flipkart discount sale search here.

Friday, 24 November 2017

இப்போது சொல்லுங்கள்... கண்ணின் இமைகளா? இல்லை, இம்சை அரசர்களா ?

இதைப் படித்துவிட்டு பிறகு சொல்லுங்கள்...
1.இன்ஷூரன்ஸ் ஏஜெண்டுகளை கண்டாலே பயந்து ஓடி ஒளிகிறோம்...
ஆனால். அவர்கள் நம்மை பாதுகாக்க வருபவர்களாக ஒருபோதும் நினைப்பதில்லை
2. முன் பின் தெரியாதவர்கள் சொல்வதைக் கேட்டு நம் மகளை, சகோதரியை மணமுடித்து வைக்கிறோம்...
ஆனால், நமக்கு நன்கு தெரிந்த நபர், இன்ஷூரன்ஸ் எடுக்க சொன்னால் ஆயிரம் முறை யோசிக்கிறோம்.
3.மேஜிக் செய்பவர்களைகூட அற்புதம் செய்யும் மகான்கள் என நம்புகிறோம்...
ஆனால், யதார்த்தத்தை சொல்லி, வழிகாட்டும் இன்ஷூரன்ஸ் ஏஜெண்டுகளை நம்ப மறுக்கிறோம்.
4.பத்தாயிரம் ரூபாய் மொபைல் போனுக்கு, ஸ்கிரீன் கார்டு வாங்கி பாதுகாக்கிறோம்....
ஆனால், நம்மை பத்து பைசாவுக்கு கூட, இன்ஷ்யூர் செய்துகொள்வதில்லை.
5. செல்லும் இடங்களில், ஐந்து ரூபாய் கொடுத்து நமது செருப்புகளை பாதுகாப்பாக வைக்கிறோம்...
ஆனால், நாளொன்றுக்கு நமக்காக 50 ரூபாய் செலவில் காப்பீடு எடுக்க நினைப்பதில்லை.
6.நம் குழந்தைகளுக்காக தங்க நகைகளை வாங்குகிறோம்...
ஆனால், அவர்களுக்கான காப்பீட்டு திட்டங்களை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை.
7. பென்ஷன் வாங்கும் அரசு ஊழியர்களை பார்த்தால் பொறாமை கொள்கிறோம்...
ஆனால், சிறு தொகையை செலுத்தி, பென்ஷன் பாலிசி எடுக்க முயற்சிப்பதில்லை.
8.பகவத் கீதை குறித்தும் குரான் குறித்தும் நமக்குள் சண்டையிட்டுக் கொள்கிறோம்...
ஆனால், மரணம் நம் கைகளில் இல்லை என்பதை உணர தவறிவிடுகிறோம்.
9. ஒவ்வொரு நாளும், ஒரு லட்சம் பேர், முன்தினம் அலாரம் வைத்துவிட்டு, காலையில் எழுந்திருக்காமல் உறங்கி விடுகிறார்கள் என்கிறது ஒரு சர்வே...
ஆனால், ஒருநாள் எத்தனை அலாரம் அடித்தாலும் எழுதிருக்க முடியாமலே போகும் முடிவு வரும் என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்?
10. நாம் என்று மறைகிறோமோ அதுவே நம் வாழ்வின் கடைசி நாள்...
ஆனால், நம்மை சார்ந்தவர்களுக்கு அது அவர்கள் வாழ்வில் மற்றொரு நாளே.
11 கிரெடிட் கார்டிலும் சிம் கார்டிலும் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பது நமக்கு தெரியும்...
ஆனால், நம் வாழ்நாளில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பது நமக்கு தெரியுமா?
இப்போது சொல்லுங்கள்...
நம் குடும்பத்தை காக்க சொல்லும் இன்ஷூரன்ஸ் ஏஜெண்டுகள்
கண்ணின் இமைகளா? இல்லை,
இம்சை அரசர்களா ?

No comments:

Post a Comment