flipkart discount sale search here.

Tuesday, 19 December 2017

உங்க பேஸ்டில் உப்பு இருக்கா... படித்ததில் ரசித்தது...

Courtesy: Ravi Sundaram

விளம்பரம்:- இது நம்மை எப்படியெல்லாம் ஆட்டு வைக்கிறது !

அரைமணி நேரம் தலையில் எண்ணை ஊறினாலும் உள்ளே இறங்காது என்று பகுத்தறிவு பேசிய நம்மை அரை நிமிடம் கூட தலையில் ஊறாத "ஷாம்பு" தலைக்கு "ப்ரோ விட்டமின் B" தரும் என்று நம்ப வைக்கிறது. சீயக்காய் ஷாம்பு வாக வந்தால்தான் தலையில் வேலை செய்யும் என நம்ப வைத்ததும் விளம்பரம்தான்.

உப்பில் பல் தேய்த்தது தவறு என்று நம்ப வைத்ததும் விளம்பரம்தான். இன்று உங்க பேஸ்டில் உப்பு இருக்கா என்று காஜல் அகர்வால் கேட்பதும் விளம்பரம் தான்.

வாங்கும் போதே 30 சதவிகிதம் வரை நஷ்டத்துடன் நாம் வாங்கும் ஒரே பண்டம் தங்கம்தான். அதை சந்தோஷமாக சிரித்தபடி வாங்க வைத்தது "வளையல் திருவிழா"...விளம்பரம்தான்.

சரி..அதை அதே 30 சதவிகிதம் வரை நஷ்டத்துடன் விற்கும் போதும் சிரித்தபடி நம்மை விற்று "கனவுகளை நினைவாக்க" சொல்வதும் விளம்பரம்தான்.

3 லட்சம் சதுர அடியில் அரண்மனை உங்களுக்காக கட்டப்படுவதாக சினேகா சத்தியம் செய்வது எப்பேர்பட்ட மகிழ்ச்சி.. ! அத்தனை பெரிய கட்டிடத்தில் நீங்கள் காரில் வந்தாலும் உங்களுக்கு "பார்க்கிங்" கூட கிடையாது என்பது உங்களுக்கு புரிவதில்லை. எல்லாம் விளம்பரம்தான்.

1000 ரூபாய் புடவையை 3000 ரூபாய்க்கு வாங்கி வெளியே வரும் போது ஒரு தொன்னை சக்கரைபொங்கல் தருகிறான் பாருங்கள். அவன் நல்லவன். 30 வினாடி விளம்பரத்தில் நடிக்க கமலுக்கு 3 கோடி தரும் அவர் அதை யார் தலையில் கட்டுவார் என்று கேட்க நம்மை மறக்க அடிப்பதும் விளம்பரம்தான்.

விற்கப்படும் வீடுகளுக்கு மனைகளுக்கு சாக்கடை வசதிகள் இருக்கிறதா? பாதுகாக்கப் பட்ட குடிநீர் வசதி இருக்கிறதா என்று யோசிக்க விடாமல் "சிங்களா டிசைட் டபுளா ஒகே" பண்ண ராஜா சொல்றாரு பாருங்க ...அங்க நிக்குது விளம்பரம்.

அமிர்தா எல்லோருக்கும் வெளிநாட்டில் வேலை கொடுத்ததா?
ராதிகாவை கேட்பீர்களா?

பூஸ்ட் / ஹார்லிக்ஸ் இதுவரை உலகில் யாரையாவது வளர்த்து இருக்கிறது என்று கேட்டிருக்கீர்களா? ஆனால் இந்தியாவில் நடக்குதப்பா! கபில்தேவ், சச்சின், விராட் கோலி இப்படி எல்லோரும் சொல்றாங்களே!

நேற்றுவரை எண்ணை கெடுதல் என்றவன் இன்று பூரி சாப்பிட்டால் "கார்பொரேட் மீட்டிங்" கில் பிரமாதமான தீர்வு சொல்வான் என்பதை சொல்வதும் விளம்பரம்தான்.

ஒரு எண்ணையில் வடை சுட்டால் உங்களுக்கு ரத்த கொதிப்பு, சக்கரை நோய், சத்து குறைவு நரம்பு தளர்ச்சி நியாபக மறதி இப்படி எல்லா பிரச்சனையும் போகும் என்பது தெரியுமா? (உள்மூலம் வெளி மூலம் உள்பட .. :) ) வைட்டமின் A முதல் Z வரை இருக்குப்பா !! விளம்பரம்தான்.

கொஞ்சம் கூட சுயசிந்தனை அற்றவர்களா நம்மை இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மழுங்க அடிப்பது உங்களுக்கு தெரியவில்லை. அந்த மட்டில் அவர்களுக்கு வெற்றியே.

இத்தனை சொல்றேனே...இதை நீங்கள் share பண்ணி நாலு பேர் அறிய செய்வீர்களா என்ன?
மாட்டீர்கள்.
காரணம் இது விளம்பரம் இல்லை.
நிதர்சனம்.
நன்றி.

No comments:

Post a Comment