flipkart discount sale search here.

Saturday 22 July 2017

டெங்கு காய்ச்சலில் இருந்து எப்படி தப்பிக்கலாம்?

அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சலில் இருந்து எப்படி தப்பிக்கலாம்?

👉 பருவநிலை மாற்றத்தால் பலருக்கு உடல் நல குறைவு ஏற்படுகிறது. இதில் தற்போது அதிகமாக மக்களை தாக்கி வரும் நோய் தான் டெங்கு. டெங்கு காய்ச்சலானது பகலில் கடிக்கும் கொசுக்கள் மூலம் அதிகமாக பரவுகிறது.

டெங்கு என்றால் என்ன?

டெங்கு என்ற வைரஸ் நம் உடலைத் தாக்கும்போது ஏற்படும் காய்ச்சல்தான் பேச்சு வழக்கில் டெங்கு என அழைக்கப்படுகிறது. ஏடஸ் என்ற வகைக் கொசுக்களால் - குறிப்பாக ஏடஸ் எஜிப்டி (aedes aegypti ) என்ற வகைக் கொசுவால் டெங்கு பரவுகிறது.

இந்த கொசு அநேகமாக வீட்டினுள் பதுங்கி இருக்கும். இந்த கொசு மழை காலங்களில் இனபெருக்கம் செய்யும். மழை இல்லாத காலங்களில், தண்ணீர் தேங்கும் பூச்சாடிகள், பிளாஸ்டிக் பைகள், கேன்கள், தேங்காய் மட்டைகள், டயர்கள் போன்றவற்றில் இனப்பெருக்கம் செய்கிறது.

*டெங்கு அறிகுறிகள்*:

கொசு கடித்து நோய் வர 5 முதல் 15 நாள் வரை ஆகும். ஆரம்பத்தில் குளிர் ஜுரம், தலைவலி, கண்ணை சுற்றி வலி, முதுகு வலி, பின்னர் கடுமையான கால் மற்றும் மூட்டு வலி போன்றவை வந்து சில மணி நேரத்தில் காய்ச்சல் வரும். காய்ச்சல் 104 பாரன்ஹீட் வரை போகலாம். நாடித்துடிப்பு குறைதல், ரத்த அழுத்தம் குறைதல் போன்றவை ஏற்படும்.

*டெங்கு காய்ச்சல் குணமாக*:

👉 டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருந்தாக பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு இலைச்சாறு, நிலவேம்பு சாறு போன்றவைகளை அளித்தால், அவர்கள் மிக விரைவில் குணமடைவார்கள்.

*எவ்வாறு தயாரிப்பது?*

*பப்பாளி இலை சாறு*:

👉 புதிதாக பறித்த பப்பாளி இலைகளை காம்புகளை அகற்றிவிட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து அதை வடிகட்டி கொள்ளவும். இதை 10 மில்லி என்ற கணக்கில் நாளொன்றுக்கு 4-5 முறை பருகி வர வேண்டும். இதனால் டெங்கு காய்ச்சலானது கட்டுப்படுத்தப்படும்.

*மலைவேம்பு இலைச்சாறு*:

👉 மலைவேம்பு இலைகளை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 10 மில்லி வீதம் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பருக வேண்டும். மலைவேம்பு இலைச்சாறு டெங்கு வைரஸ்களை எதிர்க்கும் சக்தி கொண்டது.

*நிலவேம்பு குடிநீர்*:

👉 நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பு, சுக்கு, மிளகு, பற்படாகம், விலாமிச்சை, சந்தனம், பேய்புடல், கோரைக்கிழங்கு, வெட்டிவேர் ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். 50 மில்லி வீதம் நாளொன்றுக்கு இருவேளை அருந்த வேண்டும்.

இதுபோல,

டெங்கு காய்ச்சலால் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு கஞ்சி தான் மிகமிகச் சிறந்த உணவாகும்.

நிறையப் பழச்சாறுகளைக் குடிப்பதாலும் டெங்கு காய்ச்சலிலிருந்து தப்பிக்கலாம். அதிலும் வைட்டமின் சி அதிகமுள்ள ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, கிவி, பப்பாளி உள்ளிட்ட பழங்களின் சாற்றைக் குடிக்கலாம்.

புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை உண்பதாலும் டெங்கு காய்ச்சலை விரட்டலாம். பால், முட்டை, மீன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடுவது நலம்.

புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை உண்பதாலும் டெங்கு காய்ச்சலை விரட்டலாம்.

இளநீரை நிறையக் குடிப்பதாலும் டெங்கு காய்ச்சல் விரைவில் குணமாகும்.

மேற்கண்ட முறைகளின் மூலம் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும்.

நாம் போராட வேண்டியது மனிதர்களிடம் இல்லை...! கொசுக்களிடம் !

விழித்திரு மனிதா! இந்த டெங்குவில் இருந்து தப்பிக்க...!

☝🏽sharing as received

No comments:

Post a Comment