flipkart discount sale search here.

Friday, 11 August 2017

நீங்க சாப்பிடும் பழங்களில் சர்க்கரை அளவு எவ்ளோ இருக்குன்னு தெரியுமா? Fruits sugar levels

மாம்பழம் :
மாம்பழங்களில் அதிகளவு ஃபைபர் மற்றும் பல்வேறு சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. அதோடு இந்த பழத்தில் இயற்கையாகவே சர்க்கரைச் சத்து அடங்கியிருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் ஒரு மாம்பழத்தில் 45 கிராம் சர்க்கரை கிடைக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள் மாம்பழங்களை தவிர்ப்பது நன்று.

திராட்சை :
ஒரு கப் திராட்சை பழத்திலிருந்து 23 கிராம் சர்க்கரை கிடைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும் இதனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். இப்படிச் சாப்பிட்டால் நீண்ட நேரம் உங்களுக்கு பசியுணர்வு ஏற்படாது.

செர்ரீ :
ஒரு கப் செர்ரீ பழத்திலிருந்து உங்களுக்கு 18 கிராம் சர்க்கரை கிடைக்கும். கப்பில் எடுத்து அளவாக எடுத்துக் கொண்டால் மட்டுமே அதன் சத்துக்களை நாம் அளவிட முடியும். ஒரு கப் தாண்டி மேற்கொண்டு சாப்பிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் நமக்கு மேலோங்கும். இதனை கருத்தில் கொண்டு எதைச் சாப்பிடுவதாக இருந்தாலும் வாங்கியதை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் ஒரு கிண்ணத்தில் போட்டு சாப்பிடுங்கள்.

பேரிக்காய் :
இவற்றில் 17 கிராம் சர்க்கரைச் சத்து அடங்கியிருக்கிறது. முழுவதை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, கட் செய்து இரண்டு துண்டுகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மீதி இருக்கும் பழத்தை சாலட்டுடன் சேர்த்தோ அல்லது கொழுப்பு இல்லாத தயிரில் சேர்த்தோ சாப்பிடலாம்.

தர்பூசணி:
முழுவதும் நீர்சத்து நிரம்பியிருக்கும் தர்பூசணியில் 17 கிராம் சர்க்கரை கிடைக்கும். இதில் இருக்கும் தண்ணீரில் எலக்ட்ரோலைட்ஸ் நிரம்பியிருக்கும். வெயிலினால் ஏற்படும் வறட்சியை தடுக்க வல்லது. ஒன்று அல்லது இரண்டு துண்டுகளை எடுத்துக்கொள்ளலாம்.

அத்திப்பழம் :
சற்றே பெரிய இரண்டு அத்திப்பழத்தில் 16 கிராம் சர்க்கரை இருக்கிறது. குறைந்த அளவு சர்க்கரை இருக்கிறதென இரண்டு பழத்திற்கும் அதிகமாக எடுக்கக்கூடாது. ஒரு நாளைக்கு ஒரு பழம் எடுத்துக் கொண்டால் சிறந்தது. சாண்ட்விச், சிக்கன் போன்றவற்றிலும் சேர்த்து சாப்பிடலாம்.

வாழைப்பழம் :
சிறிய அளவிலான ஓரு வாழைப்பழத்தில் 14 கிராம் சர்க்கரை வரை இருக்கும். ஒன்றை பாதியாக கட் செய்து காலையிலும் மீதிப்பழத்தை 11 மணிக்கு சாப்பிடும் ஸ்நாக்ஸுடன் சேர்த்து சாப்பிடலாம். முழுப்பழத்தையும் ஒரே நேரத்தில் எடுக்காமல் இப்படி சிறிது சிறிதாக எடுப்பதால் உடலில் சர்க்கரை அளவு குறைந்திடாமல் இருக்க உதவிடும்.

அவகோடா :
எல்லாப்பழங்களிலும் சர்க்கரை அதிகளவு இருக்காது என்பதற்கு உதாரணமாய் இந்தப் பழத்தை எடுத்துக் கொள்ளலாம். இதில் அரைகிராம் அளவு தான் சர்க்கரை இருக்கிறது. இதனை சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம். அல்லது காலையில் சாப்பிடும் பிரட் டோஸ்ட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.
இதில் சர்க்கரை குறைவாக இருந்தாலும் கலோரிகள் அதிகமாக இருப்பதால் தினமும் கூட இந்தப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.

கொய்யாப்பழம் :
சிறிய அளவிலான ஒரு கொய்யாப்பழத்தில் 5 கிராம் சர்க்கரை இருக்கும். 3 கி அளவு ஃபைபர் இருக்கிறது. இதனை ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரங்களில் சாப்பிடலாம். தோல் நீக்கி சாப்பிடுவதை விட தோலுடன் சாப்பிடுவது தான் நல்லது. கொய்யாப்பழத்தை ஜூஸ்ஸாகவும் குடிக்கலாம்.

பப்பாளி :
அரை பப்பாளிப் பழத்தில் 6 கிராம் சர்க்கரை இருக்கும். ஒரு நேரத்தில் மீடியம் சைஸ்ஸில் இருக்கும் பப்பாளிப்பழத்தின் அரைப்பகுதியை சாப்பிட்டாலே போதுமானது. அதிகமாக எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்.

ஸ்ட்ராபெர்ரி :
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் ஐந்து கிராம் சர்க்கரை இருக்கிறது. இதனை அப்படியே உண்ணாமல் சாலட் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம். மாலை நேரத்தின் ஸ்நாக்ஸாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment