flipkart discount sale search here.

Saturday 29 July 2017

பொது மக்களும் சட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...

பொது மக்களும் சட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் :
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 326 :
இந்திய தண்டனைச் சட்டத்தின் 326ஆவது பிரிவு (I.P.C 320) கடுங்காயத்தை அல்லது கொடுங்காயத்தை (Grievous Hurt) ஏற்படுத்தும் குற்றத்தை வரையறுக்கிறது.
#வரையறை :
கீழ்க்கண்ட எட்டுள் ஏதேனும் ஒன்றோ அல்லது பலவோ இருப்பின் அது கடுங்காயமாகும்.
1) ஆண்மையிழக்கச் செய்தல் (Emasculation)
2) ஏதேனும் ஒரு கண்ணின் பார்வையை நிரந்தரமாக இழக்கச் செய்தல்
3) ஏதேனும் ஒரு செவியின் கேட்கும் தன்மையை நிரந்தரமாக இழக்கச் செய்தல்
4) ஏதேனும் ஓர் உடல் உறுப்பையோ அல்லது மூட்டு இணைப்பையோ இழக்கச் செய்தல்
5) ஏதேனும் ஓர் உடல் உறுப்பையோ அல்லது மூட்டு இணைப்பையோ சிதைத்தல் அல்து வலுவிழக்கச் செய்தல்
6) தலை, முகம் ஆகியவற்றை உருக்குலைத்தல்
7) பல், எலும்பு ஆகியவற்றில் முறிவு ஏற்படும் படியோ அல்லது அவை விலகிப்போகும்படியோ செய்தல்
8) உயிருக்கே ஆபத்து, இருபது நாட்களுக்கும் மேலாக வலி அல்லது அன்றாடக் கடமைகளைச் செய்ய முடியாமல் முடக்குதல் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை ஏற்படுத்தும் வகையில் காயமுண்டாக்குதல்.
இத்தகைய குற்றத்திற்கு 7 வருட சிறை வைப்பு மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
நன்றி - வழக்கறிஞர்   ராஜ நந்தினி

No comments:

Post a Comment