, பிழைக்கன்னு ஏதாவது ஒரு காரணத்தால பிரிஞ்சு கிடக்கிற குடும்பம், இந்த ஒரு மாசம் இணைஞ்சிருக்கறதால அவங்க அடையற சந்தோஷத்தை, நீ என்ன விலை கொடுத்து, எதை வாங்கித் தந்தாலும் கிடைக்காது.

இந்த வயசுல எங்க அப்பாவுக்கு நான் அடங்கி நடக்கறதையும், எங்க அம்மா மடில நான் படுத்து தூங்கறதையும் எம் பிள்ளை பார்த்தாலே போதும். பாசம்னா என்னன்னு புரிஞ்சுப்பான். என்னை கொண்டாட ஆரம்பிச்சுடுவான். இதையெல்லாம் கோச்சிங் கிளாஸ் சொல்லிக் குடுக்காது.

பசங்களுக்கு எல்லாம் தெரியணும்கறதைவிட, நல்லது தெரியணும்கறதுதான் முக்கியம்.

எம் பசங்க நிறைய சம்பாரிக்கறான்.. பெரிய அதிகாரி.. அப்படின்றது எனக்குப் பெருமையில்லை. எம் பையன் என்னை நல்லாப் பார்த்துக்கறான்னு முழுமனசோட நான் கடைசி காலத்துல சொல்லணும். எங்கப்பா என்னை நல்லா வளர்த்தார்னு அவன் சொல்லணும். அதுதான் முக்கியம். அதுக்கு நான் அதுமாதிரி நடந்து காட்டணும். ஏன்னா, எம் பசங்களுக்கு நான்தான் ஹீரோ. நான் செய்யறதுதான் சரின்ற நம்பிக்கை வரணும். அதை  எங்க அப்பாகிட்டே  நான் நடந்துக்கற முறை கத்துக் குடுக்கும்.

நமக்கும் வயசாவும். நாளைக்கு எம் பையனும் அப்பா ஆவான். அவன் வாழ்க்கைலையும் இதேபோல சம்மர் லீவுன்னு ஒண்ணு வரும். அப்போ அவன் என்னைத் தேடணும். அவனுக்காக மட்டுமில்லை.. அவனோட பசங்களுக்காகவும். அதுக்குத்தான் இவ்வளவும்... என்றார் இவர்.

அது வந்து.. என இழுத்தார் அவர்.

இதோ பாருங்க நண்பரே.. எம்மேல பாசமா இருப்பான்னு எம் பையன் என்னைக் கேட்கலை. ஆனா, நான் இருக்கேன். அதேமாதிரி, எம்மேல பாசமா இருப்பான்னு நான் அவனை கேட்க மாட்டேன். ஆனா, அவன் இருப்பான். அதுக்கு, பாசம், குடும்பம், உறவுன்னா அவனுக்குத் தெரியணும். ஒரு அப்பாவா நான் தெரிய வைக்கிறேன். எனக்கு எங்கப்பா கத்துக் குடுத்ததை நான் கத்துக்குடுக்றேன். இதுதான் இப்போதைக்கு தேவையான கோச்சிங் கிளாஸ்.

நாம விதைச்சது பெரிய மரமாகறது முக்கியம்னு சில பேர் எண்ணம்.
அது விஷமரமா யாருக்குமே பயனில்லாம போயிடக் கூடாதுங்கறது என் எண்ணம்.

தலைமுறைங்கறது நாம மட்டுமே இல்லை. நமக்கு முன்னாடி இருந்ததுங்கறதை நாம நிரூபிக்கறோம். நமக்குப் பின்னாடியும் இருக்கணும். அதையும் நிரூபிக்க வைக்கணும். அதுக்கு குடும்பம், உறவுகளை விட சிறந்த  பல்கலைக்கழகம் எதுவுமே இல்லை.

சரி விடுங்க. நீங்க சம்மர் டூர் எங்க போறீங்க. ? கேட்டார் இவர்.

சிறிது நேர மௌனத்திற்குப் பின் சொன்னார் அவர்..

என் தலைமுறையை எம் பசங்களும் புரிஞ்சுக்கற இடத்துக்கு.
நானும் புரிஞ்சுக்கணுமே...

வெளியேறும்போது அவர் மனதில் நிறைவு நடையிலேயே தெரிந்தது.

உறவுகளோடு வாழ்வதைவிட, வேறெதையுமே வாழ்க்கை நம்மிடம் எதிர்பார்க்கப் போவதில்லை.
ஏனெனில்,
உறவுகள்தான் வாழ்வின் படிப்பினை..
அனுபவம் கற்றுத்தரும் ஆசான்.

இன்றைய நன்னாளுக்கான வாழ்த்துகளும், வேண்டுதல்களும்..

Sunday, 22 April 2018

#250 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 39 அறத்தான் வருவதே | Daily one thir...

கோபம் வந்தா என்ன செய்வோம்?

நாம் ஏன் கோபத்தில் சத்தம் போடனும் கோபம் வந்தா என்ன செய்வோம்?

யார்மேல நமக்கு கோபமோ, அவங்ககிட்ட சத்தம்போட்டு சண்டைபிடிப்போம்!! இல்லையென்றால் பேசாம அமைதியா இருந்துடுவோம்!

ஆனா, எப்பவாவது யோசிச்சிருக்கோமா? யார்மேல நமக்கு கோபம் வந்தாலும் அவர்கள் நமக்கு மிக அருகில்தானே இருக்காங்க!

எதுக்கு ஊருக்கே கேட்கிறமாதிரி சத்தம் போடனும்?

மெதுவா சொல்லவேண்டியதை சொன்னாலே அவங்களுக்கு கேட்குமே!

நானும் யோசிச்சதில்லைங்க!

ஆனா இந்த கதையைப் படித்தபிறகு??????

ஒரு துறவி கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறும் சமயம், அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதைப் பார்த்த துறவி, தன் சீடர்களிடம் திரும்பி சிரித்துக்கொண்டே கேட்கிறார்?

ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும்போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம்போட்டு சண்டை பிடிக்கிறார்கள்?

சீடர்கள் சில நிமிடங்கள் சிந்திக்கிறார்கள்.....பின்னர்..

சீடர்களில் ஒருவர்: கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்!

அதனால் சத்தமிடுகிறோம்!

துறவி: ஆனால், உனக்கு மிக சமீபத்தில் இருக்கும் நபரிடம், ஏன் சத்தமிடுகிறாய்?

அவர்கள் உன்னருகில்தானே நிற்கிறார்கள்!

நீ சொல்ல வேண்டியதை அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக எடுத்துறைக்கலாமே!

ஒவ்வொரு சீடரும் ஒரு காரணம் சொல்கிறார்......

ஆனால் எந்த காரணத்திலும் அடுத்தவர்களுக்கு உடன்பாடில்லை!

கடைசியாக துறவி பதில் கூறுகிறார்.....

எப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது! எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்!

மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து சத்தம்போட வேண்டியிருக்கும்!

அப்பொழுது தானே தங்கள் கருத்து வெகு தொலைவில் இருக்கும் மனதைச் சென்றடையும்!

ஆனால் இதுவே, இரு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது?

அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சத்தமிடுவதில்லை! அமைதியாகவும், அன்பான முறையிலும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள்!

காரணம் அவர்களின் மனது இரண்டும் வெகு சமீபத்திலே இருக்கும்!

மனதிற்கு இடையேயான தூரம், மிகக் குறைவாக இருக்கும் அல்லது மனதிரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும்!

துறவி தொடர்ந்து கூறுகிறார்...

இதைவிடவும் அதிகமாக ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது என்ன நடக்கும்?

அவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பேச தேவையிருக்காது! அவர்களின் மனதுகள் இரண்டும் கிசுகிசுப்பாக பேசுவதில் இருந்தே, அவர்களின் கருத்துகள் பரிமாறப்படும்!

இன்னும் இன்னும் அன்பு அதிகமாகும்போது வார்த்தையே தேவைப்படாது!

அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போதே, மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டுவிடும்!

துறவி கடைசியாக சீடர்களைப் பார்த்து கூறுகிறார்,
அதனால் நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும்போது,

 "உங்கள் மனதுகள் இரண்டும் தொலைவாகப் போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!

மனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளைஉபயோகப்படுத்தாதீர்கள்!"

அப்படி செய்யாமல் போனால், "ஒருநாள் உங்கள் மனங்களிரண்டின் தூரம் கொஞ்ஞம் கொஞ்ஞமாக அதிகமாகி, கடைசியில் ஒன்றுசேரும் பாதையே அடைக்கப்பட்டுவிடும் நிலை வந்துவிடும்!"".

"வாழ்க வளமுடன்"

கணவனின் உறவினர்களை கண்டால் எளிதில் தீ பற்றக் கூடியது...

புதியதாக வேதியலில் சேர்க்கப்பட்டு உள்ளது அதாவது

பெயர் : மனைவி

குறியீடு: Wf

அணு நிறை: முதலில் பார்க்கும்போது இலகுவாக தெரியும், நாட்கள் ஆக ஆக எடை கூடிக் கொண்டே போகும்...

உடற்கூறு தன்மை:
எப்பொழுதும் அன்பில் உருகக் கூடியது...

எப்போதும் அன்பில் உறையக்கூடியது....

எப்பொழுதும் கொதிக்க கூடியது...

தவறாக பயன்படுத்தினால் கசக்கக் கூடியது......

வேதியல் தன்மைகள்:

எளிதில் எதிர்வினை புரியக் கூடியது.....

அதிக நிலைத் தன்மை அற்றது....

தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பணம், காசு, காசோலை என அனைத்தையும் ஈர்க்கும் தன்மை கொண்டது.....

பணமதிப்பை குறைக்கும் வல்லமை கொண்டது......

காணும் இடங்கள்;

அழகு நிலையம், நகைக் கடைகள், பன்னாட்டு நவீன வணிக வாளகங்கள் மற்றும் ஐஸ் கிரீம் கடைகள்

அல்லது

கண்ணாடி முன் காணலாம்...

கணவனின் உறவினர்களை கண்டால் எளிதில் தீ பற்றக் கூடியது......

தனது பெற்றோர்களுடன் இருக்கும் போது இன்பம், மகிழ்ச்சி, குதூகலம், துள்ளல், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஒரே  பன்முக தன்மை உடையதாக இருக்கும்......

மனப்பான்மை:

நானே இந்த பூலோகத்தின் ராணி, என்னை மிஞ்சிய அழகும், திறமையும், ஆற்றலும், அறிவும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை என்ற நினைப்பு.

ஆக மொத்தத்தில் புரிந்து கொள்ளவே முடியாத புதிராக இருக்கும்......

Monday, 16 April 2018

பெற்றோர்களை நோகடிக்காதே...

*பிறப்பிற்கும்*
      *இறப்பிற்கும் இடையில்,*
      *நீ செய்யும்* *பாவம்*
      *புண்ணியம்* *மட்டுமே*
      *உனக்கு மிஞ்சும்...*
      *உன்னுடன் கடைசி*
      *வரை வருவதும்*
      *இதுவே...!!*

01) பெற்றோர்களை 
     நோகடிக்காதே...
     நாளை உன் பிள்ளையும்
     உனக்கு அதை தான்
     செய்யும்...!!

02) பணம் பணம் என்று
     அதன் பின்னால்
     செல்லாதே...
     வாழ்க்கை போய் 
     விடும்...
     வாழ்க்கையையும்
     ரசித்துக் கொண்டே 
     போ...!!

03) நேர்மையாக இருந்து
     என்ன சாதித்தோம்
     என்று நினைக்காதே...
     நேர்மையாக இருப்பதே
     ஒரு சாதனை தான்...!!

04) நேர்மையாக
இருப்பவர்களுக்கு
     சோதனை வருவது
     தெரிந்ததே, அதற்காக
     நேர்மையை கை விட்டு
     விடாதே...
     அந்த நேர்மையே
     உன்னை
     காப்பாற்றும். ..!!

05) வாழ்வில் சின்ன சின்ன
     விஷயத்திற்கெல்லாம்
     கோபப்படாதே...
     சந்தோஷம்
     குறைவதற்கும்,
     பிரிவினைக்கும் இதுவே
     முதல் காரணம்...!!

06) உன் அம்மாவிற்காக
     ஒரு போதும்
     மனைவியை விட்டு
     கொடுக்காதே...
     அவள் உனக்காக
     அப்பா அம்மாவையே
     விட்டு வந்தவள்...!!

07) உனக்கு உண்மையாக
     இருப்பவர்களிடம்...
     நீயும் உண்மையாய்
     இரு...!!

08) அடுத்தவர்களுக்கு தீங்கு
     செய்யும் போது
     இனிமையாகத்தான்
     இருக்கும்...
     அதுவே உனக்கு வரும்
     போது தான், அதன்
     வலியும் வேதனையும்
     புரியும்...!!

09) உன் மனைவி
    உண்மையாக இருக்க
    வேண்டும் என்று, நீ
    நினைப்பது போல்...
    நீயும் உண் மனைவிக்கு
    உண்மையாய் இரு,
    எந்த பெண்ணையும்
    ஏறெடுத்து பார்க்காதே,
    அதுவே உன்
    மனைவிக்கு கொடுக்கும்
    மிகப்பெரிய பரிசு...!!

10) ஒருவன் துரோகி
      என்று தெரிந்து
      விட்டால்...
      அவனை விட்டு
      விலகியே இரு...!!

11) எல்லோரிடமும்
      நட்பாய் இரு...
      நமக்கும் நாலு
      பேர் தேவை...!!

12) நீ கோவிலுக்கு
      சென்று தான்
       புண்ணியத்தை
      சேர்க்க வேண்டும்
      என்பதில்லை...
      யாருக்கும் தீங்கு
      செய்யாமல்
      இருந்தாலே...
      நீ கோவில்
      சென்றதற்கு சமம்...!!

13) நிறை குறை இரண்டும்
      கலந்தது தான்
      வாழ்க்கை...
      அதில் நிறையை மட்டும்
      நினை...
      நீ வாழ்க்கையை
      வென்று விடலாம்...!!

14) எவன் உனக்கு உதவி
      செய்கிறானோ,
      அவனுக்கு மட்டும்
      ஒரு நாளும் துரோகம்
      செய்யாதே...
      அந்த பாவத்தை நீ
      எங்கு போனாலும்
      கழுவ முடியாது...!!

15) அடுத்தவர்களைப்
      போல் வசதியாக
      வாழ முடியவில்லை
      என்று நினைக்காதே...
      நம்மை விட 
      வசதியற்றவர்கள்
      கோடி பேர்
      இருக்கிறார்கள்
      என்பதை மனதில்
      கொள்...!!

16) பிறப்பிற்கும்
      இறப்பிற்கும் இடையில்,
      நீ செய்யும் பாவம்
      புண்ணியம் மட்டுமே
      உனக்கு மிஞ்சும்...
      உன்னுடன் கடைசி
      வரை வருவதும்
      இதுவே...!!

*விதி*
👆
👇
*வி*னை விதைத்தவன் வினை அறுப்பான் !
*தி*னை விதைத்தவன் தினை அறுப்பான் !!

-படித்ததில் பிடித்தது

#244 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 635 ஆற்று பவர்க்கும் | Daily one th...

#243 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 741 ஆற்று பவர்க்கும் | Daily one th...

Tuesday, 10 April 2018

#238 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 730 உளரெனினும் இல்லாரொடு | Daily on...

எப்படி பேச வேண்டும்... எப்படி பேசக் கூடாது?

​🌐எப்படி பேச வேண்டும்... எப்படி பேசக் கூடாது?⛔​


'பேசுவதற்கு முன் யோசி, யோசிப்பதையெல்லாம் பேசிவிடாதே' என்பார்கள். மற்றவர்களுக்கும் நமக்குமான தொடர்பே பேச்சில்தான் இருக்கிறது.

* கோபத்தில் வார்த்தைகளை இறைத்துவிடாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசுபவனை, சிறந்த வீரன் என்றும் மன வருத்தத்தில் இருப்பவர்களுக்கு, ஆறுதலான வார்த்தைகள்தான் மருந்து என்றும் நபிகள் நாயகம் கூறியுள்ளார். 'சில சமயங்களில் அமைதியாக இருப்பதைக் காட்டிலும், எது உண்மையோ அதை உள்ளபடியே கவனமாகப் பேசுவது நல்லது'


* வாழ்வில் நமக்கு இறைவன் கொடுத்த மிகப்பெரிய பரிசுகளில் ஒன்று பேச்சு. கனிவான வார்த்தைகள் போரையும் நிறுத்தக்கூடிய வல்லமையுடையது. அதேநேரத்தில் மனதைக் காயப்படுத்தும் ஒரு சிறிய வார்த்தையால் ஒருவருக்கொருவர் பல ஆண்டுகளாகப் பேசிக்கொள்ளாமல் இருப்பதையும் நாம் பார்த்திருப்போம்.

* பேசுவது என்பது ஒரு வகையான கலை. பேச்சால் வாழ்ந்தவர்களும் இருக்கின்றார்கள், பேச்சால் வீழ்ந்தவர்களும் இருக்கின்றார்கள்.நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறைவனிடம் பதில் சொல்லத் தயாராக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
கூட்டத்தில் பேசும்போதோ, மற்றவர்களிடம் பேசும்போதோ எப்படிப் பேச வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

* தேவையில்லாமல் பேசி மதிப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டாம். தேவையிருந்தால், மட்டுமே பேசுங்கள்.

* பிறர் மனம் புண்படாமல், அன்பாகப் பேசுங்கள்.

* நன்மைதரும் பேச்சை மட்டும் பேசுங்கள்.

* மலர்ந்த முகத்துடன் கண்ணியமாகப் பேசுங்கள்.

* மென்மையான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள்.

* நீதி தவறாமல் பேசுங்கள்.

* தீய பேச்சுக்களால்  உங்கள் நாவைக் கறைப்படுத்திக்கொள்ளாதீர்கள்.

* பிறருடைய குறைகளைப் பற்றிப் பேசாதீர்கள்

* பொய்யான வாக்குறுதிகளை வீசாதீர்கள். உங்களால் என்ன முடியுமோ அதற்கு தகுந்தாற் போல் வாக்குறுதி அளியுங்கள்.

* பிறரைக் கேலி செய்யும் வகையில் பேசாதீர்கள்.

* யாரைப் பற்றியும் தவறாகப் பேசாதீர்கள் குறிப்பாக, அவர்கள் இல்லாத நேரத்தில்!

* உரையாடும்போது எதிரே உள்ளவர் மட்டும் கேட்கும்படிப் பேசுதல் வேண்டும். பலருடைய காதிலும் விழுமாறு பேசுவதைத் தவிர்க்கவேண்டும்.

* பேசும்போது கண்களை உருட்டுதலும் அடிக்கடி இமைத்தலும் கைகளையும் தலையையும் மிகையாக அசைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பயனற்ற உரையாடலைத் தவிர்த்தல் வேண்டும்.

* பேசும்போது சொற்களை முழுமையாக உச்சரித்தல் வேண்டும். சொல்லின் கடைசி எழுத்து வரையில் தெளிவாக உச்சரித்தல் வேண்டும்.

* ஒருவர் கேட்கும் கேள்விக்குச் சரியாக பதிலளிக்க, முதலில் அவர் கூற வரும் முழுக் கருத்தையும் தெளிவாகப் புரிந்த பின்னரே பதில் அளிக்க வேண்டும்.

* முகஸ்துதி செய்வதை நிறுத்துங்கள். ஏனெனில் அன்பைக் காட்டும் வழி அதுவல்ல🔵🔴

   ​💥 ENTERTAINMENT💥​

உணவு பழக்கம் பழமொழி வடிவில்...

*12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்
Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*
Hernia : *அரசாணிக்காய்*
Cholesterol : *கோவைக்காய்*
Asthma : *முருங்கைக்காய்*
Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*

உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*

*💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚
*💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚
*💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚
*💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚
*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚
*💎வாழை வாழ வைக்கும்*💚
*💎அவசர சோறு ஆபத்து*💚
*💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚
*💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚
*💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚
*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚
*💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚
*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚
*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*💚
*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*💚
*💎சித்தம் தெளிய வில்வம்*💚
*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*💚
*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*💚
*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*💚
*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*💚
*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*💚
*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*💚
*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*💚
*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*💚
*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*💚
*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*💚
*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*💚
*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*💚

*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”*💚

*🎀நலம் உடன் வாழ்வோம்...

💎💎💎💎💎💎💎
ப்ளீஸ் ஷேர் பண்ணுங்க எல்லோருக்கும் பயன்படட்டும்

வரம் வாங்கி வந்தால் மட்டும் கிடைக்கக் கூடியவை..

*வரம் வாங்கி வந்தால் மட்டும் கிடைக்கக் கூடியவை..;*

1.  நிறைய சகோதரர் சகோதரிகளுடன் பிறப்பது.. மற்றும் கடைசி வரை உடன்பிறந்தவர்களுடன் நல்உறவு..!

2.  பெற்றோர்களின் வறுமையைப் பார்க்காத இளமை..!

3.  எந்த வயதிலும் எந்த கல்வி  கலையையும் கற்கும் வாய்ப்பு..!

4.  பள்ளி, கல்லூரி நட்புகள் கடைசி காலம் வரை கூடவே பயணிப்பது மற்றும் பிரியமான நண்பர்கள் வாய்ப்பது..!

5.  நம் மனசுக்கு பிடித்தவருடன் திருமண வாழ்க்கை..!

6.  நாம் ஆசைப்பட்டதை வாங்கி சாப்பிடும் சுதந்திரம்..!

7.  அடிப்படைத் தேவைகளுக்கான சொத்து சுகத்தோடு இருப்பது..!

8.  எதற்கும் ஏங்காத பிள்ளைவரம்..!

9.  தீய பழக்கவழக்கங்களுக்கு  அடிமையாகாதிருத்தல் மற்றும்  தர்மநியாயங்களுக்கு கட்டுப்பட்டு வாழும் உயர் பண்புகள்..!

எல்லாவற்றிற்கும் மேலாக,
                                           
10.   *கடைசி காலத்தில் படுக்கையில் படுக்காமல் சாகும்வரை தன் வேலைகளை தானே செய்து கொள்ளும் வரமும்..!  தூக்கத்தில் சாகும் உடனடி சாவு வரமும்..!!*

வரம் வாங்கிப் பிறந்தால் மட்டுமே கிடைக்கக் கூடியவை

Friday, 6 April 2018

#234 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 666 எண்ணிய எண்ணியாங்கு | Daily one ...

FIFA WORLD CUP 2018 (RUSSIA) FIXTURES WITH INDIAN TIMING.

For all football ⚽ lovers

*FIFA WORLD CUP 2018(RUSSIA) FIXTURES WITH INDIAN TIMING. There will be 64 matches in TOTAL*



*Group A:-* Russia, Saudi Arabia, Egypt, Uruguay 
*Group B:-* Portugal, Spain, Morocco, Iran 
*Group C:-* France, Australia, Peru, Denmark 
*Group D:-* Argentina, Iceland, Croatia, Nigeria 
*Group E:-* Brazil, Switzerland, Costa Rica, Serbia 
*Group F:-* Germany, Mexico, Sweden, South Korea 
*Group G:-* Belgium, Panama, Tunisia, England 
*Group H:-* Poland, Senegal, Colombia, Japan

*THURSDAY, June 14/6/2018*
1.RUSSIA vs SAUDI ARABIA  (8:30pm)

*FRIDAY, June 15/6/2018*
2.EGYPT vs URUGUAY (5:30pm)
3.Morocco vs Iran (8:30pm)
4.Portugal vs Spain (11:30pm)

*SATURDAY, June 16/6/2018*
5.FRANCE vs AUSTRALIA (3:30pm)
6.ARGENTINA vs ICELAND  (6:30pm)
7.PERU vs DENMARK (9:30pm)
8.CROATIA vs NIGERIA (5:30pm)

*SUNDAY, June 17/6/2018*
9.COSTA RICA vs SERBIA (12:30am)
10.GERMANY vs MEXICO (8:30pm)
11.BRAZIL vs SWITZERLAND (11:30pm)

*MONDAY, June 18/6/2018*
12.SWEDEN vs SOUTH KOREA (5:30pm
13.BELGIUM vs PANAMA 8:30pm
14.TUNISIA vs ENGLAND 11:30pm

*TUESDAY, June 19/6/2018*
15.POLAND vs SENEGAL (5:30pm)
16.COLOMBIA vs JAPAN (8:30pm)
17.RUSSIA vs EGYPT (11:30pm)

*WEDNESDAY, June 20/6/2018*
18.PORTUGAL vs MOROCCO (5:30pm)
19.URUGUAY vs SAUDI ARABIA (8:30pm)
20.IRAN vs SPAIN (11:30pm)

*THURSDAY, June 21/6/2018*
21.FRANCE vs PERU (5:30pm)
22.DENMARK vs AUSTRALIA (4:30pm)
23.ARGENTINA vs CROATIA (11:30pm)

*FRIDAY, June 22/6/2018*
24.BRAZIL vs COSTA RICA (5:30pm)
25.NIGERIA vs ICELAND (8:30pm)
26.SERBIA vs SWITZERLAND (4:30pm)

*SATURDAY, June 23/62018*
27.BELGIUM vs TUNISIA (5:30pm)
28.GERMANY vs SWEDEN (8:30pm)
29.SOUTH KOREA vs MEXICO (11:30pm)

*SUNDAY, June 24/6/2018*
30.ENGLAND vs PANAMA (5:30pm)
31.JAPAN vs SENEGAL (8:30pm)
32.POLAND vs COLOMBIA (11:30pm)

*MONDAY, June 25/6/2017*
33.SAUDI ARABIA vs EGYPT (7:30pm)
34.URUGUAY vs RUSSIA (8:30pm)
35.IRAN vs PORTUGAL (11:30pm)
36.SPAIN vs MOROCCO (10:30pm)

*TUESDAY, June 26/6/2018*
37.AUSTRALIA vs PERU (7:30pm)
38.DENMARK vs FRANCE (7:30pm)
39.NIGERIA vs ARGENTINA (11:30pm)
40.ICELAND vs CROATIA (11:30pm)

*WEDNESDAY, June 27/6/2018*
41.S. KOREA vs GERMANY (7:30pm)
42.MEXICO vs SWEDEN (7:30pm)
43.SERBIA vs BRAZIL (11:30pm)
44.SWITZERLAND vs COSTA RICA (11:30pm)

*THURSDAY, June 28/6/2018*
45.JAPAN vs POLAND (7:30pm)
46.SENEGAL vs COLOMBIA (7:30pm)
47.PANAMA vs TUNISIA (11:30pm)
48.ENGLAND vs BELGIUM (10:30pm)

*LAST -16:-*
*SATURDAY, June 30/6/2018*
49.Group C-1st vs D-2nd (7:30pm)
50.Group A-1st vs B-2nd (11:30pm)

*SUNDAY, July 1/7/2018*
51.Group B-1st vs A-2nd (7:30pm)
52.Group D-1st vs Group C-2nd (11:30pm)

*Monday, July 2/7/2018*
53.Group E-1st vs F-2nd (12:30am)
54.Group G-1st vs Group H-2nd (11:30pm)
55.Group F-1st vs E-2nd (7:30pm)
56.Group H-1st vs G-2nd (11:30pm)

*QUARTER-FINALS:-*
*Friday, July 6/7/2018*
57.Winner 49 vs winner 50 (7:30pm)
58.Winner 53 vs winner 54 (11:30pm)

*SATURDAY, July 7/7/2018*
59.Winner 55 vs winner 56 (11:30pm)
60.Winner 51 vs winner 52 (12:00am)

*SEMI-FINALS:-*
*TUESDAY, July 10/7/2018*
61.Winner 57 vs winner 58 (11:30pm)

*WEDNESDAY, July 11/7/2018*
62.Winner 59 vs winner 60 (11:30pm)

*THIRD-PLACE PLAY-OFF:-*
Saturday, July 14/7/2018
63.Loser 60 vs Loser 62

*FINAL:-*
Sunday, July 15/7/2018
64. Winner 61 vs winner 62 (8:30pm)

Thursday, 5 April 2018

கீ ஙீ சீ Kee gnee see in tamil | உயிர்மெய் எழுத்துக்கள் | Uyirmei eluthu...

தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறது...

ஏரியை அழித்து

கல்லூரி கட்டியாச்சு

குளத்தை அழிச்சு

கம்பெனி கட்டியாச்சு

வயக்காட்டை அழிச்சு

வீடு கட்டியாச்சு

தவறு எல்லாம்

மக்களாகிய நம்மீது தானே தவிர

அடுத்தவன் மீது இல்லை

துட்டுக்கு ஓட்டு போட்டது யாரு

இலவசத்துக்கு பல்லகாட்டுனது யாரு

நீர்வளத்தை

மணல்வளத்தை

காடுகளை

அழித்தபோது வேடிக்கை

பார்த்தது யாரு

உன்னால் இன்று

நெஞ்சை நிமிர்த்தி

நம்ம அரசியல்வாதியிடம்

நம்ம பிரச்சனையை

சொல்ல முடியுமா...??
கேட்க முடியுமா....??

முல்லையில் தண்ணீர் கேட்டால்
கேராளக்காரன் அடிக்கிறான்

காவேரியில் தண்ணீர் கேட்டால்
கர்நாடக்காரன் அடிக்கிறான்

செம்மரம் வெட்டுறானு
ஆந்திராக்காரன் அடிக்கிறான்

தீவிரவாதி இனம்னு
இலங்கைக்காரன் அடிக்கிறான்

தமிழனை எங்கு அடித்தாலும்
தமிழ்நாட்டுகாரன்
வேடிக்கை மட்டும் தான்
பார்க்கிறான்.....!!!!

முல்லையில் வந்த தண்ணீரை
நாம் சேமிக்கவில்லை

காவேரியில் வந்த தண்ணீரை
சேமிக்கவில்லை

காமராஜர் ஆட்சிக்கு பிறகு
அணையேதும் கட்டவில்லை

குளமேதும் வெட்டவில்லை

கோலா🍷 காரனுக்கு
போதுமான தண்ணீர்
கிடைக்குது

குடிகாரனுக்கு🍻 போதுமான
தண்ணீர் கிடைக்குது

ஆனால்

விவசாயத்திற்கு மட்டும்
தண்ணீர் கிடைக்கவில்லை

தமிழக அரசே..

தமிழக தன்மான மக்களே

முதலில் தமிழகத்தில்
அணைகட்ட சொல்லுங்க

நதியை இணைக்க
சொல்லுங்க

இதை செய்யுரவனுக்கு
ஓட்டுப்போடுங்க

மிக்சி.கிரைண்டர்.டி.வி.
எல்லாம் நம்மலே
வாங்கலாம் ஆனா
அணை கட்ட முடியுமா  ....??

 வீரத்தையும் , விருந்ததோம்பலையும் உலகிற்கு கற்று கொடுத்த இனம் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறது

 இன்று

மாறுங்கள்  மண்னின் மைந்தர்களே ..

தன்மான தமிழர்களே
நிறைக்கொண்டு வாழும் இனமே..

மாறுங்கள் இல்லை என்றால் தமிழ் இனம் இவ்வுலகில் இல்லாமல் போய்விடும்  .

         வேதனையுடன்
          உங்களில்ஒருவன்...  💪💪💪
 
 நாடு முன்னேற இதை மற்ற குரூப்புக்கு
பகிரவும்.....

#233 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 873 ஏமுற் றவரினும் | Daily one thir...

​'ஹலோ' சொன்னதும் "என்னடா உடம்பு சரியில்லையா"

​விக்கல் எடுத்ததும் மகன்தான் நினைக்கிறான் என எண்ணி மகிழ்கிறாள் முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய்..​
​=​=_=_=_=_=_=_=_=_=_=
உலகில் உன் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படாத ஒரே ஜீவன்  amma
​=​=_=_=_=_=_=_=_=_=_=
​ஒரு தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால், எதற்காகவும் தாயை இழக்கக்கூடாது..​
​=​=_=_=_=_=_=_=_=_=_=
படிப்ப விட அப்பா அம்மா ஒசத்திதான். அதனாலதான் இன்சியல முதல்லயும், படிப்ப கடைசியிலும் எழுதுறோம்..!!
​=​=_=_=_=_=_=_=_=_=_=
 ​'ஹலோ' சொன்னதும் "என்னடா உடம்பு சரியில்லையா" என்று கேட்கும் அம்மாவிடம் தோற்றுப் போகின்றனர் உலகில் உள்ள அனைத்து மருத்துவர்களும்..!!​
​=​=_=_=_=_=_=_=_=_=_=
தாய் தந்தையாரின் அருமை நீ வளரும் போது தெரியாது.. உன் பிள்ளையை நீ வளர்க்கும் போது தான் தெரியும்...
​=​=_=_=_=_=_=_=_=_=_=
​புரண்டு படுத்தால் நாம் இறந்துவிடுவோமோ என்று கருவில் இருந்த நமக்காக தூக்கத்தை கூட துளைத்து விட்டு இரவில் விழித்திருந்த சூரியன்.. "அம்மா"​
​=​=_=_=_=_=_=_=_=_=_=
 வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்.. கண்கள் இல்லாமல் ரசித்தேன்.. காற்றே இல்லாமல் சுவாசித்தேன்.. கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்.. என் தாயின் கருவறையில் மட்டும்..!!
​=​=_=_=_=_=_=_=_=_=_=
​அம்மாவை சந்தோசப்படுத்த பணம், நகை வேணுமான்னு கேக்க தேவையில்லை.. சாப்பிடும் போது இன்னும் கொஞ்சம் சோறு போடும்மா என்று கேட்டாலே போதும்..​
​=​=_=_=_=_=_=_=_=_=_=
ஒரு தாய் தனக்கு என்னவெல்லாம் செய்தாள் என்பதை மனிதன் கடைசிவரை உணர்வதில்லை.. அவன் அதை உணரும் போது அவள் உயிரோடு இருப்பதில்லை...
​=​=_=_=_=_=_=_=_=_=_=
​I LOVE அம்மா, டிலிட் பண்னாம இன்னைக்குல 20பேருக்கு அனுப்புங்கள்.உங்கள் அம்மா 100 வருஷம் நல்லா இருப்பாங்கள்.​

​இது உண்மையான அன்பு.....அம்மா பாசம் இருந்தா யோசிக்காமல் அனுப்புங்கள்.I love அம்மா​