flipkart discount sale search here.

Sunday, 31 December 2017

பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம்...

தங்கம் பற்றி விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு.சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும் செய்கூலி இல்லை என்று கூறுகின்றது.உண்மை என்ன?
==============================
ஒரு பவுன் தங்கசெயினுக்கு 1.5கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும்.இது அனைவருக்கும் தெரிந்தது.ஆனால் 8 தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக 6.5கிராம் நகை செய்யப்படுகின்றது.ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம்+1.5செம்பு= இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள்.அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்.இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம்+1.5 செம்பு(தங்கமாக)+சேதாரம்செம்பு 1.5 =9.5 கிராம். ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெரும்6.5கிராம் தங்கத்தை மட்டும் சேர்த்துவிட்டி 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள்.ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம்.யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக்கடை காரர்கள்.ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுன்னிகளாக உறிஞ்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குமிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது? நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை.இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன? பவுனுக்கு 3கிராம் என்று வசுல் செய்யும்போது ஒரு கிராம் செம்பின் விலைஎன்ன? கணக்கு போட்டு பாருங்கள் மக்களே. என்ன தலை சுத்துதா? எனக்குள் ஒரு ஆதங்கம்.ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்.நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசையுள்ள நல்ல உள்ளங்களே உங்கள் ஆதங்கத்தை காட்ட  அதிகப்படி சேர் செய்யவும்.எதுவும் மக்களால் முடியும்.

#138 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 124 நிலையின் திரியாது | Daily One T...

#240 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal | All is well

Thursday, 28 December 2017

#135 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 696 குறிப்பறிந்து காலங் | Daily One...

#237 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

கவனமாக படியுங்கள்... நாமும் மாற நினைப்போம்.

"வாழைப்பழம் விலை எவ்வளவுங்க?"
அந்த பெண் கேட்டாள்.

"ஒரு வாழைப்பழம் ஐந்து ரூபாய்ம்மா"
என்றார் அக்கிழவர்.

"சரி, ஆறு வாழைப்பழங்கள் ₹25/- க்கு கொடுங்க.." என கேட்டாள்.

சில நிமிட கடும் பேரத்திற்க்கு பிறகு...

 "சரிம்மா, நீ கேட்ட விலைக்கே வாங்கிக்க. காலையிலிருந்து நீதான் முதல் போணி...
கடவுள் உன்ன நல்லா வைக்கட்டும்," என்றார் அக்கிழவர்.
தான் கேட்ட விலைக்கு கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்துடன் அப்பெண் வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டாள்.

பிறகு தன்  காரில் தன் தோழியை அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்கு சென்றாள்.
அவர்கள் இருவரும் ஹோட்டலில் அமர்ந்து பேசிக் கொண்டே தாங்கள் விரும்பியது வாங்கி சாப்பிட்டனர்.
சாப்பிட்டது குறைவு, மீதம் விட்டது அதிகம்ا
பில் தொகை ₹1200/-, அவள் ₹1300/- ஐ ஹோட்டல் நிர்வாகியிடம் கொடுத்து மீதி சில்லறையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்," என்றாள்.
ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ100  மிகச் சாதாரணம் விஷயம். ஆனால் வாழைப்பழம் விற்ற கிழவருக்கு ரூ.5 வலி மிகுந்த விஷயம்ر

“இதில் உற்றுநோக்க வேண்டிய விஷயம்”
நாம் உதவி தேவைப்படும் ஏழைகளிடத்தில் ஏதேனும் வாங்கும்போது நம் பலத்தை காட்டுகிறோம். பணக்காரர்களிடமும், தேவைகளே இல்லாதவர்களிடமும் நாம் நம் தாராள குணத்தை காட்டுகிறோம்ا

அடுத்தவன் என்ன தப்பு பண்ணுறான்னு. . .

வால்க்கை💁🏻‍♂ என்பது
அடுத்தவன் என்ன தப்பு பண்ணுறான்னு. . .
பார்ப்பதிலேயே😏 போயிடும்

இப்ப கூட பாருங்க வாழ்க்கைக்கு *ஸ்பெல்லிங்* தப்புன்னு🤪 சொல்ல வருவீங்க. . .

Tuesday, 26 December 2017

#133 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 853 இகலென்னும் எவ்வநோய் | Daily One...

#235 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

அப்ப அவன் சொன்னான் ...

ஒருவன் தன் மனைவியை *விவாகரத்து* செய்த பிறகு தன் வீட்டிற்கு வந்தான்.
.
தன் அறையின் ஒரு மூலையில் ஒரு பெட்டியில் கொஞ்சம் *காலியான மது பாட்டில்கள்* இருப்பதை அவன் பார்த்தான் .
.
அதில் இருந்து ஒரு பாட்டில் எடுத்து கோபத்தில் தூர எறிந்து கொண்டு அவன் கூறினான் :
*என் மனைவி என்னை விட்டு போகக் காரணம் நீ தான்*
.
மீண்டும் அடுத்த பாட்டில் எடுத்து எறிந்து விட்டு அவன் கூறினான் :
*எனக்கு குழந்தைகள் இல்லாததுக்கு காரணம் நீதான்*
.
மறுபடியும் அடுத்த பாட்டில் எடுத்து எறிந்துவிட்டு அவன் சொன்னான் :
*என் வேலை போகக் காரணம் நீ தான்*
.
மீண்டும் அவன் அடுத்த பாட்டில் எறிய எடுத்ததும் அவனுக்கு புரிந்தது, அது லேபிள்கூட கிழிக்காத சரக்கு உள்ள முழுப்பாட்டில் .
.
அப்ப அவன் சொன்னான் :
*நீ இந்த சைடு ஒதுங்கி நில்லு ..* எனக்குத்தெரியும், உனக்கு இந்த சம்பவத்துல ஒரு பங்கும் இல்லனு ....!"'🍾
.
*ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது* 😆😝🤣😂😅

#132 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 109 கொன்றன்ன இன்னா | Daily One Thir...

#234 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

Monday, 25 December 2017

Heart attack first aid...

இருதய அடைப்பு  [ஹாட் அட்டாக்] அறிகுறி ஏற்பட்டால் பயப்பட வேண்டாம் .
உடனடியாக இரண்டு கள் உப்பு எடுத்து நாக்கின் அடியில் அல்லது உதட்டின் உள்ளே வைத்து சிறிதளவு தண்ணீர் குடித்தால் குணமடையும்.

மறைக்கப்பட்ட உண்மைகள். இந்த தகவலை மற்றவருக்கும் பகிருங்கள். உயிர் பிழைக்க உதவும்.

Sunday, 24 December 2017

#131 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 431 பொருட்பொருளார் புன்னலந் | Daily...

#234 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

அவரின் வருகை உங்களை வளப்படுத்தும்...

உலகின் ஒளி இன்று
     பிறப்பெடுத்தார்
அவரின் வருகை உங்களை
     வளப்படுத்தும்
அந்த சந்தோஷத்தை
இந்த ஆண்டு முழுவதும்
உணருவீர்கள்
     கிறிஸ்து பிறப்பு
நல்வாழ்த்துக்கள்
நல்விடியலாகட்டும்...
   
    

புலிக்கு 🍜 பசி எடுத்தது. படித்ததில் ரசித்தது...

-----No joke -------
🌐 காட்டிலிருந்து 🐩 புலி ஒன்று வழி தவறி ஒரு 🏢 கார்ப்பரேட்
கம்பெனியின் 🚽 ரெஸ்ட் ரூம்புக்குள்
நுழைந்துவிட்டது.

😿 பதட்டத்துடன் இருந்த
அந்த புலி டாய்லெட்டின் ஓர் 🌑 இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது.

👉 மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு 🍜 பசி எடுத்தது.

👉 நான்காவது நாள் பசி தாங்க முடியாமல்
🚽 ரெஸ்ட் ரூம்புக்குள் தனியாக வந்த
🚶 ஒருவரை அடித்துச் சாப்பிட்டது.
அவர், அந்த நிறுவனத்தின்
👔 அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர்.

👆 அவர் காணாமல் போனது அலுவலகத்தில்
யாருக்கும் தெரியாது,
யாருமே கண்டு கொள்ளவில்லை.

✌ இரண்டு நாட்கள் கழித்து, இன்னும்
ஒரு 🏃 நபரை அடித்துச் சாப்பிட்டது புலி.

👆 அவர், அந்த நிறுவனத்தின் 👓 ஜெனரல் மேனேஜர்.

👆 அவரையும் யாரும்
தேடவில்லை, கண்டுகொள்ளவும்
இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில்
இல்லையே என்று சந்தோஷப் பட்டவர்கள்தான் அதிகம்! 😄😃😀).

👉 இதனால் குளிர்விட்டுப் போன புலி,
😤 நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது.

👉 அடுத்த நாள் வழக்கம்போல்
ஒரு 👳  நபரை அடித்துக் கொன்றது.
அவர் அந்த அலுவலகத்தின் பியூன்.

அலுவலக ஊழியர்களுக்கு ☕ காபி வாங்குவதற்காக
பிளாஸ்கை கழுவ ரெஸ்ட் ரூம்புக்கு வந்திருக்கிறார்.

🕚 சிறிது நேரத்தில் காபி வாங்கச் சென்ற
பியூனைக் காணவில்லையே என்று மொத்த
அலுவலகமும்
சல்லடை போட்டு தேடியது.

⏰ நெடுநேர
தேடுதலுக்குப் பின் ரெஸ்ட் ரூம்பில்
உயிரிழந்து கிடந்த. பியூனையும்,
அந்த ஆட்கொல்லி புலியையும்
கண்டுபிடிக்கிறார்கள்.

❎ புலி பிடிபடுகிறது ❎

          📝 பாடம் 📝

👆 உங்கள் மீதான
🙌 மதிப்பை நிர்ணயிப்பது உங்கள் 👔 பதவியோ,
💰 வசதி வாய்ப்போ அல்ல.

👆 நீங்கள்
👉 👈 மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக
இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது...

 நான் படித்ததில்
    மனதில் பதிந்தது..

ஒரு பெண் வீட்டிற்கு லேட்டாக வந்தாள்,..

1‬: ஒரு பெண் வீட்டிற்கு லேட்டாக வந்தாள்,..

 'ஏம்மா லேட்',
'தோழி வீட்டிற்கு போயிருந்தேன் பா'...
 அப்பா சந்தேகப்பட்டு அவளுடைய 10 தோழிகளுக்கு போன் செய்து கேட்டார், பத்து தோழிகளும் சொன்ன ஒரே பதில்,

'அவ இங்க வரவே இல்லையே'
என்பதுதான்...

ஒரு பையன் வீட்டிற்கு வராமல் காலையில் வந்தான், ஏம்பா நைட்டு வீட்டுக்கு வரல.,
 நண்பன் வீட்டுலே தங்கிட்டேன் பா,..

அப்பா அவனுடைய 10 நண்பர்களுக்கு போன் போட்டு கேட்டபொழுது, 8 நண்பர்கள் சொன்ன பதில்
"அவன் எங்க கூடதான் தங்கினான்"...

அந்த 2நண்பர்கள் சொன்ன பதில் "இன்னும் அவன் எங்கூட தான் இருக்கான்"
 என்பது தான்....

*BOYS FRIENDSHIP IS THE BEST FRIENDSHIP*

நண்பேன்டா... 💪👥👥
: ☺பொண்டாடி கூட நாம் சாப்பிட்ட மீதி🙃 சாப்பாட்டை
 🙃சாப்பிட தயங்கும் இந்த காலத்தில் . . .
நாம் சாப்பிடும்போது…ஒரே டிபன் பாக்ஸ்ல
கை ✋போடும் நண்பர்கள்
🙄எல்லாம் தெய்வத்தின்மறு அவதாரமே …..
😠இது என் நண்பர்களுக்கு சமர்ப்பணம் 😖 I love you frds

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்...

200 ரூபாய் பணத்திற்கும்
ஒரே ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும்
வறண்ட நாக்கோடு கொளுத்தும் கொடும் வெயிலில் உ யிரையும் இழக்கத் தயாராகிப்போன ஒரு சமூகத்தில்
புரட்சி எங்ஙனம் வெடிக்கும்?
அயோக்கியன் என்று தெரிந்த பின்னும்
அவனுக்கு ஆரத்தி எடுத்து
ஆரத்தித் தட்டில் விழப்போகும் சில்லரை பணத்திற்காக
பல்லிளித்து நிற்கும் ஒரு சமூகத்தில் மாற்றம் எங்ஙனம் சாத்தியம்?
எத்தனை கொடுமைகள் இழைத்தாலும்
அதனையெல்லாம் மறந்துவிட்டு
மீண்டும் மீண்டும் சின்னங்களை மட்டுமே பார்த்து
வாக்களிக்கும் ஒரு சமூகத்தில் மாற்றம் எப்படி நடக்கும்?
படித்தவன் சூதும் பாவமும் செய்கிற சமூகத்தில் முன்னேற்றம் எந்த வழியில் வந்து சேரும்?
என் அப்பா அந்தக் கட்சி... என் தாத்தா அந்தக் கட்சி ...
”நாங்கள் பரம்பரை பரம்பரையாய் அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப்போடுவோம்” என்று அப்பன் வெட்டிய கிணற்றில் உப்புத்தண்ணீர் குடிக்கிற மகன்கள் இருக்கிற தேசத்தில் புதிய மலர்ச்சி எப்படி உருவாகும்?
நமது தாத்தனும், அப்பனும் பாடுபட்டு வளர்த்த கட்சி கடைசியில் தலைவரின் குடும்ப சொத்தாகிப் போனதின் சூது தெரியாமல் வாழ்க கோஷங்களை வாய் கிழிய எழுப்பும் மகன்கள் இருக்கிற நாட்டில் மாற்றம் எப்படி சாத்தியம்?
கட்சி எது? சின்னம் எது? தலைவர் யார்? எது சரியான பாதை? என்ற அடிப்படை அரசியல் அறிவுகூட இல்லாத பொறியியல் பட்டதாரிகள் மலிந்த இளைய தலைமுறையினால் மாற்றம் எப்படி வந்து சேரும்?
தேர்தல் என்றால் ஒரு நாள் விடுமுறை என்று வாக்குச்சாவடிக்கு செல்லாமல் விடுமுறை கொண்டாடுகிற தேசத்தில் புதிய அரசு எப்படி சாத்தியம்?

எமது மக்கள் எப்போதும் தற்காலிக சுகங்களிலே நிறைவடைந்து விடுபவர்களாய் இருக்கிற வரையிலும்
நிம்மதியான வாழ்க்கையை வாழவே போவதில்லை....
பி.எஸ். வீரப்பா சொன்னது ஞாபகம் வருகிறது...
”இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்”

ஷேர் செய்யலாமே... நட்புடன் என்றும் உங்கள்.

Friday, 22 December 2017

சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது...

ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது.

அப்போது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.

அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது.

சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.
சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை.
இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயிறு நிறைந்து விடும்" என்று கூறியது.

இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடிப் போனது.

இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்துக் கொண்டிருந்தது.
சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.

உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது.
அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது!

குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார்.
நீ என் முதுகில் ஏறிக் கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.

*இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

*"தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய்*, *முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு,*
*"இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது.*
*இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே"* *என்று உரக்க கூறியது.*

*இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எறிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது*.

நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம்,
அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள்.

*"கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்"*.

*நன்றி : இறையன்பு , இ.ஆ.ப.*

#129 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 914 பொருட்பொருளார் புன்னலந் | Daily...

#232 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

தயிராக மாற்ற முடியாத ஒரே பால்? பொதுஅறிவு!

பொதுஅறிவு!

👉தயிராக மாற்ற முடியாத ஒரே பால் –
ஒட்டகப்பால்.

👉ஒட்டகத்தை விட, அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் –
கங்காரு எலி.

👉துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

👉பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி.

👉ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

👉சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

👉ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

👉குரங்குக்கு இரண்டு மூளை இருக்கிறது.

👉சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள். (2010 ஆண்டு வரை) பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டு உள்ளனர்.

👉சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால் தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.

👉பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

👉நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 100 கேள்விகள் கேட்கும்.

👉தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.

👉காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம். ஆனால், அதன் ஆயுட்காலம் வெறும் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்-தான் சிங்கம் கர்ஜிக்கும்.

👉மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.

👉“லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.

👉தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.

👉இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம்.

👉காட்டு வாத்து கருப்பு நிறத்தில் தான் முட்டையிடும்.

👉குளிர் காலத்தில் குயில் கூவாது.

👉எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

👉லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே, மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகப்புகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

👉கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும், அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.

👉கிளியும், முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்து விடும்.

👉யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.

👉கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்.
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.

👉1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 3100 பேர் தான்.

👉ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ் சிட்டு.

👉வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

👉ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

👉பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21,400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.

👉ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரைக் குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.

👉தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகு தான் கராத்தே வீரர் ஆனார் புருஸ்லீ.

👉சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.

👉விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

👉சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.

👉யானை, குதிரை நின்று கொண்டே தூங்கும்.

👉நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.

👉டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்

👉புழுக்களுக்கு தூக்கமே கிடையாது.

👉நாம் இறந்து பிறகும் கண்கள் மட்டும் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

Thursday, 21 December 2017

யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்? ராவணனைப் போல் இருக்க வேண்டும்...

கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்...
"உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?" என்று...

மகள், "தம்பி வேண்டும்" என்றாள்.
"யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?" என்று தாய் கேட்க, "ராவணனைப் போல் இருக்க வேண்டும்" என்றாள் மகள்.
திடுக்கிட்ட தாய், "உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராமனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று சொல்லாமல், ராவணனைப் போல் வேண்டும் என்கிறாயே!" என்றாள்.
"அம்மா! நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? உடன் பிறந்த சகோதரி அவமானப்பட்டாள் என்பதற்காக, ராவணன் தன் அரியணை, ராஜ்ஜியம், உயிர் அனைத்தையும் இழந்தானே! தன் எதிரியின் மனைவியைச் சிறை பிடித்த போதிலும், அவளை ஒரு போதும் தீண்டவில்லையே! ஆனால் ராமன், யாரோ ஒருவன் சொன்னான் என்பதற்காக, கர்ப்பவதியாக இருந்த தன் மனைவியை ஒதுக்கி வைத்தானே! அவளை தீக்குளித்துத் தன் புனிதத்தை நிரூபிக்கச் செய்தானே!

உனக்கு வேண்டுமானால் ராமனைப் போல் மகன் பிறக்கட்டும். ஆனால் எனக்கு ராவணன் போன்ற சகோதரன் தான் வேண்டும்" என்றாள் மகள்.
தாயால் பதில் கூற முடியவில்லை. அதிர்ந்து போனாள்.
இக்கதை ஒரு விவாதத்தைத் துவக்கலாம். ஆனால் கதையின் உட்பொருளைக் கூர்ந்து நோக்கினால், ஒரு உண்மை புலப்படும்.இவ்வுலகில் நல்லவர், கெட்டவர் என்பது நாம் நம் தனிப்பட்ட அனுமானங்களால் முடிவு செய்வதே.

கேளிக்கைகளில் திளைப்பவன் என்பதால்,
ஒருவன் கெட்டவன் என்றில்லை.
கோவிலுக்குச் செல்பவன் என்பதால்,
ஒருவன் நல்லவனும் இல்லை.
கோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக்காரனும் சரி - கேட்பதென்னவோ பிச்சை தான்.
நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்.

#முருகா!!! என்ன உன் #திருவிளையாடல்...!!! படித்ததில் ரசித்தது...

#முருகா!!! என்ன உன்
#திருவிளையாடல்...!!!

சுப்பிரமணியசாமியாக வந்து #கேஸ்
போட்டாய்.....

குமரசாமியாக வந்து #விடுதலை
செய்தாய்....

பழனிச்சாமியாக வந்து #ஆட்சி செய்கிறாய் ....

ஆறுமுகசாமியாக வந்து #விசாரணை நடத்துகிறாய்..

வெற்றிவேலாக
வந்து #வீடியோ வெளியிடுகிறாய்..

தமிழ்கடவுளே முருகா...
ஞானபண்டிதா..!!!

#3 | Drawing Puzzle for Kids | குழந்தைகளுக்கு வரை புதிர் விளையாட்டு

#128 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 519 வினைக்கண் வினையுடையான் | Daily ...

#231 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

Wednesday, 20 December 2017

இலவசத்துக்கு அலையும் மக்கள்.அங்கு இல்லவே இல்லை ...

கலர் டீவி இல்லை

மிக்சி இல்லை

கிரைண்டர் இல்லை

தொப்பிகள் இல்லை

குக்கர் இல்லே

6000 இல்லை

60000 வீடுகள் இல்லை

விவசாய கடன் தள்ளுபடி இல்லை

தெருவில் குத்து பாட்டு நடனம் இல்லை

சினிமா நடிகைகள் இல்லை

ஆபாச பிரச்சாரம் இல்லை

வளர்மதிகள் இல்லை

 இடலி கொடுக்க சரஸ்வதிகள் இல்லை

தள்ளுவண்டி தலைவன் இல்லை

கரம் கோர்க்க குஷ்பு இல்லை

கை கொடுக்க நக்மா இல்லை

எதுவுமே இல்லை

மோடி மட்டுமே இருக்க

22 ஆண்டுகளாக ஆட்சி மாற்றம் இல்லை

ஏனென்றால் இலவசத்துக்கு  அலையும் மக்கள்.அங்கு
இல்லவே இல்லை ..

#127 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 152 பொறுத்தல் இறப்பினை | Daily One ...

#230 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

நீங்கள் கண்ணீர் வடிக்கும் போது...

நீங்கள் கண்ணீர் வடிக்கும் போது துடைக்க
100 பேர் வருவார்கள் ஆனால்...............

மூக்கு வடியும் போது துடைக்க
ஒரு பயலும் வரமாட்டானுங்க. 
ஆகையால் இது பனிக்காலம் cold பிடிக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.   😄😄😄🤣🤣🤣😜😜😜

#126 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1056 கரப்பிடும்பை யில்லாரை | Daily ...

#229 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

Tuesday, 19 December 2017

உங்க பேஸ்டில் உப்பு இருக்கா... படித்ததில் ரசித்தது...

Courtesy: Ravi Sundaram

விளம்பரம்:- இது நம்மை எப்படியெல்லாம் ஆட்டு வைக்கிறது !

அரைமணி நேரம் தலையில் எண்ணை ஊறினாலும் உள்ளே இறங்காது என்று பகுத்தறிவு பேசிய நம்மை அரை நிமிடம் கூட தலையில் ஊறாத "ஷாம்பு" தலைக்கு "ப்ரோ விட்டமின் B" தரும் என்று நம்ப வைக்கிறது. சீயக்காய் ஷாம்பு வாக வந்தால்தான் தலையில் வேலை செய்யும் என நம்ப வைத்ததும் விளம்பரம்தான்.

உப்பில் பல் தேய்த்தது தவறு என்று நம்ப வைத்ததும் விளம்பரம்தான். இன்று உங்க பேஸ்டில் உப்பு இருக்கா என்று காஜல் அகர்வால் கேட்பதும் விளம்பரம் தான்.

வாங்கும் போதே 30 சதவிகிதம் வரை நஷ்டத்துடன் நாம் வாங்கும் ஒரே பண்டம் தங்கம்தான். அதை சந்தோஷமாக சிரித்தபடி வாங்க வைத்தது "வளையல் திருவிழா"...விளம்பரம்தான்.

சரி..அதை அதே 30 சதவிகிதம் வரை நஷ்டத்துடன் விற்கும் போதும் சிரித்தபடி நம்மை விற்று "கனவுகளை நினைவாக்க" சொல்வதும் விளம்பரம்தான்.

3 லட்சம் சதுர அடியில் அரண்மனை உங்களுக்காக கட்டப்படுவதாக சினேகா சத்தியம் செய்வது எப்பேர்பட்ட மகிழ்ச்சி.. ! அத்தனை பெரிய கட்டிடத்தில் நீங்கள் காரில் வந்தாலும் உங்களுக்கு "பார்க்கிங்" கூட கிடையாது என்பது உங்களுக்கு புரிவதில்லை. எல்லாம் விளம்பரம்தான்.

1000 ரூபாய் புடவையை 3000 ரூபாய்க்கு வாங்கி வெளியே வரும் போது ஒரு தொன்னை சக்கரைபொங்கல் தருகிறான் பாருங்கள். அவன் நல்லவன். 30 வினாடி விளம்பரத்தில் நடிக்க கமலுக்கு 3 கோடி தரும் அவர் அதை யார் தலையில் கட்டுவார் என்று கேட்க நம்மை மறக்க அடிப்பதும் விளம்பரம்தான்.

விற்கப்படும் வீடுகளுக்கு மனைகளுக்கு சாக்கடை வசதிகள் இருக்கிறதா? பாதுகாக்கப் பட்ட குடிநீர் வசதி இருக்கிறதா என்று யோசிக்க விடாமல் "சிங்களா டிசைட் டபுளா ஒகே" பண்ண ராஜா சொல்றாரு பாருங்க ...அங்க நிக்குது விளம்பரம்.

அமிர்தா எல்லோருக்கும் வெளிநாட்டில் வேலை கொடுத்ததா?
ராதிகாவை கேட்பீர்களா?

பூஸ்ட் / ஹார்லிக்ஸ் இதுவரை உலகில் யாரையாவது வளர்த்து இருக்கிறது என்று கேட்டிருக்கீர்களா? ஆனால் இந்தியாவில் நடக்குதப்பா! கபில்தேவ், சச்சின், விராட் கோலி இப்படி எல்லோரும் சொல்றாங்களே!

நேற்றுவரை எண்ணை கெடுதல் என்றவன் இன்று பூரி சாப்பிட்டால் "கார்பொரேட் மீட்டிங்" கில் பிரமாதமான தீர்வு சொல்வான் என்பதை சொல்வதும் விளம்பரம்தான்.

ஒரு எண்ணையில் வடை சுட்டால் உங்களுக்கு ரத்த கொதிப்பு, சக்கரை நோய், சத்து குறைவு நரம்பு தளர்ச்சி நியாபக மறதி இப்படி எல்லா பிரச்சனையும் போகும் என்பது தெரியுமா? (உள்மூலம் வெளி மூலம் உள்பட .. :) ) வைட்டமின் A முதல் Z வரை இருக்குப்பா !! விளம்பரம்தான்.

கொஞ்சம் கூட சுயசிந்தனை அற்றவர்களா நம்மை இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மழுங்க அடிப்பது உங்களுக்கு தெரியவில்லை. அந்த மட்டில் அவர்களுக்கு வெற்றியே.

இத்தனை சொல்றேனே...இதை நீங்கள் share பண்ணி நாலு பேர் அறிய செய்வீர்களா என்ன?
மாட்டீர்கள்.
காரணம் இது விளம்பரம் இல்லை.
நிதர்சனம்.
நன்றி.

மனைவியிடம் நிரூபியுங்கள்....

*தாயிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.

*தந்தையிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.

*மனைவியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை என் காதல் உனக்கானது மட்டும் என்று.

*சகோதரனிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.

*சகோதரியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று

*மகனிடம் நிரூபியுங்கள்* -கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று

*மகளிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று

வேறு எவருக்கு நீங்கள்  எதை நிரூபித்தாலும் *அது கடலில் கொட்டிய பெருங்காயமே*.

அன்புள்ள சனீசுவரனார்க்கு...

அன்புள்ள சனீசுவரனார்க்கு...

எப்படி இருக்கிறீர்கள் ? நலமாகத்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இன்று நீங்கள் வீடு மாற்றிக்கொண்டு செல்வதாகக் கேள்விப்பட்டோம்.

புது வீட்டில் பால் காய்ச்சிக் குடியேறுகிறீர்கள்போல.

உங்களுடைய புதுமனை புகுவிழாவுக்கு வரும்படி உங்கள் அடியார்களான சோதிடர்கள் எல்லாரையும் அழைத்திருக்கிறார்கள்.

உங்கள் அடிக்கு அஞ்சுகிறவர்கள் நீங்கள் இருக்குமிடங்களுக்குச் சென்று பயபக்தியோடு வணங்கி நிற்கின்றார்கள்.

புதுவீட்டில் குடியேறினாலும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களையும் ஒருவழி பண்ணிவிடுவீர்கள் என்று கூறுகிறார்கள்.

நீங்கள் இருக்குமிடத்திற்கு  நான்காம் வீட்டுக்காரரையும் எட்டாம் வீட்டுக்காரரையும் போட்டுத் தாக்கிவிடுவீர்கள் என்று அச்சுறுத்துகிறார்கள்.

இருக்கும் வீட்டையுமேகூட பெயர்த்துப் போட்டுவிடுவீர்கள் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள்.

அப்படியெல்லாம் செய்யாதீர்கள்.

ஏதோ வந்தது வந்துவிட்டீர்கள்.

வந்த இடத்திற்கு வஞ்சகம் செய்யாமல் வாழ வைக்கப் பாருங்கள்.

அக்கம் பக்கத்தார் உங்களைக் கண்டாலே ஓடி ஒளிகின்றார்களாம்.

அப்படியா அவர்களை அச்சுறுத்தி வைப்பது ?
பிள்ளைகுட்டிகள் எல்லாம் பயப்படுகின்றன.

உங்களுக்கே தெரியும்... இன்றைய நிலவரப்படி ஒரு மனிதன் பிழைத்துக் கிடப்பதே பெரும்பாடு.

பிழைப்புக்கொரு வேலை பார்த்து, பிடித்தம்போகக் கிடைப்பதை வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுத்து, விலைவாசியால் கொண்டாயத்தில் ஏறி நிற்கும் பொருள்களை வாங்கி ஆக்கித் தின்று, பொடுசுகளுக்குப் பள்ளிக் கட்டணம் கட்டி, பெண்டாட்டி முகம் கோணாதபடி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து வாழ்க்கை என்ற பெயரில் ஏதோ அரையும்குறையுமாய் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறோம்.

இதில் நீங்களும் வந்து நட்ட நடு வீட்டில் அமர்ந்து கும்மியடித்துவிடாதீர். வலி தாங்க முடியாது.

காணாமல் போனவர்களைக்கூடக் கண்டுபிடித்துத் தராத அரசுபோல் ஆளும் ஓர் அரசின்கீழ் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சிக்கித் தவிக்கிறோம்.

உங்களிடம் அகப்பட்டுக் கொண்டமைக்காக நீங்களும் இரண்டு மொத்து மொத்தினால் நாங்கள் என்ன கதியாவோம் என்று எண்ணிப் பாரும்.

எங்களைப் பார்த்தால் பாவமாக இல்லையா ?

எங்களைப் பார்த்தால் ”இரண்டு வீக்கு வீக்குவோம்” என்றா உமக்குத் தோன்றுகிறது ?

ஏற்கெனவே ஏழெட்டுச் சனிகள் ஏறியிறங்கியதுபோலத்தானே இருக்கிறோம் ? வடிவேலைப்போல “ஔ” என்று அழுதபடிதானே தலைக்குத் துண்டைப் போட்டு உட்கார்ந்திருக்கிறோம் ? 

இதற்கும் மேலுமா எங்களை போட்டுத் துவட்டுவதற்குத் துணிவீர்கள் ?

போதும் போதும்... கொஞ்சம் கருணை காட்டுங்கள்.

வந்த இடத்தில் வந்தது தெரியாமல் இருந்துவிட்டு, அக்கம் பக்கத்தாரையும் அனுசரித்து, ஏதோ உம்மால் முடிந்த நன்மைகளைச் செய்துவிட்டுப் போவீராக.

வழக்கம்போல் ஆட்டிப் படைக்க நினைக்காமல் அமைதி காப்பீராக.

இங்ஙனம்
சனிப்பெயர்ச்சியால் பாதிப்படையும் இராசிக்காரர்கள்.
(ஒப்பம்)    *கவிஞர் மகுடேசுவரன்*

ஆப்பிள் நிறுவ்னத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் ... படித்ததில் பிடித்தது...

உலகமே வியந்த, பொறாமைப்பட்ட, உச்சமான நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவ்னத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல்நலம் குன்றி 56 வ்யதில் உலகைப் பிரிவதற்கு முன்பாக விட்டுச் சென்ற செய்தியை அவரின் ஆங்கிலத்திலிருந்து தமிழ்ப் படுத்திச் சொல்கிறேன்..
"வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது. நோயுற்று படுக்கையில் இருக்கும் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது.
உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாரிக்க எத்தனைப் பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது.
எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை தொலைந்துவிட்டால்? திரும்ப கிடைக்கவே கிடைக்காது.வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக்கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம்.
நாம் பக்குவமடையும்போதுதான் சில விஷயங்கள் புரியும். முப்பது ரூபாய் கெடிகாரமும் சரி, மூன்று லட்சம் ரூபாய் கெடிகாரமும் சரி.. ஒரே நேரம்தான் காட்டும். செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும் 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான்.
ஆகவே..உங்களைச் சுற்றிலும் இருக்கும் அனவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி! "

#படித்ததில்_ரசித்தது

CURRENT RELIGIOUS STATISTICS IN INDIA...

*CURRENT RELIGIOUS STATISTICS IN INDIA*


*Over all India*
Hindu 74.33%
Muslim 14.20&
Christian 5.84%
Sikh 1,86%
Ethmoreligionist 1.35%
Buddhist 0.82%
Non religious 0.48%
Other 0.47%


*Andhra Pradesh*
Hindu 89.0%
Muslim 9.2%
Christian 1.6%(3.0%)
Other 0.2%

*Arunachal Pradesh*
Hindu 34.6%
Ethnic religions 30.7%
Buddhist 13.0%
Christian 18.7%(25%)
Muslim 1.9%

*Assam*
Hindu 65‰
Muslim 30.9%
Christian 3.7% (7.0%)
Buddhist 0.2%
Other 0.2%

*Bihar*
Hindu 83.2%
Muslim 16.5%
Christian 0.1%(0.3%)

*Chattisgarh*
Hindu 94.7%
Muslim 2.0%
Christian 1.9%(².5%)
Other 1.5%

*Delhi*
Hindu 82%
Muslim 11.7%
Sikh 4.0%
Jain 1.1%
Christian 0.9%(1.86)

*Goa*
Hindu 65.8%
Christian 26.7%(41.5%) catholic
Muslim 6.8%
Other 0.2%

*Gujarat*
Hindu 89.1%
Muslim 9.1%
Jain 1,0%
Christian 0.6%(1.2%)

*Haryana*
Hindu 88.2%
Sikh 5.5 %
Muslim 5.8%
Jain 0.3%
Christian 0.1%(0.3%)

*Himachal Pradesh*
Hindu 95.4%
Muslim 2,0%
Buddhist 1.3%
Sikh 1.2%
Christian 0.1%(0.2%)

*Jammu Kashmir*
Muslim 67.0%
Hindu 29.6%
Sikh 2.0%
Buddhist 1.1%
Christian 0.2%(0.3%)

*Jharkhand*
Hindu 68.6%
Muslim 13.8%
Tribal religion 13.0%
Christian 4.1%(6.0%)

*Karnataka*
Hindu 83.9%
Muslim 12.2%
Christian 1,9%(4.0%)
Jain 0.8%
Buddhist 0.7%

*Kerala*
Hindu 56.2%
Muslim 24.7%
Christian 19.0%(35.5%)

*Madhya Pradesh*
Hindu 91.1%
Muslim 6.4%
Jain 0.9%
Christian 0.3%(2.2%)
Other 1.2%

*Maharashtra*
Hindu 80.4%
Muslim 10.6%
Buddhist 6.0%
Jain 1.3%
Christian 1.1%(2%)
Other 0.4%

*Manipur*
Hindu 46%
Christian 34%(41.8%)
Muslim 8.8%
Other 11.2%

*Mehalaya*
Christian 70.3%(76%)
Hindu 13.3%
Muslim 4.3%
Other 11.8%

*Mizoram*
Christian 87%(89.6%)
Buddhist 7.9%
Hindu 3.6%
Muslim 1.1%

*Nagaland*
Christian 90%(93.1%)
Hindu 7.7%
Muslim 1.8%

*Orissa*
Hindu 94.4%
Christian 2.4%(2.0%)
Muslim 2.1%
Other 1.1%

*Punjab*
Sikh 59.9%
Hindu 36.9%
Christian 1.2%(2.2%)
Muslim 1.6%
Othr 0.4%

*Rajasthan*
Hindu 88.8%
Muslim 8.5%
Sikh 1.4%
Jain 1.2%
Christian 0.1%(0.4%)

*Sikkim*
Hindu 60.9%
Buddhist 28.1%
Christian 6.7%(7.5%)
Muslim 1.4%
Other 2.6%

*Tamilnadu*
Hindu 88.1%
Christian 6.1%(19.0%)
Muslim 5.6%
Other 0.2%

*Tripura*
Hindu 85.6%
Muslim 8.0%
Buddhist 3.1%
Christian 3.2%(5.5%)

*Uttarpradesh*
Hindu 80.6%
Muslim 18,5%
Sikh 0.4%
Buddhist 0.2%
Christian 0.1%(0.3%)
Jain 0.1%

*Uttarkand*
Hindu 85%
Muslim 11.9%
Sikh 2,5%
Christian 0.3%(0.6%)
Buddhist 0.1%
Jain 0.1%

*West Bengal*
Hindu 72.5%
Muslim 25.2%
Christian 0.6%(1.2%)
Buddhist 0.3%
Other 1.3%my
 SO PLEASE WAKE UP GUY'S GOSPEL SHOULD BE REACH A LOT Of PPL*PLEASE SEND ALL GROUPS IMMEDIATELY

How to link star health insurance aadhaar and pancard.

Monday, 18 December 2017

LIC பாலிசியுடன் ஆதார் இணைப்பது எப்படி? | How to link lic policy with aad...

டிடிவி தினகரனுக்கு" குக்கர் சின்னத்திற்கு பதிலாக..... #பிரிட்ஜ் #வாஷிங்மிஷின் அல்லது தங்க நக்லெஸ்....வைரமோதிரம் ....

கணம் ஐயா தேர்தல் ஆணையர் அவர்களே....!

போதுமான அளவு குக்கரும்...... கிருத்துமஸ் & பொங்கல் செலவுக்கு பணமும் கிடைத்துவிட்டபடியால் இந்த இடைத்தேர்தலை ரத்துசெய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இரண்டு மாதங்கள் கழித்து தேர்தல் அறிவித்து "டிடிவி தினகரனுக்கு" குக்கர் சின்னத்திற்கு பதிலாக.....

#பிரிட்ஜ்
#வாஷிங்மிஷின்
அல்லது

தங்க நக்லெஸ்....வைரமோதிரம் .... போன்ற ஏதாவது ஒரு சின்னத்தை ஒதுக்கி தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

ஆவலுடன் ஆர்.கே.நகர் #பொதுமக்கள்.

#125 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 14 உறாஅதோ ஊரறிந்த | Dhinam Oru Thir...

#228 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

தண்ணில கண்டம்ன்னு சொல்றது தமிழனுக்கு தான்...

தண்ணில கண்டம்ன்னு சொல்றது தமிழனுக்கு தான் சரியா வரும்...

விவசாயி தண்ணியில்லாம சாகுறான்...

மீனவன் தண்ணிக்குள்ள போய் சாகுறான்...

மிச்சம் இருக்குறவன் தண்ணியடிச்சே சாகுறான்...

ஒரு காசு வழங்கப்பட்டவர் மன்னா! இது அனியாயம்...படித்ததை பகிர்கின்றேன்...

இறைவனின் கணக்கு
**********************
படித்ததை பகிர்கின்றேன்.

சிறு கதை ஒன்று

ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போகர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். இரவு நேரம். பெருத்த மழை வேறு. அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர்.

முன்னவர் இருவரில்  ஒருவர் சொன்னார். என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர் ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் ,இதனை நாம் எப்படி
மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார். மூன்றாம் நபர் இதற்கு
நான் ஒரு வழி சொல்ல்கிறேன்.( தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!)

நீங்கள் உங்கள் ரொட்டிகளை ,ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்ப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்.

ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்.

பொழுது விடிந்தது.மழையும் நின்றது. மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்று சொல்லி எட்டு தங்க நாணய்ங்களை கொடுத்து நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

மூன்று ரொட்டிகளை கொடுதவர் அந்த காசுகளை சமமாகப்பிரித்து ஆளுக்கு

நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார். மற்றொருவர் இதற்கு சம்மதிக்கவில்லை. மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்.

ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.(5:3)

மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை. என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும் நான் பங்கிட சம்மதித்தேன்.

நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது.அதனால் என் செய்கையே பாராட்ட தக்கது! என்றாலும் பரவாயில்லை.சமமாகவே பங்கிடுவோம் என்றார்.

சுமுகமான முடிவு எட்டாத்தால் விஷயம் அரசனின் சபைக்கு சென்றது. அரசனுக்கு யார் சொல்வது சரி என்று புரிபடவில்லை. நாளை தீர்ப்பு சொல்லதாய் அறிவித்து அரண்மனைக்கு சென்றான். இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது. கனவில் கடவுள் காட்சி அளித்து சொன்ன தீர்பும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்த் நாள் சபை கூடியது. மன்னன் இருவரையும் அழைத்தான்.

மூன்று ரொட்டிகளை கொடுத்தவனுக்கு ஒரு காசும் ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.

ஒரு காசு வழங்கப்பட்டவர்
மன்னா! இது அனியாயம். அவரே எனக்கு மூன்று கொடுத்தார்.

அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது.ஆக நீ  தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. அதற்கு இதுவே அதிகம் என்றார்.

ஆம் கடவுளின் கணக்கு இவ்வளவு துல்லியமாக இருக்கும்.

இழந்ததை எல்லாம் தருவது அல்ல அவன் கணக்கு. எது உனக்கு புண்ணியம் சேர்க்குமோ அதுதான் உனக்கு என்பது அவன் கணக்கு

ஏனென்றால் அவனது கணக்கு ஏட்டு கணக்கு அல்ல. தரும கணக்கு.

ELECTION1

ஏங்க எனக்கு வீட்டு வேலை பார்க்க மாச மாசம் சம்பளம் வேணும்...

Wife:- :ஏங்க எனக்கு வீட்டு வேலை பார்க்க மாச மாசம் சம்பளம் வேணும்..

Me்:::எவ்வளவு வேணும்?..

Wife:- 10000 ரூவா வேணும்..

Me:- - இப்படி வந்து உக்காரு..இந்த கால்குலேட்டரை புடி..

Wife:- சொல்லுங்க..

Me:- - ஊர்ல இருக்க உன் சொந்தக்காரனுக்கு எல்லாம் நீயே போன் பண்ணி பேசிறது இல்லாம உங்க அம்மா அப்பா போன் நெம்பர் முதல் கொண்டு உங்க வீட்டு DTH வரைக்கும் ரீசார்ஜ் பண்றீல்ல..அந்த வகைல ஒரு 2000 ரூவா போடு..

Wife:- போட்டேங்க..

Me:- - உன் தம்பி வண்டிக்கு பெட்ரோல் போடவும்,உன் தங்கச்சி கை செலவுக்கும் எனக்கே தெரியாம என் பாக்கெட்ல ஆட்டையை போட்டு தர்றீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு..

Wife:- ம்..போட்டேங்க..

me: - உடம்பு சரியில்லாம இருக்க உன் சொந்தக்காரன்,வர
ுஷக்கணக்கா இழுத்துட்டு கெடக்குற உன் தாத்தானுக்கு எல்லாம் ஆப்பிள்,ஆரஞ்சுனு கலர் கலரா அடிக்கடி வாங்கிட்டு போயி கொடுக்குறீல்ல..அந்த வகைல ஒரு 2000 ரூவா போடு..

Wife:- ம்ம்..போட்டேங்க..

Me:- - உன் மொகர கட்டைக்கு பேஷியல் பண்றேன்,தலைக்கு கலரிங் அடிக்கிறேன்னு மாசம் ரெண்டு தடவை பியூட்டி பார்லர் போறீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு..

Wife:- ம்ம்ம்..போட்டேங்க..

Me: - நீ பார்க்கு,பீச்சு,சினிமானு சுத்தனும்கிறதுக்காக நம்ம பையனை உசுப்பி விட்டு வீக்கெண்ட் ஆனா என்னை கூட்டிட்டு போயி அங்க தண்டம் வெக்குறீல்ல..அந்த வகைல ஒரு 4000 ரூவா போடு..

Wife:- ம்ம்ம்ம்..போட்டேங்க..

me:- - எங்க அம்மா கூட உனக்கு சண்டை வர்றப்ப எல்லாம் உப்பையும்,காரத்தையும் அதிகமா போட்டு அவங்களை அப்பப்போ ஹாஸ்பிட்டல் அனுப்புறீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு..

wife :- ம்ம்ம்ம்ம்..போட்டேங்க..

Me: - பத்து பைசா பிராயஜனம் இல்லாத பிரச்சனைக்கு எல்லாம் தாம்தூம்னு குதிச்சு என்னை டென்ஷன் பண்ணி டாஸ்மாக் பக்கம் தலை தெறிக்க ஓட விடுறீல்ல.. அந்த வகைல ஒரு 2500 ரூவா போடு..

Wife:- ம்ம்ம்ம்ம்ம்..போட்டேங்க..

Me: - மொத்தம் எவ்வளவு ஆச்சு?..

Wife:- 15000 ரூவா..

Me :- நீ என்ன சம்பளம் எதிர்பார்த்த?..

#wife:- 10000 ரூவா..

#me:- - இப்போ அந்த மீதி 5000 ரூவாய கரெக்ட்டா 1 ந்தேதிலருந்து 5 ந்தேதிக்குள்ள உங்கொப்பன் வீட்டுலருந்து வாங்கிட்டு வந்து என்கிட்ட கொடுக்குற....

Sunday, 17 December 2017

என்னையும் மாற்றிக்கொள்கிறேன்...நீங்களும் மாறுங்கள் அடுத்த ஆண்டில் இருந்ததாவது...

💢தர்மம் செய்ய 10 ரூபாய் பெரியது
~~~~~~~~~~~~~~~~
💢ஷாப்பிங் போக 1000 ரூபாய் ரொம்ப சிறியது
~~~~~~~~~~~~~~~~~~
💢ஒரு பக்கம் கீதையை படிக்க அலுப்பு

💢100 பக்க வார இதழ் படிக்க ஆர்வம்
~~~~~~~~~~~~~~~~~~
💢1 மணி நேரம் கடவுளை வணங்க சலிப்பு

💢3 மணி நேரம் சினிமா விருப்பம்
~~~~~~~~~~~~~~~~~~~
💢பத்திரிக்கை செய்திகளில் எந்த சந்தேகமும் இல்லை

💢வேத வார்த்தைகளில் ஆயிரம் சந்தேகம்
~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~
💢பொழுது போக்க முதல் வரிசை

💢கோவிலுக்கு வந்தால் கடைசி வரிசை, அதுவும் கதவின் வெளியே
~~~~~~~~~~~~~~~~~~~
💢அனாவசியம்மா பேச பல மணி நேரம் சலிப்பேயில்லை

💢இருபது நிமிட தியானம் கசக்கிறது
~~~~~~~~~~~~~~~~~~~
💢மண்டியிட்டு 2 நிமிடம் இறைவனை வணங்க அலுப்பு

💢செல் போணை தோய்வில்லாமல் தேய்ப்பு!

படித்த உண்மை❗❗❗❗

*என்னையும் மாற்றிக்கொள்கிறேன்*
*நீங்களும் மாறுங்கள் அடுத்த ஆண்டில் இருந்ததாவது*


⚡✨🎇🎆 *இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2018*🎆🎇✨⚡

உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட...

1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது...
வாருங்கள் கொஞ்சம் ரிவைன்ட் செய்து பார்ப்போம்...
.
.
.
.
காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.
.
வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.
.
ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்...
.
ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை...
.
பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்...
.
விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது...
.
மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்...
.
உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்...
.
மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்...
.
வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்...
.
சனிக்கிழமைகளில் சக்திமான் பார்க்க காய்ச்சலென பொய் சொல்லி பள்ளிகளுக்கு விடுமுறை எடுத்தோம்...
.
அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்...
.
ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்...
.
அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது...
.
ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்...
.
ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது...
.
ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது...
.
உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்...
.
தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்... அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்...
.
ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது... அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்...
.
பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்...
.
10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்...
.
யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்...
.
நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்...
.
பணக்கார வீட்டு கன்னிப் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்...
.
10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது...
.
போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்...
.
வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது...
.
வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்...
.
ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்...
.
10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது...
.
10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது...
.
பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்...
.
கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது...
.
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது...
.
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது...
.
பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்...
.
தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்... பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை...
.
12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது...
.
இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்...
.
.
.
.
.
.
.
உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை... பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை... அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்...

சுறாவிடமிருந்து தப்பிப்பதற்காக...

குட்டி கதை🌷
பொதுவாக ஜப்பானியர்கள் மீன் உணவை மிக விரும்பிச் சாப்பிடுபவர்கள் !
அது ஜப்பான் நாட்டின் ஒரு தீவு.
அந்தத் தீவு மக்களும் அப்படியே மீன் உணவை விரும்பிச் சாப்பிட, படகெடுத்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கடற்பகுதிக்குச் செல்வார்கள். அங்கிருந்து திரும்பி வர இரண்டு நாட்களாகிவிடும்.
அக்குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் மீன்கள்தான் மிக ருசியானதாக இருக்கும்.
ஆனால், மீன் பிடித்ததும் கொண்டு வர இரண்டு நாட்களாகி விடுவதால் அந்த மீனின் சுவை குறைந்துவிடும்.
மீனவர்கள் கையோடு, ஐஸ்கட்டிகளைக் கொண்டு சென்று அதில் பதப்படுத்திக் கொண்டு வந்தார்கள். ஆனாலும், மக்களுக்கு திருப்தி இல்லை. ஃப்ரெஷ் மீனுக்கும் ஐஸ் கட்டிகளில் வைக்கப்பட்ட மீனுக்கும் சுவை வேறுபடுவதை உணர்ந்தனர் !
இப்பொழுது மீனவர்கள், ஒரு சிறு தண்ணீர் தொட்டி ஒன்றைச் செய்து, அதில் மீன்களைப் பிடித்துப் போட்டு கொண்டு வந்தனர் !
ஆயினும், அத்தனை பெரிய கடற்பரப்பில் நீந்திக்கொண்டிருந்த மீன்கள், சிறிய தண்ணீர்த் தொட்டியில் இரண்டு நாட்களாக சோம்பிக் கிடப்பதினால் மீனின் சுவை குன்றிப் போவதாக மீண்டும் குறை !
யோசித்த மீனவர்கள் புதிதாக ஒரு யோசனை செய்தார்கள்.
குட்டிச் சுறா மீன் ஒன்றைப் பிடித்து அந்தத் தொட்டிக்குள் விட்டார்கள்.
இந்தச் சுறாவிடமிருந்து தப்பிப்பதற்காக... அந்த மீன்கள் எல்லாம் அந்தத் தொட்டிக்குள் வேக வேகமாக நீந்திக் கொண்டே இருந்தன ஓய்வின்றி.
இப்பொழுது இரண்டு நாட்கள் கழித்து வந்த அந்த மீன்கள் முன்னெப்போதையும் விட மிகச் சுவையானதாக இருந்தனவாம்.
வாழ்க்கையும் அப்படித்தான். வாழ்க்கை சுவைக்க தேமேயென்று கிடக்கக்கூடாது. சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். பிரச்சனைகள் என்கிற சுறா இருந்தால்தான் வாழ்க்கை என்ற மீன்கள் சுவையானதாக இருக்கும். பிரச்சனைகள் இல்லாவிட்டால் நாம் ஓட மாட்டோம் ! சோம்பிக்கிடப்போம் !
சுறுசுறுப்பாக ஓடி வாழ்க்கையை சுவையானதாக மாற்றுவோம்!

தன் காலில் இருந்த ஷூவை வந்தவர் மேல் வீசி எறிந்தார்...படித்ததில் பிடித்தது...

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

மன்னரின் அரசவை...ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதி கேட்டு வருகிறார்.

" நிதி தானே ..இந்தா என தன் காலில் இருந்த ஷூவை வந்தவர் மேல் வீசி எறிந்தார்.

எதிர்பாராத நிகழ்வால் நிலைகுலைந்தாலும்..ஒருபக்கம்
அவமானம்..மனதை கஷ்டப்படுத்தியது.

இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்துக்காகத் தானே அவமானப்படுகிறோம்..என
தேற்றிக்கொன்டு..மன்னருக்கு நன்றி சொல்லி கிளம்பினார்.

மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை .

என்னடா நாம் அவமானப்படுத்த ஷூவை வீசினோம்   நன்றி சொல்லி செல்கிறானே....என.

ஒருவரைஎப்படிஅவமானப்படுத்த முயன்றாலும்..எதிரிலிருப்பவர் தன் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் என்ன செய்ய முடியும்

 மேலும் தன்மேல் நம்பிககையில்லாதவர்கள் தான்அவமானமாய் உணர்ந்து எமோஷன் ஆவார்கள்.

வெளியில் ஒரே சத்தம் ..அமைச்சரை அழைத்த மன்னர் என்னஅங்கே..என்றார்

நீங்க எறிந்த ஷூவை ஏலம் போடுகிரான் மன்னா..கல்லூரி கட்ட மன்னர் தந்த ஷூ..என்றே கூவுகிரான்.என்றார்

எவ்வளவு போகிறது...

படு கேவலமாய் பத்து நாணயத்துக்கு மேல் ஏலம் போகவில்லை என்றார்..

அய்யய்யோ..என்ன விலையானாலும் ஏலம் எடு...

அமைச்சரும் ஐம்பது லட்சம் கொடுத்து எடுத்தார்..

நிதி கேட்டு வந்தவர் மீன்டும் மன்னரிடம் வந்தார்.

மன்னா நீங்கள் போட்ட ஷூ பாதிகட்டடம் கட்ட கிடைத்து விட்டது

அடுத்த ஷூவை எப்போது போடுவீர்கள் என்றார் பாருங்கள்

மன்னர் வந்தவரின் சாமார்த்தியத்தையும்..சகிப்புத்தன்மையையும் எண்ணி...தாமே கல்லூரியை கட்டித்தந்தார்.

அது தான் தற்போதைய காசி பனரஸ் பல்கலைக்கழகம்.

அவமானத்தை யார் ஒருவர் அவமானமென உணர்கிறார்களோ
அவர்கள் ஒருநாளும் எதையும்
ஜெயிக்க முடியாது.

எப்போதும் நோக்கம் நிறைவேறுவது தான் முக்யம்.

மான அவமானங்களல்ல...

நாம் செய்வது நல்லதாய் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு அவமானமும் வெற்றிக்கான படிக்கட்டுக்கள்
என எண்ணுவோம்.

எந்தவொரு வளர்ச்சியையும் நீண்ட நாட்கள் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
.
அவமானம் என்பது ஒருவித மூலதனம்.

.
.
.
.
.
.
.
.
அந்த காலணி வீசப்பட்டது திரு. மதன் மோகன் மாளவியா அவர்கள் மீது. அவர் தான் பனாரஸ் பல்கலைக் கழகத்தை நிறுவியவர்

*படித்ததில் பிடித்தது*

Saturday, 16 December 2017

#123 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 847 அருமறை சோரும் | Dhinam Oru Thir...

#226 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

சாப்ட்வேர்னா என்னா, ஹாடுவேர்னா என்னா? சிரிப்பு கதம்பம்...

😂 சிரிப்பு கதம்பம்.😂😂

😁😁😁😁

அவர்: ஏன்டா உங்க அப்பன் பேர பிரிஜ்ஜூக்குள்ள எழுதி வச்ச??

இவன்: என் பெயர் கெட்ராம பாத்துக்கன்னு அவர்தான் சொன்னாரு..
😁😁😁😁😁

பேராசிரியர்: சாப்ட்வேர்னா என்னா, ஹாடுவேர்னா என்னா?

இவன்: செடியில உள்ளது சாப்ட்வேரு.. மரத்துல உள்ளது ஹாடுவேரு.
😂😂😂😂

அவர்: ஜிம்முக்கு போற பசங்கள ஈசியா கண்டுபிடிச்சிடலாம்.

இவர்: எப்படி.?

அவர்: ரெண்டு கைலயும் சாம்பார் வாளிய தூக்கிட்டு போறமாதிரி நடப்பானுங்க.
😁😁😁😁

அவர்: ஆண்கள்ல 65% பேர் மனைவி சொல்றத கேப்பாங்க.

இவர்: அப்ப மீதி பேர்?

அவர்: இன்னும் கல்யாணம் ஆகல.
😂😂😂😂

சோமு: நாட்ல அநியாயம் நடக்குது..

பாபு:எப்புடி சொல்றீங்க.?

சோமு: வெயில் காலத்துல மோர் பந்தல் வைக்கிற மாதிரி, மழை காலத்துல டீபந்தல் வைக்கமாட்றாங்களே.!
😁😁😁😁

அவர்: டாக்டருக்கு நீட் தேர்வு வேணுமோ வேண்டாமோ ஆனா ஒரு தேர்வு அவசியம்.

இவர்: என்ன அது?

அவர்: நீட்டா எழுத தேர்வு. என்னா எழுதுறார்னு ஒன்னுமே புரியமாட்டேங்குது.
😂😂😂😂

அவர்: அபராதத்திற்கும், வரிக்கும் வித்தியாசம் தெரியுமா?

இவர்: தெரியாது சொல்லுங்க.

அவர்: தவறான செயலுக்கு தண்டம் கட்டுனா அபராதம்..
சரியான செயலுக்கு தண்டம் கட்டுனாஅது வரி.!
😂😂😂

அவன்: இதோ போறானே அவனுக்கு பொது அறிவு சுத்தமா இல்ல.

இவன்: எப்டி சொல்றீங்க?

அவன்: பழமொழிக்கு இங்லீஸ்ல என்னன்னு கேட்டான். புரூட் லாங்வேஜ்னு சொன்னா ஒத்துக்க மாட்றான்.
😂😂😂😂

டாக்டர்: இந்த மருந்த காலைல வெறும் வயத்துல சாப்டுங்க..

வந்தவர்: ஒரு பனியன்கூட போட்ருக்ககூடாதா டாக்டர்.?
😂😂😂😂

கனவன்: என்ன சாம்பார்ல 2 காயின் கிடக்கு.?

மனைவி: நீங்கதானே சமையல்ல சேஞ்ச் வேனும்னு சொன்னீங்க.?!
😁😁😁😁

அவர்: அச்சனை உங்க பேருக்கா.?

இவர்: சாமி பேருக்கே பண்னுங்க.. எனக்கு தினம் வீட்டலயே அர்ச்சனை நடக்குது.
😁😁😁😁😁

அவர்: உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க.?

இவர்: கூகுள்னு.. எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவா..
😂😂😂😂😁

தீபாவளி எபக்ட்...

மனைவி: எனக்கு இதே டிசைன்ல வேற கலர்ல காட்டுங்க !!

கணவன்: அடியேய் ! துணி எல்லாம் எடுத்து முடிச்சு நாம இப்ப காய்கறி கடைல இருக்கறோம்!!
😂😂😂😂

தாத்தா : அந்த காலத்துல உன் வயசுல நான் கடைக்கு இரண்டு ரூபாய் எடுத்துட்டு போனா  வீட்டுக்கு வரும்போது பால், பழம், ரொட்டி, மிட்டாய், சோப்பு, பவுடர் எல்லாம் கொண்டு வருவேன்.. தெரியுமா ?

பேரன் : இப்ப அப்படியெல்லாம் முடியாது தாத்தா.. எல்லா கடையிலயும் நிறைய C C TV காமரா வச்சுருக்காங்க...!
😁😁😁😁😁

அவர்: 🕺“என் பொண்ணு பின்னாடியே சுத்துறியே.. தம்மு, தண்ணி பழக்கம் இருக்கா…?”🚬

இவன்: “வீணா சந்தேகப்படாதீங்க சார்..! 🤗
உங்க பொண்ணு ரொம்ப நல்ல டைப்..”
😁😁😁😁😁

Thursday, 14 December 2017

#2 | Drawing Puzzles for Kids | குழந்தைகளுக்கு வரை புதிர் விளையாட்டு

#224 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

#121 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1214 கனவினான் உண்டாகும் | Dhinam Or...

இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்....

🦀🦀இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்🦀

🦀🦀இழந்தது எவை என இறைவன் கேட்டான்🦀

🦀🦀பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்🦀

🦀பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்🦀

🦀🦀கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்🦀

🦀🦀கோலம் மாறி அழகையும் இழந்தேன்🦀

🦀🦀வயதாக ஆக உடல் நலம் இழந்தேன்🦀

🦀🦀எதை என்று சொல்வேன் நான்🦀

🦀🦀இறைவன் கேட்கையில்🦀

🦀🦀எதையெல்லாம் இழந்தேனோ 🦀

🦀🦀அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்🦀

🦀🦀அழகாகச் சிரித்தான் இறைவன்🦀

🦀🦀கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்🦀

🦀🦀உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்🦀

🦀"உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்"🦀

🦀🦀"நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்"🦀

🦀🦀சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல🦀

🦀🦀தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்🦀

🦀திகைத்தேன் 🦀

🦀🦀இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்🦀

🦀🦀வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்🦀

🦀🦀இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்🦀

🦀🦀இறைவன் மறைந்தான்..
 படித்ததில் பிடித்தது🦀
👏👏👏👏👏👏👏

தொடர்ந்து 6 நாட்களாக ஆணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்...

🌼*பெண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள்,  இறுதியாக ஆணை படைக்க ஆரம்பித்தார்*.

🌼*ஒரு நாள்,  இரு நாள் அல்ல*.

🌼*தொடர்ந்து 6 நாட்களாக ஆணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்*.

🌼*இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது*.

🌼*அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை வரங்களாக கொடுக்க வேண்டும்*.

🌼*இந்த ஆண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும்*.

🌼*அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும்*.

🌼*சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவன் மருந்தாக இருக்க வேண்டும்*.

🌼 குடும்பத்தில் உள்ள அனைவருக்குக்காக அவனே உழைக்க வேண்டும்.

🌼*இது அத்தனையும் செய்ய அவனுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்*.

🌼*“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும?” என்று ஆச்சரியப்பட்டதுதேவதை*.

🌼*ஆர்வத்துடன் லேசாக ஆணை தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவனை ரொம்ப கடினமாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை*.

🌼*அதற்கு கடவுள், “இவன் உடலளவில் கடினமானவன் *.

🌼*ஆனால் மனதளவில் ரொம்ப ரொம்ப மென்மையானவன் *.

🌼*அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவான் *.

🌼*அது மட்டுமல்ல, அவனால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும்*.

🌼*கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவனுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும்*.

🌼*சிரிப்பு வந்தாலும் அதை  கோபம் மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு*.

🌼*தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வான் *.

🌼*மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவான் ,” என்றார்*.

🌼*“ஓ………இந்தளவுக்கு ஆணால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது*.

🌼*“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல*.

🌼*அவற்றுக்கு தீர்வையும் அவனால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்*.

🌼*அந்த தேவதை ஆணின் கண்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவன் கண் ஏன் வரச்சியாக இருக்கு இவன் கண்களில் கண்ணீர் வராதா? என்றது *.

🌼*“ஒரு ஆணின்  கண்ணீர்.மிகவும் மென்மையானது அது எப்பவும்மே வராது அது வந்தால் அவனை மட்டும் அல்ல அவனை சுற்றி உள்ள அனைவரையும் பாதிக்கும் என்பதால், அவனுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே சிரித்தே கடந்து செல்வான் ,” என்று பதிலளித்தார் கடவுள்*.

🌼*ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான்*.

🌼*இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை*.

🌼*“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவனுக்கு எப்போதுமே தெரியாது,”…… கடவுள் சிம்பிளாக பதிலளித்தார்*.

🌼நன்றி 🌼

🌼படித்தால் மட்டுமல்ல
பகிரும்போதும் சந்தோசமே.🌼

அனைத்து ஆண்களுக்கும் சமர்ப்பணம்

Wednesday, 13 December 2017

#120 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 114 தக்கார் தகவிலர் | Dhinam Oru Th...

#223 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

பொண்டாட்டின்னா எமனுக்கே பயம்🤣😂...

எமதா்ம ராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான
ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில
காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு
வந்து விட்டது.

அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண்
பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த
பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக
எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது.

மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால்
மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.

மகன் கொஞ்சம் வளா்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம தனக்குள்ள
பயத்தையும் விளக்கினார்.

 மகனே..நீ சிறந்த வைத்தியனாக வேண்டும்.  மரணத்
தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம்.

எப்படித் தொியுமா? ஒருவா் மரணம் அடைவதாக
இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும்
கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால்
அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம்
செய்து அவா் இறந்து போனால் உன் புகழ் குறையும்.
எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன்
பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ்
மேலும் மேலும் பரவும் என்றார் எமன்.

மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை
அணைத்து கண்ணீா் விட்டு எமதா்மன் நழுவி விட்டார்.

மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான்.
அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும்
பிழைத்துக் கொண்டான். ஒருவா் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சா்யப்பட்டார்கள். யாருக்காவது
வைத்தியம் செய்யப் போகும் போது எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு
வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன்
கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே
புகழ்ந்தது.

கொஞ்ச நாளில் அந்த ஊா் அரசரின் மகள் நோய்
வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு
அதிர்ச்சி.

 எமன் நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால்
பிழைக்க மாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால்
அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம்
கிடைக்கும். அவன் ஆசைப்பட்டபடியே அந்த
அரசிளங்குமரியை மணந்து ராஜ்ஜியத்தை
ஆண்டான்.
.
.
.
எப்படி?
.
.
 அரசிளங்குமரியின் அறையில் எமனைப் பார்த்ததும் பளிச்சென்று யோசனை பிறந்தது. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா..அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே..இங்க இருக்கார்..என்று அலறினான்.

 அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக்
காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடிவிட்டான்.

பொண்டாட்டின்னா எமனுக்கே பயம்🤣😂. .

Tuesday, 12 December 2017

யாராவது இந்த விஷயத்தை கவனிச்சீங்களா?

யாராவது இந்த விஷயத்தை கவனிச்சீங்களா?

இந்த வருடம் கிறிஸ்துமஸ் திங்கட்கிழமை வருது. ஆங்கிலப்புத்தாண்டும் திங்கட்கிழமை வருது. மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை. திங்கட்கிழமை அலுவலகம் செல்ல தேவையில்லை. இந்த வருடம் வெள்ளிக்கிழமை இரவு குடிக்க ஆரம்பித்தால் திங்கட்கிழமை வரை குடித்துக்கொண்டே இருக்கலாம். அதாவது முந்தைய வருடத்தின் குடியை அடுத்தவருடத்திலும் தொடரலாம். இதுபோன்ற கிரகசேர்க்கை நடப்பது அபூர்வம். இது போன்ற அரிய நிகழ்வு நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழும்.  இதை உடனே அனைவருக்கும் சேர் செய்யவும்..

இப்ப உங்கிட்ட ஒன்னுமே இல்லை. ஆனா எங்கிட்ட...

*மரியாதையும் அன்பும் - சிறுகதை*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

ராஜா இரவில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தார். இரண்டு மெய்க்காப்பாளர்களும் கூடவே சென்றனர்.

திடீரென்று கடுமையான மழையும், காற்றும் அடித்தன. வானம் இருண்டு போனது . ராஜா காவலாளிகளை விட்டு வழி தவறிப் போய்விட்டார்.

எங்கும் காரிருள்,சற்று தொலைவில் ஒரு சிறு குடிசை தெரிந்தது . அதிலிருந்து லேசான வெளிச்சமும் வந்து கொண்டிருந்தது. ராஜா வேகமாக அதனை நோக்கி நடந்தார்.

அதற்குள்ளே கந்தல் ஆடை அணிந்த ஒரு மனிதனைத் தவிர வேறு யாருமில்லை. ராஜா உள்ளே நுழைந்தும் அவன் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தான்.

மாறு வேடத்தில் இருந்த போதிலும், அவன் மரியாதை தராமல் அமர்ந்திருந்ததில் ராஜாவுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது .
"ஏம்ப்பா! உன் வீட்டுக்கு வந்திருக்கேன் , நீ மரியாதையே இல்லாம, ஒரு வணக்கம் கூட சொல்லாம உக்காந்திருக்கியே?" என்றார்.

பதிலுக்கு அவன், "நீதான் என் வீட்டுக்குள்ள அடைக்கலமா நுழைஞ்சிருக்க. உனக்கு எதுக்கு நான் வணக்கம் சொல்லணும்?" என்றான்.

ராஜாவால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் எப்போதும் நகர்வலம் போகையில் ஒரு பொற்காசு மூட்டையைஉடன் வைத்திருப்பார்.

அதை அவனிடம் பிரித்துக் காட்டி விட்டு "பார்த்தாயா? நான் எவ்வளவு பெரியவன் என்பதை?
இப்ப எனக்கு வணக்கம் சொல்வாயா ?" என்றார்.

அவனும் பதிலுக்கு, "ஒரு ஏழை பக்கத்தில இருந்தும் ஒரு மூட்டை பொற்காசை நீயே வச்சிருக்கியே, உனக்கு எப்படி வணக்கம்
சொல்வது?" என்றான்.

ராஜா கோபமாய் ஒரு காசை அதிலிருந்து எடுத்து அவனிடம் வீசி, "இப்ப வணக்கம் சொல்வாயா?" என்றார்..

காசைத் தொடாமல் அவன் சொன்னான்,
"ஒரு மூட்டை காசை வச்சுக்கிட்டு அற்பமா ஒத்தக் காசை வீசுறியே, உனக்கா வணக்கம் சொல்வேன்?"

அரசர் இன்னும் உக்கிரமானார். பாதி மூட்டையை அவனருகே பிரித்துக் கொட்டி விட்டுக் கேட்டார், "எங்கிட்ட இருந்ததுல சரி பாதியைக் கொடுத்துட்டேன். இப்பவாவது வணக்கம் சொல்வியா?"

மெல்லிய புன்னகையுடன் அவன் சொன்னான், "உங்கிட்ட இருக்குற அளவுக்கு இப்ப எங்கிட்டேயும் இருக்கே! இப்ப நீயும் நானும் சமமாயிட்டோமே. சரி சமமா இருக்கிற உன்னை எதுக்கு நான் மதிக்கணும்? "

ராஜாவுக்கு ஆத்திரம் கண்ணை மறைத்தது. மிச்சமிருந்த மூட்டையும் அவனிடத்தில் வீசி விட்டார், "இருந்த எல்லாத்தையுமே கொடுத்துட்டேன். இப்பவாவது வணக்கம் சொல்" என்றார்..

அவன் சிரித்துக் கொண்டே சொன்னான் ,
"இப்ப உங்கிட்ட ஒன்னுமே இல்லை. ஆனா எங்கிட்ட ஒரு மூட்டை தங்கம் இருக்கு. இப்ப நீதான் எனக்கு வணக்கம் சொல்லணும்?" என்றான்.

ராஜா வாயடைத்துப் போனார்..

எத்தனைதான் அள்ளிக் கொடுத்தாலும் மனித இதயம் திருப்திப் படுவதில்லை. *நிரந்தரமான மரியாதை என்பது "உன் பணத்தைக் கொண்டு" வாங்கும் பொருளில்லை. உண்மையான அன்பை முதலில் நீ பிறருக்குக் கொடு. அதுவே பலமடங்காக உனக்குத் திரும்பக் கிடைக்கும்..!!!*

படித்ததில் உணர்ந்தது.

Monday, 11 December 2017

#118 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1098 அசையியற்கு உண்டாண்டோர் Dhinam...

#221 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

நயன்தாராவ எதுக்கு கொல்லனும்னு கேட்டாராம்...

😱😱
*ரெண்டு அரசு அதிகாரிங்க எதோ பேசிட்ருந்தாங்களாம்..*
.
.

*அப்போ அங்க வந்த ஒரு பத்திரிக்கையாளர் எதப்பத்தி சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்ருக்கிங்கனு கேட்டாராம்..?*

*அதுக்கு அவங்க*
*ஆயிரம்* *விவசாயிகளையும் நயன்தாராவையும் கொல்ல போறதா அரசாங்கம் முடிவெடுத்துருக்குனு சொன்னாங்களாம்..*

*அதகேட்ட பத்திரிக்கையாளர் நயன்தாராவ எதுக்கு கொல்லனும்னு கேட்டாராம்..*

*அப்போ அந்த ரெண்டு அதிகாரிகள்ல ஒருத்தர் இன்னொருத்தர்கிட்ட சொன்னாராம்..*

*நான் அப்பவே சொன்னேன்ல அந்த ஆயிரம் விவசாயிங்க சாகறதபத்தி இவனுங்க யாரும் கண்டுக்க மாட்டாங்கனு.*

*சிரிக்க மட்டுமல்ல இக்கதை சிந்திக்கவும்*...
🤔🤔🤔

தோற்றால் புலம்பாதே . . . போராடு...

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,

தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......
*
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
*
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.
*
ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.
*
ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
*
எது அந்த தவளையை கொன்றது...?
*
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
*
ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......
*
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.
*
ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*
மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.
*
உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...

 👉🏿விழுந்தால் அழாதே . . .
எழுந்திரு 👈🏿

           🗣
👉🏿தோற்றால் புலம்பாதே . . .
போராடு 👈🏿

             🗣
👉🏿 கிண்டலடித்தால் கலங்காதே . . .
மன்னித்துவிடு 👈🏿

              🗣
👉🏿தள்ளினால் தளராதே . . .
துள்ளியெழு 👈🏿

               🗣
👉🏿நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .
நிதானமாய் யோசி👈🏿

                🗣
👉🏿ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .
எதிர்த்து நில் 👈🏿

           🗣
👉🏿நோய் வந்தால் நொந்துபோகாதே . .
நம்பிக்கை வை 👈🏿

              🗣
 👉🏿கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .
கலங்காமலிரு 👈🏿

              🗣
👉🏿  உதாசீனப்படுத்தினால் உளறாதே . .
உயர்ந்து காட்டு 👈🏿

           🗣
👉🏿 கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு 👈🏿

           🗣
👉🏿மொத்தத்தில் நீ பலமாவாய் 👈🏿

              🗣
👉🏿சித்தத்தில் நீ பக்குவமாவாய் 👈🏿


💐💐💐💐💐💐💐💐
💐உன்னால் முடியும் .💐

💐உயர முடியும் . . .
  💐

             
💐உதவ முடியும் . . .
  💐

💐💐💐💐💐💐💐💐
⚜உனக்கு உதவ நீ தான் உண்டு ⚜

❇❇❇❇❇❇❇
👉🏿உன்னை உயர்த்த நீ தான் 👈🏿. . . ⚜நம்பு⚜ . .

✳✳✳✳✳✳✳✳
👉🏿 உன்னை மாற்ற நீ தான் 👈🏿. . .👉🏿 முடிவெடு👈🏿 . . .

                👤
👉🏿நீயே பாறை👈🏿👉🏿.நீயே உளி . 👈🏿. .

             👤
👉🏿நீயே சிற்பி . . .நீயே செதுக்கு 👈🏿. . .

                 👤
👉🏿நீயே விதை . . .நீயே விதைப்பாய் 👈🏿. . .
                     👤
👉🏿நீயே வளர்வாய் 👈🏿. 👉🏿நீயே அனுபவிப்பாய் 👈🏿. . .

                  👤
👉🏿நீயே நதி👈🏿 . . .👉🏿 நீயே ஓடு👈🏿 . . .

                   👤
👉🏿நீயே வழி👈🏿 . . .👉🏿 நீயே பயணி👈🏿 . . .

                  👤
👉🏿நீயே பலம் 👈🏿. . .  👉🏿நீயே சக்தி 👈🏿. . .

                    👤
🌸நீயே ஜெயிப்பாய் 🌸

💯எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே🌸
    . 🙏🙏🙏

நெஞ்சில் உரமுமின்றி நேர்மை திறமுமின்றி வஞ்சனை செய்வாரடி...

பாரதி பிறந்த நாள்:

நெஞ்சில் உரமுமின்றி
நேர்மை திறமுமின்றி
வஞ்சனை செய்வாரடி - கிளியே
வாய் சொல்லில் வீரரடி!

பாதகம் செய்வோரைகண்டால்
பயம்  கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா!

-முண்டாசு கவிஞன்,
முறுக்கு மீசை  பாரதியின்...
பிறந்த நாள்  டிசம்பர் 11.

Sunday, 10 December 2017

ஆரம்பிதது முதல் வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி...

1×9=7
2×9=18
3×9=27
4×9=36
5×9=45
6×9=54
7×9=63
8×9=72
9×9=81
10×9=90

மேலே உள்ள சமன்பாடு ஆசிரியை ஒருவரால் கரும்பலகையில் எழுதப்பட்டது. இந்த சமன்பாடு எழுத ஆரம்பிதது முதல் வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தொடர்ந்து கொண்டிருந்தது. காரணம் முதலாவது சமன்பாடு பிழையாக எழுதப்பட்டிருந்தது. மாணவர்களைச் சிரிக்கத் தூண்டியது.

சமன்பாட்டை எழுதி முடித்து மாணவர்களை நோக்கிய ஆசிரியை சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பேசத் துவங்கினார்..

நான் முதல் சமன்பாட்டை பிழையாக எழுதியிருக்கின்றேன். இவ்வாறு எழுதியதற்கு ஒரு காரணமுண்டு. இதன் மூலம் உங்களுக்கொரு படிப்பினையைக் கற்றுத் தருவதே அதன் நோக்கம்.

இந்த உலகம் உங்களை எவ்வாறு மதிப்பிடுகின்றது என்பதை நீங்கள் இதன் மூலம் புரிந்து கொள்வீர்கள்.

நான் இங்கு 9 முறைகள் மிகச் சரியாக  எழுதியிருக்கின்றேன். அதற்காக நீங்கள் யாரும் என்னைப் பாராட்ட முன்வரவில்லை. ஆனால் நான் பிழையாக எழுதிய ஒரே ஒரு விஷயத்தைக் காரணங்காட்டி அனைவரும் சிரித்து கேலி செய்து விட்டீர்கள்.


நீங்கள் இலட்சம் தடவைகள் விஷயங்களைச் சரியாக செய்த போதிலும் இந்த உலகம் உங்களை ஒரு போதும் பாராட்டப் போவதில்லை.ஆனால் நீங்கள் செய்த ஒரு பிழையைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு ஒருமித்து நின்று மிகக் கீழ்த்தரமாக விமர்சிக்கும்..

இவைகளைக்கண்டு ஒரு போதும் தளர்ந்து விடாதீர்கள். உங்களைப் பார்த்து சிரித்தவர்கள்,  உங்களை விமர்சித்தவர்கள் முன்னால் உயர்ந்து நிற்கும் முயற்சியில் உறுதியாக நில்லுங்கள்.

💠💠💠💠💠💠💠💠

#117 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 215 ஊருணி நீர்நிறைந் | Dhinam Oru T...

#220 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

Friday, 8 December 2017

#115 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 968 மருந்தோமற்று ஊன்ஓம்பும் | Dhina...

#218 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

சனிக்கிழமை காலை வேளையில் மட்டுமே அதைப் பிரதஷணம் செய்வதும் தொட்டு வணங்குவதும் செய்யலாம்...

1 சுமங்கலிப் பெண்கள் ஸ்நானம் செய்யும் போது வெறும் தலையில் குளிக்கக் கூடாது. சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டுதான் தலை முழுக வேண்டும்.

2 துளசி மாடத்திலிருந்து பூஜைக்கு வேண்டிய துளசியை ஒடிக்கக்கூடாது. துளசி மாடம் பூஜைக்குரியது. பூஜைத் தேவைக்கு வேண்டிய துளசியை தனியாக வேறு துளசிச் செடிகளில் இருந்து பறிக்க வேண்டும்.

3 சுபகாரியங்களுக்கெல்லாம் முதல் தேவையான பொருள் மஞ்சள், மங்கல காரியங்களுக்கு சீட்டை எழுதும்போது முதலில் எழுதப்படுவது மஞ்சள்தான்.

4 மஞ்சள் பூசிக்குளிப்பது சுமங்கலிகள் மரபு. மஞ்சள் பூசிக் குளித்துவர துர்நாற்றம், தூக்கமின்மை என்பன அற்றுப் போகும். முக வசீகரமுண்டாகும்.

5 இல்லங்களில் காலை, மாலை மஞ்சள் நீர் தெளித்து வர லஷ்மி கடாட்சமுண்டாகும்.

* கணபதி, சூரியன், அம்பிகை, மஹாவிஷ்ணு, பரமசிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஒரேயிடத்தில் வைத்துப் பூஜிப்பதே பஞ்சாயன பூஜையாகும். துர்நாற்றம், தூக்கமின்மை என்பன அற்றுப் போகும். முக வசீகரமுண்டாகும்.

6 சூரியனால் உடலாரோக்கியம் பெற்று அம்பிகை ஆகிய தாயின் ஆசியால் கிடைக்கும் சிறந்த வாழ்வை அடைந்து விஷ்ணுவினால் இம்மையின்பம் பெற்று சிவபிரானால் காமக் குரோதாதி புறப்பகைகளை வென்று அஞ்ஞானம் நீக்கி மோஷத்தை அடைவதற்கு வாழ்வில் வரும் தடைகளை கணபதி அருளால் நீக்கி நற்கதி அடைவதே பஞ்சாயதன பூஜைச் சிறப்பாகும்.

7  வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்வது நல்லதல்ல. இதனால் லஷ்மிதேவி சஞ்சலமான நிலையைப் பெற்று வீட்டிலுள்ளவர்களின் ஐஸ்வர்யங்களை ஏற்றத்தாழ்வுக்கு இடமாக்குவாள்.

8 தீபத்தின் ஜூவாலை கிழக்குமுகமாக இருந்தால் சர்வபீஷ்டங்களும் ஐஸ்வரியமும் உண்டாகும். வடக்கு முகமாக எரிந்தால் நோய் நீங்கிச் சுகமுண்டாகும்.

9 மேல் நோக்கி நெடிதாயெரியும் ஜூவாலை ஆரோக்கியத்திற்கும் சரீர சுக போகங்களுக்கும் அறிகுறியாகும்.

10 சக்தி, திறமை, வீர்யம் இவற்றைச் சகல ஜீவராசிகளுக்கும் வழங்கி என்றும் மாறா இளமையுடன் திகழ்வது சூரியன். சூரிய வழிபாடு கர்மவினைகளையும், நாகதோஷம் முதலியவற்றையும் பிற சோதிடரீதியான தோஷங்களையும் நீக்கும்.

11  குழந்தைகள் பிறந்தபின் ஜாதகர்மம், நாமகரணம் என்பவற்றின் போது உபநிஷ்க்ரமணம் என்ற கிரியையில் குழந்தையை சூரிய வெளிச்சம் படும்படி முதன்முதல் வீட்குக்கு வெளியே கொண்டுவருதல் உண்டு. உடல்முழுதும் நல்லெண்ணய் பூசி வெற்றுடம்புடன் இளவெயிலில் கிடத்துதலும் குறிப்பிடத்தக்கது.

12 இல்லங்களில் மாலைநேரத்தில் விளக்கேற்றும்போது பூஜையறை ஜன்னலை மூடிவிட வேண்டும். வீட்டின் முன்புற வாசலை திறந்திருத்தலும், பின்பக்க வாசலை பூட்டியிருத்தலும் வேண்டும்.

13  வழிபாடு முடிந்த பின் விளக்குச் சுடர் மீது சில அட்சதை மணிகளைத்தூவி அல்லது மலரொன்றை வைத்து மெதுவாக அணைத்து விடலாம். வீசி அணைத்தலும் ஊடுபற்றி எரிய விடுதலும் ஆகாது.

14 அரசமரம் வழிபாட்டுக்கு உகந்ததெனினும் சனிக்கிழமை காலை வேளையில் மட்டுமே அதைப் பிரதஷணம் செய்வதும் தொட்டு வணங்குவதும் செய்யலாம். அந்நாளில் மட்டுமே லஷ்மி நாராயணரின் பிரசன்னம் அங்கு இருக்கும். மற்ற நாட்களில் தொடக் கூடாது.

15 சமுத்திர ஸ்நானம் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே செய்யலாம்.

மனைவி அழும் வீடே நரகம்...

இல்லற தர்மம். .

கட்டிய மனைவியை
கடைசி வரை
கண் கலங்காமல்
காப்பவன்
தவம் செய்ய தேவை இல்லை

இருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது

அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை கர்மா வே வழி நடத்தும்

 96 தத்துவங்கள்
முடிவு பெறுவது
இருபத்தி ஒரு வயதிலே

அதன் பிறகே
அவனது
சொந்த
ஆன்ம கர்மா
செயலில் இறங்கும்.

சிவமாக இருந்தால் மட்டும்
சிரசு ஏற முடியாது
சக்தியோடு
துணை சேர வேண்டும்.
சிரசு ஏற பல வழி

தியானம் மூலம்
பக்தி மூலம்
ஞான மூலம்
யோக மூலம்
தீட்சை மூலம்
சிவசக்தி மூலம்
இன்னும்
எத்தனையோ மூலம்
வழி உள்ளது
சிரசு ஏற.

ஆனால்
சிறந்த மூலம்
இல்லற தர்மம்.

சிவம் பிறக்கையிலே
அவனுக்கு முன்பே
சக்தி பிறந்து விடுகிறது

சக்தி மாறி
சிவம் சேர்ந்தாலே
பிறவியே சிக்கலே

மனம் பொறுத்தம்
பூமியிலே ஜெயிப்பது இல்லை

ஆன்ம பொறுத்தமே
பிறவியை ஜெயிக்கும்.

அந்த சக்தி யோடு
சிவம் சேரும் போதே
சர்வமும் சாந்தி ஆகும்

சிவ சக்தி இடையே
ஊடலும் கூடலூம்
உற்சாகம் தானே......!!!

ஆனால்
சக்தியின் கண்ணீருக்கு
சிவம் காரணமானால்
அதை விட
கொடிய கர்மா
உலகில் இல்லை

ஒருவன்
வாழ்வை ஜெயிக்க
ஆயிரம் வழி
தர்மத்தில் உள்ளது உண்மையே

ஆனால்
உறவுகளை கொண்டே
உலகை வெல்வதும்
பிறவி பிணி அறுக்க வும்
ஒரு வழி உள்ளது
உலகம் அறியாதது.

சொந்தம் என்பது
பழைய பாக்கி என
அறிந்தவணுக்கு
சொந்தம் சுமை இல்லை.

நட்பு என்பது
பழைய பகை என்பதை
பண்போடு அறிந்தவணுக்கு
பதற்றம் இல்லை

எதிரி என்பவன்
தனது கர்மாவின்
தார்மீக கணக்கே என
தன்மை யோடு உணர்ந்தவனுக்கு
எதிரி
எதிரி இல்லையே

உனது எதிரியும் நீயே

உனது செயலே
கர்மா ஆகி
அந்த கர்மாவே
நீ எதிரி என நினைக்கும்
ஒரு உயிருள்ள சடலத்தை
உனக்கு எதிராக
பயன்படுத்துகிறது என நீ
உணரும் போது

உன் எதிரி முகத்தில
உனது கர்மா
உனது கண்களுக்கு தெரிய வந்தால்

எதிரி
உனக்கு எதிரே இருந்தாலும்
கலக்கம் தேவை படுவதில்லை.

உன்னை
உடனிருந்தே கொல்லும்
உறவும்
உன்னோடு பிறக்கும்
உனது
பழைய கணக்காலே

பழைய கணக்கு புரிந்தால்
பந்த பாசம்
சகோதரத்துவம் மீது
பற்று அற்ற பற்று வைத்து
பிறவி கடமை வெல்லலாம்

கர்மாவின் கணக்கு புரிந்தால்
உனது பக்கத்தில்
சரி பாதி அமரும்
மனைவி
யார் என்றும் புரியும்

தாய் தந்தையை
அன்போடு
பூஜிப்பவன்
தந்தை வழி
தாய் வழி
ஏழு ஜென்ம கர்மாவில்
இருந்து தப்பிக்கலாம்

உறவுகளுக்கு
அவர்கள் தரும் இன்னல்கள்
பொறுத்து
உபகாரமாக உதவி வந்தால்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
உனது
ஏழு ஜென்ம
சமூதாய கர்மாவில்
இருந்து தப்பிக்கலாம்.

கோயில் போனாலோ
மகா குலத்தில்
குளித்தாலோ
ஒன்னும் மாறாது

சிறு இன்பம் மட்டும்
சிறிது காலம் கிடைக்கும்
அவ்வளவே

ஆனால்
ஒரே ஒரு உறவை
நீ பூஜித்தால்
பிறவி பிணி
மொத்தமாக தீரும்
அது
மனைவியே.

மனைவியை
மகிழ்ச்சியாக வைப்பது
உலகிலேயே
சிரமம் மட்டும் அல்ல
அது தான்
உலகிலேயே
சிறந்த
தவம்

தவம் என்பது
சாமாண்யன்களுக்கு சிரமமே

கட்டிய மனைவியை யும்
உன் மூலம்
அவள் பெற்ற பிள்ளைகளையும்
உளமாற நேசித்து
உன்னதமாக
உனது வாழ்வை
ஆனந்தமாக நீ
அர்ப்பணித்தால்
அதுவே
உலகின் சிறந்த தர்மம்
சிறந்த தவம்

தாய் தந்தை யை
வணங்கினால்
ராமேஸ்வரம் போக தேவை இல்லை
பித்ரு தோஷம் நீங்க.

உறவுகளை மதித்தால்
கிரக தோஷம் நீங்க
திருவண்ணாமலை
இடைக்காடரை
தேட தேவை இல்லை
நவ கிரகமும்
சுற்ற தேவை இல்லை

மனைவியை
பெற்ற பிள்ளையை நேசித்தால்
அவர்களை
ஆனந்தமாக வைத்தால்
கர்ம விமோஜனம் தேட
அகத்தீசனை தேடி
பாபநாசம்
போக தேவை இல்லை

இதற்கு தான்
இல்லற வாழ்க்கை அமைத்தான்
நமது
முப்பாட்டன்
ஆதி யோக வம்சம்.

மனைவி அழும் வீடே
நரகம்.

மனைவி சிரிக்கும் வீடே
பிரபஞ்ச சொர்க்கம்.

சக்தி உணர்ந்தாலே மட்டுமே
சிவம் ஜோதி ஆக ஜொலிக்கும்......!!!

திருச்சிற்றம்பலம்.

பணக்காரராக இருக்கிறார்... ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...

சிகரெட் 🚬🚬இல்லாமல் ஒருவரால்
வாழமுடியும்...
ஆனாலும், சிகரெட்🚬🚬 உற்பத்தியாளர்
பணக்காரராக இருக்கிறார்.

மதுவில்லாமல்🍺🍸🍷 ஒருவரால்
வாழமுடியும்...
ஆனாலும், உற்பத்தியாளர் பணக்காரராக
இருக்கிறார்.

மொபைல் 📱📞📲இல்லாமலும் ஒருவர்
வாழமுடியும்...
ஆனாலும், மொபைல்📲📞📱 உற்பத்தியாளர்
பணக்காரராக இருக்கிறார்.

உணவில்லாமல் எவரும்
வாழமுடியாது!...
ஆனாலும்,

🌽🍌🍍🍆உணவு🌾🍎🍏🍊🍋🍈
 உற்பத்தியாளர்களான🐏🐄🐐🐓🐖🐂
விவசாயிகள்
ஏழைகளாகவே இருக்கின்றனர்...!

ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...                                       
🍏🍎🍐🍊🍊🍋🍌🍉🍇🍓🍈🍒🍑🍍🍅🍆🌶
     👏👏விவசாயிகளை மதிப்போம்👏👋🏻👏

Thursday, 7 December 2017

தோற்று போனால் வெற்றி கிடைக்கும்...

எழுதியது யாருனு தெரியலை...

படித்ததில் பிடித்தது ........

 தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)

அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)

மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.

ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.

ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.

மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my dear sin) என்று தட்டச்சியிருந்தது.

ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள்.

அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.

அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன்.

அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலைபேசினார்.

“ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக.

அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பா… அது சரிதானேன்னு தோணுச்சு… அதான் “ என்றேன்.

அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டுகொண்டேன்.

அப்படியே போனை வைத்துவிட்டார் அப்பா.

அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.

மறுநாள் காலை.. அலுவலக்ததில் இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார்.

இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.

செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார்.
உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.

அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா… நீதான என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா.

முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு ஏதேதோ பேசினேன்.

யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என்போர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது.

ஆனால், அப்பாக்கள் வரம்.

 *தாயிடம் நிரூபியுங்கள்*-* கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.

*தந்தையிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.

*மனைவியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை என் காதல் உனக்கானது மட்டும் என்று.

*சகோதரனிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.

*சகோதரியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று

*மகனிடம் நிரூபியுங்கள்* -கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று

*மகளிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று

வேறு எவருக்கு நீங்கள்  எதை நிரூபித்தாலும் *அது கடலில் கொட்டிய பெருங்காயமே*.

 தோற்று போனால்
வெற்றி கிடைக்குமா ?
✌ *அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..*
✌ *அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..*
✌ *துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..*
✌ *பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..*
✌ *சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..*
✌ *நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..*
✌ *ஆகவே தோற்று போ,*
தோற்று போனால் வெற்றி கிடைக்கும்
🙏 அன்புடன் வாழுங்கள்.

மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்..

#1 | Drawing Puzzles for Kids | குழந்தைகளுக்கு வரை புதிர் விளையாட்டு

#114 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 311 சிறப்பீனும் செல்வம் | Dhinam Or...

#217 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

Wednesday, 6 December 2017

#113 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 55 தெய்வம் தொழாஅள் | Dhinam Oru Thi...

#216 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

சூடு சுரனை இருந்தால் இதை மற்ற நண்பர்களுக்கும் பகிரவும்...

ஏரியை அழித்து

கல்லூரி கட்டியாச்சு

குளத்தை அழிச்சு

கம்பெனி கட்டியாச்சு

வயக்காட்டை அழிச்சு

வீடு கட்டியாச்சு

தவறு எல்லாம்

மக்களாகிய நம்மீது தானே தவிர

அடுத்தவன் மீது இல்லை

துட்டுக்கு ஓட்டு போட்டது யாரு

இலவசத்துக்கு பல்லகாட்டுனது யாரு

நீர்வளத்தை

மணல்வளத்தை

காடுகளை

அழித்தபோது வேடிக்கை

பார்த்தது யாரு

உன்னால் இன்று

நெஞ்சை நிமிர்த்தி

நம்ம அரசியல்வாதியிடம்

நம்ம பிரச்சனையை

சொல்ல முடியுமா...??
கேட்க முடியுமா....??

முல்லையில் தண்ணீர் கேட்டால்
கேராளக்காரன் அடிக்கிறான்

காவேரியில் தண்ணீர் கேட்டால்
கர்நாடக்காரன் அடிக்கிறான்

செம்மரம் வெட்டுறானு
ஆந்திராக்காரன் அடிக்கிறான்

தீவிரவாதி இனம்னு
இலங்கைக்காரன் அடிக்கிறான்

தமிழனை எங்கு அடித்தாலும்
தமிழ்நாட்டுகாரன்
வேடிக்கை மட்டும் தான்
பார்க்கிறான்.....!!!!

முல்லையில் வந்த தண்ணீரை
நாம் சேமிக்கவில்லை

காவேரியில் வந்த தண்ணீரை
சேமிக்கவில்லை

காமராஜர் ஆட்சிக்கு பிறகு
அணையேதும் கட்டவில்லை

குளமேதும் வெட்டவில்லை

கோலா காரனுக்கு
போதுமான தண்ணீர்
கிடைக்குது

குடிகாரனுக்கு போதுமான
தண்ணீர் கிடைக்குது

ஆனால்

விவசாயத்திற்கு மட்டும்
தண்ணீர் கிடைக்கவில்லை

தமிழக அரசே..

தமிழக தன்மான மக்களே

முதலில் தமிழகத்தில்
அணைகட்ட சொல்லுங்க

நதியை இணைக்க
சொல்லுங்க

இதை செய்யுரவனுக்கு
ஓட்டுப்போடுங்க

மிக்சி.கிரைண்டர்.டி.வி.
எல்லாம் நம்மலே
வாங்கலாம் ஆனா
அணை கட்ட முடியுமா  ....??

 வீரத்தையும் , விருந்ததோம்பலையும் உலகிற்கு கற்று கொடுத்த இனம் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறது

 இன்று

மாறுங்கள்  மண்னின் மைந்தர்களே ..

தன்மான தமிழர்களே
வீர விளைந்த மக்களே!!

சூடும்,சொரைனையும்
நிறைக்கொண்டு வாழும் இனமே..

மாறுங்கள் இல்லை என்றால் தமிழ் இனம் இவ்வுலகில் இல்லாமல் போய்விடும்  .

         வேதனையுடன்
          உங்களில்ஒருவன்...  தமிழன்💪💪💪

சூடு சுரனை இருந்தால் இதை மற்ற நண்பர்களுக்கும் 
பகிரவும்..... 👍👍💪💪

       இல்லையெனில்

😠தூக்கு போட்டு சாகவும்😠

முருகா, பூலோகத்திற்கா சென்றிருந்தாய்?

"முருகா, பூலோகத்திற்கா சென்றிருந்தாய்?"

"ஆம் ஔவையே,
ஆதார் அட்டை வாங்க சென்றிருந்தேன்.

நல்ல கூட்டம். கையில் மை வேறு வைத்துக் கொண்டிருந்தார்கள்.பன்னிரு கைகளிருந்ததால் ஒரு வழியாக சமாளித்து வந்தேன்.

எவ்வளவு சிரம ம்? கடவுள் அருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை.கடன் அட்டை இல்லார்க்கு அவ்வுலகமில்லை."

  "ஔவையே, கறுப்பு, வெள்ளை -எளிய தமிழில் விளக்கு."

"ஐயனே, வரி கட்டியது வெள்ளை.கட்டாத து கறுப்பு!"

வரி கட்டியது எவ்வளவு? கட்டாத து எவ்வளவு?"

கட்டியது கையளவு. கட்டாத து உலகளவு!"

"சுட்டது எது? சுட முடியாத துஎது?"

சுட்டது மக்கள் பணம். சுடமுடியாத து சுவிஸ் பணம்.!"

"ஒழிக்க நினைத்த து எது? ஒழிந்த து எது?"

"ஒழிக்க நினைத்த து கறுப்பு. ஒழிந்தது மக்கள் கையிருப்பு!"
 
" அம்பானி, அதானி போல செல்வந்தராக என் அத்தையார் லட்சுமி கடாட்சம் வேண்டுமல்லவா?"

"தேவையில்லை ஞான பண்டிதா, ஆள்பவர் கடாட்சம் இருந்தால் போதும்!"

என் தந்தை ஈசனுக்கு அடுத்து எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது எது?"

"அறிந்தும் அறியாத து போல் ஏன் இந்த கேள்வி? கறுப்புதான் வேலவா!"

மானுடர் வாழ்வுக்கு உறு துணையாயிருக்கும் ஏதேனும் இரண்டு புத்தகங்களைக் கூறு."

""பேங்க் பாஸ் புத்தகம். செக் புத்தகம்."

"கேட்ட கேள்விகளுக்கு அழகாக விடை பகன்ற ஔவையே,உனக்கு வரம் ஒன்று தரச் சித்தமாயிருக்கிறேன்.தயங்காமல் கேள்."

"ஐயனே, உன் கடன் அன்றி பிரிதொரு கடன் வாராதிருத்தல் வேண்டும்.

மேலும், அதியமான் என்னும் மன்னன், வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் விலை மதிப்பில்லாத நெல்லிக்கனியொன்றை என்கையில் தள்ளி விட்டான்.

அதற்கு இன்கம் டாக்ஸ் நோட்டீஸ் வராமல் நீதான் அருள் புரிய வேண்டும்"                                 

😂😂😂😂😂😂😂

அக்பருக்கு ஆச்சரியம். ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது...

அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.

அக்பர் யோசிச்சார். பீர்பாலை பார்த்தார். பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.

அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன். கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன். அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.

பயம் ஒரு பெரிய நோய். நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.

அச்சமின்மையே ஆரோக்கியம்!

பின்குறிப்பு:
இந்த கதையை எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னார். சொன்ன நண்பரை மேலும் கிழும் பார்த்தேன்.
அவர் கல்யாணத்துக்கு முன் எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்போதும் இருந்தார்.

சரிதான். சிங்கத்துடன் வாழ்க்கை நடத்துறாரு போல!!!!!

😄😃😊😝😜😛

4 வயதில்*, தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !

✌ *4 வயதில்*, தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !

✌ *8 வயதில்*, தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !

✌ *12 வயதில்*, நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !

✌ *18 வயதில்*, வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !

✌ *22 வயதில்*, பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !

✌ *25 வயதில்*, நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !

✌ *30 வயதில்*, தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !

✌ *35 வயதில்*, போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !

✌ *45 வயதில்*, இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !

✌ *50 வயதில்*, தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !

✌ *55 வயதில்*, நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !

✌ *60 வயதில்*, ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !

✌ *65 வயதில்*, நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

✌ *70 வயதில்*, மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

✌ *75 வயதில்*, பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !

✌ *80 வயதிற்கு மேல்* மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !

தோற்று போனால்
வெற்றி கிடைக்குமா ?

✌ *அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..*

✌ *அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..*

✌ *துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..*

✌ *பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..*

✌ *சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..*

✌ *நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..*

✌ *ஆகவே தோற்று போ,*

தோற்று போனால் வெற்றி கிடைக்கும்

🙏 அன்புடன் வாழுங்கள்.மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்..

......படித்ததில் பிடித்தது!

Tuesday, 5 December 2017

பணக்காரர்களாக வாழ 5 வழிகள் | How to Living in Richer by Shankar S V

#112 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 761 உறுப்பமைந்து ஊறஞ்சா | Dhinam Or...

#215 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

சம்சாரம் இல்லாதபோது வீட்டில் இருக்கிற கணவனுக்கு...

திருடிய சிரிப்பு
😊கணவன்: நேத்து ராத்திரி ஒரு அழகான பொண்ணு என் கனவுல வந்தா

மனைவி: தனியா வந்துருப்பாளே

கணவன்: அது உனக்கு எப்படி தெரியும்

மனைவி: அவ புருசன் தான் என் கனவுல வந்தானே

-இனி பேசுவ
🤔😳😇
____________________________

கணவன் : எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,

மனைவி : அப்படியா எங்க இருக்கிங்க..?

கணவன் : "Zoo"ல இருக்கேன்..ma

மனைவி : 👊👊👊👊👊
____________________________

மனைவி:உங்களை பார்க்காமலே
கல்யாணத்துக்கு OK சொன்னேன்.
நான் தான் தியாகி...!!
கணவர்: உன்னை பார்த்த பின்னாலும்,
கல்யாணத்துக்கு OK சொன்னேன்.
நான் தானே பெரிய தியாகி....!!!😄😄😄
____________________________

மனைவி: நேத்திக்கு நான் வைரத் தோடு கேட்டப்ப முடியவே முடியாதுன்னு தலையை அங்கிட்டும் இங்கிட்டுமா ஆட்டுனீங்க.. இப்ப மட்டும் வாங்கி வந்திருக்கீங்க...?

கணவன்: ஓ அதுவா... பொண்டாட்டி ஆசைப்பட்டதை வாங்கித் தராட்டி, அடுத்த ஜென்மத்திலேயும் அவளே பொண்டாட்டியா வருவானு பெரியவங்க சொன்னாங்க.. அதான், எதுக்கு வம்புன்னுதான் .. !

மனைவி: !!!!!!!!!!!!!!!

____________________________

மனைவி: ஏங்க இறந்து போனதுக்கு அப்புறம் பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே? அப்படியா?

கணவன்: அப்படித்தான் சொல்றாங்க..

மனைவி: அப்ப நீங்க எங்கே போவிங்க?

கணவன்: நீங்க எல்லோரும் அங்கே போயிட்டா இங்க எங்களுக்கு சொர்க்கம்தானே?
____________________________

☔☔☔☔☔🙆🙆🙆🙆🙆

☔மழை,  💃மனைவி  - இரண்டிற்கும் என்ன ஒற்றுமை???

 ரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்ன்னு ஏங்குவோம்..
வந்தா ஏண்டா வந்ததுதுன்னு புலம்புவோம்.
😂😂😂😂
____________________________

மின்சாரம் இல்லாதபோது
ஃப்ரிஜில் இருக்கிற பொருள்களுக்கு
குளிர்விட்டு போயிடுது...!!
😜😜

சம்சாரம் இல்லாதபோது
வீட்டில் இருக்கிற கணவனுக்கு
குளிர்விட்டு போயிடுது,,!
😜😜
----------------------------------------------

A \C கார் பயன்படுத்துபவரா நீங்கள்?

A \C கார் பயன்படுத்துபவரா நீங்கள் .அப்படியானால் நீங்கள் இதை கண்டிப்பாக படிக்கவேண்டும் .

A \C காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது...

காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C ஐ இயக்கவேண்டும்.

இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.

பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD, இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன.

சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம்
வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும்.

அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரையில் இருக்கும். இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40 மடங்கு அதிகம்.

இதன் காரணமாக கேன்சர், லுக்கூமியா, சிறு நீரக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .

கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும்.

எனவே இதை மறக்காமல் பின்பற்றுங்கள்.

நண்பர்கள் அனைவருக்கும் பரிமாறிக்கொள்ளுங்கள்..

கணவனின் உறவினர்களை கண்டால் எளிதில் தீ பற்றக் கூடியது...

ஒரு புதிய உலோகம் புதியதாக வேதியலில் சேர்க்கப்பட்டு உள்ளது அதாவது

பெயர் : மனைவி

குறியீடு: Wfe

அணு நிறை: முதலில் பார்க்கும்போது இலகுவாக தெரியும், நாட்கள் ஆக ஆக எடை கூடிக் கொண்டே போகும்...

உடற்கூறு தன்மை:
எப்பொழுதும் *அன்பில்* உருகக் கூடியது...

எப்போதும் *அன்பில்* உறையக்கூடியது....

எப்பொழுதும் கொதிக்க கூடியது...

தவறாக பயன்படுத்தினால் கசக்கக் கூடியது......

வேதியல் தன்மைகள்:

எளிதில் எதிர்வினை புரியக் கூடியது.....

அதிக நிலைத் தன்மை அற்றது....

தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பணம், காசு, காசோலை என அனைத்தையும் ஈர்க்கும் தன்மை கொண்டது.....

பணமதிப்பை குறைக்கும் வல்லமை கொண்டது......

காணும் இடங்கள்;

அழகு நிலையம், நகைக் கடைகள், பன்னாட்டு நவீன வணிக வாளகங்கள் மற்றும் ஐஸ் கிரீம் கடைகள்

அல்லது

கண்ணாடி முன் காணலாம்...

கணவனின் உறவினர்களை கண்டால் எளிதில் தீ பற்றக் கூடியது......

தனது பெற்றோர்களுடன் இருக்கும் போது இன்பம், மகிழ்ச்சி, குதூகலம், துள்ளல், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஒரே  பன்முக தன்மை உடையதாக இருக்கும்......

மனப்பான்மை:

நானே இந்த பூலோகத்தின் ராணி, என்னை மிஞ்சிய அழகும், திறமையும், ஆற்றலுமபுரிந்துவும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை என்ற நினைப்பு.

*_ஆக மொத்தத்தில் புரிந்து கொள்ளவே முடியாத புதிராக இருக்கும்........_*


நன்றி
என்றும் அன்புடன்
😀😃😄😁😆😂🤣