_ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள்.._
_வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும்,_
_அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவித்தார்.._
_போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள்.._ _சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய்.. சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன்.. இப்படியாக.._
_அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறார்.._
*இந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து, எதிர் முனைக்கு முதலில் யாரால் நீந்தி கடக்க முடிகிறதோ, அவருக்கு என் மகளை திருமணம் செய்து தருவேன்!*
_அவர் சொல்லி முடித்த வினாடியே, கடகடவென அனைவரும் நீச்சலுக்கு தயாராக, வேகமாக உடைகளை கழற்ற ஆரம்பித்த பொழுது.._
*அது மட்டுமில்லை.. கூடவே ஒரு 10 கோடி ரூபாய் பணமும், ஒரு தனி பங்களாவும் கூட தருவேன்.. அப்பொழுதுதானே, என் அருமை மகள் தன் மணவாழ்வை சுகமாக ஆரம்பிக்க முடியும்!*
*சரி.. உங்கள் எல்லோருக்கும் நல்வாழ்த்துகள்! என் மருமகனை, நான் நீச்சல் குளத்தின் மறு கரையில் சந்திக்கிறேன்* என்றவாறு, அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார்..
_சொல்லி முடித்தவுடன்.. மொத்த இளைஞர்களும், இன்னமும் வேகமாக தண்ணீரில் இறங்க முற்பட்ட பொழுது.._ *அந்தப் பணக்காரரின் ஹெலிகாப்டர், அந்த நீச்சல் குளத்துக்கு நேர் மேலே பறந்து வந்து,*
_*டஜன் கணக்கில் முதலைகளை, அந்தக் குளத்தில் இறக்கிவிட்டுச் சென்றது*_
_அவ்வளவுதான்! அத்தனை பேரும், மரண பயத்தில் உடனே பின்வாங்கி ஏமாற்றத்துடன் மீண்டும் தங்கள் உடைகளை மாட்டிக்கொள்ள ஆரம்பித்தனர்.._
*இதென்ன பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது? யாரால் இது முடியும்? பார்க்கலாம்! எவன் இதில் ஜெயிக்கிறான் னு?*
*நிச்சயமா எவனாலும், முடியாது* என்று சத்தமாய் பேச ஆரம்பித்தனர்..
அப்பொழுது..
_*திடீரென்று, ஒருவன் குளத்தில் குதிக்கும் சத்தம்*_
_அத்தனைபேரும் மூச்சுக்கூட விட மறந்து.._
_உச்சபட்ச அதிசயத்தில், அவனையே, கண்ணிமைக்காமல் கவனிக்க ஆரம்பித்தனர்_
_அந்த இளைஞன்.. மிகவும் லாவகமாக, அத்தனை முதலைகளிலுமிருந்து விலகி.. விலகி.. மிக வேகமாய் நீந்தி, அடுத்த கரையில் விருட்டென ஏறி,_
வெடவெடவென நின்றான்..
*பணக்காரரால், தன் கண்களை நம்பமுடியவில்லை..*
*பிரமாதம்.. நான் தருவதாக சொன்ன விஷயங்களுக்கும் மேல.. உனக்கு என்ன வேணுமோ கேளு.. நான் தருகிறேன் எதுவாக இருந்தாலும்..*
_அந்த இளைஞனோ, இன்னமும் நடுக்கத்திலிருந்து மீளவில்லை_
_வாய் தந்தியடித்தது, மிரட்சியில்_
_கண்கள் அரண்டு போய் இருந்தது_
பின், ஒருவித வெறியுடன்..
*அதெல்லாம் இருக்கட்டும்.. என்னை, இந்த குளத்தில் தள்ளிவிட்டவனை மட்டும், யாருன்னு எனக்கு காட்டுங்கள்..* என்றான்
👇-1 :
முதலைகள் இருக்கும் நீரில் தள்ளிவிடப்படும் வரை.. உன் திறமை என்னவென்று,
உனக்கே தெரியாது! (அந்த ரப்பர் முதலைகள் போன்றே, பிரச்சினைகளும் போலிதான்.. என்பதும் புரியவரும்!)
👇-2 :
உன்னை, முதலைகளுக்கு காவு குடுக்க நினைத்தவர்கள்..
உண்மையில், உன் உள்ளிருந்த திறமையை வெளிக்கொண்டுவந்து, உன் கனவு எதிர்காலத்தை அடைய உதவியவர்களே! (நன்றி காட்டாவிட்டாலும், வன்மம் வேண்டாமே!)
👇-3 :
சிலநேரம், மிகவும் மோசமான தருணங்களை கடக்கும்பொழுதுதான்,
நம் உள்ளிருக்கும் நிஜத் திறமை வெளிப்படும்!
👇-4 :
சிலருக்கு.. இம்மாதிரி, அசாத்திய பிரச்சினைகளில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும்பொழுது மட்டுமே, அவர்களால் வாழ்வின் உயர் இலக்கை அடைய முடிகிறது! (சில தொலைநோக்குப் பெற்றோருக்கு, இந்த சூட்சுமம் தெரியும்! பெற்றோரை நம்புங்கள்!)
No comments:
Post a Comment