flipkart discount sale search here.

Monday, 31 July 2017

ரேசன் கார்டு மற்றும் ரேஷன் பொருள் இல்லை, புதிய சட்டம்.

*🅱IG 🅱REAKING NEWS*
*♈🌙ரேசன் பொருள் இல்லை*
*♈🌙பொது விநியோக திட்ட பயனாளிகள் அடையாளம் காண புதிய விதிகள் வெளீயீடு   ..!*
*♈🌙தொழில் வரி செலுத்தும் குடும்ப நபரை கொண்ட குடும்பத்து ரேசன் பொருள்கள் கிடையாது - அரசு..!*
*♈🌙₹1 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ள குடும்பத்து ரேசன் பொருள்கள் கிடையாது - அரசு ..!*
*♈🌙மத்திய மாநில அரசு ஊழியர்கள் உள்ள குடும்பத்து ரேசன் பொருள்கள் கிடையாது - அரசு    ..!*
*♈🌙ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் உள்ள குடும்பத்து ரேசன் பொருள்கள் கிடையாது - அரசு    ..!*
*🅱REAKING NEWS LIVE*
*📡 மத்திய,மாநில அரசு ஊழியர்களுக்கு இனி ரேசன் பொருள் இல்லை என அதிரடி அறிவிப்பு*
*4 சக்கரவாகனம், குளிர்சாதனப்பெட்டி, 3 அறைக்கு மேல் வீடு இருந்தால் ரேஷன் பொருட்கள் இல்லை*
*பொது விநியோகத்திட்ட பயனாளிகளை அடையாளம் காண உணவு பாதுகாப்பு சட்ட வீதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது*
*அதில் 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விசாயிகளுக்கு, 4 சக்கரவாகனம், குளிர்சாதனப்பெட்டி, வீடுகளில் 3 அறைக்கு மேல் இருந்தால், ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மேல் இருந்தால், தொழில் வரி, வருமானவரி செலுத்துபோரை உறுப்பினராக கொண்ட குடும்பத்திற்கு, மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு, வணிக நிறுவனங்களில் பதிவு செய்து செயல்படும் குடும்பம் உள்ளிட்டோருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது*
*நகர்புறம்-வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு, விதவை, முதியோர் உதவித்தொகை, திருமணம்மாகாத பெண், மாற்றுாதிறனாளி குடும்பத் தலைவர்களாக கொண்ட குடும்பம் உள்ளிட்டோருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது*
*ஆதார் எண் இணைக்கப்படாத பான் அட்டைகள் ரத்து செய்யப்படும்: வருவாய்த்துறை செயலாளர்*
*குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆதார் எண் இணைக்கப்படாத பான் அட்டைகள் ரத்து செய்யப்படும் என வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் ஆத்யா தெரிவித்துள்ளார்*
*மேலும் ஆதார் எண்ணுடன் பான் அடையை இணைப்பதற்கான காலக்கெடு விரைவில் அறிவிக்கப்படும்*
*நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, நிதி மசோதாவில் 2017-18 ஆம் ஆண்டுக்கான வரிச் சலுகையை திருத்தம் செய்தார். அதன்படி ஆதார் எண்ணுடன் பான் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது*
*இதுவரை 2 கோடிக்கு மேல் வரி செலுத்துவோர் தங்கள் பான் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர் என்று கூறியுள்ளார்*
*🆎 நேரலை செய்திகள்*
*📡 சமையல் சிலிண்டருக்கான மானியத்தை 2018-ம் ஆண்டு மார்ச் முதல் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.*

*📡மேலும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையை ரூ.4 வீதம் மாதந்தோறும் உயர்த்திக் கொள்ளவும் எண்எணய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.*

நோய்கள் உருவாகும் இடங்கள் !

*நோய்கள் உருவாகும் இடங்கள் !*
------------------------------------------------------------

*நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.*

*இதோ*

*1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்*

*2 - டீ*

*3 - காபி*

*4 - வெள்ளை சர்க்கரை*

*5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.*

*6 - பாக்கெட் பால்.*

*7 - பாக்கெட் தயிர்*

*8 - பாட்டில் நெய்*

*9 - சீமை மாட்டு பால்*

*10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.*

*11 - பொடி உப்பு*

*12 - ஐயோடின் உப்பு*

*13 - அனைத்து ரீப்பயின்டு ஆயில்*

*14 - பிராய்லர் கோழி*

*15 - பிராய்லர் கோழி முட்டை*

*16 - பட்டை தீட்டிய அரிசி*

*17 - குக்கர் சோறு*

*18 - பில்டர் தண்ணீர்*

*19 - கொதிக்க வைத்த தண்ணீர்*

*20 - மினரல் வாட்டர்*

*21 - RO தண்ணீர்*

*22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்*

*23 - Non Stick பாத்திரங்கள்*

*24 - மைக்ரோ ஓவன் அடுப்பு*

*25 - மின் அடுப்பு*

*26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்*

*27 - சோப்பு*

*28 - ஷாம்பு*

*29 - பற்பசை*

*30 - Foam படுக்கை மற்றும் இருக்கை*

*31 - குளிர்பானங்கள்*

*32 - ஜஸ் கீரீம்கள்*

*33 - அனைத்து மைதா பொருட்கள்*

*34 - பேக்கரி பொருட்கள்*

*35 - சாக்லேட்*

*36 - Branded மசாலா பொருட்கள்*

*37 - இரசாயன கொசு விரட்டி*

*38 - Ac*

*39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.*

*40 - பிஸ்கட்டுகள்*

*41 - பன்னாட்டு சிப்ஸ்*

*42 - புகைப்பழக்கம்*

*43 - மதுப்பழக்கம்*

*44 - சுடு நீரில் குளிப்பது*

*45 - தலைக்கு டை*

*46 - துரித உணவுகள்*

*47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்*

*48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.*

*49 - ஆங்கில மருந்துகள்*

*50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்*

*51 - உடல் உழைப்பு இல்லாமை*

*52 - பசிக்காமல் உண்பது*

*53 - அவசரமாக உண்பது*

*54 - மெல்லாமல் உண்பது*

*55 - இடையில் தண்ணீர் குடிப்பது*

*56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.*

*57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்*

*58 - அறியாமை*

*59 - சுற்றுச்சூழல் மாசுபாடு*

*60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்*

*அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது*

*மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.*

*உயிர் பிழைக்க ஒரே வழி*

*இயற்கைக்கு திரும்புவது மட்டுமே*

*நன்றி*


🌸🌱🌼🌿🌷🙏🏾🌷🌿🌼🌱🌸

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள்...

*உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள்*

நாம் நமது அன்றாட உணவில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள், பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழச்சாறுகள், முளைக்கட்டிய தானியங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

நாம் தினமும் ஆரோக்கியமான உணவுகளை உண்டு வந்தால் நமக்கு தேவையில்லை மருந்து! உணவே மருந்து!
நமது உடலில் இன்சுலின் அளவு குறைவாக சுரப்பதாலும், சுரந்த இன்சுலினை உடல் சரியாக பயன்படுத்த முடியாததாலும் ஏற்படும் குறைபாடே நீரழிவு. இதை கட்டுக்குள் வைக்க நாம் நமது அன்றாட உணவில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள், பச்சைக் காய்கறிகள், கீரைகள், சர்க்கரை சேர்க்காத பழச்சாறுகள், முளைக்கட்டிய தானியங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
காலையில் பருக ஏற்ற சாறு வகைகள்:
காலை வேளையில் காபி, டீ க்கு பதிலாக தினம் ஒரு இயற்கை சாறுகளை பருகலாம்.

*1. அருகம்புல் சாறு:*

 தேவையானவை: அருகம் புல்- ஒரு சிறியகட்டு, தோல் சீவிய இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: அருகம்புல்லை நன்கு கழுவி நறுக்கவும். இதனுடன் இஞ்சி, உப்பு, தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து பருகலாம்.

*2. பாகற்காய் சாறு:*

 தேவையானவை: பாகற்காய் - ஒன்று, தோல் சீவிய இஞ்சித் துருவல், உப்பு - சிறிதளவு, எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பாகற்காயை கழுவி நறுக்கி விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக்கவும். இதனுடன் இஞ்சி, உப்பு, தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து பருகலாம்.

*3. நெல்லிச்சாறு:*

 தேவையானவை: நெல்லிக்காய் -5, கறிவேப்பிலை - கைப்பிடியளவு, உப்பு- சிறிதளவு.
செய்முறை: நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி துண்டுகளாக்கவும். இதனுடன் கறி வேப்பிலை சேர்த்து அரைத்து வடிக்கட்டி உப்பு சேர்த்து கலந்து பருகலாம்.

*4. வாழைத்தண்டு சாறு:*

தேவையானவை: வாழைத் தண்டு - ஒன்று, சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு சிறிதளவு.
செய்முறை: வாழைத்தண்டை நார் நீக்கி துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போடவும். பிறகு தண்ணீரை வடிகட்டி சீரகம், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி பருகலாம்.
காலை உணவுகள்: (நீரழிவு உள்ளவர்கள் காலை உணவை தவிர்க்க கூடாது). 1.
ஸ்பிரவுட்ஸ் சாலட்: தேவையானவை: முளைக் கட்டிய பச்சைப் பயறு- ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், நறுக்கிய தக்காளி- கால் கப், வெள்ளரித் துண்டுகள்- கால் கப், மாதுளை முத்துக்கள்- 2 டீஸ்பூன், உப்பு- தேவைக்கு, எலுமிச்சைச்சாறு- ஒரு டீஸ்பூன், கோஸ் துருவல், கேரட் துருவல்- தலா 5 டீஸ்பூன்.
செய்முறை: அகலமான பாத்திரத்தில் தேவையான பொருட்களை ஒன்றாக கலந்து சாப்பிடலாம்.

*5. வரகரிசி கிச்சடி:*

 தேவையானவை: வரகரிசி - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் -2 (பொடியாக நறுக்கவும்), கடுகு- கால் டீஸ்பூன், சீரகம்- அரை டீஸ்பூன், கறிவேப்பிலை- சிறிதளவு, இஞ்சி துருவல்- அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ்- சிறிதளவு, உப்பு- தேவைக்கு ஏற்ப, மஞ்சள் தூள்- சிட்டிகை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், தண்ணீர்- 3 கப்.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், இஞ்சி துருவல் சேர்த்து வதக்கவும், இதனுடன் காய்கறிகள், உப்பு, தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும். பிறகு வரகரிசி சேர்த்து கிளறி மூடி சிறு தீயில் வைத்து வேக விட்டு இறக்கவும்.

*6. க்ரீன் சட்னி:*

 தேவையானவை: கொத்தமல்லித்தழை - ஒரு கப், புதினா - கால் கப், பச்சை மிளகாய் -2, உப்பு- தேவைக்கு, எலுமிச்சைச் சாறு- ஒரு டீஸ்பூன்.
செய்முறை: சுத்தம் செய்த கொத்தமல்லித்தழை, புதினா, பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து மிக்சியில் தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். காலை, இரவு நேரங்களில் சிற்றுண்டியுடன் தொட்டுக் கொள்ள ஏற்றது.

*7. குதிரை வாலி பொங்கல்:*

தேவையானவை: குதிரை வாலி அரிசி - ஒரு கப், வறுத்த பாசிப்பருப்பு - கால் கப், இஞ்சித் துருவல்- ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, மிளகு, சீரகம்- தலா அரை டீஸ்பூன், உப்பு- தேவையான அளவு, கறிவேப்பிலை- சிறிதளவு.
செய்முறை: மிளகு, சீரகம், கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து அரைக்கவும். குக்கரில் களைந்த அரிசி, பருப்பு, இஞ்சித் துருவல், அரைத்த விழுது, உப்பு, 4 கப் தண்ணீர் ஊற்றி மூடி 4 விசில் விட்டு இறக்கவும். சூடாக பரிமாறவும்.

*8. மல்டி க்ரெய்ன் தோசை:*

 தேவையானவை: ராகி, கம்பு, சோளம், தினை, பச்சரிசி, சிவப்பரிசி- தலா ஒரு கப், பச்சை பயறு- கால் கப், காய்ந்த மிளகாய்- 4, கறிவேப்பிலை- கைப்பிடியளவு, உப்பு, எண்ணெய்- தேவைக்கு, கோஸ் துருவல், கேரட் துருவல், கொத்தமல்லித் தழை- தலா கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம்- கால் கப், பெருங் காயம்-சிறிதளவு.
செய்முறை: ராகி, கம்பு, சோளம், தினை, பச்சரிசி, சிவப்பரிசி, பச்சை பயறு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு களைந்து கிரைண்டரில் சற்று கரகரவென அரைக்கவும். இதனுடன் கோஸ், கேரட், கொத்தமல்லித்தழை, வெங்காயம், பெருங்காயம், உப்பு சேர்த்து கலக்கவும், தோசைக்கல்லை காய வைத்து மாவை அடைகளாக ஊற்றி சிறிதளவு எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

Teach colours for your children | 7 important colors | colors video | Le...

ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்...

*ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்...*
🤔🤔🤔
*பெருமையும், கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்..*
☺😟😏
*கவலையும், துயரமும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்..*
😔😒😞
*துக்கமும், அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்..*
😪😥😰
*பயமும், சந்தேகமும் சிறுநீரகத்தை சீரழிக்கும்..*
😣😖🙁
*எரிச்சலும், கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்..*
😠😡☹
*அமைதியும், மகிழ்ச்சியும் அனைத்து நோயையும் குணமாக்கும்..*
🙂😊🤗
*சிந்தனைக்கு ஏற்பதான் நமது உடலில் உள்ள சுரப்பிகளின் வேலை நடைபெறுகின்றன..*
☺☺☺
*சந்தோஷமாக இருந்தால் நல்ல ஜெல் சுரக்கும்..*
*இல்லையேல் அமிலம் போன்று சுரந்து உடல் கேடாகும்..*
😨😱😀
*நமக்கு என்றும் நாம்தான் டாக்டர்...*
🤗🤗🤗🤗🤗🤗

இன்றைய ஆரோக்கிய தகவல்., 👍👍

1500 ரூபாய்க்கு மொபைல் போன். அந்த பணமும் திருப்பி தரப்படும்!

அம்பானிக்கு உடம்பெல்லாம் மூளை என்றுதான் சொல்ல வேண்டும்..

1500 ரூபாய்க்கு மொபைல் போன். அந்த பணமும் திருப்பி தரப்படும். இதில் உள்ள சூட்சமம் யாருக்காவது புரிகிறதா?

தோராயமாக 100 கோடி மொபைல் 1500 ரூபாய்க்கு கொடுக்க டார்கெட்..

1. முதலில் ஒன்றை கவனியுங்கள் இது திரும்ப கொடுக்கப்படும் பணம். ஆக இது விற்பனை இல்லை. வைப்பு பணம். No sales, its only security ammount. இந்த பணத்திற்கு எல்லாம் GST கிடையாது. மொபைல் போன் விற்பனைக்கு 12% GST. ஆனால் இந்த திட்டம் மூலமாக அது தவிர்க்கப்படுகிறது. அலைபேசி சாதனமும் உங்கள் கையில் கிடைத்துவிடுகிறது..

2. 1500 X 100 கோடி = 150000 கோடி அம்பானி குழுமத்தில் உள்ளே வந்து விட்டது. அதுவும் விற்பனை வரி கட்டாமல். 3 வருடம் கழித்து இதை திரும்ப பெற்று கொள்ளலாம்..

3. இந்த 3 வருடத்தில் தனது சொந்த பணத்தை முதலீடு செய்யாமல், இந்த ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாயை எந்த துறையில் வேண்டுமானாலும் அம்பானியால் முதலீடு செய்ய முடியும்..
அதிலிருந்து லாபமும் பெற முடியும்..

4. அப்படி முதலீடு செய்ததில் 20% லாபம் என்று குறைந்த பட்ச கணக்கை வைத்து கொள்வோம். ஊரான் பணத்தை முதலீடாக செய்து அதில் வந்த லாபம் மட்டும் 30000 கோடி (குறைந்தபட்சம்). இது ஒரு வருஷத்துக்கு மட்டும். மூன்று வருஷத்திற்கு நீங்கள் கணக்கு போட்டு பாருங்கள். குறைந்தது 75000 கோடி. இன்னும் முதலீடு அப்படியே தான் இருக்கிறது..

5. மூன்று வருடம் கழித்து, முதலீடு 150000 கோடி மக்களிடம் திரும்ப கொடுக்கப்பட்டு, மொபைல் போன் தயாரிக்கப்பட்ட செலவு அதிகபட்சமாக 15000 கோடியை கழித்து பார்த்தால், நிகர லாபம் மட்டும் 60,000 கோடி. முதலீடு இல்லை. விற்பனை வரி இல்லை..

6. அந்த மொபைல்களால் இரண்டாம் கட்ட வருமானமாக ஜியோ நிறுவனத்திற்கு எவ்வளவு வரும் என்பதையும் இங்கு கணக்கில் எடுக்க வேண்டும்..

மாஸ்டர்பிளான்... இதை திருட்டுத்தனம் அல்லது சாமர்த்தியம் என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்..
அது உங்கள் மன பக்குவத்தை பொறுத்து. என்னை பொறுத்தவரை இது சாமர்த்தியம் தான்.....!!!

ஒரே ஒரு கேள்வி மட்டும் உருத்துகிறது... இதை ஏன் bsnl செய்ய முன்வரவில்லை..?

பட்டா வேண்டி பொதுமக்கள்...

பட்டா வேண்டி பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு  8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது.

அதேபோல் UDR பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது.

பட்டா மாற்றம் :

பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது.

1. நிலச் சொந்தக்காரர்கள் தாமே மேற்கொள்ளும் நடவடிக்கை (உரிமையை தாமே மாற்றுவது)

2. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலோ அல்லது வருவாய்த்துறையினர் மேற்கொள்ளும் விற்பனையின் மூலமான நடவடிக்கை (கட்டாய உரிமை மாற்றம்)

3. ஒருவருக்கு பின் ஒருவர் என்ற வாரிசுரிமை மூலமான அடிப்படையில் (வாரிசுரிமை மாற்றம்)

தமிழ்நாட்டில் பொதுமக்கள் பட்டா பெறுவதற்கும், பட்டா மாற்றம் செய்வதற்கும் தமிழக அரசு சட்டங்களையும், விதிமுறைகளையும் உருவாக்கியுள்ளது. அதில் சில முக்கியமான பகுதிகளை நாம் அறிந்து கொண்டால் பட்டா பெறுவதும், பட்டா மாற்றம் செய்வதும் எளிதாகிவிடும்.

தமிழ்நாடு பட்டாப்பதிவு புத்தக சட்டம், 1983 :

பிரிவு 3(1)  -  தாசில்தார் ஒவ்வொரு நில உடமையாளருக்கும் அவர் சொந்தமாக வைத்திருக்கும் நிலத்தை பொருத்து அவர் விண்ணப்பத்தின் பேரில் பட்டா பதிவு புத்தகம் ஒன்றை வழங்க வேண்டும்

பிரிவு 3(7)  -   தாசில்தார் பட்டா மாற்றம் செய்வதற்கு முன் நிலத்தில் அக்கறை கொண்டுள்ளவர்களுக்கு நியாயமானதொரு வாய்ப்பினை கொடுக்க வேண்டும்

பிரிவு 3(9)  -   பட்டா பதிவு புத்தகத்தில் அடங்கியுள்ள பதிவுகள், விவரங்கள் ஆகியவற்றுக்காக ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் பட்டா பதிவு புத்தக பதிவேடு பராமரிக்கப்பட்டு வர வேண்டும்

பிரிவு 3(10)  -   உரிய கட்டணங்கள் செலுத்தப்படுவதன் பேரில் நில உடமையாளருக்கு பட்டா பதிவு புத்தகம் வழங்கப்பட வேண்டும்.

பிரிவு 10   -   பட்டாவில் மாற்றம் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் முதலில் மனுவை தாசில்தாரிடம் தான் கொடுக்க வேண்டும். தாசில்தாரே முதன்மை அதிகாரி ஆவார்.

பிரிவு 12   -   தாசில்தார் உத்தரவின் மீது வருவாய் கோட்டாட்சியரிடம் முதல் மேல்முறையீடு செய்யப்பட வேண்டும்

பிரிவு 13  -   வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை எதிர்த்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்

தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள், 1987 :

விதி 3(1)  -   தாசில்தார் சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்களை பொருத்தமட்டில் ஒவ்வொரு உரிமையாளருக்கும், இந்த சட்டத்தின் கீழ் பட்டா விவரக்குறிப்பு புத்தகம் வழங்கப்படவுள்ளது என அறிவிப்பு வெளியிட்டு சம்பந்தப்பட்ட கிராமத்தில் தண்டோரா போட்டு அறிவிக்க வேண்டும்

விதி 7   -   பட்டா உரிமை புத்தகங்களுக்கான கட்டணம் ரூ. 20 /- ஆகும்

விதி 13  -   இந்த சட்டத்தின் கீழ் பட்டா பதிவு புத்தகத்தில் யாருடைய உரிமைகள் அல்லது பற்றுகள் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதோ அல்லது பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த நபர் தாசில்தார் கேட்டுக் கொள்வதன் பேரில் தாசில்தாரின் ஆய்வுக்காக, இச்சட்டத்தின் யாதொரு நோக்கத்திற்காக விவரங்களையும், ஆவணங்களையும் 15 நாள் கால அவகாசத்திற்குள் தாசில்தாருக்கு அளிக்க வேண்டும்

விதி 14  -   இச்சட்டத்தின் கீழ் தாசில்தார் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிராக 30 நாட்களுக்குள் வருவாய் கோட்டாட்சியரிடம் முதல் மேல்முறையீடு செய்து கொள்ள வேண்டும்

விதி 15(1)  -   தாசில்தார் அல்லது வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை திருத்தியமைக்க வேண்டும் என்று கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் சீராய்வு மனு தாக்கல் செய்து கொள்ள வேண்டும்

விதி 15(2)  -   மேற்சொன்ன கால அளவிற்குள் அந்த மனுவை, மனுதாரர் தாக்கல் செய்ய முடியாமல் போனதற்கு நியாயமான, போதுமான காரணம் உள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர் கருதினால் விதி 15(1) ல் கூறப்பட்டுள்ள கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் உத்தரவை திருத்தியமைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொள்ளலாம்

ஆட்சேபனைகளை எப்படி தாக்கல் செய்ய வேண்டும்? :

1. தாசில்தாரின் பட்டா மாற்றம் இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்புகள் 14 மற்றும் 21 ல் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணானது

2. இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்புகள் 14 மற்றும் 21 ல் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி பட்டா மாற்றம் செய்வதற்கு முன் ஏற்கனவே கூட்டுப்பட்டாவில் உள்ள எனக்கு நீதிக்குட்பட்டு அறிவிப்பு கொடுக்காமலும், வாய்ப்பு அளிக்காமலும் என் தரப்பு வாதத்தை கேட்காமலும் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது சட்டப்படி தவறாகும்

3. இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்பு 375 ன்படி தாசில்தார் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளவற்றை மதித்து நடக்கவில்லை

4. வருவாய் நிலை ஆணை எண் 31 ஐ பின்பற்றி பட்டா மாற்றம் செய்யப்படவில்லை

5. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 மற்றும் தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள் 1987 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை தாசில்தார் கடைபிடிக்கவில்லை

6. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 ன் பிரிவு 3(7) ன்படி நிலத்தில் அக்கறை கொண்டுள்ள எனக்கு முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை. அறிவிப்பு ஏதும் கொடுக்கப்படவில்லை

7. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 ன் பிரிவு 7 ல் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை தாசில்தார் பின்பற்றவில்லை

8. தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள் 1987 ன் விதி 3 ன்படி சம்பந்தப்பட்ட கிராமத்தில் பட்டா மாற்றம் குறித்து அறிவிப்பு செய்யப்பட்டு தண்டோரா போடப்படவில்லை

9. VAO வருவாய் நிலை ஆணை மற்றும் கிராம நிர்வாக நடைமுறை நூல் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை மீறி சட்ட விரோதமாக பட்டா மாற்றம் செய்ய பரிந்துரை செய்துள்ளார்

10.  இயற்கை நீதிக்கு புறம்பாகவும், சட்ட விரோதமாகவும் பட்டா மாற்றம் தாசில்தாரரால் செய்யப்பட்டுள்ளது

(இதன் பிறகு உங்கள் சொத்து சம்பந்தப்பட்ட விவரங்களை எழுதிக் கொள்ளுங்கள்)

சைபர் கிரைம் – என்ன தண்டனை?

சைபர் கிரைம் – என்ன தண்டனை?

சைபர் கிரைம் போலீஸ் வழக்கு பதிவு செய்தால் என்ன தண்டனை கிடைக்கும்?

ஜ.டி. சட்டம் 2008ன் படி - மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைவாசம் அதே போல் மேலும், ஒரு லட்சம் முதல் ஜந்து லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம்.

கீழ்கண்ட செக்ஷன்களில் கைதானால் – பெரும்பாலும் பெயில் கிடைக்காது

பிரிவு - குற்றம்

66 - ஹேக்கிங்

66A - ஆபசமாக மெஸேஜ் அனுப்புவது

66B - கம்ப்யூட்டர், இண்டெர்னெட் வழியாக திருடப்பட்டதை வாங்குவது

66C - அடுத்தவர்களின் டிஜிட்டன் சைன், பாஸ்வேர்டுகளை திருடுவது

66D - போலி ஜடி உருவாக்கி, தன்னை வேறு ஒருவர் போல் காட்டி
மிரட்டுவது, மோசடி செய்வது.

66E - ஆண், பெண் இருவரின் உடல் பாகங்களை சட்டவிரோதமான
முறையில் வெளியிடுவது

66F - சைபர் டெர்ரஸிஸம், இந்திய இறையாண்மைக்கு எதிரான்
செயல்களில் ஈடுபடுவது

67 - ஆபாச போட்டோ வெளியிடுவது

67A - ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுதல்

67B - குழைந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வெளியிடுவது

(இவைகள் இல்லாமல் , மான நஷ்ட ஈடுவழக்கு வழக்கும், அனுப்பும் மெஸேஜில் மிரட்டல் இருந்தால், கொலைமிரட்டல் வழக்கும் தனியாக தொடுக்கலாம்)

வாடகை வீடு சட்டம் என்ன?

அன்பானவர்களே !

வீட்டு வாடகை குறித்துச் சட்டம் என்ன சொல்கின்றது ?

அறிந்து கொள்வோம் !!!

*
*

 வாடகை வீடு சட்டம் என்ன சொல்கிறது? "ஒரு வீட்டின் வாடகை என்பது எப்படி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று தமிழகக் கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாட கைக் கட்டுப்பாடு) சட்டப்படி, ஒரு வீட்டின் ஒட்டு மொத்த மதிப்பில் ஒன்பது சதவிகிதத்தையே வருட வாடகையாக வாங்க வேண்டும் (அதாவது ஒரு லட்சம், வீட்டின் மதிப்பென்றால் 9 சதவிகிதம் வைத்து வருடத்திற்கு 9,000 ரூபாய் வரும். 12 மாதங்களுக்குப் பிரித்தால், மாதத்திற்கு 750 ரூபாய் வரும்). ஒரு வீட்டின் மதிப்பென்பது நில மதிப்பு மற்றும் கட்டிட மதிப்பைக் கணக்கிட்டு வருவதாகும். இப்படி கணக்கிட்டுக் குடியிருப்புக்கு 9 சதவிகிதமும், கமர்ஷியலுக்கு 12 சதவிகிதமும் வாடகை நிர்ணயிக்க வேண்டும். அடுத்து, கட்டிட மதிப்பு என்பது அதன் தளங்களைப் பொறுத்தது. மூன்று தளங்கள் இருக்கிறதெனில், முதல் தளத்திற்கு மொத்த நிலத்தின் மதிப்பையும் அந்தத் தளத்திற்கான கட்டிட மதிப்பையும் கணக்கிட வேண்டும். இரண்டாம் தளமென்றால், நிலத்தின் மதிப்பில் பாதியையும் மூன்றாவது தளமென்றால், நிலத்தின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கையும் கணக்கிட வேண்டும். இத்துடன் ஒரு வீட்டின் கூடுதல் வசதிகளைப் பொறுத்து (கார் பார்க்கிங், லிஃப்ட், ஏசி, வாட்டர் ஹீட்டர், ஃப்ர்னிச்சர், எலிவேஷன், ஓவர் டேங்க் போன்றவை) கணக்கிட்டுக் கொள்ளலாம். கரண்ட் உள்ளிட்ட வசதிகளைப்பொறுத்து, மொத்த மதிப்பில் 7.5 சதவிகிதம்வரை வருடத்திற்கு நிர்ணயிக்கலாம். தாம் கொடுக்கும் வாடகை அதிகம் என்று குடியிருப்பவர் நினைத்தால், சிறு வழக்கு நீதிமன்றத்தில் மனு போடலாம். அதன் பின்னர், குடியிருப்பவர் ஒரு என்ஜினீயரையும் வீட்டு உரிமையாளர் ஒரு என்ஜினீயரையும் வைத்து, வீட்டின் மதிப்பைக் கணக்கிட்டு அவரவர்களுக்குச் சாதகமாக சமர்ப்பிப்பார்கள். எது சரி? எது தவறு என்பதை இரண்டு என்ஜினியர்களும் கொடுத்த விவரங்களிலிருந்து சரி பார்த்து தீர்ப்பு வழங்குவார்கள். தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/2 ன்படி குடியிருப்பவர் வாடகை கொடுக்காமல் இருப்பது, உள் வாடகை அல்லது மேல் வாடகைக்கு விடுவது, வீட்டு உரிமையாளரை ‘நீ ஓனரே இல்லை’ எனச் சொல்வது, மூன்று மாதங்களுக்கு மேல் வீட்டைப் பூட்டியே வைத்திருப்பது, வீட்டை சேதப்படுத்துவது போன்ற காரணங்களுக்காக குடியிருப்பவரை காலி செய்யச் சொல்ல முடியும். தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/3 ன்படிவீட்டு உரிமையாளரின் வாரிசுகளுக்கு வீடு தேவை என்றாலோ, தன் சொந்தத் தேவைக்கு வேண்டுமென்றாலோ குடியிருப்பவரைக் காலி செய்யச் சொல்ல சட்டம் இருக்கிறது. தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 14 பி -ன் படிவீட்டை இடித்துக் கட்டவேண்டும் என்றால், அவரைக் காலி செய்யச் சொல்லலாம். வீட்டின் உரிமையாளர் வாங்கும் வாடகை நியாயமானது இல்லை என்கிறபோது சென்னைவாசிகள் என்றால், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சிறு வழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். மற்ற மாவட்டத்திலுள்ளவர்கள், முன்ஷிப் நீதிமன்றங்களை அணுகலாம். வீட்டு உரிமையாளருக்கும் குடித்தனக்காரருக்கும் இடையே ஏதாவது பிரச்சினை வந்து, பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்விடுவதும் உண்டு. அதுபோன்ற நேரங்களில், வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கில் வாடகைப் பணத்தை போட்டு வரலாம். வங்கிக் கணக்கு பற்றிய விவரம் கிடைக்கவில்லை எனில், மணியார்டர் செய்யலாம். அதையும் வாங்க மறுத்து திருப்பி அனுப்பினால், சிறு வழக்கு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்து வந்தால், குடித்தனக்காரர் மீது வீட்டின் உரிமையாளர் குற்றம் எதுவும் சொல்ல முடியாது. இதேபோல், வாடகைக்கு இருப்பவர் சரியாக வாடகை தரவில்லை அல்லது வாடகையே தரவில்லை என்றாலும் வீட்டின் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். வாடகை சரியாக தரவில்லை என்பதற்காக மின்சாரம், தண்ணீர் சப்ளையை நிறுத்துவது சட்டப்படி தவறு. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே இழப்பீடு பெற முடியும். வீட்டைக் காலி செய்ய வைக்க குடியிருப்பவர் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்றால், குறைந்தது இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு முன்னறிவிப்பு தரவேண்டும். இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே அக்ரிமெண்ட்டில் எழுதிக் கொள்வது நல்லது. சொந்தக் காரணம், மகன்/மகளுக்கு வீடு தேவை என்பது போன்றவற்றுக்காக வீட்டை காலி செய்யச் சொல்லலாம். அதே நேரத்தில், வீட்டின் உரிமையாளருக்கு அந்தப் பகுதியில் வேறு ஒரு வீடு இருந்து, அது காலியாக இருக்கும் பட்சத்தில் வாடகைக்கு இருப்பவரைக் காலி செய்ய வைக்க உரிமை இல்லை. வீட்டை இடித்துக் கட்டுவது என்றால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி வாங்கியதற்கான ஆதாரத்துடன்தான் வீட்டைக் காலி செய்யச் சொல்ல முடியும். வீட்டைக் காலி செய்த பிறகு இடிக்கவில்லை என்றால், ஏற்கெனவே வாடகைக்கு இருந்தவரை அதில் குடியமர்த்த வேண்டும். வீட்டை இடித்துக் கட்டிய பிறகும் பழைய வாடகைதாரர்கள் வீட்டைக் கேட்டால், அவர்களுக்குமுன்னுரிமை கொடுக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் ஒருவேளை தவறான தகவல் கொடுத்து காலி செய்ய வைத்தால், குடித்தனக்காரர் அதற்கான நஷ்ட ஈடு கோர வாய்ப்பிருக்கிறது. பெட்டி செய்தி: அக்ரிமெண்ட் அவசியம்! வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு வருபவர் உறவு நீடித்து நிலைத்து நிற்க, சில அடிப்படையான சட்ட விஷயங்களை அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். இதற்கு வழக்கறிஞர் வேலுமணி தரும் சட்டப்பூர்வமான ஆலோசனைகள்... ஒப்பந்தம் முதலில் வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு வருபவர் அக்ரிமெண்ட்/ஒப்பந்தம் போட்டுக் கொள்வது மிக முக்கியம். 20 ரூபாய் முத்திரைத்தாளில் முன்பணம், மாத வாடகை எவ்வளவு எனத் தெளிவாக ஒப்பந்தம் போட்டுக் கொள்வது மிக அவசியம். ஒப்பந்தத்தில் முன்பணம், மாத வாடகை, பராமரிப்புக் கட்டணம் தவிர வேறு ஏதாவது கட்டணங்கள் இருந்தால், அதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இரு தரப்பினரும் சேர்ந்துதான் மேற்கொள்ள முடியும். முன்பணம் வீட்டுக்கான முன்பணம் பெற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. சந்தை நிலவரத்தைப் பொறுத்தே இது இருக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் மாத வாடகையைப்போல் பத்து மடங்கும் மற்ற நகரங்களில் சுமார் ஐந்து மடங்கும் முன்பணம் வாங்குகிறார்கள். அவரவர் சாமர்த்தியத்திற்கேற்றாற்போல் பேரம் பேசி குறைத்துக் கொள்ள வேண்டியதுதான். வாடகை வாடகைக்குப் போகிறவர் முன்பணம் தொடங்கி, அனைத்துக்கும் உரிமையாளரிடம் ரசீது பெற்றுக் கொள்வது அவசியம். இதற்காக அச்சடித்த ரசீதுகள் எதுவும் தேவையில்லை. சாதாரண வெள்ளைத் தாளில் எழுதி வாங்கிக் கொண்டாலே போதுமானது. தேவைப்பட்டால், ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டியும் வாங்கிக் கொள்ளலாம்.

Sunday, 30 July 2017

ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தான்...

எமதா்ம ராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.

அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது.

மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.

மகன் கொஞ்சம் வளா்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம தனக்குள்ள பயத்தையும் விளக்கினார்.

 மகனே..நீ சிறந்த வைத்தியனாக வேண்டும்.  மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம்.

எப்படித் தொியுமா? ஒருவா் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவா் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன்.

மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அணைத்து கண்ணீா் விட்டு எமதா்மன் நழுவி விட்டார்.

மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவா் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சா்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.

கொஞ்ச நாளில் அந்த ஊா் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி.

 எமன் நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.
அவன் ஆசைப்பட்டபடியே அந்த அரசிளங்குமரியை மணந்து ராஜ்ஜியத்தை ஆண்டான்.
.
.
.
எப்படி?
.
.
.
.

 அரசிளங்குமரியின் அறையில் எமனைப் பார்த்ததும் பளிச்சென்று யோசனை பிறந்தது. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா..அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே..இங்க இருக்கார்..என்று அலறினான்.

 அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடிவிட்டான்.

#பொண்டாட்டின்னா_எமனுக்கே_பயம்🤣😂😂🤣🤣

உடல் சோர்வை போக்கும் பொன்னாங்கண்ணி...

உடல் சோர்வை போக்கும் பொன்னாங்கண்ணி...


🌍♨கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பல நோய்கள் நம்மை பற்றுகிறது. சிறுநீர்தாரையில் எரிச்சல், அதிக வியர்வை, உடல் சோர்வு, நீர்ச்சத்து இழப்பு உள்ளிட்டவை ஏற்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு  தீர்வு காண்பது  குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம்.

🌍♨பொன்னாங்கண்ணி, புளிச்ச கீரை, செவ்வாழை ஆகியவற்றை பயன்படுத்தி உடல் சோர்வை போக்கி, உடலுக்கு பலம் தரும் மருந்துகள் குறித்து பார்க்கலாம். சிவப்பு பொன்னாங்கண்ணி பல்வேறு நன்மைகளை கொண்டது. உடலுக்கு தேவையான சத்துக்களை தருவதுடன் தோலுக்கு மினுமினுப்பை கொடுக்கிறது. உடலுக்கு ஆரோக்கியம், அழகை தரக்கூடிய கீரை இது. புளிச்ச கீரையில் கால்சியம், இரும்பு சத்துக்கள் அதிகளவில் உள்ளன. சுவையான உணவாக விளங்கும் இது அற்புதமான மருந்தாகிறது. செவ்வாழை உணவாகி மருந்தாகிறது.

🌍♨புளிச்ச கீரையை பயன்படுத்தி உடல் சோர்வை போக்கும் சூப் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: புளிச்ச கீரை, நெய், மிளகுப்பொடி, உப்பு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெய் விடவும். நெய் உருகியதும் நசுக்கி வைத்திருக்கும் புளிச்ச கீரையை சேர்த்து வதக்கவும். இதனுடன் சிறிது மிளகுப்பொடி, உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சல் மாறும். நாவறட்சி, சோர்வு நீங்கும். உடலுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

🌍♨பல்வேறு நன்மைகளை கொண்டதும், புளிப்பு சுவையுடையதுமான இந்த கீரை எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியது. நார்ச்சத்து உடையது. சிவப்பு பொன்னாங்கண்ணி கீரையை பயன்படுத்தி உடல் சோர்வு, கண் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை, சீரகம், பனங்கற்கண்டு.செய்முறை: சிவப்பு பொன்னாங்கண்ணி கீரையை அரைத்து பசையாக்கி எடுக்கவும். இதனுடன் சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர கோடைகாலத்தில் ஏற்படும் கண் எரிச்சல், கண்சிவப்பு போன்றவை மாறும். உடல் சோர்வு நீங்கும்.

🌍♨சிவப்பு பொன்னாங்கண்ணி கீரையில் நார்ச்சத்து உள்ளது. இது நோய்கள் வராமல் பாதுகாக்கும். மலச்சிக்கலை போக்கும். கண்களுக்கு கூர்மையான பார்வையை கொடுக்கும். சிவப்பு பொன்னாங்கண்ணியில் இரும்பு சத்து, விட்டமின், மினரல் உள்ளிட்டவை உள்ளது. சிறுநீர் தாரையில் ஏற்படும் நோய்களைகுணமாக்குகிறது. செவ்வாழையை பயன்படுத்தி உடல் பலகீனத்தை போக்கி, உடலுக்கு பலம் தரும் உணவு தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: செவ்வாழை, தேன், பால்.செய்முறை: செவ்வாழை பழத்தை துண்டுகளாக்கி அதனுடன் தேன், காய்ச்சிய பால் சேர்த்து சாப்பிட்டுவர உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும். அதிக வெயிலால் சிறுநீர் தாரையில் எரிச்சல், உடல் எரிச்சல், அதிக வியர்வை, துர்நாற்றம், சோர்வு, மயக்கம் போன்றவை ஏற்படுகிறது. இதற்கு மேற்கண்ட மருத்துவம் பயனுள்ளதாக அமைகிறது.

🌍♨கொளுத்தும் கோடை வெயிலால் ஏற்படும் தலைவலியை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு கொடி பசலை கீரை மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட கொடி பசலை கீரை உடலுக்கு குளிர்ச்சி தரவல்லது. வலியை போக்கும் தன்மை கொண்டது. கொடி பசலை கீரையை அரைத்து பசையாக்கி நெற்றியில் பற்றாக போட்டுவைத்தால் தலைவலி வெகு விரைவில் விலகிப்போகும்.

பத்திரம் பதிவு செய்யும் போது...

கேள்வி 1.

நான் பல வருடங்களுக்கு முன்பு கோவை அவினாசி ரோட்டில் 10 சென்ட் இடம் வாங்கினேன்.  கடந்த மாதம் அந்த இடத்த விற்க முயற்ன போது, அந்த இடம் 2005 ஆம் ஆண்டே வேறொருவருக்கு விற்கப்பட்டுள்ளது தெரிய வந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் பார்த்த போது, எனது பெயரில் யாரோ கையயழத்து, கைரேகை போட்டு ஆள் மாற்றம் செய்து விற்றுள்ளனர்.  எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.  தயவு செய்து எனக்கு உதவுங்கள்.

பதில் – 1.

ஒவ்வொரு பத்திரம் பதிவு செய்யும் போது விற்பவரை எனக்குத் தெரியும் என இரு நபர்கள் சாட்சிக் கையயழுத்திட வேண்டும். விற்பவர் பத்திரத்திலும், பதிவாளர் அலுவலகத்திலுள்ள பதிவேட்டிலும் கைரேகை வைக்க வேண்டும். உங்கள் பிரச்சினையில், சாட்சிக் கையயழுத்திட்டவர்களுக்கும் இடத்தை விற்றவருக்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும். நீங்கள் சாட்சிக் கையழுத்திட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும், பதிவு செய்யப்பட்ட கிரையப் பத்திரம் செல்லாது என அறிவிக்கக் கோரி சிவில் நீதி மன்றத்திலும் நடவடிக்கை எடுக்கலாம்.

கேள்வி -2.

எனக்குக் காசோலை கொடுத்தவர்,தற்போது அவருடைய கையயழத்து இல்லையயனவும், இந்த காசோலை திருடு போய் விட்டதாகவும் கூறுகிறார்.  அவர் என் முன்னிலையில் கையயழுத்துப் போட்டு அந்தக் காசோலையை நேரடியாக என்னிடம் கொடுத்தார்.  இப்போது கையயழுத்தே அவருடையது இல்லை என்கிறார்.  எனக்கு என்ன செய்வதென புரியவில்லை. தங்களுடைய உதவியை நாடுகிறேன்.  இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?

பதில் – 2.

அவர் உங்களைப் பயமுறுத்த அப்படி கூறலாம்.  அவருடைய கையழுத்துதான் என்பது உங்களுக்கு நேரிடையாகத் தெரிகிறது.காசோலையை அவரிடமிருந்தே நீங்களே பெற்றிருப்பதாலும் அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.  நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்யுங்கள்.  அங்கும் அவர் அவருடைய கையயாப்பம் இல்லையயன மறுத்தால் அவருடைய மற்ற கையயாப்பங்களுடன் இணைத்துப் பார்த்து நீதிமன்றமே ஒரு முடிவுக்கு வரலாம்.  இல்லையயனில், கையயழுத்து நிபுணருக்கு அனுப்பிக் கருத்துக் கேட்கலாம்.

கேள்வி – 3.

தான செட்டில்மெண்ட்டுக்கும் உயிலுக்கும் என்ன வித்தியாசம்? தயவு செய்து கூறவும்.

பதில் – 3.

ஒருவர் தன்னுடைய சொத்தை தான செட்டில்மெண்ட் மூலம் ஒருவருக்கு எழுதிப் பதிவு செய்தால் அது உடனுக்குடன் செயலுக்கு வந்து விடும்.  தான செட்டில்மெண்ட் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும்.  உயில் எழுதி வைப்பவர் காலமான பிறகுதான் நடைமுறைக்கு வரும்  புதிவு செய்ய வேண்டியதில்லை.  சாட்சிகள் வேண்டும்.

கேள்வி 4.

நான் ஒரு சீட்டுக் கம்பெனியில் ரூ.1,00,000 க்குச் சீட்டுப் போட்டிருந்தேன்.  சீட்டை எடுத்தப்பிறகு சரியாகத் தவணைத் தொகை செலுத்த இயலாமல் போய்விட்டது.  நான் அதே கம்பனியில் வைத்திருந்த என்னுரைய டெபாசிட் தொகையை சீட்டு பாக்கிக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ளம்படி கடிதம் கொடுத்துவிட்டு வெளியூருக்கு வேலை நிமித்தமாக சென்று கடந்த மூன்றாண்டுகளாக அங்கு வசித்து வருகிறேன்.  இந்த நிலையில் சீட்டுத் தவணை செலுத்தவில்லை என சீட்டு நடுவர் முன்பு வழக்கு தொடர்ந்து என்னைக் கைது செய்ய சிவில் கோர்ட்டில் உத்தரவு பெற்றிருப்பதாகத் தெரிய வருகிறது.  நான் இப்போது என்ன செய்ய வேண்டும்.

பதில் – 4

உங்களுடைய டெப்பாசிட் பணம் சீட்டு நிலுவைத் தொகைக்கு சரியாக இருந்தும் அதனை எடுத்து அட்ஜஸ்ட் செய்து கொள்ளாமல், உங்கள் மீது சீட்டு நிறுவனம் வழக்குத் தொடர்ந்திருந்தால், அது சேவை குறைபாடு என்கிற அடிப்படையில் நுகர்வோர் நீதிமன்றத்தில் சீட்டு நிறுவனத்தின் மீது வழக்கத் தொடர்ந்து இழப்பீடு கேட்க இயலும்.   அதே சமயம், சிவில் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மேற் சொன்ன காரணங்களுக்காக இரத்து செய்யக் கோரி ஒரு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.

கேள்வி – 5

இந்து பொது குடும்பத்தைச் சேர்ந்த மைனரின் சொத்தை அவனது கார்டியன் தாயார் (தகப்பன் இல்லை) வில்லங்கங்கள் செய்தால் அவை செல்லுமா?

பதில் – 5

மைனர் நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவம் மைனரின் சொத்தைப் பாதுகாத்து மேற்பார்வை செய்து வரும் கார்டியன் வில்லங்கப்படுத்தினால், அதை செல்லாது என கூற இயலாது.  பின்னால் வீண் பிரச்சினைகள் வராமல் தவிர்க்க முன் கவனமாகவும் இருக்கவும் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து, மைனரின் சொத்தை வில்லங்கம் செய்வது அவரது நலனுக்காக என அனுமதி பெற்று வில்லங்கம் செய்தால் அது செல்லுபடி ஆகும்.  யாரும் கேள்வி கேட்க இயலாது.  மைனரே கூட அவர் மேஜரானவுடன் நீதிமன்ற அனுமதி பெற்று செய்யப்பட்ட வில்லங்கத்தை கேள்வி கேட்க இயலாது.

கேள்வி – 6.

நானும் என் பக்கத்து வீட்டுப் பெண்ணும் சிறுவயது முதலே உயிருக்கு உயிராகக் காதலித்துவருகிறோம்.  இந்நிலையில் பெண்ணின் பெற்றோர்கள் எங்கள் விருப்பத்திற்கு மாறாக
வேறு இடத்தில் திருமணம் நிச்சயித்துள்ளார்கள்.  இது விசயமாக ஊர் பஞ்சாயத்திடம்முறையிட்டோம்.  அதற்கு அவர்கள் ரூ.25,000/- கொடுத்தால் எங்கள் திருமணம் நடக்கும்என்கிறார்கள்.  பதிவுத் திருமணம் செய்து கொண்டாலும் அந்தப் பணம் கொடுக்க வேண்டுமாம்அந்த அளவிற்கு என்னிடம் பணம் இல்லை.  இச்சூழலில் நாங்கள் சாகத் துணிந்து விட்டோம்.
தங்களுடைய அறிவுரை தேவை.

பதில் – 6.

“நரிக்கு நாட்டாண்மை கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடுகள் கேட்குமாம்”.  நீங்கள் நரியை அணுக வேண்டியதில்லை. நல்ல மனம் படைத்தவர்களை அணுகி அவர்கள் மூலம்
திருமணம் செய்து கொள்ளுங்கள்.  ஓருயிர் ஈருடலான தாங்கள் எதையும் தாங்கிக் கொள்ளலாமே!எதற்கு மரணத்தைத் தழுவ வேண்டும்? மணம் புரிந்து மகிழ்ச்சியோடு வாழுங்கள்.  “ வாழ்க்கை
வாழ்வதற்கே” என்பதை மனதில் வையுங்கள்.

கேள்வி – 7

நான் அரசு ஊழியனாக இருந்து ஒய்வு பெற்றவன்.  ஓய்வு பெற்ற பின் என் மனைவி இறந்துவிட்டாள்.  நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன்.   எனக்குப் பிறகு என்மனைவிக்குக் குடும்ப ஓய்வு ஊதியம் கிடைக்குமா? என்பதைத் தெரிவியுங்கள்.

பதில் –7

உங்கள் இரண்டாவது மனைவியின் புகைப்படத்தையும் அவரது பெயரையும் இப்போதே நீங்கள்பணிபுரிந்த அரசுத் துறைக்குத் தகுந்த ஆதாரங்களுடன் அனுப்பி உங்கள் இரண்டாவது மனைவியின் பெயரை  உங்கள் முதல் மனைவிக்குப் பதிலாகப் பதிவு செய்து கொள்ளலாம்.  அவ்வாறு உங்கள் முதல் மனைவியின் பெயருக்குப் பதிலாகப் பதிவு செய்து கொண்டால், உங்கள் இரண்டாவது மனைவிக்கு உங்களுக்குப் பிறகு குடும்ப
ஓய்வூதியச் சட்டம், ஓய்வு பெற்றவரின் மனைவிக்குக் குடும்ப ஓய்வூதியம் கொடுக்க வேண்டுமென்றுகூறுகிறது.  இரண்டாவது மனைவிக்குக் குடும்ப ஒய்வூதியம் இல்லையயன்று சட்டம் கூறவில்லை.

கேள்வி – 8.

குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை போலீஸார் விலங்கு மாட்டி நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்லலாமா?

பதில் – 8

குற்றம் சாட்டப்பட்ட யாரையும் விலங்கிட்டு அழைத்துச் செல்ல காவல் துறையினருக்குஉரிமையில்லை.  அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகள் அவர்களை அவ்வாறு செய்ய
அனுமதிப்பதில்லை.  விலங்கிட்டு ஒருவரை அழைத்துச் செல்வது மனித உரிமையும், இந்தியஅரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகளுள் அவர்களை அவ்வாறு செய்ய அனுமதிப்பதில்லை
விலங்கிட்டு ஒருவரை அழைத்துச் செல்வது மனித உரிமையையும், இந்திய அரசமைப்புச் சட்டஅடிப்படை உரிமைகளை மீறுவது ஆகும்.  காவல் துறை நிலை ஆணை (police standing orders) 666 ஐ மீறுவதாகும்.  பத்தாண்டுகளுக்கு முன்பே இந்திய உச்ச
நீதிமன்றம் காவல் துறையினர் யாரையும் விலங்கிட்டு அழைத்துச் செல்லக் கூடாதெனதெளிவு படுத்தியுள்ளது.  இதைப் பற்றியயல்லாம் காவல் துறையினருக்கும் புரிவதில்லை.
குற்றவியல் நீதிபதிகளுக்குக் கூட இதைக் கண்டிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதில்லை.காவல் துறையினர் ஒருவரை விலங்கிட்டு அழைத்துச் செல்வாரானால், அதற்காக அவர்கள் மீது
வழக்குத் தொடரலாம்.  குற்றம் சாட்டப்பட்டவர் பயங்கரவாதி என்றும் அவரை விலங்கிடாமல் அழைத்துச் செல்ல முடியாது என்றும் நீதிமன்றம் நம்புகிற வகையில் காவல்த் துறையினர்
மெய்ப்பித்துக் காட்ட வேண்டும்.

கேள்வி –9

நான் முதலில் ஒரு உயில் எழுதி அதன் மூலம் என்னுடைய வீட்டை கடைசி மகன் பெயரில்எழுதி வைத்தேன்.  அடுத்து வேறு ஒரு உயில் எழுதி ஒரு மகன் மற்றும் ஒரு மகன் பெயரில்
வீட்டை எழுதி வைத்தேன்.  பின்னர் அந்த உயிலையும் ரத்து செய்து விட்டு மூன்று மகன்கள்பெயரில் எழுதினேன்.  கடைசியாக எழுதிய உயில் பதிவு செய்யவில்லை.  பதிவு செய்யப்படாதஉயில் செல்லுமா?

பதில் – 9

நீங்கள் கேட்பதைப் பார்த்தால் உங்களுக்கு உயில் எழுதுவதுதான் வேலையாக இருக்கிறதுபோலும்.  உயில் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.  எழுதியதைக் கிழித்தும்
போடலாம்.  நீங்கள் கடைசியாக எழுதிய உயிலே செல்லும்.  உயில் பதிவு செய்யப்படவேண்டும் என்ற கட்டாயம் சட்டத்தில் இல்லை.  இருந்தாலும் பதிவு செய்து கொண்டால்நல்லது என்பதை அறியவும்.

கேள்வி – 10

அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள்.  ஆட்சி மாறியவுடன்கொள்ளையடித்த சொத்துக்களைப் பறித்துக் கொள்ளச் சட்டம் ஏதாவது உண்டா?

பதில் – 10

நேற்று கொள்ளையடித்தவர்கள் இன்று உத்தமர்களாக வலம் வருகின்றனர்.  இன்றுகொள்ளையடிப்பவர்கள் நாளைக்கு உத்தமர்களாக வலம் வர இருக்கிறார்கள்.  இதுதானே
நாட்டின் இன்றைய நிலை.  தகுந்த ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ்கொள்ளையடித்த சொத்துக்களைப் பறிக்க வழி வகைகள் செய்ய வேண்டும்.  பூனைக்கு யார்மணி கட்டுவது?

கேள்வி  11

அரசு  ஊழியர் ஒருவருக்குத் தவணைமுறையில் பிரிட்ஜ் வாங்க நான் பிணைக் கையயழுத்துப் போட்டேன்.  ஆனால் சரியாகத் தவணையைக் கட்டாத நிலையில் அவர் எங்கோ மாற்றலாகிப் போய்விட்டார்.  தவணை முறையில் பிரிட்ஜ் கொடுத்த நிறுவனம் என் மீதும் அவர் மீதும் வழக்குத் தொடர்ந்துள்ளது.  நான் கண்டிப்பாகப் பணம் கட்ட வேண்டுமா?

பதில் 11

பிரிட்ஜ் வாங்க பிணைக் கையழுத்து நீங்கள் போட்டதால் பணம் கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.  பிரிட்ஜ் வாங்கியவர் எங்குள்ளார் என்பது தெரியாத நிலையில் பிரிட்ஜ் நிறுவனம் நீதிமன்றத்தின் மூலமாக வசூல் செய்து கொள்ளலாம்.  அதன் பின்னர் நீங்கள் பிரிட்ஜ் வாங்கியவர் மீது வழக்குப் போட்டு உரிய தொகை, அதற்குண்டான வட்டி மற்றும் வழக்கிற்கான செலவுத் தொகைகளையும் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம்.

கேள்வி –1 2
ஒரு குழந்தை பிறந்த பின்பு என் மனைவி வேறு ஒருவனைக் காதலித்து அவனுடன் சென்று விட்டாள்.  குழந்தையையும் அழைத்துக் கொண்டுப் போய்விட்டாள்.  எனக்கு விடுதலையும் எழுதிக் கொடுத்துவிட்டாள்.  அதனால் என்றைக்காவது ஒரு நாள் வந்து சொத்தில் பங்கு கேட்க இயலுமா?

பதில் – 12

உங்கள் மனைவி எழுதிக் கொடுத்த விடுதலைப்பத்திரம் கண்டிப்பாகச் செல்லாது.  நீங்கள் முறையாக நீதிமன்றம் மூலமாக விவாகரத்து வாங்கியிருக்க வேண்டும்.  அதனால் நீங்கள் வேறொரு திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வத் தடை இருக்கும்.   விவாகரத்து நடைபெறவில்லையயனில், உங்கள் சொத்தில் பங்கு வேண்டுமென்று உங்களை விட்டுச் சென்ற மனைவி உரிமை கொண்டாடுவாள்.

கேள்வி – 13
கொலை அல்லது தற்கொலை பற்றித் தகவல் கொடுத்தால், தகவல் கொடுத்தவர் சாட்சி சொல்ல வேண்டும் என்று சொல்கிறார்களே, சரியா?

பதில் – 13
கண்டிப்பாகச் சாட்சி சொல்லித்தான் ஆக வேண்டும்.  அதில் எந்தவிதமான சந்தேகமோ,தவறோ கிடையாது.  வழக்கில் உண்மையான தகவலைத் தான் அறிந்தவாறு சொல்வது நல்ல குடிமகனின் கடமை என்பதை அறிந்து கொள்ளவும் சாட்சி சொல்லப் பயப்படுவது, தன் கடமையைத் தட்டிக் கழிப்பதற்கு ஒப்பாகும்; குற்றமும் ஆகும் என்பதை மனதில் வையுங்கள்

கேள்வி – 14
திருமணத்திற்குப்பிறகு இரண்டு மாதங்கள்தான் என் கணவர் என்னுடன் வாழ்ந்து வந்தார். பின்னர் என்னைத் துரத்தி விட்டார்.  எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.  குழந்தை பிறந்த அன்று வந்து பார்த்துவிட்டுச் சென்றவர்தான், இன்னும் திரும்பவேயில்லை. இப்போதைக்குப் பிள்ளைக்கு வயது பத்தாகிறது.  வேறு திருமணம் செய்து அவர் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்.  இந்நிலையில் என் ஆண் குழந்தை அவருக்கு வேண்டுமாம்!  அவர் கேட்பது சரியா? என் பிள்ளையை இழக்க நேரிடுமா?

பதில் – 14

நீதிமன்றம் சென்றால் கூட உங்களிடமிருந்து உங்கள் குழந்தையை உங்களை விட்டு ஓடிப் போன கணவன் பெற முடியாது.  கண்டிப்பாகக் குழந்தையை உங்களிடமிருந்து பிரிக்க மாட்டார்கள் என்கிற தைரியத்தில் இருங்கள்.

கேள்வி – 15

நகரங்களில் சினிமாA/C  தியேட்டர் என்று விளம்பரப் படுத்தி, அதற்குண்டான கட்டணத்தையும் சேர்த்து ரூ.50/-, ரூ.100/- என்று டிக்கெட்டுகளை விற்பனை செய்கின்றனர்.  ஆனால் சினிமா தியேட்டரில் A/C  வேலை செய்வதில்லை.  இப்படிப்பட்ட சூழலில் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா? என்ன நடவடிக்கை எடுக்கலாம்?

பதில் – 15

தியேட்டர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கலாம்.  வசதி செய்து கொடுக்காதது ஏமாற்றுக் குற்றமாகும்.  தொடர்ந்து கொண்டேயிருந்தால், காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்கலாம். அவர்கள் குற்ற வழக்குப் பதிவு செய்வார்கள்.  மேலும் நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஒரு சிறு தொகை நஷ்ட ஈடாகக் கேட்கலாம்.

குற்றவியல் நீதிமன்றங்கள்...

குற்றவியல் நீதிமன்றங்கள்

1. குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (JM Court Judicial Magistrate Court)
மாநகர (அ) பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
Metropolitan Judicial Magistrate Court
சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம்

2. தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (CJM Court Chief Judicial Magistrate Court)
மாநகர (அ) பெருநகர தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
Chief Metropolitan Judicial Magistrate Court

3. அமர்வு நீதிமன்றம் Sessions Court

குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்

குற்ற வழக்குகளை மட்டும் விசாரனை செய்யும் அதிகாரம் கொண்டது சாதாரனமாக அதிக பட்சம் 3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கும் அதிகாரம் உள்ளது என்று பொருள் கொள்ளலாம். இதன் நீதிபதியை "குற்றவியல் நீதித்துறை நடுவர்" என்று அழைப்பார்கள் இந்த நீதிமன்ற எல்லை காவல் நிலையம் அடிப்படையில் இருக்கும் நான்கு ஐந்து காவல் நிலையங்கள் ஒரு நீதிமன்ற ஆள்வரைக்குள் வரும், சாதாரனமாக வருவாய் வட்டத்திற்கு (தாலுக்கா) ஒரு நீதிமன்றம் இருக்க வாய்ப்பு உள்ளது.

மாநகர (அ) பெருநகர நீதித்துறை நடுவர்

நீதிமன்றம் சென்னை மாநகர பகுதியில் குற்ற வழக்குகளை மட்டும் விசாரனை செய்யும் அதிகாரம் கொண்டது.

தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (CJM Court Chief Judicial Magistrate Court) என்பது மாவட்ட அளவில் குற்றவியல் நீதித்துறை நடுவர்களை நிர்வாகம் செய்யும் நீதிமன்றம் ஆகும்.
கொலை முயற்சி போன்ற வழக்குகளை விசாரனை செய்யும் அதிகாரம் கொண்டது. 7 ஆண்டுகளுக்கு மிகாமல் தண்டனை வழங்கும் அதிகாரம் கொண்டது

சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என்பது குறிபிட்ட வகையான வழக்குகளை விசாரனை செய்ய அமைக்கப்பட்டது ஆகும்
(எ.கா) காசோலை வழக்குகள்

அமர்வு நீதிமன்றம் Sessions Court என்பது மாவட்ட அளவிலான நீதிமன்றம் கொலை வழக்கு உள்ளிட்ட மிகபெரிய குற்ற வழக்குகளை விசாரனை செய்யும் அதிகாரம் கொண்டது மரன தண்டனை கொடுக்கும் அதிகாரம் கொண்டது.

கூடுதல் அமர்வு நீதிமன்றம் என்பது அமர்வு நீதிமன்றம் கொண்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் கொண்டது.மாவட்டத்தில் தேவைக்கு ஏற்ப பல இருக்கும்

உதவி அமர்வு நீதிமன்றம் என்பது 10 ஆண்டுகளுக்கு மிகாமல் தண்டனை வழங்கும் அதிகாரம் கொண்டது வழக்கமாக சார்பு நீதிமன்றம் (Sub Court) உதவி அமர்வு நீதிமன்றமாகவும் குற்ற வழக்குகளில் செயல்படும்

உங்கள் ஊரில் உள்ள  நீதிமன்றம் விபரம் அறிய http://services.ecourts.gov.in/ecourtindia/

குற்றவியல் வழக்குகளில் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகபட்ச தண்டனை வழங்கும் அதிகாரம்:

1. குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (JM Court Judicial Magistrate Court)
மாநகர (அ) பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
Metropolitan Judicial Magistrate Court

3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.

2. தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (CJM Court Chief Judicial Magistrate Court)
மாநகர (அ) பெருநகர தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
Chief Metropolitan Judicial Magistrate Court
7 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.

* உதவி அமர்வு நீதிமன்றம் Assistant SESSIONS COURT : 10 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.

* கூடுதல் அமர்வு நீதிமன்றம் ADDITIONAL SESSIONS COURT : அமர்வு நீதிமன்றத்திற்கு இனையான சமமான அதிகாரம்

* முதன்மை அமர்வு நீதிமன்றம் Principal SESSIONS COURT : ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது 10 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
மரன தண்டனை விதிக்கலாம் ஆனால் உயர் நீதிமன்றம் உறுதி படுத்த வேண்டும்

* MAHILA COURT : அமர்வு நீதிமன்ற அதிகாரம்
நீதிதுறை நடுவர் அளவிலும் சில MAHILA COURT உள்ளது

* SPECIAL COURT : சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்ட உத்திரவில் சொல்லப்பட்டுள்ள அதிகாரம்
(அமர்வு நீதிமன்ற அதிகாரம் மிகாமல் )

* HIGH COURT : மரண தண்டனை அல்லது ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.

* SUPREME COURT : மரண தண்டனை அல்லது ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.

இணையம் பயன்படுத்தும் பெண்களே. உங்களை பாதுகாக்க சட்டம்...

#பெண்களே_பயன்படுத்திகொள்ளுங்கள்
இணையம் பயன்படுத்தும் பெண்களே. உங்களை பாதுகாக்க சட்டம் இருக்கிறது
பிறர் அறிய பகிர்ந்து உதவுங்கள் நண்பர்களே //
உங்கள் ஃபேஸ்புக் இன்பாக்ஸில் ஆபாசமாக மெசேஜ் அல்லது படங்கள் அனுப்பினாலோ, ஈமெயிலில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பினாலோ, ஃபோனில் ஆபாசமாக பேசினாலோ, வழக்கறிஞரை சந்தித்து 66A செக்ஷன் மூலம், சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம். ஃபேக் ஐடியாக இருந்தாலும் காவல் துறையினர் ஆளை கண்டுப் பிடித்து விடுவர். மெசேஜ்களை டெலிட் செய்யாமல் வைத்திருங்கள். அதுவே ஆதாரமாகும்.
IT act section 66A. Punishment for sending offensive messages through communication service, etc. upto 3 years imprisonment
உங்களைப் பற்றி தரக்குறைவாக ஃபேஸ்புக் வாலிலோ, ப்ளாகிலோ போட்டிருந்தால் 509 செக்ஷன் மூலம் நடவடிக்கை எடுக்கலாம். ஒரு வருட சிறைத் தண்டணை. அந்த போஸ்ட்டை ஸ்க்ரீன்ஷாட் செய்து விடுங்கள். அதுவே ஆதாரமாகும்.
IPC Section 509: Word, gesture or act intended to insult the modesty of a woman: Acts of sexual harassment demeaning a woman on the basis of her gender or sexuality - and other forms of sexual abuse faced by women online - can fall under this. one year imprisonment
உங்கள் ஃபோட்டோக்களை இன்னொருவர் ஷேர் செய்து தரக்குறைவாக விமர்சித்து இருந்தாலோ, ஆபாச சைட்களில் உங்கள் ஃபோட்டோக்களை போட்டிருந்தாலோ, செக்ஷன் 499 படி ஒரு வருட சிறைத் தன்டணை கிடைக்க செய்யலாம். உங்கள் ஃபோட்டோ இருக்கும்னிடத்தை ஸ்க்ரீன்ஷாட் எடுங்கள்.
IPC Section 499: Defamation:
Harming the reputation of a person through words, signs, or visible representations. Many women bloggers and Tweeters say that the violent sexist slander they receive goes on to create an irrecoverably negative message for them within their communities, societies, etc. 2 years imprisonment
இந்தியாவில் எங்கு இருந்தாலும் இந்த சட்டம் செல்லுபடியாகும். வெளிநாட்டில் இருந்து இந்தியர்கள் குற்றம் புரிந்தால் IPC 188 படி மேற்சொன்ன சட்டப்பிரிவுகளில் உள்ளூரிலேயே வழக்கு பதிவு செய்யலாம்.
மேற்சொன்ன தகவல்களை வைத்து உங்களை இழிவுபடுத்தியவனை தொடர்பு கொண்டும் பனியவைக்கலாம்
தைரியமாக புகார் கொடுங்கள். உங்கள் உரிமையை நிலைநாட்டுங்கள்.

உலக அதிசயம் என்றால் என்ன?

உலக
அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின்
அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது
என்பது தான் உலக அதிசயம்.

👉 நம் தமிழ்நாட்டின் *நெல்லையப்பர் கோவிலில் கல் தூணை தட்டினால்*
*" ச, ரி, க, ம, ப, த, நி "*
என்கிற ஏழு
இசை சப்த ஸ்வரங்கள் ஒலிக்கும் *கல்லுக்குள் 7*
*ஸ்வரங்களை* வைத்தார்களே. அது உலக
அதிசயம்.

👉 திருப்பூரில் உள்ள *குண்டடம் வடுக நாத*
*பைரவர் கோவிலில்* *குழந்தை தாயின்*
*வயிற்றில் இருக்கும்* *பொழுது, குழந்தை*
*இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில்*
*இந்த விதமான Positions-ல் இருக்கும்*
என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள். அது
உலக அதிசயம். அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட இந்த அதிசய சிற்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை.

👉 இன்றும் நிறைய கோவில்களில்
குறிப்பிட்ட *ஒரு தேதி,* *நேரத்தில் பூ மாலை*
*போல் வந்து* *சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும்.* அப்ப
எவ்ளவு துல்லியமாக Measurement செய்து
ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று
பாருங்கள். சில கோவில்களில் தினமுமே
சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது பூ மாலை
போல் வந்து விழும்.

👉 வட சென்னையில் உள்ள *வியாசர்பாடி* *ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3*
*வேளையும் சூரிய ஒளி* *சிவலிங்கத்தின் மீது*
*மாலை போல் வந்து* *விழும்*. இந்த கோவிலில்
உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள்
பழமையான லிங்கம் தெரியுமா? *ஐயாயிரம்*
*ஆண்டுகள்*. இது உலக அதிசயம்.

👉 *மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரியகோவில்* சிற்ப, கட்டிட வேலைபாடுகளில்
உள்ள அதிசயங்களை பற்றி முழுமையாக நமக்கு தெரியவேண்டுமென்றால்
அதற்கு இந்த ஒரு பிறவி போதாது.

👉 *ஓசோன்* 20-ம் நூற்றாண்டில் கண்டு
பிடிக்கப்பட்ட படலம். *700 ஆண்டுகளுக்கு*
*முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன்* *கோவிலில்*
ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம்,
அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் என்று அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது.
அது உலக அதிசயம்.

👉 *யாழி என்கிற மிருகத்தின்* சிலை பல பழங்கால கோவில்களில் இருக்கும்.
*டைனோசர் போல்.* அதுவும் உலகில் வாழ்ந்து
அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில
பழம்கால கோவில்களில் உள்ள யாழி
*சிலையின் வாயில் ஒரு உருண்டை*
*இருக்கும்*. அந்த உருண்டையை நாம்
உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள்
ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி
வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.

👉 இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய
மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி
விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு
நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7
ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை எந்தநாட்டு கொம்பனாலும்  செய்ய முடியாது. வாயில்
உள்ள *உருண்டையை* *உருட்டலாம். ஆனால்*
*உருவ முடியாது*.இந்த வித்தையை இன்று
எந்த வல்லரசாலும் செய்ய முடியாது.

👉 மிகப்பெரிய பிரம்மாண்ட கற்கோவில்களை
அழகிய கலை வேலைபாடுகளோடு
உருவாக்குவது, இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது.

👉 அது போல் ஜெயங்கொண்டத்தில் உள்ள *கங்கை*
*கொண்ட சோழபுரம்* கோவில் ஒரு வரலாற்று
சிறப்பு மிக்கது. அக்கோவிலில் உள்ள
கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம்
இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு
தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால்
*கிணற்றில் குளிக்கலாம். ஆனால்*
*மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது*
*தெரியாது.* அன்றைய ராணிகளுக்காகவே
கட்டப்பட்ட கிணறு அது.
அது போல் அக்கோவிலில் உள்ள கருவறையில்
சுவர்களில் *மரகதகற்கள்* பதித்துள்ளனர். அதனால்
*வெளியே வெயில் அடித்தால் உள்ளே*
*குளிரும். வெளியே மழை பெய்தால் உள்ளே*
*கதகதப்பாக இருக்கும்.*
அது போல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள்
பதுங்கும் உயரத்தில் *பாதுகாப்பு பெட்டகம்*
உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும்
படைவீரர்களும் பதுங்கும் வகையில்
கட்டியுள்ளார் நமது ராஜேந்திர சோழர்.

மறதமிழரின் கட்டிடகலையை வாழ்த்துவோம்.
தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாப்போம்.

*நமது முன்னோா்களின் திறமையையும்*
*கலைநயத்தையும்* *போற்றி* *தலைவணங்குவோம்*
இம்மண்ணில் பிறந்தமைக்கு பெருமித
ம்
கொள்வோம்....!

Saturday, 29 July 2017

பொது மக்களும் சட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...

பொது மக்களும் சட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் :
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 326 :
இந்திய தண்டனைச் சட்டத்தின் 326ஆவது பிரிவு (I.P.C 320) கடுங்காயத்தை அல்லது கொடுங்காயத்தை (Grievous Hurt) ஏற்படுத்தும் குற்றத்தை வரையறுக்கிறது.
#வரையறை :
கீழ்க்கண்ட எட்டுள் ஏதேனும் ஒன்றோ அல்லது பலவோ இருப்பின் அது கடுங்காயமாகும்.
1) ஆண்மையிழக்கச் செய்தல் (Emasculation)
2) ஏதேனும் ஒரு கண்ணின் பார்வையை நிரந்தரமாக இழக்கச் செய்தல்
3) ஏதேனும் ஒரு செவியின் கேட்கும் தன்மையை நிரந்தரமாக இழக்கச் செய்தல்
4) ஏதேனும் ஓர் உடல் உறுப்பையோ அல்லது மூட்டு இணைப்பையோ இழக்கச் செய்தல்
5) ஏதேனும் ஓர் உடல் உறுப்பையோ அல்லது மூட்டு இணைப்பையோ சிதைத்தல் அல்து வலுவிழக்கச் செய்தல்
6) தலை, முகம் ஆகியவற்றை உருக்குலைத்தல்
7) பல், எலும்பு ஆகியவற்றில் முறிவு ஏற்படும் படியோ அல்லது அவை விலகிப்போகும்படியோ செய்தல்
8) உயிருக்கே ஆபத்து, இருபது நாட்களுக்கும் மேலாக வலி அல்லது அன்றாடக் கடமைகளைச் செய்ய முடியாமல் முடக்குதல் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை ஏற்படுத்தும் வகையில் காயமுண்டாக்குதல்.
இத்தகைய குற்றத்திற்கு 7 வருட சிறை வைப்பு மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
நன்றி - வழக்கறிஞர்   ராஜ நந்தினி

பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள் ..... !!!

பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள் ..... !!!      

 1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.

அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது.

அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான்.

சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி.

இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை.

தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல.

அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு.

ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.

ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.

ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.

முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட,

என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை;

நாளைய பொழுதும் நிச்சயமில்லை;

இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி.

ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம்.

ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.

அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது

WELCOME TO THE 21ST CENTURY!

WELCOME TO THE 21ST CENTURY!
*Our Phones -  Wireless
*Cooking -         Fireless
*Cars -               Keyless
*Food -               Fatless
*Tyres -             Tubeless
*Tools -              Cordless
*Dress -             Sleeveless
*Youth -             Jobless
*Leaders -         Shameless
*Relationships -Meaningless
*Attitude -           Careless
*Wives -              Fearless
*Babies -            Fatherless
*Feelings -         Heartless
*Education -      Valueless
*Children -         Mannerless
PARLIAMENT-  CLUELESS
MASSES -          HELPLESS
Everything is becoming LESS but still our hope in God is - Endless.
In fact I am Speechless Because Salvation remains Priceless!!
If u don't share this, you are faithless.

வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

தெரிந்து மிதித்தாலும்........ தெரியாமல் மிதித்தாலும்....... மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.



 நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை................
 அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட ........................சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..!




 'சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது.. ............
உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை...........




 நோய் வரும் வரை உண்பவன்............உடல் நலமாகும் வரை....... உண்ணாதிருக்க வேண்டி வரும்!




 பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல... ...............
ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..............!




 பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?..
செலவு செய்யுங்க..........!

 உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?..
கடன் கேளுங்க..............!





 பிச்சை போடுவது கூட சுயநலமே............... புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...






 அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை...................ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.






 வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு.. ................
அதற்கு அவமானம் தெரியாது...............
 விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்.............!!






 வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".

 வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"
 





 திருமணம் -
ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்............................
 ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.................!!
 





 முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்,....................
 பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.............
 அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.
 





 மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்குமே...........................என்ற ஒரு காரணத்திற்காகவே...................... நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன..
 





 நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.
   





 இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட.................... வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!






பகலில் தூக்கம் வந்தால்.................உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்.............!!
 இரவு தூக்கம் வரலைனா..................... மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!





 துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது.............
 கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..
 

 

 தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள.................... அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும்............................ எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது............


நட்புடன் உங்கள் நண்பன்.

பிரச்சினையாக பாருங்கள்...

🐀🐀 எலி 🐀🐀
~~~~~~~~~~~~~~

ஒரு பண்ணயார் வீட்டில் ஒரு எலி வசித்து வந்தது...
ஒரு நாள் தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.

எலி வலையை விட்டு தலையை உயர்த்திப் பார்த்தது.

வீட்டின் எஜமானனும்,
எஜமானியும்,
 ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஏதோ நாம் சாப்பிடக்கூடிய ஒரு பொருள் தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி.

அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.

அதைப்பார்த்ததும் அந்த எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது...

உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது...

"பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார்.

எனக்கு பயமாக இருக்கிறது என்றது.."

இதைக் கேட்ட கோழி விட்டேற்றியாகச் சொன்னது.."

உன்னைப் பொறுத்தவரை இது கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.

நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றது கோழி.."

உடனே அது ..
பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் சென்று..
அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது.

வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு,
"நான் எலிப் பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்..." என்றது.

மனம் நொந்த எலி... அடுத்தாக...
பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது...

ஆடும் அதேபதிலைச் சொல்லியது.

அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை...

"எலிப்பொறியை பார்த்து,
என்னையும் பயப்படச் சொல்கிறாயா?"
என்று நக்கலும் அடித்தது.

அன்று இரவு...
எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு...

பண்ணையாரும்,
அவர் மனைவியும், தூங்கப் போயினர்...

ஒரு அரை மணி நேரத்தில்,,
*"டமால் "* என்றொரு சத்தம்.

எலிதான் மாட்டிக் கொண்டு விட்டது என்று என்னிய  பண்ணையார் மனைவி ஓடிவந்து..
எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.

ஆனால்...
எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.

எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.

விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்ட பின்னும்..
பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.

அருகில் இருந்த ஒரு மூதாட்டி...

"பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு.."
சிக்கன் சூப் வைத்துக் கொடுத்தால் நல்லது.."
என்று யோசனை சொன்னாள்.

கோழிக்கு வந்தது வினை.

கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது.
கோழி உயிரை விட்டது.

அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.

உறவினர்கள் சிலர் நலன் விசாரிக்க வந்தார்கள்...

அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள்...

வான்கோழியும் உயிரை விட்டது.

சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது.

பண்ணையார் தன் மனைவி பிழைத்ததைக் கொண்டாட
ஊருக்கே விருந்து வைத்தார்.

இந்த முறை ஆட்டின் முறை.....

விருந்தாக ஆடும் உயிரை விட்டது..

நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.

பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.

"எலி தப்பித்து விட்டது. அப்பாடா..."

நீதி :- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால்
"என்ன..? என்றாவது கேளுங்கள்.

ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.

அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்.

அடுத்த முறை... நம்முடையதாகவும் இருக்கலாம்..

ஏனெனில்..
மீத்தேன் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் விவசாயி பிரச்சனை என்று பாராமல் அனைத்து பொதுமக்கள் பிரச்சினையாக பாருங்கள்...

நாம் கண்டிப்பாக சாப்பிட்டு ஆகவேண்டுமே...

நன்றி:🔴வாட்ச்ஆப் தோழர்கள்.

படிச்சுட்டு என்னாவா ஆவரதுன்னு ஒரே குழப்பமா இருக்கு...

விருந்தாளி :- என்ன பண்ற

பையன் :- படிக்கிறேன்

விருந்தாளி :- படிச்சு என்னாவா ஆகப்போற ?

பையன் :- அதைப் பற்றிதான் யோசனைப் பண்ணிக்கொண்டு இருக்கிறேன்

விருந்தாளி :- என்னன்னு ?

பையன் :- படிச்சுட்டு என்னாவா ஆவரதுன்னு ஒரே குழப்பமா இருக்கு

விருந்தாளி :- குழப்பமா இருக்கா ஏன் ?

பையன் :- ஒரு ஆசிரியரின் பத்துவருட சம்பாத்தியம் 20 லட்சம்

விருந்தாளி :- அப்ப வாத்தியாருக்கு படி

பையன் :- ஒரு இன்ஜினியரின் பத்து வருட வருமானம் 450 லட்சம்

விருந்தாளி :- அட அப்ப இன்ஜினீயர் வேலைக்கு படி

பையன் :- டாக்டர் தொழில்ல பத்துவருட வருமானம் 500 லட்சம்

விருந்தாளி :-அடேயப்பா அப்ப டாக்டருக்கு படி

பையன் :- ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியின் பத்து வருட வருமானம் 700 லட்சம்

விருந்தாளி :- பார்ரா ... நீ நல்லா படிச்சு ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியா வர முயற்சி பண்ணு

பையன் :- எதுவுமே படிக்காத ஒரு அரசியல்வாதியின் பத்து வருட வருமானம் 1117கோடியிலேர்ந்து 40000கோடி வரை

விருந்தாளி :-.....!!! மயங்கி விழுகிறார்

பையன் :- -நான் தான் சொன்னேன்ல எனக்கு ஒரே குழப்பமா இருக்குன்னு..

இதான் இந்த உலகம்..
இது சிரிக்க வேண்டிய விஷயம் மட்டும் இல்ல..
சிந்திக்க வேண்டிய விஷயம்....😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉

அளவிற்கு அதிகமாக உண்டால்...

உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?



🍴🍹🍡
அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் & ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.

🍴🍹🍡
பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.


🍴🍹🍡
மிளகு சேர்ப்பதால், உணவில் உள்ள விஷம் நீங்குவதோடு உடலில் உள்ள விஷமும் முறிகிறது.


🍴🍹🍡
உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல்; குளிர்ச்சியையும் தருகிறது.


🍴🍹🍡
வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் அது உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.


🍴🍹🍡
கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.


🍴🍹🍡
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.

🍀🌹
உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.

🍀🌹
காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.

🍀🌹
உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது.

🍀🌹
இடதுகையை கீழே ஊன்றிக் கொண்டை சாப்பிடக்கூடாது.

🍀🌹
சாப்பிடும் சமயம் டி.வி பார்க்கக் கூடாது.

🍀🌹
வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.

🍀🌹
காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.

🍀🌹
சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.

🍀🌹
உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். தயவுசெய்து வலைத்தளம் முதலியன அப்போது வேண்டாமே!

🍀🌹
இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.


🍀🌹
சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது.

🍀🌹
நின்று கொண்டு சாப்பிக் கூடாது.

🍀🌹
அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.

🍀🌹
சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது.

🍀🌹
தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.

🍀🌹
இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்.

🍀🌹
ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.

🍀🌹
எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது.

🍀🌹
வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.

🍀🌹
புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.

🍀🌹
வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.

🍀🌹
நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.

🍀🌹
இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.

🍀🌹
உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.

🍀🌹
அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.

🔥🔥🍍
உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.

💖💖💖🍎🍏🍑🍉🌺🌸

கன்னிகாதானம்" என்றால் என்ன?

*"கன்னிகாதானம்" என்றால் என்ன?*

வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள்.

நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு.

ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்!

திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்!

இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி.

'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம்,
மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண..' என்று அந்த மந்திரம் நீள்கிறது.

அதாவது, கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற மகாதானத்தைச் செய்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.

உன் வம்சவிருத்திக்காக எம் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப்பெரியது என்று சாஸ்திரம் போற்றுகிறது.

ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும்.

ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால் பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சிலாகிக்கிறார்கள் சான்றோர்கள்!

ஆக, பெண்பிள்ளையைப் பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம்சொல்கிறது...

*மகளை பெற்ற என் நண்பர்களுக்கு சமர்ப்பணம்*

உங்கள் குழந்தைகளுக்கு நிறங்களை கற்றுக்கொடுங்கள் |

அன்போடு பெற்றெடுத்த அன்னை...

ஆண் மயிலுக்கு

தோகை உண்டு

ஆதலால் அஃது

அழகோ அழகு

என்று ஆடினேன்!!!

தோகை மட்டுமல்ல

தோகையை சுமந்து

திரியும் தேகத்தையும்

நானே பெற்றெடுத்தேன்

என்கிறது அடக்கமாய் பெண்மை!!!

ஆண் சிங்கம்

கம்பீரம் என

உரக்க சொன்னேன்!!!

அதன் அப்பனுக்கு

தெரியாது,புல்புதரில்

பெற்றெடுத்து,மறைத்து

வளர்த்ததே நான்,

என்றது பணிவாய் பெண்மை!!!

இப்படி எல்லா

நிலைகளிலும்,எல்லாவற்றிலும்

பெண்மை மேலோங்கி நிற்க!!!

ஆறறிவு படைத்த

மனிதன் மட்டும்

ஆணுக்கு பெண்

சமம் என்பதையே

ஒத்துக்கொள்ள மறுக்கிறான்!!!

நன்கு உணர்ந்தவன்

வான்நிலவை பார்க்க

இரவுக்காய் பொறுத்திருந்து

வானை அண்ணார்ந்து

பார்ப்பதில்லை!!!

அன்போடு பெற்றெடுத்த அன்னை,

பாசம் பொழியும் தங்கை

காதலை அள்ளித்தரும் மனைவி

வரமாய் பிறந்த மகள்

உற்ற தோழி இவர்களின்

முகங்களிலேயே தேய்பிறை

இல்லா நிலவையும்

நிலவொளியையும் இரவுக்காய்

காத்திராமல் எப்பொழுது

வேண்டுமோ அப்பொழுதே

கண்குளிர கண்டுக்கொள்கிறான்!!!

Friday, 28 July 2017

முஹம்மது கோரி முதல் மோடி வரை...

இந்தியாவில்  ஆட்சி புரிந்தவர்களும்..ஆண்டும்....
முஹம்மது கோரி முதல் மோடி வரை....
👉
1193  : முஹம்மது கோரி
1206   :குத்புதீன் ஐபக்
 1210   :ஆரம்ஷா
  1211  : அல்தமிஷ்
  1236  : ருக்னுத்தீன் ஷா
   1236  : ரஜியா சுல்தானா
    1240  : மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா
     1242  : ஆலாவுத்தீன் மஸூத் ஷா
      1246  : நாஸிருத்தீன் மெஹ்மூத்
      1266  : கியாசுத்தீன் பில்பன்
       1286  : ரங்கிஷ்வர்
        1287  : மஜ்தன்கேகபாத்
         1290  :ஷம்ஷீத்தீன் கேமரஸ்
(கோரி வம்ச ஆட்சி முடிவு "97 வருடம்)

கில்ஜி வம்சம்
1290 :1 ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி
 1292  :2 அலாவுதீன் கில்ஜி
  1316  :4ஷஹாபுதீன்  உமர் ஷா
   1316  : குதுபுத்தீன் முபாரக் ஷா
    1320  : நாஸிருத்தீன் குஸரு ஷா
 ( கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்)

துக்ளக்Thaglakவம்சம்

1320  :கியாசுத்தீன் துக்ளக்(1)
1325  : (2) முஹம்மது பின் துக்ளக்
1351  :(3) பெரோஸ்ஷா துக்ளக்
1388  : (4) கியாசுத்தீன் துக்ளக்
1389  : அபுபக்கர் ஷா
1389  :மூன்றாம் முஹம்மது துக்ளக்
1394  :அலெக்சாண்டர் ஷா(7)
1394  :(8) நாஸிருத்தீன் ஷா
1395  : நுஸ்ரத் ஷா
1399  :(10) நாநாஸிருத்தீன் முஹம்மது ஷா.
1413  :(11)தவுலத் ஷா
(துக்ளக் வமிச ஆட்சி 94வருடம்)
சையித் வம்சம்
1414  :1.கஜர்கான்
1421  :2 . மெஹசுத்தீன் முபாரக் ஷா
1434  : 3.மு3 முஹம்மது ஷா
1445  :4 அலாவுதீன் ஆலம் ஷா
(சையத் வம்சம் 37 வருடம்)

லோதி வம்ச ஆட்சி
1451  : பெஹ்லூல் லோதி
 1489  : அலெக்சாண்டர் லோதி
 1517  : இப்ராஹிம் லோதி
 (லோதி ஆட்சி 75 வருடம்)

முகலியாஆட்சி

1526  : ஜஹிருத்தீன் பாபர்
1530 : ஹிமாயூன்

சூரி வமிச ஆட்சி
1539   : ஷேர்ஷா சூரி
 1545  :அஸ்லம் ஷா சூரி
 1552  :மெஹ்மூத் ஷா சூரி
 1553   :இப்றாஹிம் சூரி
  1554  :பர்வேஸ் ஷா சூரி
 1554 :முபாரக் கான் சூரி
 1555 :அலெக்சாண்டர் சூரி
(16வருடம் சூரி ஆட்சி)

முகலாயர் ஆட்சி
1555  :ஹிமாயூன்
1556  :ஜலாலுத்தீன் அக்பர்
 1605  :ஜஹாங்கீர் சலீம்
  1628  :ஷா ஜஹான்
   1659 : ஒளரங்கசீப்
   1707 :ஷாஹே ஆலம்
   1712  :பஹாத்தூர் ஷா
    1713 :பஹாரோகஷேர்
    1719  :ரேபுதாராஜத், நேகஷ்யார்&மெஹ்மூத் ஷா
  1754  :ஆலம்கீர்
   1759 :ஷாஹேஆலம்
   1806 :அக்பர் ஷா
    1837 :பஹதூர்ஷா ஜபர்
(முகலாயர் ஆட்சி 315 வருடம் )

ஆங்கிலேயர் ஆட்சி

1858 : லார்டு கேங்க்
1862 :லார்டு ஜேம்ஸ்பரோஸ்எல்ஙன்
 1864 : லார்ட் ஜான் லோதேநஷ்
1869 :லார்டு ரிசர்டு
1872 :லார்டு நோடபக்
1876 ; லார்டுஎட்வர்ட்
1880 :லார்ட் ஜார்ஜ் ரிப்பன்
 1884 :லார்டு டப்ரின்
 1894 :  லார்டு ஹேஸ்டிங்
1899 : ஜார்ஜ் கர்னல்
 1905: லார்டு கில்பர்ட்
 1910 :லார்டு சார்லஸ்
  1916 :லார்ட் பிடரிக்
  1921 : லார்ட் ரக்ஸ்
   1926:.லார்ட் எட்வர்ட்
   1931: லார்ட் பெர்மேன்வெலிங்டன்
  1936 :லார்டு ஐ கே
   1943:லார்டு அரக்பேல்
     1947 : லார்டு மவுண்ட்பேட்டன்
( ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிவு)

🇮🇳சுதந்திர இந்தியாவின் ஆட்சி🇮🇳
1947:ஜவஹர்லால் நேரு
 1964:குல்சாரிலால் நந்தா
 1964:லால் பகதூர் சாஸ்திரி
  1966:குல்சாரிலால் நந்தா
   1966: இந்திராகாந்தி
   1977: மொராஜி தேசாய்
    1979: சரண்சிங்
     1980:இந்திராகாந்தி
1984:ராஜீவ்காந்தி
1989:V P சிங்
1990:சந்திரசேகர்
1991:. PN ராவ்
 1992:A.B.வாஜ்பாய்
1996:  A.Jகொளடா
1997:L.K.குஜ்ரால்
1998:A.B.வாஜ்பாய்
2004 :மன்மோஹன்சிங்
2014:நரேந்திர மோடி

அதிகரித்து வரும் ‘சிசேரியன்’ பிரசவங்கள்...

*🚂💯♨அதிகரித்து வரும் ‘சிசேரியன்’ பிரசவங்கள்*

பொதுவாக கருவின் வளர்ச்சி 39 வாரங்கள் முழுமை அடைந்த பிறகு, 40-வது வாரத்துக்கு இடைப்பட்ட நாட்களில் பிரசவம் ஆவதே ஆரோக்கியம். சிலருக்கு 37 முதல் 40 வாரங்களில் பிரசவமாகலாம். இந்த வாரங்களில் வலி வந்து, சுகப்பிரசவத்துக்கு வழியில்லாமல், தாய்க்கோ பிறக்கப்போகும் குழந்தைக்கோ ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டு, விரைவாக குழந்தையை வெளியில் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே சிசேரியன் செய்வோம். பின்வரும் சூழல்கள் அதற்கு உதாரணங்கள்.

1970-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை 5 சதவீதமாக இருந்த சிசேரியன் பிரசவங்கள், 2010-க்குப் பிறகு 15 சதவீதமாக அதிகரித்தது. தற்போது 30 சதவீதமாக அதிகரித்துவிட்டதாக உலக அளவிலான ஓர் ஆய்வு கூறுகிறது.

சிசேரியன் பிரசவத்தால் பெண்களுக்கு உடல்வலி, வயிற்று வலி, தலைவலி, முதுகுவலி, அதிக உதிரப்போக்கு ஏற்படலாம். தாயிடம் இருந்து சிசுவுக்கு உணவு மற்றும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லக்கூடிய நஞ்சுக் கொடி, தாய் மற்றும் குழந்தைக்கு இணைப்பு பாலமாக இருக்கும். அந்த நஞ்சுக்கொடி பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பையில் இருந்து தானாகவே பிரித்துவந்துவிட வேண்டும்.

ஆனால், சிசேரியன் பிரசவத்தில் நஞ்சுக்கொடி கர்ப்பப் பையிலேயே ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் அடுத்த பிரசவத்தின்போது, தாய்க்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகலாம். சிசேரியன் பிரசவத்தில், தாயின் கர்ப்பப் பையும் நீர்ப்பையும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளக்கூடும். இதனால் அடுத்த குழந்தையும் சிசேரியனாக இருக்கும் பட்சத்தில், தாய்க்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகும்.

சிசேரியன் பிரசவத்தில் பிறந்த குறை மாத குழந்தைகளுக்கு பிரசவ நேரத்திலும், பிறந்து சிறிது நேரம் கழித்தும் மூச்சுத்திணறல் ஏற்படுவது, தொற்றுநோய்கள் என பிறந்த முதல் 3 நாட்களில் பல பிரச்சினைகள் ஏற்படலாம். நிறைமாதமான 37 - 40 வாரங்களுக்கு முன்பாக கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் ஆபரேஷன் செய்வது தாய்க்கும், சேய்க்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

சுகப்பிரசவத்தில் சிரமங்களை எதிர்கொண்டு வெளிவரும் குழந்தைகள் எதிர்காலத்தில் உடல் மற்றும் மனதளவில் தைரியமானவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. இதற்காகவும் சிசேரியன் பிரசவங்களை தவிர்ப்போம், சுகப்பிரசவத்துக்கு தயாராவோம்.

மனைவியை விவாகரத்து செய்த ஒருவன்...

ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்த பிறகு தன் வீட்டிற்கு வந்தான்.
.
தன் அறையின் ஒரு மூலையில் ஒரு பெட்டியில் கொஞ்சம் காலியான மது பாட்டில்கள் இருப்பதை அவன் பார்த்தான் .
.
அதில் இருந்து ஒரு பாட்டில் எடுத்து கோபத்தில் தூர எறிந்து கொண்டு அவன் கூறினான் :
என் மனைவி என்னை விட்டு போகக் காரணம் நீ தான்
.
மீண்டும் அடுத்த பாட்டில் எடுத்து எறிந்து விட்டு அவன் கூறினான் :
எனக்கு குழந்தைகள் இல்லாததுக்கு காரணம் நீதான்
.
மறுபடியும் அடுத்த பாட்டில் எடுத்து எறிந்துவிட்டு அவன் சொன்னான் :
என் வேலை போகக் காரணம் நீ தான்
.
மீண்டும் அவன் அடுத்த பாட்டில் எறிய எடுத்ததும் அவனுக்கு புரிந்தது, அது லேபிள்கூட கிழிக்காத சரக்கு உள்ள முழுப்பாட்டில் .
.
அப்ப அவன் சொன்னான் :
நீ இந்த சைடு ஒதுங்கி நில்லு .. எனக்குத்தெரியும், உனக்கு இந்த சம்பவத்துல ஒரு பங்கும் இல்லனு ....!"'🍾
.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது 😆😝🤣😂😅

திருடர்கள் இரண்டு வகை...

✍ *திருடர்கள் இரண்டு வகை:*

*சாதாரண திருடன்:*
இவன் நமது பணம், பை, கடிகாரம், தொலைபேசி
போன்ற நமது உடைமைகளை திருடுபவன் 👻

*அரசியல் திருடன்:*
இவன் நமது எதிர்காலம், கனவு, தொழில், சம்பளம், கல்வி, ஆரோக்கியம், பலம், மகிழ்ச்சி
என்பவற்றை திருடுபவன். 😎

இந்த இரண்டு திருடர்களுக்குள்
வேறுபாடு என்னவெனில்
சாதாரண திருடன் நம்மை தேர்வு செய்கிறான்; 😐
அரசியல் திருடனை நாம் தேர்வு செய்கிறோம். ☹

சாதாரண திருடனை
காவல்துறை கைது செய்யும். 👨🏽‍✈
அரசியல் திருடனுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கும். 🙆🏼‍♂
★★★✍★★★

படித்ததில் பிடித்தது....

ஞாபகம் இருக்கா நண்பர்களே...

ஞாபகம் இருக்கா. 20 years back to school time.👼

🚪"டக்" "டக்" யாரது..?

😎 "திருடன்"
"என்ன வேனும் .?

🎊 " நகை வேனும்..!!
"என்ன நகை..?
" கலர் நகை...!!
"என்ன கலர்...??

♻ " பச்சை கலர்...!!!
"என்ன பச்சை..??

🍏" மா" பச்சை...
"என்னம்மா..?

💇 " டீச்சரம்மா..!
"என்ன டீச்சர்...?

💯 " கணக்கு டீச்சர்..!
"என்ன கணக்கு..?

🏠 " வீட்டு கணக்கு..!!
"என்ன வீடு...??

🏫 " மாடி வீடு..!!!
"என்ன மாடி ...?

🏢 " மொட்ட மாடி...!
"என்ன மொட்ட..??

😔 " பழனி மொட்ட...!
"என்ன பழனி..??

🍪 " வடபழனி...!!
"என்ன வட..?

🐢 " ஆமை வட..!!
"என்ன ஆமை..?

🚣 🐢 "கொளத்தாம ..!!
"என்ன குளம்...!!

🚣 " த்திரி குளம்..!!
"என்ன திரி..??

🔥 " விளக்கு திரி..!!
"என்ன விளக்கு ..??

👊 " குத்து விளக்கு ...!
"என்ன குத்து..??
" கும்மாகுத்து..!!!/

🏯🏣🏰 சுகமான வலிகளை தரும்
பள்ளி தருணங்கள்...

💃😿🏃 அம்மாவிடம் இருந்து பிரிந்து போக
முடியாமல்
அழுத தருணம்

👬👭 நாலு பேர்
சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும்

🏠நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த
தருணம்

👕 வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய
தருணம்

✒✏ஆசிரியர் அடித்தால் வலிக்க
கூடாது என்பதற்காக

👖👖இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற
தருணம்

என்னிடம் ✏ரப்பர் வைத்த பென்சில்
இருக்கிறது என பெருமைபட்ட தருணம்

✒புதிதாக வாங்கிய
பேனாவை நண்பனிடம்
காட்டி சந்தோஷபட்ட தருணம்

வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம்
📖 புத்தக கிரிக்கெட் விளையாடின
தருணம்

நண்பர் மை இல்லாமல் தவிக்கும்
போது பெஞ்சின் மேல்
🎨 மை தெளித்து உதவிய தருணம்

போர்டில் நம்ம பெயர் மி.மி.அ என்ற
பட்டத்துடன் இருந்தால் நான் தாம்ல இந்த
வகுப்புக்கு ரவுடி என
சொல்லிக்கொண்ட தருணம் (மி.மி.அ-
மிக மிக அடங்கவில்லை)

சனி,ஞாயிறு விடுமுறை என்றாலும்
மழைக்காக விடுமுறை விட்டால்
அளவில்லாத சந்தோஷத்தில்
💃🏃 துள்ளி குதித்திருப்போம்

👣எல்லா நாட்களும் தாமதமாக செல்லும்
நாம் பிறந்த நாள் என்றால் மட்டும்
சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல
துடித்திருப்போம்.🚸🚸🚸

விடுமுறை நாளில் பிறந்த நாள்
வந்தால்😿 வருத்தப்படுவோம்

🍞🍚🍣🍛🍔 அனைவரது சாப்பாட்டையும் சாதி,மத
பேதம் பார்க்காமல்
பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்

🕘 ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம்,
🕓 நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்...
இப்போ அந்த நாளுக்காக
ஏங்கி நிற்கின்றோம்...!!!

இதை நீங்கள் அனுபவித்திருந்தால் பகிருங்கள்..

Thursday, 27 July 2017

அ முதல் ஃ வரை 18 மாத குழந்தை மொழியில் | உயிரெழுத்துக்கள் | ஆயுத எழுத்து ...

டாக்டர் அப்துல் கலாம் பற்றிய 50 தகவல்கள்...

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.

3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.

5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.

6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.

7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.

8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.

9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.

10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.

11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.

12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.

14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.

15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’

16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.

17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.

18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.

19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.

20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.

21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.

22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.

23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.

25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.

26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.

27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.

28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.

29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.

30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.

31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.

33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.

34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.

35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.

36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.

37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.

38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.

39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.

41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.

42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.

43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.

44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.

45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.

46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.

47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.

இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.

49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.

இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.

50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார்.  அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவுற்றது ,,..

Wednesday, 26 July 2017

படித்ததில் உறைத்தது. இனிமே அப்படித்தான்.

கணவன் மனைவி இருவரும் ...

ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....

இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசுவா.... கேளு என சிரிச்சான்

இல்ல, ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரீங்க...

அடிக்கடி வெளிய கூட்டிப்போறீங்க..

பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி குடுக்றீங்க.....

திடீரென நம்ம மேல நெருக்கமா மாறீட்டீங்க....

அதான்...
என்று இழுத்தாள்...

ஒண்ணுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன்.

மறைக்காதீங்க ... உங்க முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லுங்க


மெதுவாய் சொன்னான்..

நீயா கேட்பே சொல்லணும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.

என்னங்க ஏதும் பிரச்சினையா படபடத்தாள்....

அவன் இல்லையென தலையாட்டியபடியே

அவனது அலுவலக பையை திறந்தான்.

ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.

என்னங்க இது ..

படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான்.

அவள் படிக்க தொடங்கினாள் ...

அவன் கண்கள் கண்ணீரை சிந்த ஆரம்பித்தது...

அன்புள்ள மகனுக்கு,

கண்டிப்பா என்றைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன்.

உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவ இந்த கடிதம் எழுதுறேன்.

ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி.

அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காத.

உங்கப்பாவ நான் கல்யாணம் பண்ணும்போது நான் காலேஜ் லெக்சரர்.

அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது.

இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல வளர்ந்தாரு.

அப்புறம் உன் தங்கச்சி பிறந்தா ...

நான் வேலையை விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சுட்டு இருந்தேன்.

உனக்கு தான் தெரியுமே அப்பா எப்படி பிசின்னு...

கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்க்கை.

அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான்.

உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன்.

அவர், அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார்.

நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை.

நாம தான் விளையாடுவோம்.

அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்ட்டீங்க.. நீங்க வரதுக்கு காத்திட்டுருப்பேன்.

ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா சொல்லுவீங்க..

அதுல பாதி பொய் இருக்கும்..

அதெல்லாம் உங்க கற்பனைன்னு நினைச்சு ரசிச்சேன்.

அப்புறம் நீங்க வளர்ந்தீங்க..

அம்மாட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு.

ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும் வந்துச்சு.

இப்ப வெளியே போகனும்...

இப்படி வெளியே போகணும்னு..

ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......

காத்திட்டு இருப்பேன்.

நீங்க சாப்டு வரீங்களா.... சாப்டமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்....

நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசி

இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு.

அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கனும், மருந்து கொடுக்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன்.

காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா?

அப்புறம் உன தங்கச்சி கல்யாணம்...

இப்ப அவ எப்படி இருக்கானு கூட
அவளா முடிவு செய்ற நேரத்திலதான் என் கூட பேச முடியும்....

ஏன்னா அங்க அவ காத்திட்டு இருக்கா .... ஒரு அம்மாவா...

உனக்கு சொல்லவே வேண்டாம்...

அப்பா தொழில எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே

நீ ரொம்ப பிசியாகிட்ட..

நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்...

சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான்.

உங்கப்பா வாழ்றா காலத்தில பிசியா இருந்தாரு..

நான் காத்திட்டு இருந்தேன்.

கடைசி காலத்தில் ஏதுவும் இல்லாம இருந்தாரு..

ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு...

என்கிட்ட பேச அவருக்கு விசயமே இல்லை...

பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு.

ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல...

பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை... அனுபவமும் இல்லை

இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது.

நாம என்னைக்காச்சும் வெளியே போகும் போது

அங்க நிறைய அம்மாக்கள பார்ப்பேன்..

அவங்க எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் மட்டும் தான்.

உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர அவங்க மனைவிகளை பார்ப்பேன்...

அதுல இன்னைகே வாழ்ந்துடனும்...

அடுத்த ஆறநாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன்.

இன்னைக்கு ஒரு நாள் தானேன்னு புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள பார்த்தேன்.

இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு காரியம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது...

உங்களுக்கு ஒரு நாள் தானேன்னு ஒரு நினைப்பு வந்துடுச்சு.

இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்றியா...

என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல..

ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பில்ல

அதான் உன்கிட்ட சொல்றேன்.

நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல...

சொன்னாலும் உன்னால கேட்க முடியாது..

அதனால தான் இப்ப சொல்றேன்.

உனக்கு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, மனைவி இருக்கா...

காத்திட்டு இருக்காங்க...

உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்கு தெரியாது..

ஆனால் அத அவ வெளிக்காட்டும் போது உங்கப்பா கட்டில்ல நகர முடியாம இருந்தாரு.

அவரு தான் அப்பானு அவ காலேஜ்க்கு ஸ்கூலுக்கு தெரியாத அளவுக்கு  அவர் பிசி....

அப்பா கூட அங்க போகணும் இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் நிறைவேறல..

அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது அவர் பேசனது அவ கேட்க முடியல

ஏன்னா அவ வேறு வீட்டுக்கு போய்ட்டா ..

பாத்தியா வாழ்க்கைய ?

நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கைய கொடுத்துடாத

உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடாத...

இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட.

நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை.

இன்னும் சொல்லபோனா

நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பத்துவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்..

அத கொஞ்சம் குறைச்சிக்கோ..

சீக்கிரம் வீட்டுக்கு வா.

பொண்டாட்டிகிட்ட புள்ளைககிட்ட பேசு...

அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு....

ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும்...

ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு வாழ்க்கையா?

செய்வேனு நம்புறேன்.

ஏன்னா என்கிட்ட  நல்லா பேசின பையன் தானே நீ...

உன் மனைவி மகள விட்டுடவா போற...

கடிதத்தை படித்து முடிந்தாள்.

அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது.

நிமிர்ந்து அவனை பார்த்தாள்....

இரண்டு மிகப்பெரிய பலூடா ஐஸ்கீரிம் வந்திருந்தது.

அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.....

.நான் தான்மா
.....
ஏன் சும்மா பேசக்கூடாதா?
...
என்ன செய்ற...
....
அப்பா என்ன செய்றாரு... என பேசத்தொடங்கினாள்.

ஐஸ்கீரிம் கொஞ்சம் கொஞ்சமாய் உருகத் தொடங்கியது.... .

அவன் சிரித்தபடி சாப்பிட தொடங்கினான்.

இனிமே அப்படித்தான்..

இனி அங்கே அன்புக்காக காத்திருக்க அவசியமில்லை.

படித்ததில் உறைத்தது.