flipkart discount sale search here.

Monday, 14 August 2017

செய்தியை படித்துவிட்டு அத்தனை எளிதில் கடந்து போக முடியவில்லை.

பேப்பரில் வந்த அந்த செய்தியை படித்துவிட்டு அத்தனை எளிதில் கடந்து போக முடியவில்லை.. ஒருவேளை நீங்களும் படித்திருந்தால் உங்களுக்கும் அப்படிதான் இருந்திருக்கும்..

மும்பையின் காஸ்ட்லியான இடங்களில் ஒன்று அந்தேரி லோக்கண்ட் வாலா காம்ளக்ஸ். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியிலிருக்கும் வீடு ஒன்றின் கதவு அழைப்பு மணி தொடர்ந்து பலமுறை அடிக்கப்பட்டும் திறக்கப்படவில்லை..

வேறு வழியின்றி அழைப்பு மணியை அடித்தவர் சாவி தயாரிப்பவரை அழைத்து வந்து புது சாவியை தயாரித்து கதவைத் திறக்கிறார்..

அப்படி திறந்த கதவு,
நமக்கு பல விசயங்களை சொல்கிறது.

மாற்று சாவி போட்டு கதவை திறந்து இந்த சமூகத்துக்கு அந்த மோசமான செய்திக்கு காரணமானவர் பெயர் ரித்து ராஜ். அமெரிக்காவில் மனைவியுடன் வசித்துவரும் அவர் ஐ.டி.நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.

அவர் கதவை திறந்தபோது, வரவேற்பறையில் இருந்த சோபாவில் ஒரு எலும்புக்கூடு வரவேற்றது. அந்த எலும்புக்கூடு வேறு யாருடையதும் அல்ல.. அவரது தாய்.

அமெரிக்காவில் பிஸியாக இருந்துவிட்டு மும்பை வந்த ரித்து ராஜின் அம்மா ஆஷா தான் எலும்புக்கூடாக அமர்ந்திருந்தார்.

சேலை மடிப்புக்கூட கலையாமல் உடல் மொத்தமாக மாயமாகி வெறும் எலும்புக்கூடாக இருந்த அம்மாவிடம் அந்த அருமைப்புத்திரன் கடைசியாக பேசியது ஏப்ரல் 2016.

அப்போது அந்த பரிதாபமான தாய் தன் மகனிடம், “தனியா இருக்க ரொம்ப கஷ்டமா இருக்கு.. உன்னுடன் அழைத்துச்செல் அல்லது என்னை ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுருப்பா..” என்று சொல்லியிருக்கிறார்.ஒருமுறை தன்னைவந்து பார்க்குமாறும் கெஞ்சி இருக்கிறார். சரி என்ற ஒரேமகன் அதுபற்றி மறந்துவிட்டார், பெற்றஅன்னையை மறந்தே விட்டார், மாதம் 20லட்சத்துக்கும்மேல்
சம்பளம் பெறும் அந்த மகன்.
அதைக்கூட செய்ய முடியாதளவுக்கு இயந்திர வாழ்க்கையில் இருந்த அந்த மகன், ஒரு போன் கூட பண்ணி நலம் விசாரிக்க நேரமில்லாத அந்தமகன் ஒன்றரை வருடத்திற்பிறகு அம்மாவின் ஞாபகம் வந்து அன்னையை காணவந்திருக்கிறார். தாய் மகன் வருவான் வருவான் என ஏங்கி காத்திருந்து உட்கார்ந்து இருந்தநிலையில் ஆறுமாதத்திற்கு முன்பே இறந்து சதைஎல்லாம் கரைந்து எலும்புக்கூடாக இருந்திருக்கிறார்.

இந்த செய்தியை என்னால் கடந்து போகவே முடியவில்லை.
*பூட்டிய வீட்டுக்குள் உயிர் பிரிந்த அந்த நொடியில் அந்த அம்மாவின் மனம் என்ன நினைத்திருக்கும்.. என்பதை நினைக்க நினைக்க மனம் மிகவும் வேதனைக்குள்ளானது.*

எவ்வளவு மோசமான தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது.

ஓராண்டுகளாக அம்மாவின் நினைவு இல்லாமல் ஒரு மகனால் எப்படி இப்படி இருக்க முடியும்.

*“நல்லாருக்கீங்களாம்மா.. சாப்பிட்டீங்களான்னு* அம்மாவிடம் கேட்க ஒரு பத்து நொடி ஆகுமா.. அதற்கு கூட நேரமில்லாமல் வெளிநாட்டில் வாழ்ந்து பணம் சம்பாதித்து சாதித்து இதெல்லாம் யாருக்காக.

*மகன் தான் இப்படி தறுதலையாக இருந்தார் என்றால், தங்கள் பக்கத்து வீட்டில் ஒரு அம்மா இருந்தாரே.ஆளே பார்க்க முடியவில்லையே என்று ஒரு வார்த்தை விசாரிக்க கூட அக்கம் பக்கத்து ஆட்களுக்கு நேரமில்லையே.எல்லோரும் இயந்திரமாகிவிட்டார்கள்.*

ஆக நம்மைச்சுற்றி இப்படியானவர்களைத் தான் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கை குறித்த எந்த புரிதலையும் குழந்தைகளுக்கு உருவாக்காமல், சிறுவயதிலிருந்தே IIT, NIIT, MBBS, BE என்று படிக்கவும் பணம் சம்பாதிப்பது மட்டுமே வெற்றி என்று படி படி என்று விரட்டி இயந்திரங்களாக குழந்தைகளை உருவாக்கும் பெற்றோர்களின் நிலை இதுவாகதான் இருக்கிறது.

இது ஒரு அம்மா மகன் கதை அல்ல.. இந்தியாவின் பெரு நகரங்களில் வாழும் வயதான பெற்றோர்கள் பலரது நிலையும் இதுதான்.

ஒவ்வொரு முதியோர் இல்லத்திலும் நாதியற்ற தெய்வங்கள் காத்திருக்கின்றன தங்கள்
பிள்ளைகளுக்காக..
பெருகி வரும் முதியோர் இல்லங்கள் என்பது வளர்ச்சி அல்ல.. அவமானம்.
நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்த நிலை நீடித்தால் நாளை நமக்கு இந்த மாதிரி ஒரு நிலை வராது என்று நம்மால் கூற முடியாது.பணம் தேவைதான் ஆனால் அன்பு பாசம் கொண்ட கூட்டு குடும்ப வாழ்க்கை முறை நமது கலாச்சாரம் அதை நாம் மறந்து விட கூடாது. ஜெய்ஹிந்த்

No comments:

Post a Comment