ஒரு சீடன் தன் குருவிடம் கேட்டான்..
*குருவே! நல்லதைப் படைத்த இறைவன்தானே கெட்டதையும் படைத்துள்ளான்.. அதனால் நல்லதை மட்டும் ஏற்பதுபோல கெட்டதையும் ஏற்றால் என்ன..?*
_குரு அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.._
_தன் கேள்விக்கு குருவாலேயே பதில் அளிக்க முடியவில்லை என்று நினைத்துக்கொண்டான் சீடன்.._
_பகல் உணவுவேளை வந்தது.._
_அப்போது தனக்கு அளிக்கப்பட்ட உணவைப் பார்த்து அதிர்ந்துவிட்டான் சீடன்.._
_ஒரு கிண்ணத்தில் பசுமாட்டு சாணம் மட்டும் வைக்கப்பட்டிருந்தது.._
_சீடன் விழித்தான்.._
குரு, புன்முறுவலுடன் சொன்னார் *பால், சாணம் இரண்டுமே பசுமாட்டிடம் இருந்துதான் கிடைக்கிறது.. பாலை ஏற்றுக்கொள்ளும்போது சாணத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாதா..? என்றார்*
_சிஷ்யன் மௌனமானான்.._
குரு கூறினார் *இந்த உலகத்தில் நல்லது, கெட்டது இரண்டும் உள்ளது.. ஒருவருக்கு நல்லதாக இருப்பது, இன்னொருவருக்கு கெட்டதாக இருக்கும்.. உதாரணமாக உன் தட்டில் உள்ள சாணம் உனக்கு உணவல்ல.. ஆனால் அது சில உயிர்களுக்கு உணவாகிறது..*
*எது மனிதர்களுக்கு நல்லதோ அது பிற உயிர்களுக்கு கெட்டதாக இருக்கலாம்.. எது மனிதர்களுக்கு கெட்டதோ அது பிற உயிர்களுக்கு நல்லதாக இருக்கலாம்..*
*இயற்கையில் எல்லாம் உள்ளது.. நமக்கு எது நல்லதோ அதை மட்டும் ஏற்றுக்கொண்டு வாழவேண்டும்.. கடவுளின் செயல்களை முழுமையாக யாராலும் அறியமுடியாது* என்று கூறினார்..
No comments:
Post a Comment