flipkart discount sale search here.

Monday, 25 September 2017

Clean your WhatsApp | வாட்சப்ஐ சுத்தம் செய்வோம்... குளிர்பானத்தில் எய்ட்ஸ்...

*வாட்சப்ஐ சுத்தம் செய்வோம்*

*ஜனகண மன பாடல் யுனெஸ்கோ வால் சிறந்த தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது*
தவறான தகவல்

*பீமன் மகனான கடோத்கஜனின் நிஜமான எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது*
அது சினிமா செட்..

*குளிர்பானத்தில் எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் பரவிவிட்டது*
இந்த முறையில் எய்ட்ஸ் பரவாது. குளிர்பானங்கள் முழுவதும் இயந்திரத்தில்  உற்பத்தி செய்யப்படுகிறது.

*திருநள்ளாறு கோவிலின் மேலே வரும் போது செயற்கைக் கோள் நின்றுவிடும்*
உண்மை அல்ல. நின்றால் மறுபடி தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்வது யார்?

*இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் தாக்கும் செல்போன் ஆப் பண்ணுங்க என நாசா அறிவிப்பு*
பொய். இண்டர்நெட் ஸ்பீட் இல்லாத  ஒருத்தன் கெளப்பி விட்ருக்கான் ...

*இந்தக் குழந்தையின் புகைப்படத்தை ஷேர் செய்தால் ஃபேஸ்புக் ஒரு ரூபாய் கொடுக்கும்*
ஒரு ஷேர்க்கு ஒரு ரூபாய்னா , அவன் எத்தனைக் கோடி கொடுக்கனும்? அவன் பிசினஸ் பண்றானா, இல்ல  தர்மசத்திரம் வச்சு நடத்துறானா?

*இந்தச் சாமி படத்தைப் பகிர்ந்தால் நல்லது நடக்கும்*
இது அந்தச் சாமிக்குத் தெரியுமா?

*ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 1000 ரூபாய் நோட்டு*
போட்டோசாப் வேலை...

*இந்த லிங்க்கை ஷேர் செய்தால் 3 ஜி.பி இலவச டேட்டா கிடைக்கும்*
இருக்குற டேட்டாவும குறையும் ...

*மோடி இளைஞர்களுக்காக 10 ஜி.பி டேட்டா அனைவருக்கும் இலவசமாகத் தருகிறார்*
புதுசா நெட்வொர்க் கம்பெணி ஆரம்பிச்சுருக்காரா?

*இலங்கைத் தமிழர்களுக்காக ஐ.நா., சபை வாக்கெடுப்பு நடத்துகிறது*
பொய்யான தகவல். வெப்சைட் மார்கெட்டிங்.

*599 ரூபாய்க்கு அமேசான்ல 4G போன்*
அமேசான மூட போறாங்களா?

*குழந்தையைக் காணோம்*
அந்தக் குழந்தைக் கிடைச்சு, இப்ப காலேஜ் போய்க்கிட்டிருக்கு.  கொழந்த கெடச்ச பின்னாடியும், இனிக் குழந்தை காணாம போனா தேதியோடப் போடுங்க.

*ஆபரேசனுக்கு ரத்தம் வேணும்*
தேதி, நேரம் எதுவுமே இல்லாம அனுப்புனா எப்படி?

*இந்தத் தகவலை 18 பேருக்கு அனுப்பு. சாயிபாபா நல்லது செய்வார். இல்லனா கெட்டது நடக்கும்*
அவரோட வாட்ஸ்சப் நம்பர் என்ன?

*3 குரூப்கு அனுப்பிட்டு பேலன்ஸ் செக் பன்னு*
எப்படி ஏறும் ? உங்க டேட்டா பேலன்ஸ்தான் குறையும்.

*தடுப்பூசி போட்டால் ஆபத்து*
பொய். எந்த அலோபதி மருத்துவரும் ஒப்புக்கொள்ளவில்லை.

*10 ரூபாய் நாணயங்கள் செல்லாது*
பொய்.

*வாட்ஸ்சப் சீனாவில் தயாரிக்கப்பட்டது். இந்த நிறுவனத்தின் பணம் முழுக்க சீனாவிற்குச் செல்கிறது*
அமெரிக்காவில் டெவலப் செய்யப்பட்டது. தற்போது பேஸ்புக் வசம் உள்ளது.

*டெலிகிராம் இந்திய அப்ளிகேஷன்*
ரஷ்யாவில் டெவலப் செய்யப்பட்டது.

 * நான் வாட்ஸப்ல சேர்ந்த காலத்துல இருந்து காஞ்சிபுரத்துல ஒரு பள்ளிப் பேருந்து ஆக்ஸிடெண்ட் ஆகிக்கிட்டே இருக்கு...

இன்னும் இது மாதிரி  நிறைய....

👆👆👆👆👆
"இதெல்லாம் பார்வர்ட் செய்யும் நண்பர்களே , கெடச்சா கிடைக்கட்டும் , அனுப்பி பாப்போம்னு அனுப்பாதிங்க"

இந்த ஃபேக் நியூஸ்களின் பின்னே, ஒன்று உங்களை ஏமாற்ற வேண்டும்; அல்லது உங்களைப் பயன்படுத்தி லாபம் அடையவேண்டும்.

எனவே நீங்கள் வாட்ஸ்அப்பில் அல்லது ஃபேஸ்புக்கில் அனுப்பும் ஒவ்வொரு செய்தியையும், ஒருமுறை உங்களுக்குள் சிந்தித்துவிட்டே பகிருங்கள். தேவையற்ற, வீண்பழி சுமத்துகின்ற, நம்பகத்தன்மையற்ற செய்திகள் உங்களை வந்து சேர்ந்தால் கூடப் பரவாயில்லை; அடுத்தவருக்கு சேரும்படி ஷேர் செய்யாதீர்கள்.  இணைய உலகில் மறைந்திருக்கும் பிராடுகளிடம் இருந்து இனியாவது விடுபடுவோம்.

*பயனற்ற வாட்ஸப் பதிவுகளால் கொள்ளையடிக்கும் செல்போன் நிறுவனங்கள்-ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்*

பரிதாபமான நிலையில் உள்ளவர்கள் குறித்து வாட்ஸப் பதிவுகளை பகிருங்கள், அவர்களுக்கு ஒரு பகிர்விற்கு இவ்வளவு பைசா கிடைக்கும் என்ற ஏமாற்று பதிவுகளை பார்த்திருப்பபோம்.

இப்படி லட்ச, லட்சமாக
“ Cellphone company ” காரன் எப்படி தருவான், என்பதை சிந்தித்திருக்கிறோமா?

எப்போதாவது நீங்க இந்த பாதிக்கப்பட்டவர் இடம் போய் கேட்டு இருக்கிருக்கிறீர்களா ?

இதன் பின்னணியில் உள்ள செல்போன் நிறுவனங்களின் அயோக்கியதனமான கொள்ளை நடப்பது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

முதலாவதாக, இதை பதிவை பகிரும் ஒருவருக்கு data Balance ல இருந்து 50 Kb செலவாகும்.

இதை Download செய்து பார்க்கும் , கேட்க்கும் பிறருக்கு Net Card balance லிருந்து
50 KB செலவாகும்.

” ஆக ஒரு “குரூப்” ல் இருக்கும் மொத்த 100 பேரும் பார்க்கும் போது கூட்டி கழிச்சி (100 X 50 Kb = 5000 Kb ÷ 1000 = 5 GB ) பார்த்தா 5 GB (1GB ₹192 X 5 = ₹960) என்று சுமார் ₹1000/- ரூபாய் செலவாகும்.

“ஆக மொத்தம் ரூபாய் ₹1000/- த்தில் 20 ℅ (₹200/- ரூபாய்) இந்திய அரசாங்கத்திற்க்கும் …

” Net Card விற்க்கும் கடை காரனுக்கு 5℅ (₹50/- ரூபாய்) Commission போக ..

“மீதி (₹750/- ரூபாய்) செல்போன் கம்பெக்குத்தான் போகும்.

🤔 இப்படித்தான் Accident ல

# கண்ணு போச்சி,

# காலு போச்சு,

# காது போச்சு,

# குழந்தைக்கு இருதயத்தில ஓட்டை விழுந்திருச்சி,

# குழந்தை வயிற்றில் கத்தி போயிருச்சி,

#தொன்டைக்குள்ளே தொடப்ப கட்டை போயிருச்சின்னும் ,

அப்புறம்  ..

இந்த Saami  (endha saamiya irunthalum sari) படத்த பாத்த உடனேயே 10 பேர்களுக்கு ஷேர் பண்ணுங்க உடனே நல்ல சேதி வரும் அலட்சிய படுத்தினா ரத்தம் கக்கி சாவிங்க என்று கடவுள்களின் பெயரை சொல்லி ஷேர் செய் நல்லது நடக்கும் இல்லனா கெட்டது நடக்கும்.என்றும் ,

மேலும் இந்த நெட்ஒர்க் ஷேர் செய்தால் 10 GB 3Gஇலவசம்.

என்றும்,

இப்படி புதுசு, புதுசா எதையாவது எழுதி இல்லை  பேசி இது மாதிரி “குரூப்” களுக்கு அனுப்புவாங்க.

😔 இது மாதிரி சோகமாக பேசி இதை நீங்கள் குறைந்தது 10 Groups க்கு அனுப்பு என்பான்.

“ஆக ஒரு ” குரூப்” ல் 100 பேருக்கு அனுப்பும் போது “Sim Card Company” காரனுக்கு சுமார் ₹ 750/- ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

இதுபோல்

01 X 10= 10/-
10 X 10= 100/-
100 X 10= 1000/-
1000 X 10= 10,000/-
10,000 X10=1,00,000/-

பேருக்கு என்று அனுப்பி கொண்டே போனால்
(1,00,000 X 50 KB = 50,00 000 GB X ₹192= ₹96,00,00,000/- ÷ 25℅ -₹72,00,00,000

( கிட்டத்தட்ட 72 கோடி ரூபாய் வரை ) எவ்வளவு காசு கம்பெனி காரனுக்கு கிடைக்கும் என்று கூட்டி கழிச்சி பாருங்க தம்பி, தங்கைகளா …!?

 ஏர்டெல்,

 ஏர்செல்,

 டாடா,

 டொக்கோமோ,

 வொடாபோன்,

 ரிலையன்ஸ்

இன்னபிற
“Sim Card Company” முதலாளிகளுக்கு …
காசு மேலே காசு போய் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.

*நமக்கோ அல்லது பாதிக்கப்பட்டவங்களுக்கோ -10 பைசா கூட போகாது ..*

💰 இதற்காகவே இதுக்கென்றே
“Sim Card Company” காரன்கள் ஆட்களை சம்பளம் கொடுத்து அமர்த்தியுள்ளான்கள்.

😔 இதில் வருத்தபட வேண்டிய விசயம் என்னவென்றால் கடைசியில் உண்மை செய்தி எது, பொய் செய்தி எது என்று பிடிபடாமல் போய் அனைத்தையும் மக்கள் அலட்சிய படுத்தி விடுவார்கள். )

 இனிமே உங்கள் நண்பர்களுக்கு“குரூப்" களுக்கு இது மாதிரியான ( பொய் ) செய்திகளை பதியும் முன்பு யோசனை செய்து விட்டு அப்புறமாக பதிவிடவும்.*

இது போன்ற செய்திகளை பதிவிடுவோரை குழுவில் இருந்து நீக்குவதும் பயனளிக்கூடியது.

இந்த செய்தி share பண்ணறதால எனக்கு 50 kb போனாலும் பரவாயில்ல ..

*திருந்துங்கப்பா ..நிறுத்துங்கப்பா..*

No comments:

Post a Comment