flipkart discount sale search here.

Sunday, 27 August 2017

உன் இயல்பை வெளிபடுத்த அஞ்சாதே !!

குறை சொல்வான் !! குற்றம் காண்பான் !! என்று உன் இயல்பை வெளிபடுத்த அஞ்சாதே !! ( அஞ்சேல் என்று உடனிருந்து அருளிக்கொண்டு இருப்பவன் தயவாலே !! )

பிறர் என்ன நினைப்பார் !! எப்படி ஏற்றுகொள்வார் !! குற்றம் காண்பாரோ ?? என்று நமக்கான தனித்தன்மையான வெளிபாட்டை பிறருக்கு ஏற்றவாறு வெளிபடுத்தி ?? அஞ்சி ?? நமது தனித்தன்மையே இழந்து வாழ்கிறோம் !!

முதலில் குறை சொல்வார் ?? குற்றம் காண்பர் ?? பற்றிய மெய்யை உணர்வோம் !!

குறை சொல்லிக்கொண்டே !! குற்றம்சாற்றிகொண்டே !! வாழ்பவர்கள் நிறைவாக வாழதெரியாதவர்கள் !! தன் குறையை பிறரிடம் எதிர்பார்பவர்கள் ??

என்னதான் நிறைவு இருந்தாலும் அதில்  குறையே தேடி நிறையை  அனுபவிக்காதவர்கள் !! தன் குற்றம் ஒத்துகொள்ளாது பிறர் குற்றம் கண்டுபிடிப்பதே வாழ்வாக வாழ்ந்து !! தன் வாழ்வை வாழாதவர்கள் !!

கேவலாமான  இவர்களுக்கு அஞ்சி உங்கள் இயல்பை தொலைத்து !! என்றும் அவர்களிடம் நல்ல பேர் வாங்கவே முடியாது !! இது மெய் !!

இந்த மெய்யை பலவருடம் பட்டு அலுந்தியே உணர்வேன் / உணர்ந்தேன் என்று உங்கள் வாழ்வை அவர்களுக்காக தொலைத்து !! தனித்தன்மையும் இழந்து வாழாதே ?? அவர்களை புறம்தள்ளி உங்கள் வாழ்கையை வாழுங்கள் !!

அனுபவிப்பதில் எல்லாம் குற்றமே கண்டு !! அனுபவிப்பதன் பயனை அறியாதவர் பற்றி நமக்கு என்ன !!

எங்கும் எதுவாகவும் நிறைந்தவன் தயவாலே !! ஒரே அனுபவிப்பதில் நில்லாது !! அனுபவிக்க ஆயிரம் அருளியவனோடு அனுபவித்து வாழுங்கள் !!

எதற்கும் அஞ்சேல் என்று அருளிகொண்டே எப்போதும் உடனாகவும் !! உள்ளும் !! இருப்பவன் இருக்கிறான் !! கொண்டாடுங்கள் !! வாழுங்கள் !! அனுபவிக்க வைத்தவனோடு அனுபவித்து  வாழுங்கள் !!

( யாருக்கு என்று அறிந்தவன் உணர்த்தலால் !! ஏதும் அறியாதவன் பதிவு !! அறிவுறுத்தியவன் தயவாலே !! ( கு அ ))

திருச்சிற்றம்பலம்

நற்றுணையாவது நமச்சிவாயவே

No comments:

Post a Comment