flipkart discount sale search here.

Thursday, 3 January 2019

Life story #27



_ஒரு அரசருக்கு ஓரே ஒரு மகள்.._
_அதாவது ராஜகுமாரி.._
_இந்த சிறுமி விளையாடும் போது கண் ஒன்றில் மண் புகுந்தது.._
_கண் சிவந்ததோடு, வீங்கவும் தொடங்கியது.._
_போதாத குறைக்கு, சிறுமியோ தன் கண்ணை கசக்கியவாறு அழுதுவந்தாள்.._ _அரண்மனை மருத்துவர் வந்து பரிசோதித்தார்.._

_மருந்து தயாரித்து சிறுமியின் கண்ணில் இட முயற்சிக்கும் போது, சிறுமி ஒத்துழைக்கவில்லை.. கண்ணை கசக்கியும், அழுதும் தொடர்ந்ததால் காயம் பெரியதானது.._

_அரசருக்கு தன் மகளின் காயம் பெரிய வருத்தம் தந்தாலும், மகளின் விருப்பத்தை மீறி கட்டாயப்படுத்துவதை மன்னர் விரும்பவில்லை.._

_அரண்மனை மருத்துவர் தனது இயலாமையை தெரிவித்து விழகிக் கொண்டார்.. சிறுமி அழுவதும் கண்களை கசக்குவதும் தொடர்ந்ததால் காயமும் எளிதாக ஆறுவதாக இல்லை.._

_இந்த செய்தியை அறிந்த பெரியவர் ஒருவர், இந்த நோயை மருந்து இல்லாமலேயே குணப்படுத்த முன்வந்தார்.._

_அரசரும் ஒப்புக்கொண்டார்.._

_இதை தொடர்ந்து பெரியவர் சிறுமியை பரிசோதித்தார்.._ _உதட்டை பிதுக்கினார்.._
_பின், அரசரைக்கண்டு *தனியாக பேச வேண்டுமே* என்றார்.._

_சிறுமி உள்பட அனைவருக்கும் ஒரு சஸ்பென்ஸ்.._ _மன்னர் வந்தார்.._ _மன்னரிடம் ஏதேதோ பெரியவர் விளக்கினார்.._

_பின் சிறுமியும் கேட்கும்படியாக, அரசரிடம் விளக்கம் தந்தார்.._ *இந்த கண்ணில் உண்டான காயம் மிக விரைவில் குணமாகிவிடும் இது பெரிய விஷயமில்லை..*

_*ஆனால், நான் கவலைப்படுவது அதற்காக இல்லை.. இந்த பெண்ணுக்கு வால் ஒன்று முளைக்க இருக்கிறது.. அது வளர்ந்தால், சுமார் முப்பது அடிவரை வளரும்.. அதன் பின் என்னாகுமோ என்று எனக்கு தெரியவில்லை.. ஆனால் அதனால் எதுவும் பெரிய ஆபத்தில்லை..*_

_*சில நாட்களுக்கு கவனமாக இருக்க வேண்டும்.. சிறிது வால் தோன்றியதும் எனக்கு உடனடியாக அறிவித்து விடவேண்டும்.. அதற்கு மிக சிறந்த மருந்து ஒன்று உண்டு..*_

*அதைக்கொண்டு வால் வளராமல் செய்துவிடலாம், எவ்வளவு விரைவில் எனக்கு தகவல் கிடைக்கிறதோ, அவ்வளவு வேகம் வால் பெரிதாகாமல் தடுக்கலாம்* என்றார்..

_வாலுள்ள பெண்ணா?_
_சிறுமி, ராஜகுமாரிக்கு பயம் தோன்றியதில் வியப்பில்லை.. படுக்கை அறையிலிருந்த சிறுமி வெளியே வரவேயில்லை.._ வால் முளைத்ததா என்று அறிவதிலேயே கவனமாக இருந்தாள்..

*கண் வெகுவிரைவிலேயே குணமானது..*

பெரியவர் சிறுமியை பரிசோதித்து, *வால் முளைப்பதற்கான அறிகுறிகள் மறைந்து விட்டதாக* கூறினார்..

_எல்லாமே நல்லபடியாக முடிந்தது.. அரசரும் பொன்னும் பொருளும் அள்ளித்தந்து பெரியவரை பாராட்டினார்.._


👇
*சிறிய பிரச்சனைகளை, ஒரு பெரிய பிரச்சனை இடம் தெரியாமல் அழித்துவிடும்..*

_ஆகவே நாம் நம் சுய நலத்தை விட்டுவிட்டு பொதுநல சேவை, சமூக சேவை என்று இறங்கிவிட்டால்,_
_நமது கவலைகளும் பிரச்சனைகளும் இடம் தெரியாமல் ஓடிவிடும்.._

*அதனால், நமக்கு மட்டுமில்லை நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும்  நன்மைதான்..*


No comments:

Post a Comment