flipkart discount sale search here.

Saturday, 7 October 2017

தன்னம்பிக்கையை மட்டும் இழந்தே விடாதீர்கள்.

ஒரு விவசாயியின்  கிணறில் "பசு " ஒன்று தவறுதலாக விழுந்து விட்டது ...!

பசுவை வெளியில் எடுப்பதற்கு எவ்வளவோ முயற்சியை விவசாயி தனது நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்ட பல முயற்சிகள் கடும் தோல்வியில் முடிந்தன ..!

பாவப்பட்டு இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர்..?

அந்த பசுவை பாதி கிணறுக்குள் மண்ணை போட்டு மூடி விடுவதாக ..
பசுவின் மீது மண்ணை போட்டனர்.

பசு சற்றும் பதட்டமின்றி தான் எப்படியும் மேலே வருவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தது.

விவசாயிகள் மண்ணை அதன் மீது போட போட பசு உடலை உதறி உதறி தன் காலுக்கு கீழ் சேர்த்து இறுதியில் தானாகவே வெளியே வந்தது.
.
"மற்றவர்கள் உங்களை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கு சூழ்ச்சியாக ஏளனம், நையாண்டி, பழி சுமத்தல் ,சேறு பூசுதல்  என்று பல மாறுபட்ட கோணங்களில் வருவார்கள்'.

நீங்கள் அவற்றை அடித்தளமாக வைத்து உண்மையை நிலைநாட்ட விடாமல் முன்னேறி வாருங்கள் இந்த பாதிக்கப்பட்ட பசுவை போல.

எப்போதும் தன்னம்பிக்கையை மட்டும் இழந்தே விடாதீர்கள்.

No comments:

Post a Comment