flipkart discount sale search here.

Friday 11 August 2017

முதல் தகவல் அறிக்கை :(FIR)

1.  முதல் தகவல் அறிக்கை :(FIR)

கைது செய்தற்குரிய குற்றம் பற்றி காவல் நிலையத்திற்கு கொடுக்கப்பட்ட புகார் பதிவு செய்யப்படுவதே முதல் தகவல் அறிக்கை எனப்படுகிறது.

2.  பார்வை மகஜர் : (observation Mahazar)

குற்றச் சம்பவம் நடந்த இடத்தை விசாரணை அதிகாாி (Investigation Officer) பார்வையிட்டு சம்பவம் நடந்த இடத்தின் பொதுவான விவரங்களை இரண்டு உள்ளூர் சாட்சிகளின் முன்னிலையில் வரைபடம் தயாரித்து விவரங்களை பதிவு செய்திருப்பதே பார்வை மகஜர் என அழைக்கப்படுகிறது.

3.  வழக்கு நாட்குறிப்பு : (Case Diary)

விசாரணை அதிகாரிக்கு குற்றம் பற்றி தகவல் கிடைத்த நேரம், புலன் விசாரணையை துவக்கிய நேரம், முடித்த நேரம், முடித்த நேரம், பார்த்த இடங்கள், விசாரணையில் கண்டறிந்த விபரங்கள் போன்ற தகவல்கள் விசாரணை அதிகாாியால் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

4.  பொது நாட்குறிப்பு : (General Diary)

 காவல் நிலையத்தில் நடைபெறும் நிகழ்வுகள் பொது நாட்குறிப்பில் பதிவு செய்யப்படும். உதாரணமாக ஒருவர் காவல் நிலையத்தில் அளிக்கும் புகார் விவரங்கள் பொது நாட்குறிப்பில் பதிவு செய்யப்படும்.

5.  சமுதாய பணிப் பதிவேடு : (Community Service Register - CSR)

காவல் நிலையத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களுக்கு தரப்படும் ஒப்புகை ரசீது ஆகும்.

6.  அரசு சொத்து பதிவேடு : (Govt. Property Register)

காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து சொத்துக்களின் விவரங்கள் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

7.  உயர் காவல் அலுவலர்கள் ஆய்வு பதிவேடு : (Inspection Register)

காவல் நிலையத்தை உயர் காவல் அதிகாரிகள் ஆய்வு செய்து அளிக்கும் குறிப்பு விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

8.  அலுவல் பதிவேடு : (Duty Register)

காவலர்களுக்கு அளிக்கப்படும் அன்றாட பணி விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்

9.  பணப் பதிவேடு : (Cash Book)

 காவல் நிலையத்தில் செய்யப்பட்ட வரவு, செலவுகள் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்

10.  முதல் தகவல் அறிக்கை அட்டவணை பதிவேடு : (FIR Index Register)

காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகள் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

11.  கட்டளை பதிவேடு : (Process Register)

நீதிமன்றத்திலிருந்து காவல்துறையினருக்கு அனுப்பப்படும் அழைப்பாணை விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

12.  இறுதி அறிக்கை / குற்றப்பத்திரிகை : (Final Report / Charge Sheet)

சாட்சிகளின் வாக்குமூலங்கள், சாட்சிய விவரப்பட்டியல், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் செய்தாரா? இல்லையா? என்பதை பற்றி விசாரணை அதிகாரியின் முடிவு ஆகிய விவரங்களை கொண்டிருக்கும்.

No comments:

Post a Comment