flipkart discount sale search here.

Thursday, 9 November 2017

வெள்ளை மாளிகைக்குப் பெயிண்ட் அடிக்க இந்தியா சொன்ன விலை?

*படித்ததில் பிடித்தது*
டொனால்டு ட்ரம்ப்பு வெள்ளை மாளிகைக்குப் பெயிண்ட் அடிக்க நினைத்தார். பெயிண்ட் அடிப்பதற்கான ஒப்பந்தம் விடுவதற்காக அழைப்பு விடுத்திருக்கிறார்.

*சீனாக்காரன் 3 மில்லியன் டாலர்* செலவாகுமென்று ஒப்பந்தத் தொகை கேட்டிருக்கிறான்.

*ஐரோப்பாக்காரன் 7 மில்லியன் டாலர்* செலவாகுமென்று ஒப்பந்தத் தொகை கேட்டிருக்கிறான்.

*இந்தியாக்காரன் 10 மில்லியன் டாலர்* செலவாகுமென்று ஒப்பந்தத் தொகை கேட்டிருக்கிறான்.

ட்ரம்ப்பு சீனாக்காரனை அழைத்து, "நீ எப்படி *3 மில்லியன் டாலருக்கு* ஒப்பந்தத் தொகை நிர்ணயித்தாய்?" எனக் கேட்டார். அவன். "1 மில்லியன் பெயிண்ட் செலவுக்கு, 1 மில்லியன் வேலையாள் கூலிக்கு, 1 மில்லியன் லாபத் தொகை" என்றான்.

ட்ரம்ப்பு ஐரோப்பாக்காரனை அழைத்து, "நீ எப்படி *7 மில்லியன் டாலருக்கு* ஒப்பந்தத் தொகை நிர்ணயித்தாய்?" எனக் கேட்டார். அவன். "3 மில்லியன் பெயிண்ட் செலவுக்கு, 2 மில்லியன் வேலையாள் கூலிக்கு, 2 மில்லியன் லாபத் தொகை" என்றான்.

ட்ரம்ப்பு இந்தியாக்காரனை அழைத்து, "நீ எப்படி *10 மில்லியன் டாலருக்கு* ஒப்பந்தத் தொகை நிர்ணயித்தாய்?" எனக் கேட்டார்.

அவன். *"4 மில்லியன் உங்களுக்கு, 3 மில்லியன் எனக்கு, நாம் இருவரும் இணைந்து 3 மில்லியனை சீனாக்காரனிடம் கொடுத்து அந்த வேலையைச் செய்யச் சொல்லுவோம்" என்றான்.*

ட்ரம்ப்பு ஒரேயடியாய் அசந்து போனார். வேறு பேச்சுப் பேசாமால் இந்தியாக்காரனுக்கே ஒப்பந்தத்தை வழங்கினார்.

நட்புடன்
 

_படித்தேன்_

_பிடித்தேன்_

_பகிர்கிறேன்_

 அப்டி போடு..இந்தியாகாரனா கொக்கா

No comments:

Post a Comment