flipkart discount sale search here.

Sunday 14 January 2018

எதற்குப் பொங்கல் யாருக்குப் பொங்கல்...

எதற்குப் பொங்கல்
யாருக்குப் பொங்கல்

நிலம் மலடாகிப் போனது
எதற்குப் பொங்கல்
நிலமகள் கேட்கிறாள்

பயிர் கருகிப் போனது
எதற்குப் பொங்கல்
விவசாயம் கேட்கிறது

நாட்டுமாடுகள் காணவில்லை
எதற்குப் பொங்கல்
பாரம்பரியம் கேட்கிறது

நிலத்தடிநீர் எங்கே
எதற்குப் பொங்கல்
தமிழ்மண் கேட்கிறது

இயற்கைஉரம் இல்லை
எதற்குப் பொங்கல்
பயிர்கள் கேட்கிறது

ஓசோனை ஓட்டையாக்கிவிட்டீர்கள்
எதற்குப் பொங்கல்
சூரியன் கேட்கிறது

இயற்கைவிவசாயம்
இயற்கை உரம்
நாட்டுமாடுகள்
நமக்கு உயிர் தந்தன
நல்ல உணர்வு தந்தன

இவற்றைக்
கொன்றுவிட்டு
யாருக்காகப் பொங்கல்

மண்ணுக்கும்
மாட்டுக்கும்
நன்றி சொல்லும் திருவிழாவில்
விவசாயி தூக்கிட்டுக்கிடக்கும் போது
யாருக்காகப் பொங்கல்

பல்லாயிரம் ஆண்டுகளாய்
பாரம்பரியமாய் நமக்கு வாழ்வு தந்த இவற்றுக்கான நன்றியைக் கொன்றுவிட்டு
யாருக்கு நன்றி சொல்ல இந்தப் பொங்கல்

பொங்கலைக் கொண்டாடும் முன்..
1. பாக்கெட் பால்
வாங்கமாட்டேன்
2. இயற்கை அங்காடிகளையே
பயன்படுத்துவேன்
3. நாட்டு மாடுகள் வளர்க்க
உதவி செய்வேன்
4. ஏசி பயன்படுத்த மாட்டேன்
5. விவசாயம் செழிக்க என் பங்கெடுப்பைச் செய்வேன்

என்ற உறுதிமொழியை
எடுப்போம்

இயலவில்லை எனில்
பொங்கல் வாழ்த்துகள் என்று யாருக்கும் அனுப்பாமல்
தொலைககாட்சியின் சிறப்புத்திரைப்படங்கள் பார்த்துவிட்டு உறங்குவோம்.

பொங்கல் என்பது உணவு தந்தவர்க்கு நன்றி தெரிவிக்கும் விழா

பழையபாடல் கேட்கிறது
நன்றி கெட்ட மகனை விட
நாய்கள் மேலடா...

நான் உட்பட..

🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

No comments:

Post a Comment