சமீபத்தில் சென்னையின் சாலையோர கடையொன்றில் சாப்பிட சென்றிருந்தேன். சாப்பாடு தயாராக இருந்தது, மதியநேரம் என்பதால் சாம்பார் சாதம், தயிர்சாதம், தக்காளி சாதம், பிரிஞ்சி, சாப்பாடு என எல்லாம் மனக்க மனக்க இருந்தது. கடைக்காரரிடம் சாம்பார்சாதம் கொடுக்கும்படி கேட்டேன், அவரோ சிறிதுநேரம் காத்திருக்கும்படி சொன்னார், என்ன விஷயம் என கேட்டதற்கு, வாழையிலை காலியாகிவிட்டது கடையில் வேலைசெய்பவர் வாழையிலை வாங்கிவர சென்றுள்ளதாகவும், அவர் வந்தவுடன் கொடுக்கிறேன் என்றார். சாப்பிட வந்தவர்களில் ஒருவர் கேட்டார் "இப்பொழுதுதான் பிளாஸ்டிக் கவர்கள் வந்துருக்கே அதிலே பரிமாறலாமே என கேட்டார்".
கடைக்காரர் சிரித்துக்கொண்டே சொன்னார் "இன்னைக்கு நல்ல சாப்பாடு சாப்பிட்டாலே பல வியாதி வருது இதுல பிளாஸ்டிக் கவர்ல சாப்பாட்டை சூடா வச்சு சாப்பிட்ட என்ன வியாதி வரும் தெரியுங்களா கேன்சர் கூட வரலான்னு சொன்னார், நான் படிக்காதவன் சார் என்ன வியாதி வரும் வராதுன்னு தெரியாது, பிளாஸ்டிக்ல சாப்பாடை சூடா வச்சி சாப்புட்றது உடம்புக்கு கெடுதின்னு தெரியும் , வாழையிலையில் சாப்பிட்டா நல்லதுன்னு தெரியும், என் கடையில பெரிய பணக்காரன் சாப்பிடபோறதுமில்லை வியாதிவந்தா நல்ல ட்ரீட்மெண்ட் எடுத்த்துக்கறதுக்கு, சாதாரண ஆளுங்கதான் சாப்பிடவருவாங்க அவங்களுக்கு பெரியவியாதிவந்தா சமாளிக்க முடியாதுங்க, ஒரு ஆளுக்கு வாழையிலை 1 ரூபா செலவாகும், வாழையிலைக்கு பதிலா பிளாஸ்டிக் சீட் யூஸ் பன்னா மாசம் 200 லிருந்து 300 ரூபா மிச்சமாகும் இந்த பணத்தை வச்சு கோடிஸ்வரன் ஆகா முடியாது,
சமையல்கூட முடிஞ்சளவுக்கு நல்ல பொருளை வச்சுத்தான் செய்யுறேன், வாழையிலை யூஸ் பன்றதாலே நான் போடுற குப்பைக்கூட மத்த ஜீவராசிக்கு சாப்பாடுதாங்க, மாடு வந்து வாழையிலையை சாப்ட்ரும் இடமும் க்ளீனாயிடும், இதுக்கும் மேல என் கடைல பெரும்பாலும் பேச்சுலர் பசங்க சாப்டுவாங்க, இவங்க பெரும்பாலும் சாப்பாடு வெளியிலதான் சாப்புடுவாங்க நம்ம கடைல சாப்பிடும்போதாவது நல்ல சாப்பாடு சாப்பிடட்டுன்னு பிளாஸ்டிக் யூஸ் பன்றதில்லை. என்ன்னால சாப்பாட்ல வேஷத்தை(பிளாஸ்டிக்) கலக்க மனசுவரலாங்கன்னு சொல்லிட்டு கடைசியில் வாழையிலையில் வச்சுதான் சாப்படு கொடுத்தார்.அவர் கடைல பார்சல் சாப்பாடு கூட வாழ எலைலதான் குடுக்குறாரு. இன்னைக்கு உணவு தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் கூட சாப்பாடு கெடாம இருப்பதற்கு என்ன வழின்னு யோசிக்கிறாங்களே தவிர, சாப்புட்றவங்க நலனை கண்டுக்கிறதில்ல. ஆனா சாதாரணமா படிக்காத ஒருத்தர் இவ்வளவு யோசிப்பாருன்னு நெனச்சுக்கூட பாக்கல . காசு சம்பாதிக்க என்னவேணுன்னாலும் செய்யலான்னு மனசாட்சி இல்லாம சாப்பாட்டு பொருள்ல கலப்படம் செய்யுற இந்த காலத்துல, இப்படியும் ஒருத்தர்னு ஆச்சர்யமா இருந்தது.
#படித்ததில்_பிடித்தது

No comments:
Post a Comment