flipkart discount sale search here.

Friday, 29 September 2017

அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்.

*அழகான வரிகள் *.

1, அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..
நாம் எல்லோரும் *சாதாரண மனிதர்கள்*

2,பொறாமைக்காரரின் பார்வையில்..
நாம் அனைவரும் *அகந்தையாளர்கள்*

3. நம்மைப் புரிந்து கொண்டோரின் பார்வையில்..
நாம் *அற்புதமானவர்கள்*

4,நேசிப்போரின் பார்வையில்..
நாம் *தனிச் சிறப்பானவர்கள்*

5,காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்..
நாம் *கெட்டவர்கள்*

6. சுயநலவாதிகளின் பார்வையில்
நாம்... *ஒழிக்கப்பட வேண்டியவர்கள்*

7. சந்தர்ப்பவாதிகளின் பார்வையில்
நாம் *ஏமாளிகள்*

8. எதையும் புரிந்து கொள்ளாதவர்கள் பார்வையில்
நாம் *குழப்பவாதிகள்*

9. கோழைகளின் பார்வையில்
நாம் *அவசரக்குடுக்கைகள்* நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு தனியான பார்வை உண்டு.
ஆதலால் - பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட
*சிரமப்படாதீர்கள்* மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ளாவிட்டாலும்......

*நீங்கள் நீங்களாகவே இருங்கள்* மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு...

இந்த மனிதர்களிடம் *எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!*

*அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்...!*

எப்போதும் நேர்மையும் தைரியமும் உங்கள் சொத்தாக இருக்கட்டும.
அன்புடன்,

Wednesday, 27 September 2017

ஒரே ஒரு வரம்தான் கேட்க வேண்டும்...

ஒரு ஊரில் ஒரு ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்கு கண்பார்வை இல்லை. அவனுக்கு வெகுநாட்களாக குழந்தையும் இல்லை.*

*ஒருநாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றான். அப்போது, கரையில் ஒதுங்கிக்கிடந்த பெரிய மீனொன்று அவனைப்பார்த்து கெஞ்சியது:*

*"மீனவனே, நான் சாதாரண மீன் இல்லை. கடலில் உள்ள மீன்களுக்கெல்லாம் தலைவன். ஆழ்கடலில் வசிக்கும் நான், ஒரு பெரியஅலையில் சிக்கி இந்த கரைப்பகுதிக்கு வந்துவிட்டேன். இப்போது நீந்தமுடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன். எனக்கு ஒரு உதவி செய் மீனவனே, என்னை பத்திரமாக ஆழ்கடலுக்கு கொண்டுபோய் சேர்த்துவிட்டால் உனக்கு ஒரு வரம் தருவேன்" என்றது*

*மீனவன் அந்த மீனைத்தூக்கி படகில் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகை செலுத்திக்கொண்டு போய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு, என்ன வரம் கேட்பது என்று யோசித்தான். அவனால் ஒரு முடிவு எடுக்கமுடியவில்லை. எனவே அவன் சொன்னான்:*

*"மீன்களின் ராஜாவே, நீ சொன்னபடி நான் செய்துவிட்டேன். ஆனால், என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை. வீட்டுக்குச்சென்று மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு நாளை வந்து கேட்கிறேன்" என்றான்*

*மீனும், "நீ ஒரேஒரு வரம்தான் கேட்கவேண்டும்'' என்று நினைவுபடுத்தி நன்றி கூறிச்சென்றது. மீனவன் வீட்டுக்கு சென்றான். வீட்டில் பெற்றோரிடமும், மனைவியிடமும் நடந்ததைக்கூறினான். ராஜா மீனிடம் என்ன வரம் கேட்பது என்று ஆலோசித்தான்.*

*அவனது தந்தை கூறினார்:*

*"மகனே, நாம் நெடுங்காலமாக இந்த ஓட்டைக்குடிசையில் தான் வாழ்ந்து வருகிறோம். நமக்கு ஒரு நல்லவீடு வேண்டும் என்று ராஜா மீனிடம் கேளேன்...'' என்றார்*

*அடுத்ததாக அவனது அம்மா சொன்னார்கள்:*

*"மகனே, எனக்கு கண் தெரியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. என் கண்கள் பார்வை பெறவேண்டும் என்று அந்த மீனிடம் கேள்...'' என்றார்*

*கடைசியாக மனைவி கேட்டாள்:*

*நமக்குத்திருமணம் ஆகி பலவருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் நமக்கு ஒருகுழந்தை இல்லை. எனவே, அந்த மீனிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேளுங்கள்" என்றாள்*

*நன்கு யோசித்த மீனவன், மறுநாள், அந்த கடலுக்குச்சென்று ராஜா மீனிடம் ஒரே ஒரு வரம்தான் கேட்டான். அந்த ஒரு வரத்தில் அவன் பெற்றோரின் ஆசையும், அவன் மனைவியின் விருப்பமும் நிறைவேறின. அப்படி அவன் என்ன வரம் கேட்டான்?*






*விடை: "என் மகன் கீழே விளையாடி கொண்டிருப்பதை, எங்கள் வீட்டு மாடியிலிருந்து என் பெற்றோர் பார்த்து மகிழவேண்டும்'' என்பதுதான் அவன் கேட்ட வரம்.*




*நீதி:*

*உங்கள் உடன் வாழ்பவர்களின் மீது உங்களுக்கு ஆழமான அன்பும் அக்கறையும் பாசமும் இருப்பின்.. அந்த எண்ணமானது, உங்களை அறியாமலேயே உங்கள் புத்திகூர்மையையும், முடிவெடுக்கும் திறமையையும், இயல்பாகவே வெளிப்படுத்தும் என்பதே உலகம் கண்ட உண்மை.. இதற்கு நமது மெய்ஞானிகளும் விஞ்ஞானிகளும் கூட சாட்சி..*


Tuesday, 26 September 2017

குரங்கு மனம் வேண்டாமே!!

குரங்கு மனம் வேண்டாமே!

"ஒரு குரங்கு இறப்பதற்கு ஒரே ஒரு காயம் போதும்.
ஒரு முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்."

என்று கிராமங்களில் ஒரு உவமை வாக்கியம் உண்டு.

காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை. ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு காயம் ஏற்பட்டுவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.

அதுபோலத் தான் மனிதன், தன் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டி, அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.

அந்த குரங்கு கொஞ்சம் பொறுமையாய் தனக்கு ஏற்பட்ட காயத்தை நோண்டாமல் இருந்தாலே போதும். அது விரைவில் ஆறிவிடும்.

இதை குரங்குக்கு புரிய வைக்கவும் முடியாது. நோண்டுவதை தடுக்கவும் முடியாது.

ஆனால், மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?

வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழ முடியும் தானே?

மனித மனதை, மனித மனமாகவே இருக்கவிடுங்கள்!

குரங்கு மனம் வேண்டாமே!!

Monday, 25 September 2017

#41 தினம் ஒரு திருக்குறள் | குறள் 295 மனத்தொடு வாய்மை | Dhinam Oru Thiru...

Clean your WhatsApp | வாட்சப்ஐ சுத்தம் செய்வோம்... குளிர்பானத்தில் எய்ட்ஸ்...

*வாட்சப்ஐ சுத்தம் செய்வோம்*

*ஜனகண மன பாடல் யுனெஸ்கோ வால் சிறந்த தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது*
தவறான தகவல்

*பீமன் மகனான கடோத்கஜனின் நிஜமான எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது*
அது சினிமா செட்..

*குளிர்பானத்தில் எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் பரவிவிட்டது*
இந்த முறையில் எய்ட்ஸ் பரவாது. குளிர்பானங்கள் முழுவதும் இயந்திரத்தில்  உற்பத்தி செய்யப்படுகிறது.

*திருநள்ளாறு கோவிலின் மேலே வரும் போது செயற்கைக் கோள் நின்றுவிடும்*
உண்மை அல்ல. நின்றால் மறுபடி தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்வது யார்?

*இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் தாக்கும் செல்போன் ஆப் பண்ணுங்க என நாசா அறிவிப்பு*
பொய். இண்டர்நெட் ஸ்பீட் இல்லாத  ஒருத்தன் கெளப்பி விட்ருக்கான் ...

*இந்தக் குழந்தையின் புகைப்படத்தை ஷேர் செய்தால் ஃபேஸ்புக் ஒரு ரூபாய் கொடுக்கும்*
ஒரு ஷேர்க்கு ஒரு ரூபாய்னா , அவன் எத்தனைக் கோடி கொடுக்கனும்? அவன் பிசினஸ் பண்றானா, இல்ல  தர்மசத்திரம் வச்சு நடத்துறானா?

*இந்தச் சாமி படத்தைப் பகிர்ந்தால் நல்லது நடக்கும்*
இது அந்தச் சாமிக்குத் தெரியுமா?

*ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 1000 ரூபாய் நோட்டு*
போட்டோசாப் வேலை...

*இந்த லிங்க்கை ஷேர் செய்தால் 3 ஜி.பி இலவச டேட்டா கிடைக்கும்*
இருக்குற டேட்டாவும குறையும் ...

*மோடி இளைஞர்களுக்காக 10 ஜி.பி டேட்டா அனைவருக்கும் இலவசமாகத் தருகிறார்*
புதுசா நெட்வொர்க் கம்பெணி ஆரம்பிச்சுருக்காரா?

*இலங்கைத் தமிழர்களுக்காக ஐ.நா., சபை வாக்கெடுப்பு நடத்துகிறது*
பொய்யான தகவல். வெப்சைட் மார்கெட்டிங்.

*599 ரூபாய்க்கு அமேசான்ல 4G போன்*
அமேசான மூட போறாங்களா?

*குழந்தையைக் காணோம்*
அந்தக் குழந்தைக் கிடைச்சு, இப்ப காலேஜ் போய்க்கிட்டிருக்கு.  கொழந்த கெடச்ச பின்னாடியும், இனிக் குழந்தை காணாம போனா தேதியோடப் போடுங்க.

*ஆபரேசனுக்கு ரத்தம் வேணும்*
தேதி, நேரம் எதுவுமே இல்லாம அனுப்புனா எப்படி?

*இந்தத் தகவலை 18 பேருக்கு அனுப்பு. சாயிபாபா நல்லது செய்வார். இல்லனா கெட்டது நடக்கும்*
அவரோட வாட்ஸ்சப் நம்பர் என்ன?

*3 குரூப்கு அனுப்பிட்டு பேலன்ஸ் செக் பன்னு*
எப்படி ஏறும் ? உங்க டேட்டா பேலன்ஸ்தான் குறையும்.

*தடுப்பூசி போட்டால் ஆபத்து*
பொய். எந்த அலோபதி மருத்துவரும் ஒப்புக்கொள்ளவில்லை.

*10 ரூபாய் நாணயங்கள் செல்லாது*
பொய்.

*வாட்ஸ்சப் சீனாவில் தயாரிக்கப்பட்டது். இந்த நிறுவனத்தின் பணம் முழுக்க சீனாவிற்குச் செல்கிறது*
அமெரிக்காவில் டெவலப் செய்யப்பட்டது. தற்போது பேஸ்புக் வசம் உள்ளது.

*டெலிகிராம் இந்திய அப்ளிகேஷன்*
ரஷ்யாவில் டெவலப் செய்யப்பட்டது.

 * நான் வாட்ஸப்ல சேர்ந்த காலத்துல இருந்து காஞ்சிபுரத்துல ஒரு பள்ளிப் பேருந்து ஆக்ஸிடெண்ட் ஆகிக்கிட்டே இருக்கு...

இன்னும் இது மாதிரி  நிறைய....

👆👆👆👆👆
"இதெல்லாம் பார்வர்ட் செய்யும் நண்பர்களே , கெடச்சா கிடைக்கட்டும் , அனுப்பி பாப்போம்னு அனுப்பாதிங்க"

இந்த ஃபேக் நியூஸ்களின் பின்னே, ஒன்று உங்களை ஏமாற்ற வேண்டும்; அல்லது உங்களைப் பயன்படுத்தி லாபம் அடையவேண்டும்.

எனவே நீங்கள் வாட்ஸ்அப்பில் அல்லது ஃபேஸ்புக்கில் அனுப்பும் ஒவ்வொரு செய்தியையும், ஒருமுறை உங்களுக்குள் சிந்தித்துவிட்டே பகிருங்கள். தேவையற்ற, வீண்பழி சுமத்துகின்ற, நம்பகத்தன்மையற்ற செய்திகள் உங்களை வந்து சேர்ந்தால் கூடப் பரவாயில்லை; அடுத்தவருக்கு சேரும்படி ஷேர் செய்யாதீர்கள்.  இணைய உலகில் மறைந்திருக்கும் பிராடுகளிடம் இருந்து இனியாவது விடுபடுவோம்.

*பயனற்ற வாட்ஸப் பதிவுகளால் கொள்ளையடிக்கும் செல்போன் நிறுவனங்கள்-ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்*

பரிதாபமான நிலையில் உள்ளவர்கள் குறித்து வாட்ஸப் பதிவுகளை பகிருங்கள், அவர்களுக்கு ஒரு பகிர்விற்கு இவ்வளவு பைசா கிடைக்கும் என்ற ஏமாற்று பதிவுகளை பார்த்திருப்பபோம்.

இப்படி லட்ச, லட்சமாக
“ Cellphone company ” காரன் எப்படி தருவான், என்பதை சிந்தித்திருக்கிறோமா?

எப்போதாவது நீங்க இந்த பாதிக்கப்பட்டவர் இடம் போய் கேட்டு இருக்கிருக்கிறீர்களா ?

இதன் பின்னணியில் உள்ள செல்போன் நிறுவனங்களின் அயோக்கியதனமான கொள்ளை நடப்பது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

முதலாவதாக, இதை பதிவை பகிரும் ஒருவருக்கு data Balance ல இருந்து 50 Kb செலவாகும்.

இதை Download செய்து பார்க்கும் , கேட்க்கும் பிறருக்கு Net Card balance லிருந்து
50 KB செலவாகும்.

” ஆக ஒரு “குரூப்” ல் இருக்கும் மொத்த 100 பேரும் பார்க்கும் போது கூட்டி கழிச்சி (100 X 50 Kb = 5000 Kb ÷ 1000 = 5 GB ) பார்த்தா 5 GB (1GB ₹192 X 5 = ₹960) என்று சுமார் ₹1000/- ரூபாய் செலவாகும்.

“ஆக மொத்தம் ரூபாய் ₹1000/- த்தில் 20 ℅ (₹200/- ரூபாய்) இந்திய அரசாங்கத்திற்க்கும் …

” Net Card விற்க்கும் கடை காரனுக்கு 5℅ (₹50/- ரூபாய்) Commission போக ..

“மீதி (₹750/- ரூபாய்) செல்போன் கம்பெக்குத்தான் போகும்.

🤔 இப்படித்தான் Accident ல

# கண்ணு போச்சி,

# காலு போச்சு,

# காது போச்சு,

# குழந்தைக்கு இருதயத்தில ஓட்டை விழுந்திருச்சி,

# குழந்தை வயிற்றில் கத்தி போயிருச்சி,

#தொன்டைக்குள்ளே தொடப்ப கட்டை போயிருச்சின்னும் ,

அப்புறம்  ..

இந்த Saami  (endha saamiya irunthalum sari) படத்த பாத்த உடனேயே 10 பேர்களுக்கு ஷேர் பண்ணுங்க உடனே நல்ல சேதி வரும் அலட்சிய படுத்தினா ரத்தம் கக்கி சாவிங்க என்று கடவுள்களின் பெயரை சொல்லி ஷேர் செய் நல்லது நடக்கும் இல்லனா கெட்டது நடக்கும்.என்றும் ,

மேலும் இந்த நெட்ஒர்க் ஷேர் செய்தால் 10 GB 3Gஇலவசம்.

என்றும்,

இப்படி புதுசு, புதுசா எதையாவது எழுதி இல்லை  பேசி இது மாதிரி “குரூப்” களுக்கு அனுப்புவாங்க.

😔 இது மாதிரி சோகமாக பேசி இதை நீங்கள் குறைந்தது 10 Groups க்கு அனுப்பு என்பான்.

“ஆக ஒரு ” குரூப்” ல் 100 பேருக்கு அனுப்பும் போது “Sim Card Company” காரனுக்கு சுமார் ₹ 750/- ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

இதுபோல்

01 X 10= 10/-
10 X 10= 100/-
100 X 10= 1000/-
1000 X 10= 10,000/-
10,000 X10=1,00,000/-

பேருக்கு என்று அனுப்பி கொண்டே போனால்
(1,00,000 X 50 KB = 50,00 000 GB X ₹192= ₹96,00,00,000/- ÷ 25℅ -₹72,00,00,000

( கிட்டத்தட்ட 72 கோடி ரூபாய் வரை ) எவ்வளவு காசு கம்பெனி காரனுக்கு கிடைக்கும் என்று கூட்டி கழிச்சி பாருங்க தம்பி, தங்கைகளா …!?

 ஏர்டெல்,

 ஏர்செல்,

 டாடா,

 டொக்கோமோ,

 வொடாபோன்,

 ரிலையன்ஸ்

இன்னபிற
“Sim Card Company” முதலாளிகளுக்கு …
காசு மேலே காசு போய் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.

*நமக்கோ அல்லது பாதிக்கப்பட்டவங்களுக்கோ -10 பைசா கூட போகாது ..*

💰 இதற்காகவே இதுக்கென்றே
“Sim Card Company” காரன்கள் ஆட்களை சம்பளம் கொடுத்து அமர்த்தியுள்ளான்கள்.

😔 இதில் வருத்தபட வேண்டிய விசயம் என்னவென்றால் கடைசியில் உண்மை செய்தி எது, பொய் செய்தி எது என்று பிடிபடாமல் போய் அனைத்தையும் மக்கள் அலட்சிய படுத்தி விடுவார்கள். )

 இனிமே உங்கள் நண்பர்களுக்கு“குரூப்" களுக்கு இது மாதிரியான ( பொய் ) செய்திகளை பதியும் முன்பு யோசனை செய்து விட்டு அப்புறமாக பதிவிடவும்.*

இது போன்ற செய்திகளை பதிவிடுவோரை குழுவில் இருந்து நீக்குவதும் பயனளிக்கூடியது.

இந்த செய்தி share பண்ணறதால எனக்கு 50 kb போனாலும் பரவாயில்ல ..

*திருந்துங்கப்பா ..நிறுத்துங்கப்பா..*

5 நிமிடத்திற்கு பிறகு மாமனிதராக தெரிந்தார்..

#படிக்காத_பாமரன்_முட்டாளும்__அல்ல....
#படித்தவர்கள்_அனைவரும் #அறிவாளிகளும்_அல்ல....

காய்கறி வாங்க கடைக்கு சென்றேன்.. அங்க எனக்கு முன் ஒரு பெரியவர் வாங்கி கொண்டிருந்தார்....

வெள்ளை வேட்டி (பழுப்பு நிறமாக மாறியது).. சந்தனகலர் கட்டம் போட்ட சட்டை... கையில் ஒரு கருப்பு குடை...

சில காய்கறிகளை வாங்கினார்.. கடையில் இருப்பவர் விலை சொன்னதும் இடுப்பில் கட்டி இருந்த பெல்ட்டிலிருந்து பணத்தை எடுத்து இருமுறை எண்ணி கொடுத்தார்....

கடைக்காரர் பாலிதீன் பை எடுத்தார்...

பெரியவர்: வேண்டாம்பா எங்கிட்டயே இருக்கு...

கடைக்காரர்: பழைய பாலீத்தின் பைய ஏன் தூக்கிட்டு திரியுறிக்க?..... உங்களுக்கு கொடுக்கிற ஒரு பையில் நான் கொறஞ்சிடமாட்டேன்...

பெரியவர்: நீ பெரிய கர்ணபிரபுன்னு எனக்கு தெரியும்... இந்த கருமத்தல (பாலிதீன்) வீடு குப்பையாச்சி... ஊரு குப்பையச்சி... நாடு குப்பையாச்சி... இந்த உலகமே குப்பையாச்சி... மண்ணுல போட்டா மண்ண கெடுத்துடுது... எரிச்சிவிட்டா காத்த கெடுத்துடுது...

இலவசமா கிடைக்குது.. பயன்படுத்த சுலபமா இருக்கு... அதுக்காக ஏன் நல்லா இருக்குறத குப்பைல போடனும்.... அந்த பை எவ்வளவு காலம் உழைக்குதோ அதுவரைக்கும் பயன்படுத்திவிட்டு இனி முடியாதுங்குற போது தூக்கி குப்பைல போடு.... இப்படி செஞ்சாலே கொட்டுற முக்காவாசி குப்பைங்க கொறஞ்சிடும்...

பயன்படுத்திய பொருளை எடுத்துவச்சி திரும்ப பயன்படுத்துவதில் என்ன வெட்கம்?...(முனுமுனுத்து கொண்டே சென்றார்...)

சுட்டிவிரலில் ஊசியால் குத்தியதுபோல் சுள் என்று இதயத்தில் ஒரு வலி....

படித்தவர்கள்..... பட்டத்துக்கு மேல் பட்டம் வாங்கி குவித்தவர்கள்.... நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுபவர்கள்... அனைத்து மொழி செய்திதாளையும் தினந்தோறும் தவறாமல் படித்து பொதுஅறிவை வளர்ப்பவர்கள்....
இதில் எத்தனை பேர் இதை யோசிச்சிருப்பாங்க..... எத்தனை பேர் பின்பற்றுவாங்க.....

பயன்படக்கூடிய பொருள் குப்பைக்கு போவதை தடுத்தாலே... சுற்றுசூழல் பிரச்சனை பாதியாக குறையும் என்று அவருக்கு தெரிந்திருக்கிறது....

5 நிமிடத்திற்கு முன் சாதாரண பாமரனாக தெரிந்த அவர்...

5 நிமிடத்திற்கு பிறகு மாமனிதராக தெரிந்தார்..

அன்றிலிருந்து நானும் அதனை பின்பற்ற முயலுகிறேன்... நீங்களும் முயன்று தான் பாருங்களேன் ...

#சுற்றுச்சூழலை_காப்போம்

Sunday, 17 September 2017

#33 தினம் ஒரு திருக்குறள் | குறள் 855 இகலெதிர் சாய்ந்தொழுக | Dhinam Oru ...

#137 தினம் ஐந்து பொன்மொழிகள் | Best Motivational videos in tamil

நீ அழகா இருக்கேன்னு நெனக்கல.. நீ ருசியா இருப்பேனும் நெனக்கல...

நீ அழகா இருக்கேன்னு நெனக்கல.. நீ ருசியா இருப்பேனும் நெனக்கல.. உன்னை இன்னும் ஒரு மாசத்துக்கு நெனச்சுக்கூட பாக்க மாட்டேன்.. ஆனா இதெல்லாம் நடந்துருமொனு பயமா இருக்கு!! -புரட்டாசி பீலிங்க்ஸ்
 🐓🦃🐇🐏🐐🐑😌😌😌

Monthly income..Low Papa..

*Johny johny..*
                *"Yes papa!*
  *New GST..*
           *" More Papa..!*
*Purchase Price..*
                 *" High Papa..!*
*Petrol Price..*
         *"" Rocket Papa!*
*Subsidies are...*
                 *" Nil Papa..!*
*Monthly income..*
                      *Low Papa..*
*Family outing..*
                  *Fear Papa..*
*Lot of tension..*
                *Yes papa!*
*Too much work..*
                *Yes papa!*
*Bp-sugar..*
                *High papa!*
*Yearly bonus..*
              *Joke papa!*
*Pension Income..*
               *No papa!*
*Total Life*
*Ha Ha Ha😄😄😄*.  
*Its really heart touching poem☝*

*Plz share other Publics*

பெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள்...

பெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள்...

டாக்டர்:  என்னமா முகத்துல இவ்ளோ அடிப்பட்டிருக்கு??

பெண்:  என் கணவர் டெய்லி என்ன அடிக்கிறார் டாக்டர்....

காயத்துக்கு மருந்து போட்டுவிட்டு டாக்டர் சொன்னார்...

இனிமே உன் கணவன் வந்தா வாய்ல்ல கொஞ்சம் தண்ணீரை ஊத்திக்கோ....

முழுங்கிவிடாதே அவர் தூங்குற வரைக்கும் வாய்குள்ளே வச்சிறு....

அடுத்த வாரம் என்னை வந்து பார்.!!

ஒரு வாரம் கழித்து மிகவும் ப்ரஷ்ஷாக வந்தாள்....

பெண்:  நீங்க சொன்ன மாதிரியே வாய்க்குள்ள தண்ணீய வச்சு இருந்தேன் என் கணவர் என்னை அடிக்கவே இல்ல டாக்டர்!!!!

டாக்டர்::  GOOD  நீங்க வாய திறக்காம இருந்தா எந்த பிரச்சனையும் வராது...

உங்க 'வாய்' தாம்மா  எல்லாத்துக்கும் காரணம்...

 அதுக்குதான் இந்த ஐடியா என்றார்...

படித்ததில் பிடித்தது.

😝😝😝😝😝😝😝😝😝😝😝

Saturday, 16 September 2017

யார் ஏழை ❓❓❓

யார் ஏழை  ❓❓❓

🔰ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..❗

🔰சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண்
வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..❗

♻இதில் யார்_பணக்காரர்...❓❗

🔰3'ஸ்டார் 🏬ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீட்டு 6 மாத குழந்தையின் அம்மா,

🏬ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் 🍼வேண்டும் என்று கேட்கிறார்,

அதற்கு அந்த மேலாளர் 🍼பாலுக்கு நீங்கள் தணியாக 💶பணம் செலுத்த வேண்டும் என்று கூற ,
பணக்கார அம்மாவும் 💶பணத்தை செலுத்தி 🍼பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்...❗

🔰ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு 🏬ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் ,
ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் 🍼பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு 🍼பால் எவ்வளவு
என்று டீ கடைக்காரரிடம் கேட்க,

டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் 💶காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்...❗

பணம்💶 உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல ......❗❗
அதை கொடுக்க நினைப்பனே உண்மையான பணக்காரன்....❗❗

இந்த உலகத்தில் நிறைய நல்ல மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ,.....
நம் 👀கண்களுக்கு தென்படவில்லை என்றாலும் பரவாயில்லை நாம் அவர்களில் ஒருவராக இருக்க முயற்சி செய்வோம்.....❗❗

தொடக்கம் நாமாக இருப்போமே...❗❗
 பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது ⚽கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன.ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது. மற்றொன்று உதைக்கப் படுகின்றது. தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது. ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.

சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்.
👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽
பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம்.

சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்...

*சாப்பிட்ட  பிறகு  செய்யக்கூடாதவைகள்.*

 *அவசியம்  அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.*
=======================
*1. சாப்பிட்டவுடன்  தண்ணிரை  வயிறுமுட்ட  குடிக்க  கூடாது.  இதனால்  ஜிரணநீர்  நீர்ந்து  போய்  அஜிரணமாகும்  பல  நோய்கள்வர  இது  முக்கிய  காரணமாக  அமையும்.*

 *2. சுமார் 40 நிமிடம் கழித்து  தண்ணீர்தாகம்  எடுக்கும்  அப்போது குடிக்கவேண்டும்.*

*3. சாப்பிட்டதும்  படுத்து விடக்கூடாது. காரணம், குடல்  தனது  செயல்பட மிகவும்  சிரமப்படும். ஜீரணம்  முறையாக  நடக்காது.*

*4. குறைந்தது  ஒரு  மணிநேரம்  கழித்தே  உறங்க  வேண்டும்.  இது  மதியம்  ஓய்வு  எடுப்பவர்களுக்கும்  பொருந்தும்.*

*5. சாப்பிட்டதும்  குளிக்க  கூடாது  குறைந்தது 2 மணிநேரம்  கழித்தே  குளிக்க  வேண்டும்.*

*6. சாப்பிட்டு  முடித்ததும்  எந்த  பழங்களையும் சாப்பிடக்கூடாது.  காரணம்,  உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும்.*
*பழங்களின்  நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான்.*
*இந்த  வித்தியாசத்தால் நாம் சாபிட்ட  பழம்  வாயுவாக  மாற்றம்  பெரும்.  இதில்  ஒரு  பழத்துக்கு  மட்டும்  விதிவிலக்கு  அது  பேரீச்சம்பழம்.*

*7. சாபிட்ட உணவு  ஜீரணமாகாத நிலையில்  வேறு  உணவுகள்  எதையும்  உண்ணக்கூடாது.  காரணம், இவ்வாறு  சாப்பிட்டால்  ஏற்கனவே  சாபிட்ட  உணவு  ஜீரணத்தை கடுமையாக  பாதிக்கும்.  இதனால்  சுகர்  வர  காரணமாக  அமையும்.*

*8. குளிர்பானங்கள், ஐஸ்கீரீம்,  ஐஸ்வாட்டர்  இவைகளையும்  குடிக்க  கூடாது. காரணம், உணவு  ஜீரணமாக  நமது  குடலில்  வெப்பம் இருக்கவேண்டும். அந்த  வெப்பத்தை  இந்த  குளிர்பானங்கள்  இல்லாமல்  செய்துவிடும்.*

*9. சாப்பிட்டதும்  பரபரப்பாக  இயங்குவதோ  நடப்பதோ  பளுவானவற்றை  தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால்  உணவு  கீழ்நோக்கி  செல்லாமல்  மேல்  நோக்கி  வரும்.  இதனால்  நெஞ்சு  எரிச்சல்,  வாயு தொல்லைகள்  ஏற்படும்.*

*இ்ந்தப் பதிவை படித்து உடனே பகிர்ந்தால் இரண்டு நிமிடம் ஆகும். பகிராவிட்டால் ஒரு நல்ல பதிவுக்கு உண்டான நன்மை கிடைக்காமல் போகும்.* 😁😁😁

#32 தினம் ஒரு திருக்குறள் | குறள் 418 கேட்பினுங் கேளாத் | Dhinam Oru Thi...

நேரா போய் ரைட் எடுத்தா, ஒரு தோல்வி வரும் ...

😊🎭😊🎭😊🎭
🎭நேரா போய் ரைட் எடுத்தா,
ஒரு தோல்வி வரும் ..

🎭அங்கருந்து லெப்ட் போனா
பெருசா ஒரு துரோகம் இருக்கும்..
கொஞ்ச தூரம் போயி ஒரு யு டேன் அடுச்சா,
🎭அங்க கடன் என்கிற ஒரு பெரிய பள்ளம் இருக்கும்..

🎭அந்த பள்ளத்துல விழுந்து மூஞ்சி மொகர எல்லாம் பேந்து எந்திருச்சு நேரா போனா,
ஏமாற்றங்கர ஒரு சிக்னல் இருக்கும்,

🎭அதையும் தாண்டி போனா,
போட்டி, பொறாமைங்கர
ஸ்பீடு பிரேக்கர் வரும்,
🎭அதையும் தாண்டி டாப் கியர் போட்டு போயிகிட்டே இருந்தால்
அதுக்கடுத்த வீடு தான் நீங்க கேட்ட வெற்றியோட வீடு வரும்..

🎭வெற்றிய தொட்ட அடுத்த கனமே திரும்பி பார்த்தால் எமன் எருமையில நம்மள விட வேகமா வருவான்.
🎭இது தானுங்க வாழ்க்கை...

படிச்சதுல சுட்டது நல்லாயிருக்குல்ல
🎭😊🎭😊🎭😊

புரட்டாசி மாசம் ஏன் கறி திண்பது கூடாது... ஆன்மீகமும் அறிவியலும் கலந்த உண்மை.

புரட்டாசி மாசம் ஏன் கறி திண்பது கூடாது, ஆன்மீகமும் அறிவியலும் கலந்த உண்மை.

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, விரதம் இருந்து சனிக்கிழமைகளில் பெருமாள் ஆலயங்களுக்கு செல்வது வழக்கம். இதற்கு என்ன காரணம் என்பதை பற்றி பார்க்கலாம்.

ஜோதிடத்தில் 6வது ராசி கன்னி.கன்னியா ராசியின் மாதம் புரட்டாசி. இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம்.
புதன் சைவத்திற்குறிய கிரகம் ஆதாலல் அசைவம் சாப்பிடக்கூடாது பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது.

புரட்டாசி மாதம் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும் மேலும் பூமியின் இயக்கத்து படி நமக்கு செரிமானக்குறைவும், வயிறு பிரச்சினைகளும் ஏற்பட்டு கெட்டக்கொழுப்பு உடலில் தங்கிவிடும் ஆதலால் அசைவ உணவை தவிர்த்து, உடம்புக்கும், வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்கச் சொன்னார்கள்.

தமிழ் மாதங்களில் புரட்டாசி என்பது வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. பல மாதங்களாக, வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து, புரட்டாசி மாதத்தில்தான் வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.
இதனால், அந்த மாதத்தை சூட்டை கிளப்பிவிடும் காலம் எனக் கூறுவார்கள்.

இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை ஒதுக்கினர் நம் முன்னோர். அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.

துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர். பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தம் தருவதையும் நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். சாதாரணமாக சைவ உணவு நமது உடலிற்கு எல்லா வகையிலும் உகந்தது. இந்த மாதிரியான காலங்களில் அசைவ உணவுகளைத் தவிர்த்தால் நமக்கு நல்லது.

புரட்டாசி மாதம் என்பது புதனுடைய வீட்டில் சூரியன் இருக்கக்கூடியது. புதன் என்பது ஒரு சாத்வீகமான கிரகம். செளமியன் என்று புதனைக் குறிப்பிடுவது உண்டு. செளமியன் என்றால் சாது. சாத்வீகமானவர், அதிர்ந்து கூட பேசமாட்டார் என்று சொல்வார்களே, அதுபோல.
புதனுடைய உணவு என்று எடுத்துக்கொண்டால், அது உப்பு சப்பு இல்லாத உணவுதான். துவர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளெல்லாம் புதனுடைய உணவு. இந்த புதனுடைய உணவாக அசைவ உணவுகள் வரவே வராது. காய், கனிகள், பிரசாதங்கள் இதுபோன்ற உணவுகளெல்லாம்தான் புதனுக்கு வரும். அதனால்தான் அந்த மாதத்தில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுகிறது

தமிழ் மொழியில் மட்டுமே இது சாத்தியம்...

தமிழ் மொழியில் மட்டுமே இது போன்ற வார்த்தை ஜாலங்கள் சாத்தியம்
😀😀😀😀😀😀😀😀

அதிகாலை வேலை காவல் நிலைய தொலைபேசி மணி அழைக்க, காவலர் கந்தன் தொலைபேசியை எடுத்துக் பேசினார்.

காவலர் : ஹலோ V 7 காவல் நிலையம், சொல்லுங்க.

எதிர் முனை : சார் இங்க ஒருத்தரச் சுட்டுட்டார் சார்.

காவலர் : சுட்டது யாருன்னு தெரியுமா?

எதிர் முனை : தெரியும் சார்.

காவலர் : யார் சுட்டது?

எதிர் முனை : சுடலை சார்.

காவலர் : யோவ் சுட்டங்களா இல்லையா?

எதிர் முனை : சுட்டாங்க சார்.

காவலர் : யார் சுட்டது?

எதிர் முனை : சுடலை சார்.

காவலர் : உங்கள் பேர் என்ன?

எதிர் முனை : சாரதி சார்.

காவலர் : கோபத்துடன் எந்த எடத்துல இருக்கீங்க

கொலை நடந்த இடத்தைக் கேட்டு தெரிந்து கொண்டு அங்கே சென்றனர் காவல் துறையினர்.

அந்த இடத்தில இருவர் மூவர் நின்று கொண்டிருந்தனர். ஒருவரை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.

காவலர் : இங்க கொலையா பார்த்த சாரதி யாரு?

அங்கே இருந்த இருவர் கையை தூக்கி நான் தான் என்று கூறினார்.

ஒருவரைப் பார்த்து காவலர் : சொல்லுங்க என்ன பார்த்தீங்க?

பார்த்த சாரதி : நான் ஒன்னும் பார்க்கல சார் நான் இப்பத்தான் வந்தேன்.

காவலர் : யோவ் பிறகு எதுக்கு யா கையைத்தூக்குன.

பார்த்த சாரதி : என் பேர் பார்த்த சாரதி அதான் கையத் தூக்கினேன்.

இன்னொருவரைப் பார்த்து காவலர் : அப்பா நீ யாருயா?


சாரதி (போனில் பேசியவர்):  நான் தான் பார்த்த சாரதி.

கடுங்கோபத்தில் காவலர் : யோவ் உன் பேரு பார்த்த சாரதி யா?

சாரதி : இல்ல சார்.

காவலர் : நீ தான் யா சொன்ன பார்த்த சாரதினு.

சாரதி : ஆமா சார்.

காவலர் : அப்ப ஏன் இல்லனு சொன்ன?

சாரதி : என் பெரு பார்த்த சாரதி இல்லேனு சொன்னேன் சார் .

காவலர் : அப்ப உன் பேரு என்ன?

சாரதி : சாரதி சார்.

காவலர் : சுட்டதை பார்த்தது நீங்கள் தானா?

சாரதி : ஆமாம் சார்.

பார்த்த சாரதியப் பார்த்து

காவலர்  : அப்ப நீங்க

பார்த்த சாரதி : கொலையைப் பார்க்காத பார்த்தசாரதி சார்.

சாரதியைப் பார்த்து

காவலர் : போன் செய்தது நீ தானா?

சாரதி : ஆமாம் சார்.

காவலர் : சுட்டது யார்?

சாரதி : "மூன்றாம் நபரைக்  காட்டி" இவர் தான் சார்.

மூன்றாம் நபரைப்  பார்த்து

காவலர் : நீ யாரு?

3ம் நபர் : நான் சுடலை சார்.

சாரதியைப் பார்த்து காவலர் : யோவ் அவரு சுடலைனு சொல்லுறாரு.

சாரதி :  ஆமாம் சார் அவர் சுடலை.

காவலர் : அப்ப சுட்டது யாரு?

சுடலையைக் காண்பித்து சாரதி : இவர் தான் சார்.

காவலர் இப்பொழுது கீழ்ப்பாக்கத்தில் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு இருக்கிறார்.

ரசிக்கத் தக்கது.   ரசித்தேன்.

😀😀😀😀😀😀😀😀

Friday, 15 September 2017

#31 தினம் ஒரு திருக்குறள் | குறள் 312 கறுத்துஇன்னா செய்தவக் | Dhinam Oru...

மெட்ராஸ் நம்ம மெட்ராஸ் (சென்னை) ஒரு அலசல்.

மெட்ராஸ் நம்ம மெட்ராஸ் (சென்னை)
******************
நம்ம
*சென்னை கெத்து*
கோட்டைல
*தலைமைச்செயலகம்*
கிண்டில
*கவர்னர் மாளிகை*
பீச் எதிர்ல
*கமிஷ்னர் ஆபிஸ்*
பக்கத்துல
*கலக்டர் ஆபிஸ்*
அது பக்கத்துல
*ஹார்பரு*
குறிப்பா சொல்ல
*கூவம்*
காசிமேடு
*மீன் மார்கெட்*
கண்ட சாமான் *மோர் மார்கெட்*
பீக் டைம்க்கு
*எலக்ட்ரிக் டிரெய்ன்*
பிஸி டைம்க்கு
*சிட்டி பஸ்*
ஹை கிளாஸ்க்கு
*கால் டாக்சி*
மிடில் கிளாஸ்க்கு
*ஒல ஆட்டோ*
தடுக்கி விழுந்தா
*தியேட்டர்*
எழுந்தா நின்னா
*இ கேஃப்*
பரபரப்புக்கு
*ஃபீனிக்ஸ்*
என்ஜாயா
*எக்ஸ்பிரஸ் அவென்யு*
ஷாப்பிங்க்கு
*ஸ்பென்ஸர் பிளாசா*
சன்டேஸ்க்கு
*சிட்டி சென்டர்*
மைண்ட்ஃபிரீக்
*மெகா மால்ஸ்*
மகிழ்ச்சிக்கு
*மாயாஜால்*
மயிலாப்பூர்ல
*கபாலீஸ்வரர்*
திருவல்லிக்கேணில
*பார்த்தசாரதி*
அடையார்ல
*அஷ்டலட்சுமி*
வடபழனில
*வள்ளி முருகன்*
மாங்காட்டில்
*காமாட்சி*
திருவேற்காட்டில்
*கருமாரி*
மிண்ட் ஸ்ட்ரீட்ல
*கந்தசாமி*
நங்கநல்லூர்ல
*ஆஞ்சநேயர்*
செயின்ட் மேரிஸ்
*பெசன்ட் நகர்*
செயின்ட் பேட்ரி
*க்ஷெனாய் நகர்*
சி.எஸ்.ஐ. க்கு
*சின்னமலை*
பெந்தகோஸ்த்க்கு
*பரங்கிமலை*
தொழுகைக்
*தவுசண்ட் லைட்டு*
நமாஸ் பன்ன
*ஐஸ் ஹவுசு*
மந்திரிக்கறதுக்கு
*கோவளம்*
மாந்த்ரீகத்துக் *கொருக்குபேட்டை*
ஃபாரின் ஐட்டம்ஸ்
*பர்மாபஜார்*
லோக்கல் ஐட்டம்ஸ்
*பாண்டிபஜார்*
சீப்பா வாங்க
*சத்யா பஜார்*
ஜாலியா சுத்த
*ஜாம்பஜார்*
பண்டிக நாளுக்கு
*தி.நகர்*
காய்கறி மார்கெட்
*கோயம்பேடு*
ரேடியோ மார்கெட்
*ரிச்சி ஸ்ட்ரீட்டு*
பூக்கட பக்கத்துல
*ஹைகோர்ட்டு*
டி பி ஹாஸ்பிடல்
*குரோம்பேட்டை*
தேவர் சிலை
*தேனாம்பேட்டை*
பைக் ஸ்பேர்ஸ்
*புதுப்பேட்டை*
ஆட்டோ ஸ்பேர்ஸ்
*ராயப்பேட்டை*
ஆக்ஸிடெண்ட்க்க
*அப்பல்லோ*
டெலிவரிக்கு
*எக்மோர்*
எமர்ஜென்சிக்கு
*ஜி.ஹெச்.*
எலும்பு ஒடஞ்சா
*ராயப்பேட்டா*
காத்து வாங்க
*மெரீனா*
கடல போட
*பெசன்ட் நகர்*
சுண்டல் விக்க
*சாந்தோம்*
போட்ல போக
*முட்டுக்காடு*
டிராஃபிக்குக்கு
*மவுண்ட்ரோடு*
ஜாகிங்க்கு
*பீச் ரோடு*
பைக் ரேஸ்க்கு
*E C R*
ஓவர் ஸ்பீடுக்கு
*O M R*
MBA -க்கு
*மெட்ராஸ் யூனிவர்சிட்டி*
M. Tech
*அண்ணா யூனிவர்சிட்டி*
ஆர்ட்ஸ்க்கு
*நந்தனம் காலேஜ்*
ஸ்டேட்ஸ்க்கு
*லயோலா காலேஜ்*
கொயட்டா படிக்க
*குயின்மேரிஸ்*
சீன் போட
*ஸ்டெல்லாமேரிஸ்*
சயின்ஸ் படிக்க
*SIET*
சைட் அடிக்க
*எத்திராஜ்*
வெளையாட்டுக்கு
*லா காலேஜ்*
பந்தாக்கு
*பச்சையப்பாஸ்*
ஃபிரண்ட்ஷிப்பா
*பிரசிடென்சி*
ஷைனிங்க்கு
*மெடிக்கல் காலேஜ்*
வைல்டு லைஃப்க்கு
*வண்டலூர்*
குட்டீஸ்க்கு
*சில்ட்ரன்ஸ் பார்க்*
பழச பாக்க
*மியூசியம்*
படிச்சி பார்க
*கன்னிமாரா*
ஃபாரினர்ஸ்க்கு
*மகாபலிபுரம்*
பாமரனுக்கு
*எம்.ஜி.ஆர் சமாதி*
லவர்ஸ்க்கு
*காந்தி மண்டபம்*
வி.ஐ.பி. ஸ்க்கு
*வள்ளுவர்கோட்டம்*
சினிமாக்கு
*கோடம்பாக்கம்*
சித்தங்களங்கினா
*கீழ்பாக்கம்*
ஏர்போர்ட்
*மீனம்பாக்கம்*
நல்லதுக்கு
*நெசப்பாக்கம்*
எங்க ஊரு
*சென்னைங்க!!*
இங்க என்ன இல்ல
*சொல்லுங்க!!!!*
எப்படி நம்ம
*சென்னை கெத்து* !!!
# 378 வது
பிறந்தநாள்
காணும்
*சென்னைக்கு* நம்முடைய
வாழ்த்துக்கள்!!!!

Thursday, 14 September 2017

கணவன் - மனைவிக்கு இடையே நடந்த சண்டையின் போது:-

கணவன் - மனைவிக்கு இடையே நடந்த சண்டையின் போது:-

கணவன்: உன்னைப் பார்த்து நான் பயப்படறேன்னு நெனச்சுடாதே!...

மனைவி: பொய் சொல்லாதே... என்னைப் பொண்ணுப் பாக்க வரும்போது 6 பேரோட வந்தே!...

நிச்சயம் பண்ணும்  போது 100 பேரோட வந்தே!!...

தாலி கட்டும் போது 500 பேரை கூட்டிட்டு வந்தே!!!...

ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன் வீட்டுக்குத் தனியாவே  வந்திருக்கேன் பாத்தியா!...
இப்ப புரியுதா யாரு  "தைரியசாலி" ன்னு...

கணவன்: 😳😳😳😳.

#30 தினம் ஒரு திருக்குறள் | குறள் 1290 கண்ணின் துனித்தே | Dhinam Oru Thi...

Wednesday, 13 September 2017

என்ன டின்னர்?

காட்சி-1:

என்ன டின்னர்?

மதியம் மிச்சமான சோத்துல முட்டையை, மிளகு போட்டு தாளிச்சு வச்சு இருக்கேன்.

எனக்கு பசிக்கலை.!

🙄🙄🙄

காட்சி-2:

என்ன டின்னர்?

பெப்பர் எக் ஃப்ரைட் ரைஸ்

அட சூப்பர்.!

😀😀😀

நீதி:

*சோறு வைக்கிறது பெருசு இல்லை...*
*அதுக்கு பேரு வைக்கணும்*

😉😉😉

#29 தினம் ஒரு திருக்குறள் | குறள் 734 உறுபசியும் ஓவாப் | Dhinam Oru Thir...

#133 தினம் ஐந்து பொன்மொழிகள் | Best Motivational videos in tamil

லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள்...

கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி :

சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்
பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.
எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.
மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.
ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.
அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.
எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.
இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.
அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.
லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.

*‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.*

வாழ்க வளமுடன்.

Sunday, 10 September 2017

தண்ணீரை கொண்டுவர சென்றுவிட்டாள் மனைவி...

"நீண்ட தொலைவில்இருந்து இரண்டுகுடம் தண்ணீர் எடுத்துவந்து, வீட்டின் கதவை லேசாக திறந்து முன்னாடியே இரண்டு குடத்தையும் வைத்துவிட்டு, அடுத்த இரண்டுகுடம் தண்ணீரை கொண்டுவர சென்றுவிட்டாள் மனைவி........

"அந்தநேரம் அவளின் கணவன் மதிய சாப்பாட்டிற்காக வீட்டுக்கு வருகிறான். நல்ல வெயில். பசிவேறு அவனுக்கு.

"வெயிலில் வந்த்தால் உள்ளே இருந்த குடத்தை கவனிக்காமல் தட்டிவிட்டு விழுந்துவிடுகிறான். இரண்டுகுடம் தண்ணீரும் கொட்டிவிடுகிறது.

அவனுக்கு கடுமையான கோபம் வந்துவிடுகிறது. கொஞ்சமாவது அறிவுவேனாம்? இப்படியா முன்னாடியே தண்ணீர் குடத்தை வைப்பது? வரட்டும் பேசிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே இன்னும் இரண்டு குடத்தோடு வருகிறாள் மனைவி.

" தூக்கிவந்த குடத்தைக்கூட இறக்கவிடாமல் அவளைத்திட்டுகிறான். "உன்னையெல்லாம் உங்கவீட்டில எப்படித்தான் பெத்து, வளர்த்தாங்களோ! உனக்கெல்லாம் மூளையே இல்லையா? என்றபடி கண்டபடி திட்டுகிறான்.

இதைக்கேட்ட அவளுக்கு கோபம் தலைக்கேறுகிறது. " நான் எவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு தூரத்திலிருந்து இந்த தண்ணிய கொண்டு வற்றேன் தெரியுமா?

கண்ணை எங்க வச்சுக்கிட்டு போனிங்க என்று அவள் கேட்க, இப்படியே ஒருவருக்கொருவர் பேசி வார்த்தை பெரிதாகி, அவன் அவளை அறைந்துவிடுகிறான்.

"உடனே அவள் 'இனி ஒரு நிமிஷம்கூட உன்கூட வாழமாட்டேன் என்று சொல்லிவிட்டு அவளின் அம்மாவீட்டுக்கு சென்றுவிடுகிறாள்......

இது கணவன், மனைவிக்குள் ஒருசின்ன பிரட்சனை எவ்வளவு பெரிய முடிவைஎடுக்கவைத்துவிட்டது என்பதைக்கூறும் கதை.

இந்தக்கதையின் முடிவு இப்படிஇருத்தால் எப்படி இருக்கும்? வாருங்கள் பார்ப்போம்.........

அவன் குடம்தடுக்கி விழுந்து, தண்ணீரை கொட்டிவிட்டான். உடனே அவனுக்கு தோன்றியது " அடடா இப்படி கவனிக்காமல் இரண்டுகுட தண்ணீரையும் கொட்டிவிட்டோமே!

"சே! பாவம் அவள். தண்ணீர் எவ்வளவு தூரத்தில்இருந்து கொண்டுவருகிறாள்? முதல்வேலையா அவள்வந்தவுடன் மன்னிப்புகேட்டுவிட்டு நாமேபோய் இரண்டுகுடம் தண்ணீர் எடுத்து கொடுக்கவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும்போது அவள் தண்ணீரோடு வருகிறாள்.

இவன் ஓடிப்போய் அந்தக்குடங்களை இறக்கியவாறு நடந்ததைச்சொல்லி, "நான் கவனிக்காமல் குடத்தின்மேல் விழுந்து தண்ணீரைக்கொட்டிவிட்டேன். நீ எவ்வளவுதூரத்தில்இருந்து இந்த தண்ணீரைக்கொண்டுவருகிறாயஎன்னை மன்னித்துவிடு. கொடு நான்போய் தண்ணீர் கொண்டுவருகிறேன் என்கிறான்.

உடனே அவள் பதறுகிறாள். " ஐயையோ விழுந்துட்டீங்களா? உங்களுக்கு ஒன்றும் ஆகலையே? தண்ணீர்போனா போகட்டுங்க. நீங்க என்ன வேனும்னா கொட்டிவிட்டீங்க! தெரியாமத்தானே! அங்க தண்ணியவச்சது என்தப்பு. நான் போய் எடுத்துக்கொள்கிறேன்.

நீங்க வாங்க சாப்பிட. நல்ல பசியோடு வந்திருப்பீங்க பாவம் என்கிறாள்.(அவள் திட்டியிருந்தால்கூட இவ்வளவு தண்டனை கிடைத்திருக்காது அவனுக்கு).

அவன் அப்படியே நெகிழ்ந்துபோகிறான். அவள்மேல் அவனுக்கு இன்னும் அளவுகடந்த பாசம் உண்டாகிறது உள்ளுக்குள்.

இவ்வளவுதான் நம் வாழ்க்கையும்!கணவனோ, மனைவியோ தெரிந்து யாரும் தப்பு செய்வதில்லை. இருவரில் ஒருவர் ஒருபடிஇறங்கினால், மற்றவர் கண்டிப்பாக பத்துப்படி இறங்கிவருவார்.

நம்மைப்பார்த்துதான் நம்பிள்ளைகள் வளர வேண்டும்.........

*புரிதலும், விட்டுக்கொடுத்தலுமே வாழ்க்கை*


🌸🌼🌻🌺🌷🌹

#26 தினம் ஒரு திருக்குறள் | குறள் 813 உறுவது சீர்தூக்கும் | Dhinam Oru T...

#130 தினம் ஐந்து பொன்மொழிகள் | Best Motivational videos in tamil

இன்னும் ஐம்பது வருடங்கள் ஆனாலும் அவர் பாடல்கள்...

ஆட்டோவில் பயணித்தால் ஆட்டோ ஓட்டுநர் "சீர் கொண்டு வா வெண் மேகமே" போடுகிறார்...

இரவு நேரத்தில் பால் கொண்டு வருபவர் அவரது TVS XL ல் "காலையில் கேட்டது கோவில் மணி" ன்னு ஒலிக்கறது

சென்னை ஸ்வீட்ஸ்ல் "ஒரு கோலக்கிளி ஜோடி தன்ன தேடுது தேடுது" ன்னு பாவ்பாஜி சாப்பிட்டு கொண்டு ரசிக்க முடிகிறது.

பொதிகை ஜவுளி கடையில் "இளமை எனும் பூங்காற்று" instruments ஓடிக்கொண்டிருக்கிறது.

எங்களது காரை இன்னொரு கார் வழிமறித்து நீங்க திருவனந்தபுரம் போனா பீமா பள்ளி போனா அங்க எதிர்த்த கடையில இளையராஜா MP3 4 CD வாங்கிட்டு வாடேன்னு டிரைவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

கிழக்க இரயில்வே ஸ்டேஷனுக்கு எதிர்த்த வீட்டில் கல்யாணமாம் பெரிய ஸ்பீக்கரில் "சக்கரகட்டி சக்கரகட்டி சந்தன பெட்டி"

ஐந்தருவியில் குளித்துவிட்டு அங்குள்ள டீ கடையில் "அன்னாத்த ஆடுறார் ஒத்திக்கோ " வுடன் ஒரு மிளகாய் பஜ்ஜி...

இன்னும் ஐம்பது வருடங்கள் ஆனாலும் அவர் பாடல்கள் ஒலிக்காத ஒரு நாள்கூட இருக்கபோவதில்லை!!!!

மனைவி பற்றி ஒரு சிறு ஆராய்ச்சி குறிப்பு!

பல்வேறு மொழிகளில் மனைவியை எப்படி அழைக்கிறார்கள் -- மனைவி பற்றி ஒரு சிறு குறிப்பு!

 நமது மனையில் வெற்றிகரமாக வீற்றிருப்பவள் என்பதால், *மனைவி* என்றும்...

நமது வாழ்வில் கடைசிவரை தொண தொணவென்று துணையாய் வருபவள் என்பதால், *துணைவி* என்றும்...

பொன் நகையை வாங்கி தருமாறு நம்மை ஆட்டி வைப்பதால் , *பொண்டாட்டி* என்றும்...

நம்மை அவ்வப்போது பஞ்சராக்கும் ஜாதி என்பதால், *பொஞ்சாதி* என்றும்...

காஃபியை ஆத்திக் கொடுத்தே தனது காரியத்தை சாதித்து விடுவதால், *ஆத்துக்காரி* என்றும்...

ஷாப்பிங் போய் விட்டு வீட்டுக்கு வந்ததும் நம்மை பார்த்து அவள் கேட்டதை எல்லாம் வாங்கித்தர முடியாத துப்பு கெட்டவன் என்று காரி துப்புவதால், *வீட்டுக்காரி* என்றும்...

கடைசிவரை வந்து உனக்கு பீப்பீ ஊதப்போவது நாந்தான்யா என்பதால், *பீபி* (ஹிந்தி) என்றும்...

உனக்கு கடைசிவரை நாந்தான் எல்லாம் என்பதால், *பெல்லாம்* (தெலுகு) என்றும்...

நம்மை மதி கெட்டவன் என்று கூறி அடிக்கடி அவள் சிரிப்பதால் *ஸ்ரீமதி* (நேபாளி) என்றும்...

 அவ்வப்போது  நமது மனதை கார்த்திகை தீபம் போல்  சூடாக்குவதால்,  *மனகார்த்தி* (கன்னடம்) என்றும்...

கணவனை என்றும் திட்டிக் கொண்டே இருக்கின்றாள் என்பதால், *கன்டித்தி* (கன்னடம்) என்றும்...

நம்மை திட்டுவதற்கு முன் இங்க பாருய்யா என்று ஆரம்பிப்பதால், *பாரியா* (மலையாளம்) என்றும்...

வாழ்நாள் முழுவதும் கண்ணுக்கு அறியாத Wi-Fi போல் நம் மேல் கண்காணிப்பு அலைவரிசையாய் தொடர்வதால் *Wife* (ஆங்கிலம்) என்றும்...

கடைசிவரை நம்மை விட்டுப் பிரியாமல் ஜவ்வு மிட்டாய் போல் ஒட்டிக் கொண்டு வருவதால் *ஜவ்ஜத்* (அரபிக்) என்றும்...

வேலைக்கு செல்லும்போது அசையும் சொத்து போல கையசைத்து பை பை சொல்வதால், *அஷாவா பபாய்* (பிலிப்பைன்ஸ்) என்றும்...

காலம் முழுவதும் நாந்தான்யா உனக்கு பவுலர் என்று  நம் மீது எதையாவது வீசிக்கொண்டு இருப்பதால், *பவுள* (சிங்களம்) என்றும்...சொல்கிறார்கள்

 இது மனைவியின் திட்டு காதில் விழாமல் இருக்க விட்டத்தை பார்த்து யோசிக்கும் போது வந்த நொந்து போன கருத்துகள்....
.😤😤😂🤣👱‍♀👩🏻

Friday, 8 September 2017

தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,

தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......
*
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
*
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.
*
ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.
*
ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
*
எது அந்த தவளையை கொன்றது...?
*
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
*
ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......
*
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.
*
ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*
மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.
*
உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...

 👉🏿விழுந்தால் அழாதே . . .
எழுந்திரு 👈🏿

           🗣
👉🏿தோற்றால் புலம்பாதே . . .
போராடு 👈🏿

             🗣
👉🏿 கிண்டலடித்தால் கலங்காதே . . .
மன்னித்துவிடு 👈🏿

              🗣
👉🏿தள்ளினால் தளராதே . . .
துள்ளியெழு 👈🏿

               🗣
👉🏿நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .
நிதானமாய் யோசி👈🏿

                🗣
👉🏿ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .
எதிர்த்து நில் 👈🏿

           🗣
👉🏿நோய் வந்தால் நொந்துபோகாதே . .
நம்பிக்கை வை 👈🏿

              🗣
 👉🏿கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .
கலங்காமலிரு 👈🏿

              🗣
👉🏿  உதாசீனப்படுத்தினால் உளறாதே . .
உயர்ந்து காட்டு 👈🏿

           🗣
👉🏿 கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு 👈🏿

           🗣
👉🏿மொத்தத்தில் நீ பலமாவாய் 👈🏿

              🗣
👉🏿சித்தத்தில் நீ பக்குவமாவாய் 👈🏿


💐💐💐💐💐💐💐💐
💐உன்னால் முடியும் .💐

💐உயர முடியும் . . .
  💐

             
💐உதவ முடியும் . . .
  💐

💐💐💐💐💐💐💐💐
⚜உனக்கு உதவ நீ தான் உண்டு ⚜

❇❇❇❇❇❇❇
👉🏿உன்னை உயர்த்த நீ தான் 👈🏿. . . ⚜நம்பு⚜ . .

✳✳✳✳✳✳✳✳
👉🏿 உன்னை மாற்ற நீ தான் 👈🏿. . .👉🏿 முடிவெடு👈🏿 . . .

                👤
👉🏿நீயே பாறை👈🏿👉🏿.நீயே உளி . 👈🏿. .

             👤
👉🏿நீயே சிற்பி . . .நீயே செதுக்கு 👈🏿. . .

                 👤
👉🏿நீயே விதை . . .நீயே விதைப்பாய் 👈🏿. . .
                     👤
👉🏿நீயே வளர்வாய் 👈🏿. 👉🏿நீயே அனுபவிப்பாய் 👈🏿. . .

                  👤
👉🏿நீயே நதி👈🏿 . . .👉🏿 நீயே ஓடு👈🏿 . . .

                   👤
👉🏿நீயே வழி👈🏿 . . .👉🏿 நீயே பயணி👈🏿 . . .

                  👤
👉🏿நீயே பலம் 👈🏿. . .  👉🏿நீயே சக்தி 👈🏿. . .

                    👤
🌸நீயே ஜெயிப்பாய் 🌸

💯எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே🌸
    . 🙏🙏🙏

மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்...

மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் நண்பர்களே:

1.பிள்ளைகளை ஆங்கிலவழி கல்வியில் படிக்கவச்சுகிட்டு, தமிழுக்கு ஆதரவாக போராட வேண்டியது.

2. ஓவன்ல சமைத்து A/c அறையில உட்கார்ந்து சாப்பிட்டு, அணுமின்சாரத்திற்கு எதிராக போராட வேண்டியது.

3. கேஸ் அடுப்புல பால் காய்ச்சு குடித்துவிட்டு, மீத்தேனுக்கெதிரா போராட வேண்டியது.

4.பெட்ரோலில் வண்டிய ஓட்டிக்கொண்டு, ஹைட்ரோகார்பனுக்கெதிரா போராட வேண்டியது.

5. விவசாயமே செய்யாது, விவசாயத்திற்கு ஆதரவாக போராட்டம்.

6. மாடு வெட்டி திண்ணுட்டு, மாட்டுக்கு ஆதரவாக போராட்டம்.

7. சாதி சலுகைகளை அனுபவச்சிகிட்டு, சாதிக்கெதிரா போராட்டம்.

8. இந்துமதத்தை மட்டும் இழிவு படித்திகிட்டு, மதசார்பிண்மைக்கு ஆதரவாக போராட்டம்.

9. பணம் கொடுத்து,பணம் வாங்கி ஓட்டு போட்டு, ஊழலக்கு எதிராக போராட்டம்.

10.மதுவிற்கு எல்லாம் அடிமையாகிவிட்டு, மதுக்கெதிரா போராட்டம்.

11. நீர்நிலைகளை எல்லாம் மாசு உண்டாக்கி அழித்துவிட்டு, நீருக்காதவராக போராட்டம்.

12. அரசிற்கு வரியே கட்டாமல், வளர்ச்சி எங்கே என்று கேட்டு போராட்டம்.

13. தவறு செய்தவர்களை தண்டித்தால், அடக்குமுறை,சர்வாதிகாரம்னு சொல்லி போராட்டம்.

அனைத்தையும் மக்களே செய்துவிட்டு
இந்தியாவை சில ஆண்டுகள் ஆட்சி செய்பவர்கள் தான் எல்லாத்திற்கும் காரணம் என்று சொல்லும் பொழுதுதான் வேடிக்கையாக உள்ளது.

தனி மனதின் ஒவ்வொருவரும் மாறினால் மட்டுமே நிச்சயம் மாற்றம் பிறக்கும்.
😨😨😨😨😨😨😨😨😨😨😨😨😨😨😨😨😨
எங்கடா என் ஆறுகள் என்று கேட்டேன்....
எங்கடா என் காடுகள் என்று கேட்டேன்......
எங்கடா என் மரங்கள் என்று கேட்டேன்....
எங்கடா என் மலைகள் என்று கேட்டேன்....
எங்கடா என் மண்ணு என்று கேட்டேன்....
எங்கடா என் மொழி என்று கேட்டேன்.....

கடைசியா பதிலைச்சொன்னான்.....

இதையெல்லாம் வித்து தான்.....

உங்களுக்கு அரிசி கொடுத்தோம்....

மாவரைக்க கிரைண்டர் கொடுத்தோம்....

மஞ்சள அரைக்க மிக்சி கொடுத்தோம்....

மயிர்காயவைக்க ஃபேனும் கொடுத்தோம்....

மானாட மயிலாட காண டிவியும் கொடுத்தோம்.....

கேம் விளையாட லேப்டாப் கொடுத்தோம்....

தாலிக்கு தங்கமும்....அதை அறுக்க டாஸ்மாக்கும் கொடுத்தோம் என்றார்கள்...

அடுத்த தலைமுறைக்கு என்னடா வளமிருக்கும்...? என்றேன்....

அப்படி ஒன்றை வரவே விடமாட்டோமே ...!! என்றார்கள்....

யாரடா நீங்கள் ...? என்றேன்....

நாங்கள் தான் #அரசியல்வாதிகள்
என்றார்கள்.....!!

*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!!

Wednesday, 6 September 2017

#22 தினம் ஒரு திருக்குறள் | குறள் 391 கற்க கசடற | Dhinam Oru Thirukural ...

#126 தினம் ஐந்து பொன்மொழிகள் | Best Motivational videos in tamil

முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்...!

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்...! 📲

>🗡
🚌பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639

🗡
🛍பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:-Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828

🗡
👴🏼👩🏻மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

🗡
👩🏻வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம்ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

🗡
🚂🚃ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்:  044-25353999 / 90031 61710 / 99625 00500

🗡
🚕ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்—044-24749002 / 26744445

🗡
🏃🗣சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற     95000 99100 ( SMS )

🗡
🗣👤மனிதஉரிமைகள் ஆணையம் ————-––      044-22410377

🗡
🚌மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-      09383337639

🗡
🚨🚔📲
போலீஸ் SMS :- —————————————-      9500099100

🗡
👮👞💸போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-      9840983832

🗡
🚎போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–       98400 00103

🗡
💳வங்கித் திருட்டு உதவிக்கு ———————-      9840814100

🗡
👩🏻வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-      044-28551155
பெண்களுக்கான உதவி : ——-—-–———-         044-23452365

🗡
👩🏼தமிழ்நாடு மகளிர் ஆணையம் —————        044-25264568

🗡
🐯🦁🐶🐒🐘🐎🐅
விலங்குகள் பாதுகாப்பு ————————     044 – 22354959 / 22300666

🗡
👮🏽🚓போலீஸ் : —————————————–——   100

🗡
🚒தீயணைப்புத்துறை:————————-—–101

🗡
🚑ஆம்புலன்ஸ் : —————————————-        102, 108

🗡
🚌🚦போக்குவரத்து விதிமீறல———————–         103

🗡
🚌🚨விபத்து :———————————————-–           100, 103

🗡
👩🏻பெண்களுக்கான அவசர உதவி : ——-—-–        1091

🗡
👶🏻🙇குழந்தைகளுக்கானஅவசர உதவி :——-–         1098

🗡
🚨🚑அவசர காலம் மற்றும் விபத்து : ———-—        1099

🗡
👴🏼முதியோர்களுக்கான அவசர உதவி:—-—        1253

🗡
🛣🚌தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி:         1033

🗡
🏝🏖கடலோர பகுதி அவசர உதவி : ———-—–         1093

🗡
💉🌡ரத்த வங்கி அவசர உதவி : —————-—–          1910

🗡
👁👁கண் வங்கி அவசர உதவி : —————-—–          1919

🗡
📲🇮🇳நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.
📲🔐நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது  அனைத்திற்குமான அவசர உதவி எண்.

நமக்கு பயன்படவில்லை என்றாலும் ,வேறு யாருக்காவது பயன்படலாமே தயவுசெய்து பகிருங்கள்

Sunday, 3 September 2017

#123 தினம் ஐந்து பொன்மொழிகள் | Best Motivational videos in tamil

#19 தினம் ஒரு திருக்குறள் | குறள் 1321 இல்லை தவறவர்க்கு | Dhinam Oru Thi...

மனைவி அழைத்தால் வாணி ராணி முடிஞ்சிருச்சுன்னு அர்த்தம்...

சிரிக்க மட்டும்....அல்ல

சிந்திக்க மட்டும்...

'என்னைத் தவிர யாரைக் கட்டியிருந்தாலும்
குடும்பம் நடத்தியிருக்க முடியாது'' எல்லா
புருஷன் பொண்டாட்டிக்கும்
இருக்கும் ஒன்றுபட்ட எண்ணம் இதுவே ...

நம்ம தமிழ்நாட்டில் பொறுத்தவரை
எல்லாரும் ஹெல்மெட் அணிவது
போலீஸுக்கு பயந்து தான், உயிருக்கு
பயந்தல்ல ....

ஆஸ்பத்திரியில் நலம் விசாரிப்பதற்கு
நாலு நல்ல வார்த்தைகளை விட ....
நாலு நல்ல ஆப்பிள்களே போதுமானதாய்
இருக்கிறது ...

ஒரு வருடத்திற்கு முன்பு மணக்கோலத்தில்
நண்பனை சிரிப்போடும்,அவன் மனைவியை
கண்ணீரோடும் கண்டேன் .....
ஒராண்டுக்குப்பின் கண்டபோது கண்ணீர்
இடம்மாறியிருந்தது ....

பெண்களை விட ஆண்களுக்கு நல்லா சமைக்க தெரியும் ...
ஆனால் ...
ஆண்கள் ஒரு நாள் சமைக்குற பொருளை வைச்சு பெண்கள் ஒரு வாரத்துக்கு சமைச்சுடுவாங்க ...

காலையில எழுந்ததும்
Whatsapp ஓபன் பன்றமாறி
சின்னபுள்ளையில
பாட புத்தகத்த
ஓபன் பன்னிருந்தா
உருப்பட்டுருப்பன்.

ஓட்டலில் சர்வர் என்ன சாப்புடுறீங்கன்னு
கேட்டாலே ஒழுங்கா பதில்
சொல்லத் தெரியல ....
இதுல கடவுள் வந்து என்ன வரம் வேணும்னு
கேட்டா... எப்படி சொல்லுவது ?

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பெற்றோர்கள்
நம்மை அடிப்பதை நிறுத்திவிடுகிறார்கள் .....
பின்னர் ...
அவங்க கை வலிக்குதுனு
நமக்கு திருமணம் செய்து வைத்து
விடுகிறார்கள்

ஊருக்கே குறி சொல்லும் பூசாரி ,
ATM வாசல நின்னு.....
பணம் இருக்கானு இன்னொருத்தன்ட
கேட்கிறான்..

இரவு கணவனை சாப்பிடவாங்கன்னு
மனைவி அழைத்தால்
வாணி ராணி முடிஞ்சிருச்சுன்னு அர்த்தம்

பந்தி பரிமாறுபவர்
நமக்கு நன்கு தெரிந்தவராயின்
மனதிற்குள் வரும் சந்தோசம் சுகமானது .....

பொண்டாட்டி யை
சமாதானப்படுத்த வீட்ல பீரோவில் கிடக்கும்
சேலையையே பேக் பண்ணி கிப்டா
கொடுத்துரனும்....
கண்டிப்பா தெரியாது .....
பீரோ பூரா அவ்ளோ சேலை ....

பேருந்தில் ஏறி அமர்ந்தவுடனே தூங்கிவிடுவது
வரம் ....
அவ்வரம் பெற்றவர் நம் அருகில்
அமர்ந்திருப்பது சாபம் ...!

ஒரு பெண் , ஒரு நிமிடத்தில் சேலை
செலக்ட் செய்கிறாள் என்றால்,
அந்த சேலை வேறு யாருக்கோ என்று அர்த்தம் ....

நல்லா போய்க்கிட்டிருந்த பஸ் திடீர்னு குலுங்கி
குலுங்கி போக ஆரம்பிச்சா...
நாம பஸ்ஸ்டாண்டுக்கு உள்ள
வந்துட்டோம்னு அர்த்தம் ....

அம்மா இலவசமா கொடுத்த
ஆடு மாடு மட்டும்தான் இன்னும்
அம்மானு கத்திகிட்டு இருக்கு மீதி இருக்க
எல்லா பயலுகளும் சின்னம்மானுதான்
கத்துதுங்க.

முன்பு
ஆண்களுக்கு குட்டிச்சுவர் ,
டீக்கடை பெஞ்ச் ,
பெண்களுக்கு
வீட்டுத் திண்ணை ,
குழாயடி,
இப்போ ...
எல்லோருக்குமா
இப்போ வாட்ஸப் ஆயிடுச்சு

பெண்கள் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் ஒருவர் சொல்வதை கேட்டு அமைதியாக நிற்கிறார்கள் என்றால் அவர் ஃபோட்டோகிராபர் ஆகத்தான் இருக்க வேண்டும்!!

பேசாமல் இருந்தால்,
'ஏன் பேச மாட்டேன்ங்கிறீங்க?' என்று
நச்சரிப்பதும், பேசினால் சண்டைக்கு
இழுப்பதும் மனைவியின் இயல்பு!!

(கொஞ்சமா நகைச்சுவை, அதிகமா சிந்திப்பு).