flipkart discount sale search here.

Tuesday, 15 August 2017

ஒழுங்கீன நடத்தை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை...

ஒழுங்கீன நடத்தை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை
(Misconduct of workmen and Disciplinary Proceedings) :

தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எப்படி எடுக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது?

பொதுவாக தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்தினருக்குமிடையே உள்ள தொழிலக நல்லுறவை பாதித்து அவர்களிடையே ஆத்திர உணர்வினை வளர்ச் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது நிர்வாக தரப்பில் தொழிலாளர்கள் மீது மேற்கொள்ளும் ஒழுங்கு நடவடிக்கைகளாகும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. ஒரு தொழிலாளியின் ஒழுங்கீன நடத்தைக்காக அவர் மீது நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது சில நடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தீர்ப்புகளின் வாயிலாக கூறியுள்ளது.

தொழில் தகராறுகள் சட்டமோ அல்லது அந்த சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள விதிகளோ ஒரு தொழிலாளியின் மீது எடுக்கப்பட வேண்டிய ஒழுங்கு நடவடிக்கைகள் என்ன முறையில் இருக்க வேண்டும் என்பதை கூறவில்லை. எனினும் தொழிலக பணி (நிலையாணைகள்) மத்திய விதிகள், 1946 ல் சேர்க்கப்பட்டுள்ள அட்டவணை 1 ல் உள்ள விதி 13 (Industrial Employment (Standing orders) Rules, 1946 Schedule I Rule 13) தொழிலாளர்களின் ஒழுங்கீன நடத்தைகள் பற்றியும், அத்தகைய செயல்களில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பற்றியும் சில விவரங்களை கொடுக்கிறது.

நிறுவனத்தில் அமுலில் உள்ள நிலையாணைகளில் எந்தெந்த ஒழுங்கீனங்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதோ அவைகளுக்காக மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்  நிலையாணையில் கூறப்படாத ஒரு செயலுக்கு நிர்வாகம் தண்டனை கொடுப்பது செல்லாது என உச்சநீதிமன்றம் "Glaxo Industries (P) Ltd Vs Labour Court Meerut (1984-1-LLJ-16-SC) என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.

ஒழுங்கீன நடத்தை (Misconduct) :

ஒரு தொழிலாளி செய்யக்கூடாத கீழ்க்கண்ட செய்கைகளும், செயல்களும் அல்லது செய்ய வேண்டியவைகளை செய்ய தவறுவதும் (acts and omissions) ஒழுங்கீனமாக கருதப்படும்.

1. தன்னை கட்டுப்படுத்தும் மேலதிகாரியின் சட்டப்படியானதும், நியாயமுமான உத்தரவுகளுக்கு வேண்டுமென்றே கீழ்ப்படியாமை (wilful disobedience in lawful or reasonable order of a superior).

2.  திருடுதல், மோசடி செய்தல் அல்லது தனது பணியில் நேர்மையில்லாமல் நடந்து கொள்ளுதல்

3. வேண்டுமென்றே முதலாளியின் சொத்துக்களை அழித்தல் அல்லது அவரது பொருட்களுக்கும், சொத்துகளுக்கும் இழப்பு ஏற்படுத்துதல்

4. முறையற்ற பயனை அடைவதற்காக லஞ்சம் பெறுதல் அல்லது லஞ்சம் கொடுத்தல் (taking or giving bribes or an illegal gratification)

5. விடுப்புக்கு விண்ணப்பிக்காமலே அடிக்கடி 10 நாட்களுக்கும் மேல் பணிக்கு வராததை வழக்கமாக வைத்திருத்தல்

6.  பணிக்கு தாமதமாக வருவதை வழக்கமாக வைத்திருத்தல்

7.  நிறுவனத்திலுள்ள சட்ட திட்டங்களை மீறுவதை வழக்கமாக வைத்திருத்தல்

8. வேலை நேரத்தில் வன்முறை செயல்களில் ஈடுபடுவது அல்லது ஒழுங்கீனமாக நடந்து கொள்ளல்

9.  வேலையை முறையாக செய்யாமல் புறக்கணித்தல்

10.  அடிக்கடி அபராதம் விதிக்கும்படியாக செயல்படுவது

11.  நடைமுறையிலிருக்கும் ஒரு சட்டம் அல்லது விதிக்கு எதிராக வேலை செய்ய மறுத்தல் அல்லது மற்றவர்களை வேலை நிறுத்தம் செய்ய தூண்டுதல் ஆகியவைகள் ஒழுங்கீனங்களாக கருதப்படுகிறது.

(ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முறை பற்றி எமது அடுத்த பதிவு விரைவில்......)
[8/14, 3:05 PM]  +91 94861 91024 : ஆட்குறைப்பு செய்ய வேண்டிய முறை குறித்து தொழில் தகராறுகள் சட்டம் என்ன சொல்கிறது?

ஆட்குறைப்பின் போது "கடைசியில் (வேலைக்கு) சேர்நுதவரே முதலில் (வேலையைவிட்டு) செல்ல வேண்டும்" என்ற தொழிற் சட்ட விதியை (Last come must go first principle) கடைபிடிக்க வேண்டும். அதாவது பணிமூப்பு (seniority) அதிகமாக உள்ளவர்களை விட்டுவிட்டு பணிமூப்பு குறைந்தவர்களையை (Juniors in service) முதலில் ஆட்குறைப்பு செய்ய வேண்டும். பணிமூப்பினை தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கும் போது அவர்கள் சம்பந்தப்பட்ட, குறிப்பிட்டவகை தொழிலாளர்களுக்கிடையே தான் (among the particular category of workmen) நிர்ணயிக்க வேண்டுமேயொழிய அந்த தொழிற்சாலையிலுள்ள அனைத்து தொழிலாளர்களின் பொது பணிமூப்பினை (General seniority) கருத்தில் கொள்ளக்கூடாது (பிரிவு - 25G)

ஒரு குறிப்பிட்ட வகை தொழிலாளர்களிடையே, எல்லா அம்சங்களும் ஒன்றாயிருக்கும் பட்சத்தில், கடைசியில் பணிக்கு சேர்ந்தவர்களைத்தான் முதலில் ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என்று பிரிவு 25G கூறுகிறது. இந்த விதியின் கீழ் ஒரு தொழிலாளி பணி பாதுகாப்பு பெற வேண்டுமெனில் அவர் கீழ்க்கண்ட நிபந்தனைகளை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment