flipkart discount sale search here.

Friday, 11 August 2017

வில்லங்க சான்று பெறுவதற்கான கட்டணவிவரம்...

வில்லங்க சான்று பெறுவதற்கான கட்டணவிவரம்
மனுக்கட்டணம்(வழங்கப்படாத மனுவுக்கு கட்டணம்) ரூ.1.00
தேடுதல் கட்டணம் முதல் வருடத்திற்கு ரூ.30.00
இரண்டாம் வருடம் முதல் ஒவ்வொரு வருடத்திற்கும் கட்டணம் ரூ.10.00
மேற்கண்ட கட்டண விவரம் ஒரு புல எண்ணுக்கு மட்டுமே பொருந்தும்
அதாவது ஒரு கிராமத்தில் ஒரு புல எண்(சொத்து விவரத்தில் புல எண் என்றோ, சர்வே எண் என்றோ, க.ச.என்றோ குறிப்பிடப்பட்டிருக்கும்,
நகரத்திற்குள் வரும் சொத்துக்களுக்கு மேற்கண்டவாறு புல எண்ணுடன் நகரப்புல எண் என்றும் ஆங்கிலத்தில் சுருக்கமாக T.S.No.(Town Survey Number) என்றும் குறிப்பிட்டிருப்பார்கள்.
கிராமம் நத்தத்தில் உள்ள சொத்துக்களைப் பொறுத்து சொத்து விவரங்களில் நத்தம் எண் என்றோ, பழைய புல எண் என்றோ குறிப்பிட்டிருப்பார்கள், மேலும் புதிய புல எண் என்று ஒன்றும் குறிப்பிட்டிருப்பார்கள்.
இவ்வாறு ஒரு சொத்து விவரத்தில் புல எண், சர்வே எண், க.ச, நகரப்புல எண், டி.எஸ்.நெ. டவுன் சர்வே நெ, T.S.No., Town Survey No என எவ்வகையில் குறிப்பிட்டிருந்தாலும் அவ்வாறு குறிப்பிட்ட ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு கட்டணம் வீதம் எத்தனை புல எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளனவோ அதாவது நீங்கள் கோரும் வில்லங்க சான்று பெறுவதற்கான மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துவிவரத்தில் மேலே குறிப்பிட்ட வகைகளில் எத்தனை வகைகளில் எத்தனை புல எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளனவோ அப்புல எண்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கட்டணம் செலுத்த வேண்டும்.
உதாரணம்
ஒரு புல எண் மட்டும் குறிப்பிட்டு 31 வருடத்திற்கு சான்று பெறுவதற்கு முதல் வருடத்திற்கு ரூ.30.00
அடுத்த 30 வருடங்களுக்கு வருடம் ஒன்றிற்கு ரூ.10 வீதம் ரூ.300.00 ஆக 31 வருடங்களுக்கு ரூபாய்.330.00, மனுக்கட்டணம் ரூ.1.00
ஆக ஒரு புல எண் குறிப்பிடப்பட்டிருந்து 31 வருடங்களுக்கு வில்லங்க சான்று பெறுவதற்கான கட்டணம் ரூபாய்.331.00 இத்துடன் கணிணியில் பெறும் சான்றுக்கு ரூபாய் கணிணிக்கட்டணம் சேர்த்து செலுத்த வேண்டும். (01.01.1987 முதல் பதிவுக்குறிப்புகள் கணிணிமயமாக்கப்பட்டுள்ளன. எனவே 01.01.1987 முதல் வில்லங்க சான்று விண்ணப்பிக்கும் நாள் வரை கணிணி மூலமே சான்றுகள் பெற இயலும்) ஆக 1.1.1987 லிருந்து இந்த நடப்பாண்டான 2017 வரை 31 வருடங்களுக்கு வில்லங்க சான்று பெற கட்டணம் ரூ.431.00 (மனுக்கட்டணம் ரூ.1+ தேடுதல் கட்டணம் 31 வருடங்களுக்கு 330+ கணிணிக்கட்டணம் ரூ.100 ஆக மொத்தம் ரூபாய்.431.00
இரண்டு புல எண் இருந்தால் 31 வருடங்களுக்கு எவ்வளவு என்று எப்படிக் கணக்கிடுவது என்றால் தேடுதல் கட்டணம் ரூ.330 இருக்கிறதல்லவா அதை இரு மடங்காக்கிக்கொள்ள வேண்டும். ஆக இரண்டு புல எண்கள் இருந்தால் 330X2=660.00 + மனுக்கட்டணம் ரூ.1+ கணிணிக்கட்டணம் 100 ஆக மொத்தம் ரூ.761
5 புல எண்கள் இருந்தால் 2 வருடத்திற்கு மட்டும் பெறுவதாகக் கொண்டால்
2 வருடத்திற்கான தேடுதல் கட்டணம் ரூ.40 அதாவது முதல் வருடத்திற்கு ரூ.30 + இரண்டாம் வருடத்திற்கு தேடுதல் கட்டணம் ரூ.10 ஆக இரண்டு வருடத்திற்கு ஒரு புல எண்ணிற்கு ரூ.40 எனில் 5 புல எண்களுக்கு 40X5=200 + மனுக்கட்டணம் ரூ1+ கணிணிக்கட்டணம் ரூ.100 ஆக 5 புல எண்களுக்கான இரண்டு வருடத்திற்கான கட்டணம் ரூ.301.00
புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.
மாதிரிகள்.
3 புல எண்கள் 10 வருடங்களுக்கான கட்டணம்
ரூ.461
7 புல எண்கள் 15 வருடங்களுக்கான கட்டணம் ரூ.1291
கணக்கிட்டுப் பாருங்கள்
- வில்லங்கம் இன்னும் இருக்கு
அடுத்த பதிவில்

No comments:

Post a Comment