flipkart discount sale search here.

Friday 21 July 2017

தமிழக அரசியல் அடுத்து... 2018 to 2100 imagination

தமிழக அரசியல் அடுத்து.. (முழுவதும்
கற்பனையே)

2017 : கமல் அதிமுகவை எதிர்க்கிறார்.

2018 : உட்கட்சி பிரச்சனையால் அதிமுக ஆட்சி கலைக்கப்படுகிறது.

2019 : கமல் திமுகவில் இணைகிறார். சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராகிறார்.

2020 : நல்லகண்ணு அரசியலிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

2023 : உதயநிதி ஸ்டாலினை கொல்ல பார்க்கிறார் என கமல் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுகிறார்.

2024 : கமல் தனிக்கட்சி துவங்குகிறார். சட்ட மன்ற தேர்தலில் கமல் ஆட்சியை பிடிக்கிறார்.

2025 : ஓவியா கமல் கட்சியில்
இணைகிறார்.

2026 : வைகோ அரசியலை விட்டு ஓய்வு பெறுகிறார்.

2028 : ஓவியா கட்சியின் முக்கிய பேச்சாளர் ஆகிறார்.

2029 : சட்டமன்ற தேர்தலில் கமல் கட்சி மீண்டும் வெற்றி. கமல் இரண்டாவது முறையாக முதல்வராகிறார்.

2030 : ஓவியா கொள்கை பரப்பு செயலாளர் ஆகிறார்.

2032 : அணுஉலைக்கு எதிராக பேசி உதயகுமார் கைதாகிறார்.

2033 : கமல் உடல் நலகுறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

2034 : தேர்தலில் கமல் மருத்துவமனையிலிருந்தபடி ஜெயித்து மீண்டும் முதல்வராகிறார்.

2035 : கமல் உடல்நிலை மீண்டும் மோசமடைந்து அரசியலை விட்டு ஒதுங்குகிறார்.

2036 : கட்சியினரால் ஆண்ட்ரியா முதல்வராக்க படுகிறார்.

2037 : ஆட்சி கலைக்கப்படுகிறது.

2038 : சட்டமன்ற தேர்தல் வந்து ஸ்டாலின் முதல்வராகிறார்.

2039 : ஓவியா தனது பிக்பாஸ் தோழி ஜூலி, அவரது உறவினர்கள் உதவியுடன் கட்சியை கைப்பற்றுகிறார்.

2040 : ஓவியா சட்டமன்றத்தில் "கொக்கு நெட்ட கொக்கு" பாட்டு பாட திமுகவினர் கடுப்பாகி ஷாலை பிடித்து இழுக்கிறார்கள்.

2043 : சட்டமன்ற தேர்தலில் ஓவியா முதல்வராகிறார்.

2044 : சீமான் அரசியலிலிருந்து ஓய்வெடுக்கிறார்.

2046 : உதயநிதி திமுகவின் செயல் தலைவராகிறார்.

2048 : ஓவியா இரண்டாவது முறையாக முதல்வராகிறார்.

2050 : மீதேனுக்கு எதிராக போராடிய திருமுருகன் காந்தி கைதாகிறார்.

2053 : ஓவியா மீண்டும் முதல்வராகிறார்.

2054 : ஓவியா உடல் நலக்குறைவால் அப்பல்லோவில் சேர்க்கப்படுகிறார்.

2055 : ஏரியை வளைத்து போட்டதாக பியூஸ் மனுஸ் கைதாகிறார்.

2055 : ஓவியா ஓய்வெடுக்கிறார். ஜூலி கட்சியை கைப்பாற்றுகிறார்.

2056 : தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டம் வருகிறது. அதில் ஒரு இளம்பெண் "கக்கூஸ்ல இருக்கு வாளி, எங்கடி போன ஜூலி" என கத்துகிறார்.

2057 : அரசுக்கு எதிராக விஷால் பேச துவங்குகிறார்.

2058 : ஆட்சி கலைகிறது.

2059 : தேர்தலில் விஷால் ஜெயித்து முதல்வராகிறார்.

2060 : மதுவிலக்கு கேட்டு போராடிய வழக்கில் நந்தினி கைது செய்யப்படுகிறார்.

2061 : வரலெட்சுமி விஷால் கட்சியில் இணைகிறார்.

2062 : வரலெட்சுமி கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆகிறார்.

தொடரும்...2100

No comments:

Post a Comment