flipkart discount sale search here.

Friday 8 June 2018

பெட்ரோல் விலை ஏறினாலும் ஏன் விலைவாசி ஏறவில்லை?

பெட்ரோல் விலை ஏறினாலும் ஏன் விலைவாசி ஏறவில்லை? ஏன் பணவீக்கம் எகிறவில்லை? ஏன் மக்கள் பொங்கி எழவில்லை? ஏன் எதிரிகட்சிகள் போராட்டம் நடத்தவில்லை?

பொதுவாகவே பெட்ரோல் விலை ஏறினாலே உடனே விலைவாசி தாறுமாறாக ஏறும், மக்கள் கொந்தளிப்பார்கள், எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தும் என்பது தானே வாடிக்கை.

இப்போது பெட்ரோல், டீசல் விலை ஏறீக்கொண்டு தான் இருக்கிறது. பொதுமக்களூம் பேசவில்லை, எதிர்கட்சிகளும் பேசாமல் இருக்கின்றன, டிவிட்டரிலே ஏதோ முனகுவதோடு சரி.

இதையெல்லாம் விட பணவீக்கம் மிக குறைவாகவே இருக்கிறது. விலைவாசியும் ஏறவில்லை.

அப்படியென்றால் என்ன அர்த்தம்? இதுவரை பெட்ரோல் தான் எல்லாவற்றையும் இயக்கியது என்பது பொய்யா என கேட்டால் ஆமாம். இப்போது இருப்பது போல் தான் இருக்கவேண்டும். வளர்ந்த பணக்கார நாடுகளிலே இப்படித்தான் இருக்கும்.

அப்படீன்னா ஏன் முன்பு விலைவாசி ஏறியது, இப்போது ஏன் ஏறவில்லை இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? என்ன மாறீயது என கேட்டால் அதுக்கு பல காரணீகள் உண்டு. அது என்ன ஏதுன்னு பார்ப்போம்.

இதுக்கெல்லாம் ஜிஎஸ்டி மட்டுமே எனவும் சொல்லிவிட்டு போய்விடமுடியாது. அதுவும் ஒரு காரணம் என்றாலும் அதைவிட பெரிய காரணங்களும் உண்டு.

முதல் காரணம் ஏன் டீசல், பெட்ரோல் விலை ஏறினா பொருட்கள் விலை ஏறக்கூடாதுன்னு பார்ப்போம்.

ஒரு கிலோமீட்டருக்கு ஒரு டன்னுக்கு சுமாரா 30 ரூபாயிலே இருந்து 50 ரூபாய் ஆகும். சின்ன லாரி, கொஞ்ச தூரம்ன்னா கம்மியாத்தான் ஆகும் இருந்தாலும் குத்து மதிப்பா ஒரு டன்னுக்கு 50 ரூபான்னு வைச்சுக்குவோம். ஒரு லிட்டர் டீசலுக்கு மூனு கிலோ மிட்டர் மைலேஜ் தருதுன்னு வைச்சுக்குவோம்.

அப்போ ஒரு டீசல் விலை ஒரு ரூபா ஏறினா ஒரு கிலோ அரிசியோட விலை எவ்வளவு ஏறும்.

ஒரு கிலோ அரிசி விலை - ரூ 40 (இதுவும் ஒரு உதாரணத்துக்குத்தான்)
ஒரு டன் அரிசி - ரூ 40,000
ஒரு டன் அரிசி 1000 கிமீ கொண்டு வரும் செலவு : 50*1000 = 50,000
அதிலே டீசல் செலவு : (1000/3)*73 = 24333

குத்து மதிப்பா அதிக தூரத்திலே இருந்து கொண்டு வரும் செலவில் பாதி டீசலுக்கு போய்விடுகிறது.

இப்போ டீசல் ஒரு ரூபா ஏறினா என்னாகும்? (1000/3)*74 = 24666
முன்னாடி அரிசிவிலை 40 ரூவான்னா இந்த 333 ரூவா ஏறினது கிலோவுக்கு எவ்வளவு ஏறும்? 33 பைசா ஏறும். அதாவது 40 ரூவா இருந்தது 40.33 ரூவாயா ஆகும்.

40 பைசான்னு வைச்சுக்கிட்டா ஒரு ரூவா ஏறினா மொத்த விலையிலே ஒரு சதம் ஏறும் அப்படீன்னு கணிக்கலாம். நான் போட்ட கணக்குக்கு மட்டுமல்ல மத்தவிங்க போட்ட கணக்குக்கும் அப்படீத்தான் வருது. குறைந்த தூரங்களுக்கு இது பெரிய வித்தியாசத்தை கொண்டு வராது.

சரி அப்படீன்னா டீசல் விலை பத்து ரூவா ஏறினா வேண்ணா பொருட்கள் விலை ஏறலாம். அதுவும் கொஞ்சம் தான் ஏறும். இல்லையா?

முன்னாடி ஏறினதுக்கான காரணங்கள் என்னன்னா முதல் காரணம் பெட்ரோல், டீசலை வண்டி ஓட்ட பயன்படுத்தாம மிச்ச எல்லாத்துக்கும் பயன்படுத்தினது.

மின்சாரம் தடைபட்டதாலும் அப்படியே இருந்தாலும் தொழிற்சாலைகளுக்கான மின்சாரமாக இல்லாததாலும் கடைகள், வியாபார நிறுவனங்கள், சிறு குறு தொழிற்சாலைகள் எல்லாம் டீசலை கொண்டு ஜெனரேட்டர் ஓட்டியே தொழிலை நடத்த வேண்டியிருந்தது.

டீசலை வச்சு ஓட்டினா 4 மடங்கு செலவாகும். சதவீதத்திலே சொன்னா 400 சதவீதம். அதாவது ஒரு ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்பட்ட பொருள் டீசலை வைச்சு செஞ்சா 4 ரூபாய் ஆகும். ஏன்னா ஜெனரடேட்டர் அப்படி ஒன்னு உற்பத்தி திறன் மிக்கது அல்லது.

மின்சாரம் தயாரிக்க நிலக்கரி இல்லாட்டி அணு மின்சாரம் போறது தான் சிறந்தது. அதுவும் நிலக்கரியிலே அதிகளவு மின்சாரத்தை தயாரிக்க சூப்பர் கிரிட்டிகல், அல்ட்ரா கிரிட்டிகல் என உற்பத்தி திறன் மிக்க மின்நிலையங்கள் மூலம் மின்சாரம் தயாரிச்சத்தான் காசு மிச்சமாகும். அதை விட்டுட்டு டீசலை ஊத்தி கடை நடத்தினா விலை ஏறத்தான் செய்யும்.

உணவகங்களிலெ இருந்து வீடு வரை மின்சாரம் இருந்தால் உணவுபொருட்களூம் வீணாகாது.

டீசல் ஜெனரேட்டர் வைச்சிருந்தா டீசல் செலவு மட்டுமில்லாம அதை வாங்கின செலவு, பராமரிக்கும் செலவுன்னு எத்தனை இருக்கு.

இதிலே தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்தவுடனே நிலக்கரி தோண்டி எடுப்பதை அதிகரித்தது, மின்சாரத்தை கொண்டு போக அதிக அளவு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது கூடவே புதிய திட்டங்களை உடனடியாக செயல்படுத்தியது.

விளைவு நாடெங்கும் தடையற்ற மின்சாரம் கிடைக்கிறது. இந்தியா உலகின் மூன்றாவது மின்சார உற்பத்தி நாடாக வளர்ந்திருக்கிறது. மோடி ஆட்சிக்கு முன்பு பத்தாவது இடத்திற்கும் கீழே இருந்த நம் நாடு இப்போது சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தாக இருக்கிறது.

குறைவான உற்பத்தி செலவாகுவதும் நம் நாட்டிலேயே கிடைப்பதுமான நிலக்கரியிலே மின்சாரம் எடுத்துபயன்படுத்தினால் விலை குறையுமா? வெளிநாட்டிலே இருந்து இறக்குமதியாகும் டீசலிலே மின்சாரம் தயாரித்தால் விலைகுறையுமா?

பாக்கிஸ்தான் செஞ்சது, பர்னஸ் ஆயில் என்படும் பெட்ரோலிய பொருளிலே மின்சாரம் உற்பத்தி செஞ்சு திவால் ஆகும் நிலையிலே இருக்கிறது.

அடுத்தது தரமான சாலைவசதிகள். நல்ல சாலைகள் இருந்தால் சரக்கு வண்டி செலவிலே பத்து சதவீதம் மிச்சமாகும் என்பது நீருபிக்கப்பட்டது. அதுவும் நகர நெரிசலிலே சிக்காமல் போனால் நேரமும் மிச்சமாகும் டீசல் செலவும் குறையும். ஒரு லிட்டருக்கு ஒரு சதம் ஏறுவது எங்கே சாலைவசதிகள் மூலம் பத்து சதவீதம் குறைவது எங்கே?

நல்ல சாலைகள் இருப்பின் டீசல் விலை பத்து ரூபாய் ஏறினால் கூட மக்களை எந்த விகிதத்திலும் பாதிக்காது. இதனால் தான் உள்கட்டமைப்பு செய்யவேண்டும் என சொல்வது.

இதற்கப்புறம் மோடி செய்தது முத்ரா லோன் மூலம் கடன்.  கடன் கொடுக்கறதுக்கும் விலைவாசிக்கு என்ன சம்பந்தம் அப்படீன்னு நிறைய பேருக்கு அதுவும் ஹார்டுவேர்டு, கேம்பிரிட்ச் என பெரீய்ய பெரீய்ய படிப்பு படிச்ச வெண்ணை வெட்டிகளுக்கே புரியாது.

குறைவான வட்டி வீதத்திலே கடன் வாங்கி தொழில் செஞ்சா அதிலே வட்டிய பொருட்களின் விலையிலே ஏற்றவேண்டியதில்லை. மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி என கடன் வாங்கினா அந்த வட்டிய பொருளோட விலையிலே ஏற்றித்தான் வியாபாரம் செய்யவேண்டியிருக்கும்.

இதிலே இன்னோன்னும் உண்டு. அது எல்லோருக்கும் அதிக வட்டியிலே பணம் எளிதிலே கிடைத்துவிடாது. விளைவு வேலைவாய்ப்பும் குறையும்.

கடன் எளிதாக கிடைக்கும் போது வேலைவாய்ப்பு அதிகரித்து பணவீக்கம் குறையும். இது யாருக்கு கிடைக்கிறது என்பதையும் பொறுத்து. ஏழை எளியோருக்கு என்றால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். பணக்காரனுக்கு என்றால் அவர்கள் விலையை ஏற்றி லாபம் பார்ப்பார்கள்.

பணவீக்கம் ஏறிடும் ஏறிடும் என வட்டி வீதத்தை ரிசர்வ் பேங்க் அப்படியே வைச்சிருந்ததும் முத்ரா கடன் கொடுக்க கூடாது என ஒரு வெண்ணை வெட்டி குமிறியதும் ஞாபகம் இருக்கா?

ஆனா வேலை வாய்ப்பு அதிகரிச்சு எல்லோரும் வாங்கினா பொருளோட விலை அதிகரிக்கத்தானே செய்யும் என மனப்பாடம் பண்ணீனத ஒப்பிக்கலாம்.

வாங்க ஆள் இல்லை விலை குறையும் என்பது அழுகும் பொருட்களூக்கே சாத்தியமில்லாத போது அழுகாத பொருட்களுக்கு எப்படி? விவசாயிகள் பால் விலை கிடைக்கவில்லை என பாலை கீழே தான் ஊற்றுவார்களே ஒழிய சும்மா கொடுப்பார்களா?

அதுவே அதிகம் பேர் வாங்கினால் உற்பத்தி செலவும் விற்பனைக்கு எடுத்து வரும் செலவும் குறையும். எனவே விலையும் தானாக குறையும்.

முத்ரா லோன் போல செய்தது வெளிநாட்டிலே இருந்து வரும் முதலீடு. முந்திய ஆட்சிக்காலத்தை விட இப்போது 4-5 மடங்கு அதிக முதலீடு வருகிறது. அதனால் வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது.

ஏன்? அதான் தொழிற்சாலைக்கு தேவையான மின்சாரம், சாலைவசதிகள் எல்லாம் எளிதிலே கிடைகிறதே அப்புறம் வேலைவாய்ப்பு பெருகாமல் என்ன?

இந்த முத்ரா லோன் ஒழுங்கா வேலை செய்யுறது எங்கே தெரியுதுன்னா வங்கி ஊழியர் வேலை நிறுத்தத்திலே. ஏன்னா அவிங்க அவிங்க அப்பன் வீட்டு சொத்தை எடுத்து கடன் கொடுத்தது போல அழிச்சாட்டியம் பண்ணிதுக்கும் பெரிய பணக்காரங்களுக்கு கடன் கொடுத்து அதிலே லஞ்சம் வாங்கி கொழிச்சுட்டு இருந்ததும் போயிடுச்சே. அப்புறம் ஏ பாயாச மோடியேன்னு பொங்கித்தானே ஆகனும்?

இறுதியாக வருவது தான் ஜிஎஸ்டியும் கருப்பு பண ஒழிப்பும். ஜிஎஸ்டி என்பது கணக்கு வழக்கு என்பதிலே இருந்தாலும் அது செஞ்ச முதல் விஷயம் அரசு ஊழியர்களுக்கு கொடுத்த லஞ்சம்,செக்போஸ்டிலே கொடுத்த லஞ்சம், செக்போஸ்டிலே காத்திருந்த நேரம் என எல்லாவற்றையும் ஒழித்தது.

லஞ்சம் கொடுத்தா வியாபாரிக அவிங்க கைக்காசிலா கொடுப்பாங்க? பொருளின் விலையிலே தான் ஏற்றுவார்கள். அதிலேயும் அலுவலகத்திற்கு போகும் நேரம், அதுக்கு ஆகும் செலவு என எத்தினி பிரச்சினை?

அது ஒழிஞ்சா தானா விலைவாசி ஒழுங்கிலே இருக்க போகுது.

இன்னும் முழு மின்சாரத்திலே ஓடும் வண்டிகள் வந்தால் பெட்ரொல் விலை என்ன ஏறினாலும் பிரச்சினை என்பது ஆகாது.

சீனா, கொரியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அதிகளவு அணு மின்சாரம் தயாரிக்கின்றன. மொத்த உற்பத்தியிலே 10 இல் இருந்து 50 சதம் வரை அணு மின்சாரமே பயன்படுத்தும் நாடுகளும் உண்டு. நாமும் அதை நோக்கி முன்னேறும் போது இன்னமும் விலை குறையும்.

சூரிய சக்தி, காற்றாலை என்பதிலே மோடி அரசு பெரும் காரியங்களை சாதித்திருக்கிறது.

இதைவிட இன்னொன்று இந்திய அரசின் கடன் குறைந்திருக்கிறது என்பது தான். கடன் குறையும் போது சர்வதேச சந்தையிலே கடன் வாங்கும் போது வட்டி குறையும்.

இந்திய வங்கிகள் வீட்டுக்கடன் வட்டி இன்ன பிறவற்றை குறைக்க காரணமே சர்வதேச சந்தையிலே கடன் எளிதிலே கிடைக்கிறது. அதுவும் இந்த திவால் சட்டம் வந்த பின்பு ஏகப்பட்ட நிறுவனங்கள் இந்திய கம்பெனிகளுக்கு கடன் கொடுக்க முன்வருகின்றன. சீனா தனியா இந்திய நிதி என ஒன்றை ஆரம்பித்திருக்கிறது.

சரி இதிலே போன முறை சொன்ன ஈரான் பணப்பிரச்சினைக்கும் பதில் சொல்லிவிடுகீறேன்.

ஈரானின் மீது அமெரிக்கா தடை விதித்த போது இந்தியா ஈரானிடமிருந்து பெட்ரோலியம் வாங்கிக்கொண்டு தான் இருந்தது. அமெரிக்க தடை இருப்பதால் அமெரிக்க டாலரிலே பணம் கொடுக்கமுடியவில்லை. எனவே கடன் வைத்தது. மன்மோகன் சிங் ஆட்சி முடிய ஒரு வருசம் இருக்கும் போது கொஞ்சம் பணம் ரூபாயிலே தருகிறோம் மிச்சம் அமெரிக்க தடை நீங்கின பிறகு தருகிறோம் என சொல்லி கடன் வைத்தார்கள். அமெரிக்காவிடம் போய் நாங்கள் சும்மா தான் வாங்குகிறோம் பணம் கொடுக்கவில்லை என பம்மினார்கள்.

மோடி வந்த பிறகு அமெரிக்க தடையை நீக்கிவிட்டதால் முழு பணமும் அமெரிக்க டாலரிலேயே கேட்டது ஈரான். ஆனால் மோடி அரசு முழுவதையும் ரூபாயிலே தருகிறோம் என சொல்ல ஈரானும் ஒப்புக்கொண்டது.

இன்றைக்கு திரும்பவும் ஈரானின் மீது அமெரிக்கா தடை விதித்திருக்கிறது. இந்தியா தைரியமாக அமெரிக்க தடையெல்லாம் செயல்படுத்த முடியாது. ஐக்கியநாடுகள் அமைப்பு தடையை மட்டுமே செயல்படுத்துவோம் என சொல்லியிருக்கிறது. ஈரானிடம் எண்ணெய் வாங்குவது தொடரும், சாபார் துறைமுகம் புழக்கத்திற்கு வரும் எனவும் சொல்லியிருக்கிறது.

கான்கிரஸ் களவாணிகள் அம்புட்டு தைரியசாலிகளா இருந்தால் இப்படி சொல்லியிருக்கவேண்டியது தானே? வீரமங்கை சுஷ்மா சுவராஜ் சொன்னது போல் வெட்டு ஒன்னு துண்டு 16 என சொல்லவேண்டியதுதானே?

ஈரான் மந்திரி கைகூப்பி நன்றி தெரிவித்துவிட்டு போயிருக்கிறார். அந்த போட்டோ இருக்கிறது பாருங்கள்.

இப்படி விலைவாசி ஏறியதற்கான வழிகளை குறைபாடுகளை சரி செய்துவிட்டதால் தான் பணவீக்கம் ஏறவில்லை அதனால் தான் எதிர்கட்சிகள் பேசாமல் இருக்கின்றன.

பொதுபோக்குவரத்திற்கு இன்னமும் செய்யலாம். ரயில் போக்குவரத்தை அதிகப்படுத்தலாம். ஆனால் அவை நடைமூறைக்கு வரை இன்னும் ஓரிரு வருடங்களாவது ஆகும்.

சரி இதிலே இந்த்துவ நண்பர்கள் செய்யவேண்டியது என்னவென்றால் இந்த விஷயங்களை எல்லாம் பேசலாம். தமிழ்நாட்டு பிஜேபியை விடுங்கள் மத்திய பிஜேபியே இதெல்லாம் பேசுவதில்லை.

எதிர்கட்சிகள் வழக்கமான பிரச்சாரத்திற்கு பலியாகாதீர்கள். இறக்குமதி செய்யப்படும் பொருளின் விலையை கடன் வாங்கி குறைத்தால் நாடு திவால் தான் ஆகும்.

தேர்தல் நேரத்திலே இதெல்லாம் பேசவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கேள்வி இருந்தால் கேளுங்கள். முடிந்தவரை பதில் சொல்கிறேன்.

No comments:

Post a Comment