flipkart discount sale search here.

Tuesday, 22 May 2018

நிபா வைரஸ் எச்சரிக்கையைத் தொடர்ந்து வவ்வால்...

நிபா வைரஸ் எச்சரிக்கையைத் தொடர்ந்து

வவ்வால் அல்லது மற்ற பறவைகள் கடித்த பழங்களை சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்திடவும்.

ரமலான் நேரமாதலால் மக்கள் அதிகமாக பழங்கள் சாப்பிடுவது வழக்கம். பழங்கள் வாங்கும் போது கவனமாக வாங்கவும்.

பொதுவாக, பறவைகள் கடித்திருந்தால் அந்த பகுதியை மட்டும் வெட்டி வீசிவிட்டு மற்றதை சாப்பிடுவதோ ஜூஸ் போடுவதோ வழக்கம். இதை முற்றிலுமாக தவிர்க்கவும்.

அப்படிப்பட்ட பழங்களை தூர வீசிவிடலாம்.

கடைகளில் ஜூஸ் போன்றவற்றை அருந்துவதையும் தவிர்க்கவும்.

கேரளாவில் வைரஸ் தாக்கி மரணமடைந்தவர்கள் வீட்டு கிணற்றுத் தண்ணீரில் வவ்வால் எச்சமிட்டதால் இது ஏற்பட்டுள்ளது என தெரியவந்திருக்கிறது. எனவே, திறந்திருக்கும் நீர்நிலைகள், கிணறுகளில் உள்ள நீரை குடிப்பதை தவிர்க்கவும். நீரை சூடாக்கிப் பருகவும்.

#NipahVirus

No comments:

Post a Comment