flipkart discount sale search here.

Monday, 20 November 2017

எந்த #கிழமையில் என்னென்ன சுபகாரியங்கள் செய்யலாம் ?

எந்த #கிழமையில் என்னென்ன சுபகாரியங்கள் செய்யலாம் ?

⭐ நல்ல நாளில் சுப காரியங்களை செய்தால் அவை தடையின்றியும், மங்களகரமாகவும் நடைபெறும். சுப காரியங்கள் செய்யும்போது நல்ல நட்சத்திரம், நல்ல லக்னம், நல்ல திதி போன்றவற்றை பார்ப்பது போலவே நல்ல நாளையும் பார்க்க வேண்டியது மிகமிக அவசியம்.

⭐ எந்தெந்த கிழமைகளில் என்னென்ன சுப காரியங்களை செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

#ஞாயிறு

⭐ மங்களகரமான காரியங்கள்

⭐ புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லலாம்

⭐ உழவுத்தொழிலை ஆரம்பிக்கலாம்

⭐ விதை விதைக்கலாம்

⭐ புதிய ஆபரணங்கள் அணிந்து கொள்ளலாம்

⭐ தங்கம் வாங்கலாம்

#திங்கள்

⭐ திருமணம் செய்யலாம்

⭐ மாங்கல்யம் செய்யலாம்

⭐ தெற்கு திசை பிரயாணம் மேற்கொள்ளலாம்

⭐ புதிதாக கடை வைக்கலாம்

⭐ சங்கீதம் கற்று கொள்ளலாம்

⭐ ஹோமங்கள் செய்யலாம்

#செவ்வாய்

⭐ மரங்கள் வெட்டலாம்

⭐ விதை விதைக்கலாம்

⭐ முக்கிய விஷயங்கள் குறித்து விவாதம் செய்யலாம்

⭐ கிழக்கு திசை பிரயாணம் செய்யலாம்

⭐ ஆராய்ச்சி செய்யலாம்

⭐ பூமியிலிருந்து உலோகங்கள் எடுக்கலாம்.

#புதன்

⭐ மாங்கல்யம் செய்யலாம்

⭐ திருமணம் செய்யலாம்

⭐ ஹோம சாந்தி செய்யலாம்

⭐ கல்வி கற்றுக்கொள்ள தொடங்கலாம்

⭐ முக்கிய விஷயங்கள் குறித்து விவாதம் செய்யலாம்

⭐ விதை விதைக்கலாம்

#வியாழன்

⭐ குலதெய்வங்களுக்கு பூஜை செய்யலாம்

⭐ கோவில்களில் அபிஷேகம் செய்யலாம்

⭐ ஹோமங்கள் செய்யலாம்

⭐ விரதம் இருக்கலாம்

⭐ சுபகாரியங்கள் செய்யலாம்

⭐ கிணறு வெட்டலாம்

#வெள்ளி

⭐ சுபகாரியங்கள் செய்யலாம்

⭐ புதிய வாகனம் வாங்கலாம்

⭐ வீடு கட்டும் வேலையை தொடங்கலாம்

⭐ தர்ம காரியங்கள் செய்யலாம்

⭐ உழவுத்தொழிலை தொடங்கலாம்

⭐ மங்களகரமான காரியங்களை செய்யலாம்

#சனி

⭐ கல்வி கற்றுக்கொள்ள தொடங்கலாம்

⭐ தர்ம காரியங்கள் செய்யலாம்

⭐ நவரத்தினங்கள் விற்பனை செய்யலாம்

⭐ எள், பருத்தி ஆகியவற்றை விதைக்கலாம்

⭐ புதிய இயந்திரங்களை இயக்கலாம்...

வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment