flipkart discount sale search here.

Friday, 11 August 2017

அனைத்து அரசியலையும் புரிந்துகொள்ள இந்த சின்ன கட்டுரையில் இருக்கிறது..

தமிழக கடலோரத்தில்
அதிகாரப்பூர்வமாக மட்டும்
இந்திய அரசு 47 தனியார்
அனல்மின் நிலையங்களை அறிவித்து
பல ஆண்டாகிறது.
5 ஆண்டு 10 ஆண்டுக்கான திட்டமில்லை
100 ஆண்டு தாண்டியும் இயங்கும்
மின்சக்தி தயாரிப்பு.
சரி #நிலக்கரிக்கு எங்கே #போவார்கள்?

25% நிலக்கரி கடல்வழி இறக்குமதி என்று அனல்மின் நிலையம் திட்ட வரைவில் கூறியிருக்கிறார்கள்.
அப்போ மீதி 75% நிலக்கரி?

47 அனல்மின் நிலையத்துக்கு
நிலக்கரி தேவைனா?
அதும் 100 வருடத்துக்குன்னா ஏதோ சாதாரணமா நினச்சிறாதிங்க.

எவ்வளவு தேவைப்படும்னு #சொல்லனும்னா?

மின்சாரத்திற்காக சூடாக்கும்போது நிலக்கிரியிலிருந்து பறக்கக்கூடிய #துகளுக்கு பெயர் ஆஷ் பாண்ட் (Ash Bond). இந்த #ஆஷ்பாண்டிலிருந்துதான்
#சிமண்ட் தயாரிப்பார்கள்.

அதனால் ஒவ்வொரு அனல்மின் நிலையத்திற்கும் மூன்று சிமண்ட் தொழிற்சாலை அதோடு ஒட்டி அமைக்கப்படுகிறது.

அதில் ஒரு நாளைக்கு 90,000டன் சிமண்ட் உற்படுத்தி நடந்தே ஆகவேண்டும்,
அப்படி #நடக்கவில்லையென்றால் ஆஷ்பாண்டை கட்டுப்படுத்த முடியாது.

ஒரு அனல்மின் நிலையத்தில்
ஒரு நாளைக்கு வெளியேறுகிற ஆஷ்பாண்டே இவ்வளவு டன் என்றால் எவ்வளவு நிலக்கரி ஒரு நாளைக்கு மட்டும் தேவைப்படும்..
அதுவும் 47 அணல்மின் நிலையத்திற்கு
100 வருடத்திற்கு எவ்வளவு நிலக்கரி #தேவைப்படும் என்று கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.?

அவ்வளவு நிலக்கரி எங்கே எடுப்பதுன்னு தெரியாமலா பணக்கார கம்பனிகள்
இங்கு வருவார்கள்?

ஆம்
பாண்டிச்சேரி தொடங்கி கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்ட பகுதிகளின் நிலத்திற்கு கீழே 19,500cu ton நிலக்கரி இருக்கிறது.
இதை பல வருடத்திற்கு முன்பே அறிந்து அதை எடுப்பதற்கு திட்டமிட்டு
#செயல்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

அந்த நிலக்கரியை எடுக்க வேண்டுமென்றால்
நிலத்தடி நீர் முழுதும் இருக்கக்கூடாது, நிலத்தடி நீரை அழிக்க பல செயல்களை
அரசு உதவியோடு
செயல்படுத்தி வருகிறார்கள் என்பது உங்களுக்கு #தெரிந்திருக்கும்.

பிறகு நிலக்கரியை எடுத்தாலும் நெருப்போடுதான் வரும் ஏனென்றால்
அதில் 13 வகையான
ஹைட்ரோ கார்பன் வாயு #இருக்கிறது..

அதாவது மீத்தேன், ஷேல் கேஸ்,
கச்சா எண்ணெய் போன்று.
அதை பிரித்து வெளியில் எடுத்தால்தான் நிலக்கரியை #எடுக்க முடியும்.

அந்த வேலைதான்
இப்பொழுது (ONGC) #ஓஎன்ஜிசியை வைத்து அரசு செய்கிறது.

மேலும்
நிலக்கரி சுரங்கம் அமைத்து எடுக்கனும்னா இங்க இருக்கிற பெரும்பகுதி மக்களை #வெளியேற்றனும்..

அது நடைமுறைபடுத்த
"தண்ணீர்" என்ற ஒன்று இல்லாமல் #ஆக்கினால்தான்
மக்கள் தற்சார்பு அனைத்தயும் இழப்பர், வாழ்வாதாரம் இழப்பர் சோத்துக்கு வழியில்லாமல் அவர்களே அகதியாக வெளியேறுவிடுவார்கள் என்பது
பணக்கார முதலாளிகளின் #கணக்கு.

அதனால்தான்
இந்த பகுதிகளில் மட்டும் நீரை அழிக்கிற திட்டங்கள் #மட்டும் வரும்,
மற்ற பகுதிகளில் வரும் திட்டங்கள் பெரும்பாலும் நீரை அழிக்காது.

உலக முதலாளிகளை பொறுத்த வரை, உலகின் அதிக நுகர்வோர் ஆசியா கண்டத்தில்தான். முழு ஆசியாவையும் ஆளுமை செய்ய, போக்குவரத்துக்கு, உற்பத்தி நிலையத்திற்கு, ராணுவ தளத்திற்கு ஆசியா திசையிலிருக்கிற தமிழ்நாட்டு கடலோரம், ஈழம் ஆகிய பகுதிகளை #கைப்பற்றவேண்டும்.

அதன் செயல்திட்டத்தில்
உலக நாடுகள் துணை கொண்டு
புலிகளை அழித்தார்கள்.

கடலையும், கடலோரத்தையும் கைப்பற்ற மீனவர்களை அப்புறப்படுத்த
புதிய மீன்பிடி மசோதா வரும்,
ஏற்கனவே இம்மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது, அது விரைவில் நிறைவேறினால் மீனவர்கள் தானாகவே #வெளியேறிவிடுவார்கள்.

நிலக்கரி இருக்கும் நெற்களஞ்சிய மக்களையும் அகதியாக்கிவிடுவார்கள்.

இங்கு வரும் தொழில்நுட்ப தொழிற்சாலை, கம்பெனி, அனல்மின் நிலையத்திற்கு அடிமாட்டு சம்பளத்திற்கு வேலை செய்ய ஆட்கள் தேவை..

அதனால்தான் கடந்த 25 ஆண்டுகளாக பல புதிய பொறியியல் கல்லூரிகள், சொல்லப்போனால் முழு சைனாவை விட தமிழகத்தில் மட்டுமே பொறியியல் கல்லூரி #அதிகம்.

பல பொறியாளர்களை உருவாக்கி வேலையில்லா பொறியாளர்களை அதிகப்படுத்தனும். பிறகு அவர்களுக்கு ஆட்கள் தேவைப்படும்போது அடிமாட்டு சம்பளம் கொடுத்தாலே #அடிமையாக வேலைக்கு வருவார்கள்.

இந்த அடிமையாக்கி பணம் பார்க்கும் திட்டத்திற்குத்தான் புலிகளை அழித்தது, செயற்கையாக தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்படுத்தியது,
மணலை அழிப்பது,
தற்சார்பாக இயங்குவதற்குள்ள
அனைத்து தமிழக வளங்கள்,
கால்நடைகளை அழிப்பது,
இந்தியாவில் தமிழகத்தை மட்டும் குறி வைத்து தாக்குவது,
கன்னடர்கள் தமிழகத்துக்கு
தண்ணீர் தராமல் போராடுவது இயற்கையாக அல்ல,
நம்மாழ்வார் சொல்வது போல மழை வராமல் இருப்பதும் இயற்கையாக அல்ல
அனைத்தும் #திட்டத்தின்படியே.

ஆனால் இத்திட்ட நோக்கின் பிரதானமான நிலக்கரி எடுத்தலையோ,
ஒவ்வொரு திட்டமும் மற்றொன்றோடு தொடர்புடையதையோ..
#வெளிப்படுத்த..
வெளிவர அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள்

அப்படி நடந்தால் அவர்களின் எண்ணத்தை செயல்படுத்த முடியாமல் தோல்வியடைவார்கள்.

ஏனென்றால்
நாம் ஒவ்வொன்றுக்கும்
தனித்தனியாக போராடுகிறோம்.

ஈழ உணர்வாளர்கள் தனி இயக்கமாக,
மணல் அள்ளுவதற்கு தனியாக,
அனல்மின் நிலையத்திற்கு
தனி ஆட்கள் தனி கூட்டமைப்பாக, மீனவர்களுக்கு தனி போராட்டமாக, விவசாயிகளின் பிரச்சனையை
தனியாக பார்ப்பது,
மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் தனியாக, அணுமின் எதிர்ப்பு போராட்டம் தனியாக (தமிழகத்தில் மட்டும் புதிதாக 11 அணுமின் நிலையத்திற்கு அரசு கையெழுத்திட்டாச்சு), ஓ.என்.ஜி.சிக்கு எதிராக தனி போராட்டம்.. இப்படி தனியாய் தனி பிரச்சனையென்று போராடாமல் ஒரே பிரச்சனையென்று
ஒரே கூட்டமாக #போராடினால் மட்டுமே
நம் மண் நமக்கு வாழவும், ஆளவும் மிஞ்சும்.

No comments:

Post a Comment