_ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தார்.._
_அவர் மிகப்பெரிய பணக்காரர்.. ஆனால் யாருக்கும் உதவ மாட்டார்.._
_ஆனால், ஒரு ஆசை மட்டும் வெகுநாட்களாக இருந்தது.._
*_தான் உயிருடன் இருக்கும்போதே.. சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை தான் அது.._*
_ஒருநாள், அவரது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார்.._
_*அவரின் ஆசையை நிறைவேற்றுவதாக கூறினார்..*_
_அவரை அழைத்துக் கொண்டு சென்றார்.._
_*முதலில் அவரை நரகத்திற்கு கூட்டி சென்றார்..*_
_அங்கு உணவு நேரத்தில் பெரிய, பெரிய அண்டாக்களில் சாதம்.. குழம்பு.. மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன.._
_அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது.._
_எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது.._
_ஆனால், அந்தோ பரிதாபம்.._
_அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி வாய்க்கு உணவை கொண்டு செல்ல முடியவில்லை.._
_எனவே, அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை.._ _*அவர்களுக்கு பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது..*_ _அனைத்தையும் கீழே தள்ளிவிட்டு.. அவற்றில் உள்ள உணவை கொட்டித் தள்ளினர்.. பின்னர் தாங்க முடியாத பசியினால் அழுது கொண்டே இருந்தனர்.. அது ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது.._
_*அதன் பின்னர், அந்த பெரியவர் கருமியை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார்..*_ _அங்கும், அதே போல.. நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டுருந்ததது.. அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது.. ஆனால் தங்கள் வாய்க்கு அருகில் கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை.._
_ஆனால், அவர்களில் ஒருவர் தனது கையினால் இனிப்பு வகைகளை எடுத்து மற்றொருவர் வாய் அருகே நீட்டினார்.._
*_கையை மடக்கத்தானே முடியாது.. கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டலாமல்லவா.._*
_இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர்.. அனைவரின் வயிறும் நிரம்பியது.._
_கனவில் இருந்து மீண்ட கருமி.. ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை புரிந்து கொண்டார்.. தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை உணர்ந்தார்.. அன்றிலிருந்து அவர் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தார்.._
👇
*அடுத்தவருக்கு செய்யும் உதவியே.. ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு..*
*பிறரை மகிழ்வித்து மகிழ்..*
*அதுவே சொர்க்கம்..*
No comments:
Post a Comment