flipkart discount sale search here.

Monday, 14 August 2017

தேங்காய் நீரின் நன்மைகள்...

1 டம்ளர் தேங்காய் நீர்: தினமும் குடித்தால் இந்த பலனை பெறலாம்

தேங்காயில் நீரில் கலோரி மிகவும் குறைவு. சுவை மிகுந்த இந்த பானத்தை 1 டம்ளர் குடித்து வந்தால் பல்வேறு அற்புத நன்மைகளை பெறலாம்.

தேங்காய் நீரில் அமினோ அமிலங்கள், என்சைம்கள், பி-காம்ப்ளக்ஸ் விட்டமின்கள், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் போன்றவை நிறைந்துள்ளது.

தேங்காய் நீரின் நன்மைகள்

தேங்காய் நீர் உணவு செரிமானத்திற்கு உகந்தது. இது வயிற்றுப்போக்கு, காலரா போன்ற நோயின் தாக்கத்தால் ஏற்படும் உடல் வறட்சியை போக்க உதவுகிறது.

சருமத்தின் pH நிலையை சமன் செய்து, உடலின் பளபளப்பை அதிகரித்து, தோல் அரிப்பு அல்லது தோல் தொற்றுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

விட்டமின்கள் நிறைந்த தேங்காய் நீர் நமது மனநிலையை உடனடியாக மாற்றுவதுடன், மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

தேங்காய் நீர் குறைந்த கலோரி பானம் என்பதால், இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

தேங்காய் நீரில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. அதனால் எலும்புகளை வலிமையாக்கி, ஆரோக்கியமாக பாதுகாக்கிறது.

தேங்காய் நீரில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. எனவே இந்த நீரை பருகுவதால், அது சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.
உயர்ந்த ரத்த அழுத்தம் இருப்பவர்கள், தேங்காய் நீரை குடித்து வந்தால், அது ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வைத்து, ஒற்றை தலைவலி பிரச்சனையையும் போக்கும்.

பொட்டாசியம் சத்து நிறைந்த தேங்காய் நீரை குடித்து வந்தால், தசை பிடிப்பு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

தேங்காய் நீர் நீண்ட ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவதுடன், நீரழிவு நோயாளிகளுக்கு நல்ல தீர்வை அளிக்க உதவுகிறது.

No comments:

Post a Comment