flipkart discount sale search here.

Tuesday, 8 August 2017

தூற்றினாலும் போற்றினாலும் கடைசியில்...

👌🙏🙏🙏🙏👌

படித்தில் பிடித்தது
நாத்திகம் பேசிய *பெரியார்* இறக்கும் முன் கடவுளே என்னை எடுத்துக்கொள்ளும் என்னை கஷ்டப் படுத்தாதே என வேண்டினார்,,

நாத்திகம் பேசிய *M.R ராதா* இறக்கும் முன் காஞ்சி சங்கராச்சாரியாரை பார்த்து தஞ்சம் அடைந்தார்,

நாத்திகம் பேசிய *கண்ணதாசன்* இறக்கும் முன் அர்த்தமுள்ள இந்துமதம் எழுதி விட்டு உயிரை விட்டார் ,

நாத்திகம் பேசிய *கருணாநிதி* இப்போது இராமானுஜர் காவியத்தை தன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்கிறார்,

எவ்வளவு தூற்றினாலும் போற்றினாலும் கடைசியில் வர வேண்டிய இடம் இறைவனிடமே..........🕍

சலங்கையின் விலை  ஆயிரக்கணக்கில்,
அதை காலில் தான் அணிய  முடியும்.
                      குங்குமத்தின் விலை மிகக்குறைவு.          
அதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள்.
இங்கு விலை முக்கியமில்லை,
அதன் பெருமை தான் முக்கியம்.

*உப்பு போன்ற கடினமான வார்த்தைகளால் நம்மை  திருத்துபவன் உண்மையான நண்பன்....*

*சர்க்கரை போன்ற இனிப்பான வார்த்தைகளால் நம்மை  புகழ்பவன் நயவஞ்சகன்.*

புழுவுற்ற உப்பும் புழுவுறாத இனிப்பும் இவ்வுலகில்  உள்ளதாக இதுவரை வரலாறு இல்லை.

இங்கு
கோயில்கள்,
மசூதிகள்,
திருத்தலங்கள்  வேடிக்கையானவை,

பணக்காரன் உள்ளே சென்று  பிச்சை  எடுக்கிறான், ....
ஏழை வெளியில் நின்று  பிச்சை எடுக்கிறான்,...

ஆக ஏதோ ஒரு வகையில் அனைவரும் பிச்சை எடுப்பவர்களே.

*காணாத கடவுளுக்கு   பஞ்சாமிர்தம் படைப்பார்கள்,*
*கண்கண்ட  கடவுளுக்கு (தாய்தந்தை) பழைய சோறும், கிழிந்த துணியும்  கொடுப்பார்கள்.*

மனிதப் பிறவி சிறப்பானதாகத் தெரியவில்லை,

ஏனெனில்  பிறக்கும்போதும் அழுகை,
சாகும்போதும் அழுகை,

இடையில் எல்லாம் நாடகம்.....

தீங்கு விளைவிக்கும் மது விற்கும் இடத்திற்கு ஓடோடி போவான்,
அமுதமாம் பால் விற்பவர் வீடு வீடாக தெருத் தெருவாக வெயிலில் சுற்றுகிறார்.

பால்காரரைப் பார்த்தால்  பாலில் தண்ணீர்  ஊற்றுகிறார் என்று  சண்டையிடுவார்கள்,....

தண்ணீரில்  நஞ்சுகளை கலந்து விற்கும் பானங்களை தலைமீது வைத்து கொண்டாடுகிறார்கள்.

மனிதனின் பிணத்தை  தொட்டால் அல்லது பார்த்தாலே தீட்டு எனக் குளிக்கும்  மனிதன்,
வாயில்லா ஜீவன்களை பிணமாக்கி வகைவகையாச் சமைத்து  விழா எடுப்பார்கள்.

*இவ்வளவு  தான் மனிதனின் வாழ்க்கை.*

 இதற்குள் எதற்கு உறவுகளுக்குள்..
*கோபம்,*
*விரோதம்,*
*வீண்பழி,*
*கௌரவம்*
*அஹங்காரம்*
*அதிகாரம்*
*ஆணவம்*
*கொலை,*
*கொள்ளை*,
*காழ்ப்புணர்ச்சி?*

எது நமதோ அது வந்தே தீரும்.
யாராலும்  தடுக்கமுடியாது.
நமதில்லாதது...
நமக்கில்லாதது...
எது செய்தாலும் வராது. யாராலும்  தரவும்  முடியாது.

வாழும் வரை வாழ்க்கை...

*வாழ்ந்து காட்டுவோம்..*
*பழக்கத்திற்கு இனியவராக* *மற்றவர்களின்* *இதயத்தில்......👍🏻*

No comments:

Post a Comment