குட்டி கதை🌷
பொதுவாக ஜப்பானியர்கள் மீன் உணவை மிக விரும்பிச் சாப்பிடுபவர்கள் !
அது ஜப்பான் நாட்டின் ஒரு தீவு.
அந்தத் தீவு மக்களும் அப்படியே மீன் உணவை விரும்பிச் சாப்பிட, படகெடுத்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கடற்பகுதிக்குச் செல்வார்கள். அங்கிருந்து திரும்பி வர இரண்டு நாட்களாகிவிடும்.
அக்குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் மீன்கள்தான் மிக ருசியானதாக இருக்கும்.
ஆனால், மீன் பிடித்ததும் கொண்டு வர இரண்டு நாட்களாகி விடுவதால் அந்த மீனின் சுவை குறைந்துவிடும்.
மீனவர்கள் கையோடு, ஐஸ்கட்டிகளைக் கொண்டு சென்று அதில் பதப்படுத்திக் கொண்டு வந்தார்கள். ஆனாலும், மக்களுக்கு திருப்தி இல்லை. ஃப்ரெஷ் மீனுக்கும் ஐஸ் கட்டிகளில் வைக்கப்பட்ட மீனுக்கும் சுவை வேறுபடுவதை உணர்ந்தனர் !
இப்பொழுது மீனவர்கள், ஒரு சிறு தண்ணீர் தொட்டி ஒன்றைச் செய்து, அதில் மீன்களைப் பிடித்துப் போட்டு கொண்டு வந்தனர் !
ஆயினும், அத்தனை பெரிய கடற்பரப்பில் நீந்திக்கொண்டிருந்த மீன்கள், சிறிய தண்ணீர்த் தொட்டியில் இரண்டு நாட்களாக சோம்பிக் கிடப்பதினால் மீனின் சுவை குன்றிப் போவதாக மீண்டும் குறை !
யோசித்த மீனவர்கள் புதிதாக ஒரு யோசனை செய்தார்கள்.
குட்டிச் சுறா மீன் ஒன்றைப் பிடித்து அந்தத் தொட்டிக்குள் விட்டார்கள்.
இந்தச் சுறாவிடமிருந்து தப்பிப்பதற்காக... அந்த மீன்கள் எல்லாம் அந்தத் தொட்டிக்குள் வேக வேகமாக நீந்திக் கொண்டே இருந்தன ஓய்வின்றி.
இப்பொழுது இரண்டு நாட்கள் கழித்து வந்த அந்த மீன்கள் முன்னெப்போதையும் விட மிகச் சுவையானதாக இருந்தனவாம்.
வாழ்க்கையும் அப்படித்தான். வாழ்க்கை சுவைக்க தேமேயென்று கிடக்கக்கூடாது. சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். பிரச்சனைகள் என்கிற சுறா இருந்தால்தான் வாழ்க்கை என்ற மீன்கள் சுவையானதாக இருக்கும். பிரச்சனைகள் இல்லாவிட்டால் நாம் ஓட மாட்டோம் ! சோம்பிக்கிடப்போம் !
சுறுசுறுப்பாக ஓடி வாழ்க்கையை சுவையானதாக மாற்றுவோம்!

No comments:
Post a Comment