flipkart discount sale search here.

Sunday, 13 August 2017

மாமானர் வீட்டுக்குள் நுழைஞ்சதிலிருந்து...

பல ஆண்கள் தங்கள் மாமனார் வீட்டு விசேசங்களுக்கு அடிக்கடி செல்வதில்லை, அப்படியே சென்றாலும் விஐபி மாதிரி மிக சொற்பநேரமே இருந்துவிட்டு கிளம்பிவிடுவார்கள், இதற்கு என்ன காரணம் (நண்பனின் சொந்த அனுபவ அறிவு இப்படி சொல்லுது

1) மாமானர் வீட்டுக்குள் நுழைஞ்சதிலிருந்து வெளியேறினபிறகும் ரொம்பநேரத்துக்கு விக்கிரமன் பட லாலாலாான்னு பாச கோரஸ் காதுக்குள்ள ங்கொய்ங்ன்னு சுத்திகிட்டே இருக்கும்,

2) எல்லாரும் விழுந்துவிழுந்து உபசரிச்சாலும் ஒரேஒரு ஆள்மட்டும் நாம யாரோபக்கத்துவீட்டுக்கு வந்த விருந்தாளிங்கிறமாதிரி கண்டுக்காம உலாத்திகிட்டு இருப்பாங்க, அது வேறயாரு,,,, பொண்டாட்டி தான்

3) தினமும் 10 தடவ போன்ல பேசினாலும் வாரத்துல நாலைஞ்சுதடவ சந்திச்சிகிட்டாலும் ஏ‌னோ இப்பதான் ஆயுள்தண்டனை முடிஞ்சி வர்ற கைதிய கண்கலங்க வரவேற்கிறமாதிரி பார்வையாலேயே பாசத்தை அள்ளிதெளிப்பாங்க மகள்கள் மீது, அதுல கட்டிகிட்டவன் வழுக்கி விழணும்

4) வீட்டுக்கு வந்திருக்கிறது மகள்தாங்கிற மாதிரி நடந்துக்காம கலெக்ட்ரம்மா இல்லன்னா பிரசவ டாக்டரம்மா மாதிரி பவ்யமா டிரீட் பண்ணுவாங்க,

5) திடீர் திடீர்னு ISIS தீவிரவாதிகள் குண்டுமழைபொழியிற மாதிரி வெடிச்சிரிப்பு கிளம்பி நம்ம மூட உஷ்ஷ்ன்னு காத்துபோன சைக்கிள் டயர் மாதிரி ஆக்கிடும்,

6) மகள என்னவோ அன்னைதெரசா மாதிரியும் அமிர்தானந்தமயி மாதிரியும் நினைச்சி கையபிடிச்சிகிட்டு வாஞ்சையோடு தலையைதடவி கொடுத்துட்டு ஏம் பாப்பா (இந்த பாப்பா பட்டம் ஒவ்வொரு பொண்ணுக்கும் சூப்பர்ஸ்டார் பட்டம் மாதிரி கம்பு ஊனி நடக்கிற காலம் வரைக்கும் கூட கூடவே வரும்) சோர்வா இருக்கிறேன்னு உருகிடுவாங்க

7) பல சமயத்துல மகள கபாலி மாதிரி தாங்கி தடுக்கி பாசத்த பொழிஞ்சி அவங்க டவாலிமாதிரி சீன்போடுவாங்க

8) ரமேஷ் சுரேஷ் சாக்லேட் விளம்பரத்துல தங்களையே மறந்துடறமாதிரி மகள்கள் புருசனும் நம்ம அம்மா வீட்லதான் இப்ப உக்காந்திருக்கான்கிறத மறந்துடுவாங்க, மாப்ளைக்கு சாப்பாடு வைம்மான்னு யாராச்சும் சொன்னாதான் அடடா நம்ம புருசனும் இங்கதான் இருக்காரோன்னு ஞாபகம் வந்து ஏங்க சாப்பிடறீங்களான்னு கேப்பாங்க, ஆத்திரத்துல கிளம்பிபோயிடலாமான்னு தோணும், அப்புறம் அது அநாகரீகம் மத்தவங்க மனசு சங்கடப்படும் நினைச்சி அடங்குவாங்க ஆண்கள்,

9) மாமனார் வீட்டு உறவுகளின் விழாக்களில்அப்படியே நைசா நழுவி தங்கள் பொறந்தவீட்டோட பெண்கள் பகுதியில் நடுவுலபோயி கமுக்கமா உக்காந்துக்குவாங்க,

10) அதுவே அவங்க சொந்தவீட்டு விழான்னா நம்மள கடந்து ஆயிரம் தடவபோனாலும் மூன்றாம்பிறை
ஸ்ரீதேவி மாதிரி நம்மள தெரியாத மாதிரியே கடந்துபோவாங்க, அதுக்காக நாம கொரங்கு மாதிரி பல்டி அடிச்சா காமிக்க முடியும்,

இதுதாங்க ஆண்கள் மாமனார் வீட்டுக்கு வர்றதுக்கு பிகு பண்ணறதுக்கு காரணம், திமிர் எல்லாம் கிடையாது,

ம்ம்ம் ரொம்ப கஷ்டம்பா இந்த பெண்களின் பொறந்தவீட்டு பாசம், எப்பாவாச்சும் போறவங்களுக்கே இப்படின்னா அடிக்கடி போய்வர்றவங்க குறிப்பா வீட்டோட மாப்பிள்ளைகளுக்கு எல்லாம் எப்படி இருக்கும்னு தெரியலையே...? 

No comments:

Post a Comment