flipkart discount sale search here.

Thursday, 3 January 2019

Life story #33

(தொடர்கிறது..)

*நான் எனது கடையை மூடிவிட்டு எனது மகனை மருத்துவமனை கூட்டிச்சென்றேன்.. அவர்கள் எழுதிக்கொடுத்த மருந்தை வாங்க என்னிடம் பணம் இல்லை..*
*தீவிரவாதிகளுக்கு பயந்து யாரும் எனக்கு கடன் கொடுக்கவும் வரவில்லை..*
*என் நம்பிக்கை ஈற்று போய்விட்டது..*
*கடவுளிடம் கதறி அழுதேன்..*

*ஐயா கனவான்களே.. கடவுள் அன்று என்னுடைய கடைக்குள் வந்திருக்கிறார்..*

*நான் அழுது ஆற்றிக்கொண்டு என் கடையை வந்தடைந்த பொழுது.. என் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது..*

*நான் முழுதும் போய் விட்டது என்று நினைத்து கலங்கி, பயந்து உடைக்கப்பட்ட பூட்டை விலக்கி உள்ளே சென்று பார்த்தேன்..*

*அங்கே சர்க்கரை டப்பாவின் கீழே ஆயிரம் ரூபாய் இருந்தது..*
*உங்களுக்கு என்னால் அந்த ஆயிரம் ரூபாயின் மதிப்பை வார்த்தைகளால் சொல்ல இயலாது..*

*கடவுள் இருக்கிறார்.. என்றும் இருக்கிறார்.. இதை விட நான் என்ன சொல்ல..*
_என்று முடித்தார் அவர்.._

_அவர் கண்களில் அதற்கான நம்பிக்கை மிளிர்ந்தது.._

_அந்த பதினைந்து ஜோடிக்கண்களும் அந்த மேஜரின் ஒரு ஜோடிக்கண்களை இப்பொழுது துடிப்புடன் பார்த்தன.._

_அந்த ஒரு ஜோடிக்கண்,_ *எதையும் சொல்லாதீர்கள்* _என்பதை ஒரு அதிகார ஆணையாக பிறப்பித்ததை, அவர்கள் உணர்ந்தார்கள்.._

_அந்த மேஜர் எழுந்து, எல்லாவற்றிற்கும் பணம் கொடுத்தார்.._
_அந்த முதியவரை தழுவிக்கொண்டு_ *ஆம் தாத்தா, எனக்கும் தெரியும்.. கடவுள் இருக்கிறார்.. தாத்தா.. உங்கள் தேனீர் மிக அபாரம்..*
_இதை அவர் சொல்லும் பொழுது, அவர் கண்களின் ஓரம் படிந்த ஈரத்தை மீதி பதினைந்து ஜோடிக்கண்களும் பார்க்க தவறவில்லை.._


👇
*யாரும் யாருக்கும் கடவுளாகலாம்..*

_(இது ஒரு இராணுவ வீரரால் சொல்லப்பட்ட உண்மை கதை..                                        மார்க்கம் @ கூப்வாரா செக்டார் காஷ்மீர் பகுதி)_

*அழுவதை விட, அதிகமாக சிரியுங்கள்..*

*பெறுவதைவிட, அதிகமாக கொடுங்கள்..*

*வெறுப்பதைவிட, அதிகமாக நேசியுங்கள்..*


No comments:

Post a Comment