flipkart discount sale search here.

Saturday, 26 May 2018

கீதையை தூக்கிக் கொண்டு வெளியே நடந்தார்.

படித்ததில் பிடித்தது

பகவத்கீதையின் பெருமை

ஸ்வாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது, பல இடங்களில் அருமையான உபன்யாஸங்கள் மூலம், நம்முடைய ஸனாதன மதத்தின் பெருமையை நிலைநாட்டினார்.

ஒருமுறை ஒரு க்ரிஸ்டியன் மிஷனரியைச் சேர்ந்த சிலர், ஸ்வாமியை தங்களுடைய லைப்ரரிக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். ஸ்வாமியும் சென்றார்.

அங்கு எக்கச்சக்கமான புஸ்தகங்கள் இருந்தன.

ஆனால் ஒரு இடத்தில் அவர்கள் வேண்டுமென்றே புஸ்தகங்களை அடுக்கியிருந்த விதம், ஸ்வாமிகள் பார்வையில் பட்டது.

எப்படி அடுக்கியிருந்தார்கள்?

உலகில் உள்ள ஏதேதோ மதங்களின் புஸ்தகங்களை எல்லாம் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி, எல்லாவற்றுக்கும் மேலாக பைபிளை வைத்திருந்தார்கள்.

ஆனால், நம்முடைய பகவத்கீதையை மட்டும் எல்லா புஸ்தகங்களுக்கும் அடியில் கடைஸியாக வைத்திருந்தார்கள்.

ஸ்வாமிகளை அழைத்ததே, இந்த ஏற்பாட்டை காட்டத்தான்! அவரையும் நம்ஹிந்து தர்மத்தையும்  மட்டப்படுத்தி காட்டத்தான்!

ஆனால் நம் ஸ்வாமிகள் கம்பீர புருஷர் இல்லையா!

நேராக அந்த புஸ்தகங்கள் அருகில் போய், அடியிலிருந்த பகவத் கீதையை தன் திருக்கரத்தால் ஒரு ஆட்டு ஆட்டி, வெளியே எடுத்தார்.

அடுத்த க்ஷணம், மேலே இருந்த பைபிள் உள்பட அத்தனை மதங்களின் புஸ்தகங்களும் "தபதப" வென்று கீழே சரிந்தன!

"பாருங்கள்! பகவத் கீதை எல்லாவற்றுக்கும் ஆதாரமாக, அஸ்திவாரமாக இருப்பதால்தான், மற்ற மதங்கள் பிழைக்க முடிகிறது. ஆனால், பகவத் கீதை இல்லாவிட்டால், எல்லாம் விழுந்துவிடும். இதுதான் எங்கள் கீதையின் சிறப்பு"

ஸ்வாமிகள் அழகாக சிரித்துக் கொண்டே படுஜோராக சொல்லிவிட்டு கீதையை தூக்கிக் கொண்டு வெளியே நடந்தார்.

மற்றவர்கள் அந்த கம்பீரமான ஞானஸிம்ஹத்தின் முன் என்ன செய்ய முடியும்?

ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்.

No comments:

Post a Comment