flipkart discount sale search here.

Thursday, 3 January 2019

Life story #29



_ஒரு வேடன் தன் மனைவி மற்றும் ஏழு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தான்.._
_அவன் தினமும் வேட்டைக்கு செல்வான்.._
_9 கொக்குகள் வரை வேட்டையில் தினமும் கிடைத்து வந்தது.._
_கொண்டு வந்து மனைவியிடம் கொடுப்பான்.._ _அவள் அவைகளை சமைத்து எல்லோருக்கும் பரிமாறுவாள்.._ _வேடனுக்கு ஒரே ஒரு கொக்கின் கறி தான் கிடைத்தது.._ _அவன் திருப்தி அடையவில்லை.._ _மேற்கொண்டு கிடைக்குமா என்று முயன்று பார்த்தான்.._ _கிடைப்பதாக இல்லை.._

மனைவியிடம் *நான் வேட்டையில் கொண்டு வரும் கொக்குகள் அனைத்தையும் சமைத்து, நீ சிறிது எடுத்து கொண்டு.. மீதம் எல்லாம் எனக்கே வைத்து விட வேண்டும் என்றான்..*
_இதைக் கேட்டு அவள் மிகவும் மனம் வருந்தி_ *பிள்ளைகளுக்கு என்ன கொடுக்க?* என்று கேட்டாள்..

_அதற்கு அவன்_ *பிள்ளைகளை எங்கேனும் காட்டுக்குள் அனுப்பி விடு, மிருகங்களுக்கு இறையாகட்டும்* என்றான்..

_அவள் பதறிபபோனாள்.._

_இருந்தாலும் மனதை கட்டுபடுத்தி கொண்டாள்.._
_ஏனென்றாள் இருக்கும் வெறியில் அவன் ‌ பிள்ளைகளை கொன்றாலும் கொன்று விடுவான் என பயந்தாள்.._

வேடன் கிளம்பினான்..

_*நான்வரும் சமயம் பிள்ளைகள் இருக்க கூடாது*_ என சொல்லி சென்றான்..

_காட்டில் எவ்வளவு முயன்றும் ஒன்று, இரண்டு கொக்குகளை பிடிப்பதே கஷ்டமாக இருந்தது.._

_வீட்டிற்கு வந்தான்.. பிள்ளைகளை காணவில்லை.._

மனைவியிடம் *எங்கே பிள்ளைகள்* என்றான்..

*நீங்கள் சொல்லியபடியே செய்து விட்டேன்* என்றாள்..

_உணவு என்றைக்கும் கிடைக்கும் அளவே அன்றும் அவனுக்கு சாப்பிட கிடைத்தது.._

மனதில் சிறிது கீறல் விழ ஆரம்பித்தது..

_மேலும் ஓரிரு நாட்கள் அப்படியே சென்றன.._

_மிகவும் புலம்ப ஆரம்பித்து விட்டான்.._

மனைவியிடம் *நான் தவறான முடிவு எடுத்து விட்டேன்.. நீயாவது என்னை மாற்றி இருக்க கூடாதா?* என்றான்..

அதற்கு அவள்  சிரித்து கொண்டே *இது நான் எதிர்பார்த்தது தான்* என்றாள்..

மறு நாள் வேட்டைக்கு கிளம்பும் முன் மனைவியிடம் *இன்று நல்ல நாளாக அமைய வேண்டும்* என்று புலம்பினான்..

அதற்கு அவளும் *நீங்கள் வேட்டைக்கு சென்று வாருங்கள்.. நல்ல வேட்டை கிடைக்கும்..* என்று ஆறுதல் சொல்லி அனுப்பினாள்..

*என்ன ஆச்சரியம்.. முன்பு போல் ஏழு எட்டு கொக்குகள் கிடைத்தன..* சந்தோஷமாக வீட்டிற்கு வந்தான்..

வீட்டில் அவனது குழந்தைகள்  விளையாடி கொண்டு இருந்தனர்..

*இப்பொழுது குழந்தைகள் இருக்கிறார்களே என அவன் வருத்தப்படவில்லை..*

அவர்களுக்கும் சேர்த்து தான் இன்று ஆண்டவன் அதிக அளவு கிடைக்க செய்து இருக்கிறார் என்பதை புரிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தான்..

மனைவியிடம் *எப்படி குழந்தைகள் கிடைத்தன?* என்று வினவினான்..

*தங்கள் குணம் அறிந்து, நான் அவர்களை எனது தாயிடம் பத்திரமாக விட்டு வைத்து இருந்தேன்* என்றாள்..
_மனைவி மக்களோடு சந்தோசமாக வாழ ஆரம்பித்தான்.._


👇
*நாம் காக்க வேண்டிய அனைவருக்கும் சேர்த்து தான், ஆண்டவன் நமக்கு படி அளப்பார் என்பதை புரிந்துகொள்வோமாக..*



No comments:

Post a Comment