flipkart discount sale search here.

Tuesday 26 September 2017

குரங்கு மனம் வேண்டாமே!!

குரங்கு மனம் வேண்டாமே!

"ஒரு குரங்கு இறப்பதற்கு ஒரே ஒரு காயம் போதும்.
ஒரு முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்."

என்று கிராமங்களில் ஒரு உவமை வாக்கியம் உண்டு.

காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை. ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு காயம் ஏற்பட்டுவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.

அதுபோலத் தான் மனிதன், தன் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டி, அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.

அந்த குரங்கு கொஞ்சம் பொறுமையாய் தனக்கு ஏற்பட்ட காயத்தை நோண்டாமல் இருந்தாலே போதும். அது விரைவில் ஆறிவிடும்.

இதை குரங்குக்கு புரிய வைக்கவும் முடியாது. நோண்டுவதை தடுக்கவும் முடியாது.

ஆனால், மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?

வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழ முடியும் தானே?

மனித மனதை, மனித மனமாகவே இருக்கவிடுங்கள்!

குரங்கு மனம் வேண்டாமே!!

No comments:

Post a Comment