வெண்டைக்காய் சத்தான காய்கறி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அது அளப்பரிய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதை பலர் அறிய மாட்டார்கள். மலச்சிக்கல் முதல் தாம்பத்யம் வரை பல பிரச்னைகளுக்கு இது அருமருந்து.
வெண்டைக்காய் நமது ஊர் காய் என நினைத்துவிடாதீர்கள். அதன் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதிக்கரையோர நாடுகள் என கடந்து வந்து இந்திய மண்ணில் கால் பதித்தது. அதன்பிறகு ஆப்பிரிக்க அடிமைகள், வியாபாரத்துக்காக அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
அன்றைய காலங்களில் வெண்டைக்காயை எப்படி சமைப்பதென்று தெரியாமல் செடியிலேயே விட்டுவிட்டனர். இதற்கிடையே ஆப்பிரிக்கர்கள் `கம்போ' என்று ஒருவகை சூப் தயாரித்தபோது அது கெட்டியாவதற்காக வெண்டைக்காயை காய வைத்து அதன் பொடியைச் சேர்த்துக்கொண்டனர். பிற்காலத்தில் உலகம் முழுவதும் வெண்டைக்காய்க்கு அடிமையாகி விட்டது. அமெரிக்கர்கள் வெண்டைப்பிஞ்சுகளை நறுக்கி முட்டையில் நனைத்து ரொட்டித்தூள் அல்லது சோள மாவு கலந்து எண்ணெய் விட்டு பொரித்துச் சாப்பிடுகிறார்கள். வெளிநாடுகளில் வெண்டைக்காயைப் பொடியாக நறுக்கி தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து சாலட்டாகச் செய்து சாப்பிடுகிறார்கள்.
‘abelmoschus esculentus' என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட வெண்டைக்காய் இளம்பச்சை, கரும்பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் நீளம், குட்டை, ஆகிய வடிவங்களில் காணப்படுகின்றன. மென்மையாக இருப்பதால் வெளிநாடுகளில் இதை `லேடிஸ் ஃபிங்கர்' என்று அழைக்கின்றனர். வெண்டைக்காயின் சிறப்பே அதன் 'கொழ கொழ' தன்மை தான். இதில் காணப்படும் ஒருவித அமிலமே கொழகொழப்பை ஏற்படுத்துகிறது. வெண்டைக்காயை நறுக்கும்போது அமிலம் வெளியாகிறது. வெண்டைக்காயை இளசாக இருக்கும்போதே பறித்துவிட வேண்டும்.
வெண்டைக்காயில் ஈரம் இருந்தால் அழுகிவிடும். ஆகவே ஈரம் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சமைப்பதற்குமுன் நன்றாகக் கழுவ வேண்டும். சிலவகை வெண்டைக்காய்களில் மெல்லிய ரோமங்கள் போல காணப்படும். ஆகவே தண்ணீரில் கழுவியதும் துடைத்துவிட்டு நறுக்க வேண்டும். நறுக்கிய பிறகு தண்ணீரில் போடக்கூடாது. ஏனென்றால் தண்ணீரில் போட்டால் வெண்டைக்காயில் இருக்கும் 'கொழகொழ' திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்துவிடும்.
மலச்சிக்கல்
வெண்டைக்காயை வேக வைத்துச் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல என்ற கருத்து நிலவுகிறது. அதில் உண்மையில்லை; ஆனால் வெண்டைக்காயைத் திரவ வடிவில் உட்கொள்ளும்போது நிறைய மருத்துவப் பலன்கள் கிடைக்கின்றன. வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், ஒரு டம்ளர் தண்ணீரில் வெண்டைக்காய்த் துண்டுகளைப் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலை வடிகட்டி நீரை மட்டும் பருகி வந்தால் குடலியக்கம் சீராகி மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும். வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துகள், பெருங்குடல் பாதையை சுத்தம் செய்து குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது. இதேபோல் இதிலுள்ள கரையும் நார்ச்சத்து கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்துகள் குறைகின்றன.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோயாளிகள் தினமும் இந்த நீரைப் பருகி வந்தால் ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள முடியும். வெண்டைக்காய் ஊறிய நீரை அருந்துவதால் அதிலுள்ல ஃபோலேட் எலும்புகளை வலுவாக்கி ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னை வராமல் தடுக்கிறது. எலும்புகள் வலுப்பெறவும் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் தினமும் வெண்டைக்காய் நீரைக் குடித்து வரலாம்.
சுவாசப் பிரச்னை இருப்பவர்கள் வெண்டைக்காய் ஊறிய இந்த நீரைப் பருகுவதால், ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறு அபாயம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்டுகள், வைட்டமின் சி போன்றவை இருப்பதால், வெண்டைக்காய் ஊறிய நீரைப்பருகுவதால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைந்து காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கம் குறையும்.
சர்வ ரோக நிவாரணி
வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும், படிப்பு வரும் என்பார்கள். அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை; ஆனால், சகல நோய்களையும் தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி என்பதில் சந்தேகமில்லை. சர்க்கரை நோயில் தொடங்கி அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்றுப்புண், பார்வைக்குறைபாடு என பலவித நோய்களையும் தீர்க்கக்கூடியது. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. தாயின் வயிற்றில் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை நல்லநிலையில் வளர உதவுவதோடு குழந்தையின் நரம்புக் குழாய்களின் வளர்ச்சிக்கு ஃபோலிக் அமிலம் உதவுகிறது. இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்தும் குறைந்த ஆற்றலும் எடையைக் குறைக்கப் பலனளிக்கும்.
பார்வைத் திறன்
வெண்டைக்காயில் பீட்டா

No comments:
Post a Comment