கிறிஸ்தவர்கள் சொத்துரிமை பற்றி சட்டம் என்ன சொல்கிறது?
கிறிஸ்தவர் ஒருவருக்கு பிறந்துள்ள குழந்தைகள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், அந்த கிறிஸ்தவர் இறந்த பிறகு அவரது சொத்தில் சமமான பங்கைப் பெறுவார்கள்.
கிறிஸ்தவர் ஒருவர் இறந்த பிறகே அவரது சொத்தில் அவரது வாரிசுகள் பாகம் பெற முடியும்.
கிறிஸ்தவர் ஒருவர் இறந்த பிறகு அவரது சொத்தில் அவரது மனைவியும் மற்றும் குழந்தைகளும் பாகம் பெறுவதற்கு உரிமையுடைவர்களாவார்கள்.
கிறிஸ்தவரின் சொத்தில் அவரது பேரனும், பேத்திகளும் கொள்ளுப் பேரனும், கொள்ளுப் பேத்திகளும் கூட பாகம் பெற உரிமையுடைவர்களாவார்கள்.
கிறிஸ்தவரின் சொத்தில் தாய், தந்தை, சகோதரன், சகோதரி மற்றும் இரத்தவழி உறவினர்களும் பாகம் பெறுவதற்கு உரிமையுடைவர்களாவார்கள்.
இந்திய கிறிஸ்தவர்கள் யார்?
1. இந்தியாவை தாயகமாக கொண்டவர்கள்
2. கலப்பில்லாததும் உண்மையிலேயே ஆசியா கண்டத்தை சேர்ந்தவர்களாகவும் இருப்பவர்கள்
3. கிறிஸ்தவ மதத்தின் ஏதாவது ஒரு பிரிவை பின்பற்றி வாழ்ந்து வருபவர்கள்
4. வேறு மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்தை தழுவியவர்கள் இந்திய கிறிஸ்தவர்கள் ஆவார்கள்.
ஆனால் ஆங்கிலோ இந்தியர்கள் இந்திய கிறிஸ்தவர்களாகமாட்டார்கள்.
இந்திய கிறிஸ்தவர்களுக்கிடையிலான பாகப்பிரிவினை இந்திய வாரிசுரிமை சட்டப்படி (Indian Succession Act) நடைபெறுகிறது.
இந்திய கிறிஸ்தவர்களை பொறுத்தவரை அவர்களுக்கு மூதாதையர் வழிச் சொத்து (Ancestral Property) என்றோ, கூட்டுகுடும்ப சொத்து (Joint Family Property) என்றோ எதுவும் கிடையாது. பொதுவாக குடும்பத்திலுள்ள சொத்துக்களை பாகம் பிரித்துக் கொள்ளலாம்.
ஒரு கிறிஸ்தவ மகனின் சொத்தில் ஒரு இந்து தந்தைக்கும், ஒரு கிறிஸ்தவ சகோதரனின் சொத்தில் ஒரு இந்து சகோதரனுக்கும், சகோதரிக்கும் பங்குள்ளது.
கிறிஸ்தவர் குழந்தைகளை தத்தெடுக்க முடியாது. ஆனால் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அனுமதியோடு ஒரு குழந்தையை வளர்க்கலாம்.
வளர்ப்பு தாயை இந்திய வாரிசுரிமை சட்டம் தாயாக ஏற்றுக்கொள்வதில்லை.
ஒரு இந்து தனது மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இறக்கும் வரை கிறிஸ்தவ மதக் கொள்கைகளை தழுவி வாழந்திருந்தாலோ அல்லது ஒருவரின் மூதாதையர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி அந்த மூதாதையரின் வாரிசும் அவர் இறக்கும் வரை கிறிஸ்தவ மதக் கொள்கைகளை ஏற்று வாழந்திருந்தாலோ அவ்வாறானவர்களின் சொத்துக்களில் ஏற்படும் பிரச்சினைகள் இந்திய வாரிசுரிமை சட்டப்படி தான் தீர்மானிக்கப்படும்.
கிறிஸ்தவ தந்தை ஒருவர் தனது சொத்து குறித்து யாருக்கும் உயில் எழுதி வைக்காமல் தனது 3 மகன்களை மட்டும் வைத்துவிட்டு இறந்துவிட்டால் அவரது சொத்துக்கள் 3 மகன்களுக்கும் சரிசமமாக போய் சேரும்.
இறந்து போன கணவருக்கு மனைவியும், குழந்தைகளும் மட்டும் இருந்தால் மனைவிக்கு 1/3 பாகமும் குழந்தைகளுக்கு 2/3 பாகமும் கிடைக்கும்.
இறந்து போன கணவருக்கு குழந்தைகள் இல்லாமல் இருக்கும் போது அவரது மனைவி 1/2 பாகத்தையும் மீதமுள்ள 1/2 பாகத்தை அவரது இரத்தவழி உறவினர்களும் அடைவார்கள். இறந்தவரின் தாய், தந்தை இரத்தவழி உறவினர்கள் ஆவார்கள்.
இறந்து போன கணவருக்கு குழந்தைகளோ, இரத்தவழி உறவினர்களோ இல்லாமல், அவரது மனைவி மட்டும் உயிருடன் இருந்தால் அந்த மனைவி முழு சொத்தையும் பெறுவார்.
கணவருக்கு குழந்தைகள் யாரும் இல்லாமல் அவரது மனைவி மட்டும் உயிருடன் இருக்கும் நிலையில் கணவரின் சொத்து மதிப்பு ரூ. 5000/-க்கு மிகாமல் இருந்தால் அந்த சொத்து முழுவதும் மனைவிக்கே போய் சேரும்.
கணவரின் சொத்து மதிப்பு ரூ. 5000/-க்கு அதிகமாக இருந்தால், ரூ. 5000/-யும் அதற்குரிய வட்டியையும் மனைவி பெற்றது போக மீதி இருக்கும் தொகையை கணவரின் இரத்தவழி உறவினர்கள் அடைவார்கள். அதாவது ரூ. 5000/- வட்டியுடன் & மேற்படி தொகை போக மீதமுள்ள தொகையில் 1/2 பாகம் மனைவிக்கு கிடைக்கும். மீதமுள்ள 1/2 பாகம் இரத்தவழி உறவினர்களுக்கு கிடைக்கும்.
இறந்து போன கணவரின் சொத்துக்களின் மொத்த மதிப்பானது இறந்த கணவர் பிறருக்கு கொடுக்க வேண்டிய கடன்கள், அவரது இறுதிக் காரியங்களுக்கான செலவுத் தொகைகள், நிர்வாகச் செலவுகள் மற்றும் அனைத்து சட்டப்படியான பொறுப்புகள் மற்றும் பற்றுகைகள் ஆகியவற்றிற்கான எல்லாத் தொகைகளும் போக மீதமுள்ள தொகையை இறந்தவரின் சொத்திற்கான மொத்த மதிப்பாக பாகப்பிரிவினையின் போது கணக்கிடப்படும்.
கணவன் வாரிசுகள் ஏதும் இல்லாமல் இறந்து போனால் அவரது சொத்துக்கள் அனைத்தும் அரசாங்கத்தை சென்றடையும்.

No comments:
Post a Comment