எது
சுதந்திரம்.
ஒற்றை மறத்தில்
கொடி ஏற்றுவதா ?
ஒத்த
ரூபாய் கொடிவாங்கி
சட்டைபையில்
மாட்டிக்கொல்வதா ?
சுதந்திரம் என்பது
வாய் வார்த்தை அல்ல.
தன் நாட்டு
மக்களின் வாழ்க்கை.
நாடு
அட்ச்சயபாத்திரமாய்
இருந்தது அன்று.
பிச்சைபாத்திரமாய்
ஆனது இன்று.
மாயாவிகளுக்கு
வாக்குசெலுத்தி
மாயைக்குல் சிக்கிக்கொண்டோம்.
மக்களின் வாழ்வாதாரத்தை பரிப்பது அவர்களுக்கு சுதந்திரம். அதை இழப்பது நமக்கு
சுதந்திரமா...
எங்கு செல்கிறது
என் நாடு.
எங்கு உள்ளது
சுதந்திரம்.
அதிகாரம்
அயோக்கியர் கையில் உள்ளவரை
அறவே இல்லை
சுதந்திரம்.
அன்று வெள்ளை
நிறத்தவனிடம்
போராட்டம்.
இன்று வெள்ளை
உடுத்தியவனிடம்
போராட்டம்.
கிடைத்ததா சுதந்திரம்
உழுது
விதைப்பவனுக்கும்.
விதை
நிலங்களுக்கும் .
தாகம்
தீர்க்க ஆசையாய் ஓடிவரும்
ஆற்றுநீருக்கும்
உண்மை
வார்த்தைகளுக்கும்.
உதிரும்
புன்னகையிக்கும்.
கிடைக்காத
சுதந்திரம் உனக்கு
மட்டும் எப்படி ?
ஓ..ஓ..ஓ.....
200, 300-கும் ஆசைக்கொண்டு தன்வாக்கைவிற்று.
ஐந்து ஐந்தாண்டுகள்
அடிமையாய் இருக்கும் நாம்.
50 காசுமிட்டாய்கு
சுதந்திரதினம் கொண்டாடுவது.
ஒன்றும் வியப்பில்லை.
இதில் நான் ஒருவன்
இல்லை.
நான் தமிழரில்
ஒருவன்.
No comments:
Post a Comment